Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்

( நா.க.த.அ )

அரசமைப்பு

முகப்புரை

சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகளுக்கு மதிப்பு, சனநாயகம், அனைத்துத் தனி மனிதர்களுக்குமான சமத்துவம் ஆகிய கொள்கைகளுக்கும், தேசியஇனங்களின் சுயநிர்ணய உரிமைக்கும் இணங்க,

தமிழ் மக்கள் உயிர் பிழைத்து வாழ்வதையும், அவர்களின் உடல்சார்ந்த பாதுகாப்பையும் உறுதி செய்யவும் தீர்மானித்து,

தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்குமான உறவுகளின் வரலாறு என்பது அடுத்தடுத்து வந்த சிறிலங்கா அரசாங்கங்கள் வாக்குறுதிகளை மீறியதும், சிறிலங்கா அரசுக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் முறைப்படி செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களையும் உடன்படிக்கைகளையும் ஒருதரப்பாக நீக்கம் செய்ததுமான தொடர் போக்காகவே இருந்துள்ளது என்பதை அறிந்துணர்ந்து,

அடுத்தடுத்து வந்துள்ள சிறிலங்கா அரசாங்கங்கள் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாகத் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலையும் மானுட விரோதக் குற்றங்களும் போர்க் குற்றங்களும் புரிந்துள்ளன என்பதையும் மனதிலிருத்தி,

கடந்த 1976ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்குப் பின் நடைபெற்ற தேர்தலில் ஈழத்தமிழரின் மரவுவழித் தாயகத்தில் தமிழ் மக்களுக்கான சுதந்திரமும், தமிழ் மக்களின் இறைமையும், மதச்சார்பின்மையும் கொண்ட அரசை நிறுவும்படி தமிழ் மக்கள் தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்குக் கட்டளையிட்டார்கள் என்பதைக் கவனத்திற்கொண்டு,

சிறிலங்கா அரசின் மூர்க்கத்தனமும், இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு அரசியல் வெளி இல்லாமற் போனதும் சேர்ந்து கொண்டதால் தமிழ் மக்கள் அளித்த கட்டளையை நிறைவேற்றுவதற்கான தமிழர் அறப் போராட்டம் பயனற்றுப் போயிற்று என்பதை மனத்திலிருத்தி,

நாற்பதாண்டு காலம் அறவழியிலும், அமைதி வழியிலும் அரசமைப்புச் சட்டத்துக்குட்பட்டு நடைபெற்ற போராட்டம் பயனற்றுப் போன பிறகும், அமைதி வழியில் முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு வழியற்றுப் போனதாலும்தான், தற்காப்பு வழிமுறை என்ற வகையிலும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஈடேறச் செய்வதற்கான கருவி என்ற வகையிலும் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் எழுந்தது என்பதை மனத்திலிருத்தி,

தமிழர்களின் அரசியல், ஆயுதப் போராட்டங்களும் அதன் பயனாக உருவாகிய தமிழீழ நடைமுறை அரசும், தமிழ் மக்களின் அரசியல் வேணாவாவை வெளிப்படுத்துவதற்கான அரசியல் வெளியைத் தோற்றுவித்தன என்பதை மனத்திலிருத்தி,

சிறிலங்காh அரசின் இனப்படுகொலைகளும்; அரசபயங்கரவாதமும் தமிழர்களின் திறனை வலுக்குன்றச் செய்து, அவர்கள் அனுபவித்து வந்த அரசியல் வெளியை அழித்துவிடுகின்றன என்பதைக் கவனத்திற்கொண்டு,

இலங்கைத் தீவிற்குள் தமிழ் மக்களின் அரசியல் நாட்டங்களை சுதந்திரமாக தெளிந்துரைக்க அரசியல் வெளி இல்லாமற் போனதைக் கவனத்திற்கொண்டு,

2

சிறிலங்காhவிற்கு வெளியே இந்த அரசியல் வெளியைத் தோற்றுவிக்க புலம்பெயர் தமிழ்ச் சமூகத்துக்குள்ள வரலாற்றுக் கடமையை உணர்ந்து,

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் தரப்பட்டுள்ள கட்டளையை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் நோர்வே, கனடா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி, பிரித்தானியா, டென்மார்க், அவுஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்ற கருத்துக் கணிப்புக்களையும், அத்தீர்மானத்துக்குப் பிறகான 30 ஆண்டு காலத்தில் தமிழ் மக்கள் செய்துள்ள ஈகத்தையும் கவனத்திற்கொண்டு,

கடந்த 2010 மார்ச் 15இல் வெளியிடப்பெற்ற மதியுரைக்குழு அறிக்கையில் தெளிந்துரைக்கப்பட்டவாறு தமிழ் மக்களின் நாடுகடந்த இயல்பும், நாடுகடந்த அரசியல் செயல் முனைப்பும் மலர்ந்திருப்பதைக் கவனத்திற்கொண்டு,

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்சு, டென்மார்க், நோர்வே, சுவீடன், பிரித்தானியா, கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகியவற்றில் நடைபெற்ற நா.க.த.அ இற்கான சனநாயக முறைத் தேர்தல்களைக் கவனத்திற்கொண்டு,

ஐக்கிய அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியாவில் தேசிய அரசமைப்பு மையத்தில் 2010 மே 17ஆம் நாள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப் பெற்றதைக் கவனத்திற்கொண்டு,

தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை ஈடேறச் செய்வதற்காகவும் அவர்களின் இறைமையைச் செலுத்துவதற்காகவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது ஆகையால்,

அமைதி, வன்முறை தவிர்ப்பு (அகிம்சை), சகிப்புத் தன்மை, பன்மைக் கொள்கை, வெளிப்படைத் தன்மை, பொறுப்பாண்மை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் சுதந்திரத் தமிழீழ அரசு அமைக்கும் பொருட்டு நா.க.த.அ. தம்மை ஒரு சனநாயக ஆட்சியமைப்பின் ஊடாக வழி நடத்தியுள்ளது ஆகையால்,

குறிப்பாகச் சொன்னால், ஈழத் தமிழர்களின் பொதுவான இலக்கை நோக்கி முன்னேறிச் செல்லவும், உலகெங்கும் வாழும் தமிழர்களின் ஒருமைப்பாட்டை வலுவாக்கவும் முயற்சிகள் செய்ய வேண்டும் ஆகையால்,

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் பேரவை இந்த அரசமைப்பைத் தனது அடிப்படை வழிகாட்டியாக இதன்வழிப் பகிரங்கமாக்கி சட்டமாக்கிக் கொள்கிறது.

2010 செப்டெம்பர் ............. ஆம் நாள் ......................... இல் தனதேற்புச் செய்யப்பட்டது.

3

இயல் - ஐ

நோக்கங்களும் குறிக்கோள்களும்

1. நா.க.த.அ. ஆனது சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழ அரசு ஒன்றை நிறுவப் பாடுபடும்.

2. நா.க.த.அ. தனி மனித கௌரவத்தை பங்கமுறாவண்ணம் பேணி நிற்கும்.

3. நா.க.த.அ. ஆனது தாயகத்திலுள்ள மக்கள், புலம்பெயர் ஈழத்தமிழ்ச்; சமூகம், குடிபெயர்ந்து இப்போது உலகின் பிற பகுதிகளில் வாழ்ந்து வரும் ஏனைத்தமிழர்களைக் கொண்டமைந்த உலகத் தமிழ்ச் சமுதாயம் ஆகிய அனைவரின் நலனையும் மேம்படுத்த முற்படும்.

4. நா.க.த.அ. ஆனது புலம்பெயர் நாடுகளில் ஈழத் தமிழ்ப் பண்பாட்டின் தனிச்சிறப்பைப் பேணிக் காக்கவும் மேம்படுத்தவும், புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திற்குள்ளும் உலகத் தமிழ்ச் சமுதாயத்திற்குள்ளும் நிலவுகிற ஏனைய தமிழ்ப் பண்பாடுகளுடன் அதன் பிணைப்புகளைக் நிலைநிறுத்தவும் முற்படும்.

5. நா.க.த.அ. ஆனது தாயகத்தில் கல்விச்செயற்பாடுகள் சிறக்கப் பாடுபடும்.

6. நா.க.த.அ. தாயகத்தில் பொருளியல் வளத்தை மேம்படுத்தும் நோக்கில் அங்கிருந்து மேற்கொள்ளப்படும் தொழிலியல், உயர் தொழில்நுட்பவியல் மற்றும் சேவைத்துறை சார்ந்த ஆக்கங்களுக்கான வணிகச்சந்தர்ப்பங்களை தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தடையிலா பெருகுவதை உறுதி செய்ய முயலும்.

7. நா.க.த.அ. ஆனது தமிழ் மக்கள் மீது இனப்படுகொலையும், மானுட விரோதக் குற்றங்களையும், போர்க் குற்றங்களையும் புரிந்தவர்கள் மீது குற்ற வழக்குத் தொடுத்து, பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்துவதை உறுதி செய்யும்.

8. நா.க.த.அ. ஆனது அனைத்துத் தமிழர் வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளிலும் பெண் சமத்துவம் எனும் அடிப்படை மனித உரிமையைக் காத்து வளர்த்திடும்.

9. நா.க.த.அ. ஆனது மாவீரர் குடும்பத்தினர், முன்னாள் போராளிகள், போரினால் பாதிப்புற்ற குடும்பத்தினர் ஆகியோரின் கௌரவத்தையும் நல்வாழ்வையும் பேணிப்பாதுகாக்கும்.

4

நா.க.த.அரசாங்கத்தின் கட்டமைப்பு

மொழி தமிழ்மொழியே நா.க.த.அ இன் அரசகரும மொழியாக இருக்கும். ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கும். தேவையேற்படும் பட்சத்தில் வேற்று மொழிகளைகளைப் பயன்படுத்தலாம். அனைத்து நா.க.த.அ அனைத்து ஆவணங்களும் தமிழிலும் இருத்தல் வேண்டும். வெளியுலக தொடர்பாடல்களுக்கு அந்தந்த நாட்டு மொழிகள் பயன்படுத்தப்படலாம்.

நா.க.த.அ. ஆனது ஒரு நிறைவேற்றுக்குழவையும் , ஒரு சட்டப் பேரவையையும்; கொண்டிருக்கும்.

யாப்புக்குழு நா.க.த.அ ஐ நிறைவேற்றுக்குழவாகவோ அல்லது பாராளமன்றமாகவோ அழைப்பது என்பதை சபையில் தீர்மானிப்பதாக தீர்மானித்துள்ளது. எனவே பின்வரும் விடயங்களை நீங்கள் விரும்பிய பதத்தில் வாசிக்கவும்.

முதன்மை நிறவேற்றுனர்- பிரதம மந்திரி ( தலைமை அமைச்சர்)

உதவி முதன்மை நிறவேற்றுனர் - உதவி;- பிரதம மந்திரி

நிறைவேற்றுக்குழு – மந்திரிசபை

நா.க.த.அ உறுப்பினர் - பாராளமன்ற உறுப்பினர்.

நிறைவேற்றுக்குழு

நிறைவேற்றுக்குழுவானது முதன்மை நிறைவேற்றுநர், மூன்று (3) துணை முதன்மை நிறைவேற்றுநர்கள், மற்றும் ஏழு (7) நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களையும் உள்ளடக்கி மொத்தமாக பதினொன்று (11) என்ற எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.

நா.க.த.அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரம் நிறைவேற்றுக்குழுவிடம் இருக்கும், இந்த அரசமைப்பின் வழிவகைகளுக்கிணங்க நேரடியாகவோ அதற்குக் ஆணைக்குட்பட்ட அலுவலர்கள் வாயிலாகவோ, அது இந்த அதிகாரத்தைப்பயன்படுத்தும். குறிப்பாகச் சொன்னால், நிறைவேற்றுக்குழு பின்வரும் நிறைவேற்று அதிகாரங்களைச் செயல்படுத்த அதிகாரம் அளிக்கப்படும்.

அ) சட்டமியற்றுப் பேரவையால் குறித்துரைக்கப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கும் விதிமுறைகளுக்கும் இசைவளித்து அவற்றைப் பிறப்பித்தல்,

ஆ) சட்டங்களையும், சட்ட வலிமை கொண்ட அவசரச் சட்டங்களையும் பிறப்பித்தல்,

இ) கௌரவ விருதுகளையும், பதவி அமர்த்தங்களையும் வழங்குதல்,

ஈ) சட்டப் பேரவையைக் கூட்டுதல்,

உ) தேவைப்படும் போதெல்லாம் நா.க.த.அ. பேரவைக்குச் செய்திகளும் உரைகளும் அனுப்புதல்,

5

ஊ) பேரவைக் கூட்டங்களில் இயற்றப்படும் தீர்மானங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் பொறுப்பானது முழுமையாக நிறைவேற்றுக்குழவையே சாரும். னுநயச ளுநஉ

நிறைவேற்றுக்குழு தெரிவு

1) முதன்மை நிறைவேற்றுநர் நா.க.த.அ உறுப்பினர்களால் இரகசியவாக்கெடுப்பின் மூலம் தெரிந்தெடுக்கப்படுவார்.

2) மூன்று (3) துணை முதன்மை நிறைவேற்றுநர்களும் ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் அவுஸ்தி;ரேலியா-நியுசிலாந்து பிராந்தியங்களுக்கென அந்தந்த பிராந்தியங்களின் உறுப்பினர்களால் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிந்தெடுக்கப்படுவார்கள்;.

3) நிறைவேற்றுக்குழுவின் மீதி ஏழு (7) உறுப்பினர்களையும் முதன்மை நிறைவேற்றுநர் துணை முதன்மை நிறைவேற்றுநர்களின் இணக்கப்பாட்டுடன் நியமனம் செய்வார்.

4) ஓவ்வொரு நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்புக்களுள் தனித்தனியான திட்டப்பொறுப்பபாளர்களை நியமிக்கலாம். இந்நியமனமானது பேரவை உறுப்பினர்களில் இருந்கு இடம்பெறும். இவ்வாறு நியமிப்பவர்களுக்கு நிறைவேற்று குழவினரினது உரிமைகள் இருக்காது.

5) நிறைவேற்றுக்குழு உறுப்பினருக்கான தகுதிகள்

அ) 2010 மார்ச் 15ஆம் நாள் வெளியிடப்பெற்ற மதியுரைக் குழு அறிக்கையில் தரப்பட்டுள்ள வரையறையின்படி தமிழீழத்தின் குடிமகனாகஃகுடிமகளாக இருக்க வேண்டும்.

ஆ) எந்த நீதிமன்றத்தாலும் சுயலாப அல்லது, மற்றும் சுயநோக்க செயல்பாடுகளுக்காக் தண்டிக்கப்படாதவர்களாய் இருத்தல்வேண்டும். குறிப்பிட்ட உறுப்பினர் அந்தந்த நாடுகளின் சட்டங்களின் குற்றப்பதிவு நீக்கப்பட்டவராயின் உறுப்பினராகும் தகுதியுடையவராவர்.

இ) நா.க.த.அ. பேரவையில் மூன்றில் இரண்டு (2ஃ3) பங்குக்கும் மேற்பட்ட பெரும்பான்மையால், தகுதி நீக்க அறிவிப்புச் செய்யப்படாதவராக இருக்க வேண்டும்.

ஈ) தொடர்ச்சியாக இரண்டு தடவைகளுக்கு மேல் பதவியில் இருக்காதவராக இருத்தல் வேண்டும்.

உ) நா.க.த.அ. பேரவையால் முன்பு நிறைவேற்றுக் குழு பொறுப்பிலிருந்து அகற்றப்படாதவராய் இருக்க வேண்டும்.

ஊ) ஈழத்தமிழ் மக்களின் நலனுக்குக் கேடாக பிற நாடுகளிலிருந்து சேவை, தகுதிநிலை, பொருளியல் நன்மை அடையாதவராய், அனுபவிக்காதவராய் இருக்க வேண்டும்.

6) நிறைவேற்றுக்குழு உறுப்பினர் ஒருவர் இறந்தாலோ அல்லது மாற்றீடு செய்யப்பட்டாலோ அல்லது பதவி விலகினாலோ நிறைவேற்றுநரால் நியமிக்கப்பட்டவராயின் மாற்றீடு நா.க.த.அ. முதன்மைநிறைவேற்றுநரால் மூன்று மாத காலத்திற்குள் நிறைவு செய்யப்பட வேண்டும், பிராந்தியரீதியில் தெரியப்பட்டவராயின் அப்பிராந்திய உறுப்பினர்களால் மூன்று மாத காலத்திற்குள் வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்யப்படவேண்டும்.

7) இவ்வாறு தெரிந்தெடுக்கப்படும் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் முந்தைய நிறைவேற்றுக்குழு உறுப்பினரின் எஞ்சிய பதவிக் காலத்திற்கு அங்கம் வகிப்பார்.

நிறைவேற்றுக் குழுவின் பதவிக் காலம்

6

1) நிறைவேற்றுக்குழு கலைக்கப்படுதல் அல்லது நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவதற்கு முன்பே நீக்கப்படுதல் போன்ற வேறு வகையில் குறித்துரைக்கப்படா விட்டால், நிறைவேற்றுப் பேரவையின் பதவிக் காலம் மூன்று (3) ஆண்டுகளாக இருக்கும்.

2) குறித்துரைக்கப்பட்டவாறு நிறைவேற்றுக்குழு கலைக்கப்படும் சந்தர்ப்பங்களைத்தவிர நிறைவேற்றுக்குழு உறுப்பினர் மீண்டும் தெரிந்தெடுக்கப்படுவது-நியமிக்கப்படுவது செல்லுபடியற்றுப் போகாது; ஆனால் ஒரு நிறைவேற்றுக்குழு உறுப்பினர் மீண்டும் தெரிந்தெடுக்கப்படும்-நியமிக்கப்படும்; போது, தொடர்ச்சியான இரு பதவிக் காலங்களை விஞ்சக் கூடாது.

முதன்மை நிறைவேற்றுநரைத் தேர்ந்தெடுத்தல்

நா.க.த.அ. பேரவை முதன்மை நிறைவேற்றுநராக ஒரு உறுப்பினரை இரகசிய வாக்கெடுப்பு மூலம் அறுதிப் பெரும்பான்மையால் தெரிவு செய்யும்.

முதன்மை நிறைவேற்றுநரின் பதவிக் காலம்

இந்த அரசமைப்புக்கு இணங்கவும் பதவிக் காலம் முடிவதற்கு முன்னதாகவும் பதவி நீக்கம் செய்யப்படும் சந்தர்தர்ப்பத்தை விலக்கிப் பார்த்தால், முதன்மை நிறைவேற்றுநரின் பதவிக் காலம் மூன்று (3) ஆண்டுகளாக இருக்கும்.

முதன்மை நிறைவேற்றுநர் இல்லாத நிலையில் அவ்விடத்திற்கு துணை முதன்மை; நிறைவேற்றுநர்களில் ஒருவரை முதன்மை நிறைவேற்றுநர் தெரிவு செய்வார்.

அவ்வாறு முதன்மை நிறைவேற்றுநர் தெரிவு செய்யப்பட முடியாத நிலை ஏற்படுமாயின் மூவரில் ஒருவர் அவ்விடத்திற்கு தெரிவாவர். இத்தெரிவு போரவையின் அறுதிப்பெரும்பான்மையைப் பெறவேண்டும்.

முதன்மை நிறைவேற்றுநர், துணை முதன்மை நிறைவேற்றுநர்கள்; மற்றும் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் அரசமைப்பில் குறித்துரைக்கப்பட்டிருக்கும் வகையில் சபாநாயகர் அல்லது துணைச்சபாநாயகர் முன்னிலையில் பதவி ஏற்பு மற்றும் இரகசியக்-காப்புஉறுதியேற்று ஒப்பமிடுவார்கள்.

நிறைவேற்றுக்குழுவின் கூட்டம்

முதன்மை நிறைவேற்றுநர் நிறைவேற்றுக்குழு கூட்டங்களுக்குத் தலைமை வகிப்பார். அவரில்லாத போது துணைத் தலைமை நிறைவேற்றுநர்களில் ஒருவர் தலைமை வகிப்பார்.

முதன்மை நிறைவேற்றுநர் நிறைவேற்றுக்குழு கூட்டங்களை கூட்டுதல்

முதன்மை நிறைவேற்றுநர் தேவைப்படும்போது நிறைவேற்றுக்குழு கூட்டம் நடத்த அழைப்பு விடுக்கலாம், அல்லது அவரை நிறைவேற்றுக்குழு கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளலாம். இத்தகைய கூட்டங்களின் போது நிறைவேற்றுநர் அதில் கலந்து கொள்வார்;

நிறைவேற்றுக்குழு கடமைகள், பொறுப்புகள், நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களின் நீக்கம்

1) நிறைவேற்றுக்குழுவானது அதன் உறுப்பினர்கள் தம் கடமைகளைச் செய்வதற்குக் கூட்டுப் பொறுப்புடையதாகும்; பொதுவாக நா.க.த.அ. பேரவைக்கு அது விளக்கமளிக்கவும், விடை சொல்லவும் பொறுப்புடையதாகும்.

2) முதன்மை நிறைவேற்றுநர் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களுக்கான துறைகளை ஒதுக்கீடு செய்வார்.

7

3) தேவையைப் பொறுத்து நா.க.த.அ. பேரவையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு (2ஃ3) பங்குக்கு மேற்பட்ட பெரும்பான்மையினரின் ஒப்புதலுடன், நேர்வைப் பொறுத்து, நிறைவேற்றுப் பேரவை முழுவதையும் கலைக்கலாம் அல்லது நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் அல்லது உறுப்பினர்கள் எவரையும் நீக்கலாம். ஆனால் தெரிவுசெய்யப்பட்ட மூன்று துணை முதன்மை நிறைவேற்றுனர்களையும் அந்தந்த பிராந்திய உறுப்பினர்களே முடிவுசெய்வார்கள்.

4) எந்த நேரத்திலும் முதன்மை நிறைவேற்றுநர் நிறைவேற்றுக்குழுவை கலைப்பது தொடர்பாக அல்லது தன்னை உட்பட நிறைவேற்றுக்குழு நியமன உறுப்பினர்களின் ஒருவரை நீக்குவது தொடர்பாக அறிவுக்குகந்த ஒரு பரிந்துரையைச் செய்வாரேயானால், இப்பரிந்துரை நா.க.த.அ. பேரவைக்குப் பணிந்தளிக்கப்பட்டு, நா.க.த.அ. பேரவையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றிலிரு பங்கு பெரும்பான்மையினரின் ஆதரவோடு அமுலுக்கு வரும்.

5) நிறைவேற்றுக்குழு முழுவதும் இவ்வாறு கலைக்கப்படுமானால் கலைப்பு நாளிலிருந்து 60க்கு மேற்படாத நாட்களில் புதிய நிறைவேற்றுக்குழு உருவாக்கப்படும்.

6) நிறைவேற்றுக்குழுவின் பதவிக் காலம் முடிந்த பிறகும,; புதிதாக உருவாக்கப்படும் நிறைவேற்றுக்குழு பதவியேற்கும் வரையான இடைக்காலத்திற்கு அதே பதவியில் இருக்கும். இந்த உறுப்பின் (3) (4) (5) கூறுகளில் குறித்துரைக்கப்பட்டவாறு குறிப்பிட்ட நிறைவேற்றுக்குழு உறுப்பினர் பதவி நீக்கப்படுவாராயின் அதன்பின் பதவியில் இருக்க மாட்டார். நிறைவேற்றுக்குழு முழுவதும் கலைக்கப்படும் வேளையில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட நிறைவேற்றுக்குழு பதவியேற்கும் வரை தொடர்ந்து செயற்படும்;; ஆனால் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பொருட்பாடுகள் தொடர்பாக அவர்கள் எந்தப் புதிய முடிவுகளையும் எடுக்கக் கூடாது.

சட்டப் பேரவை

சட்டமியற்றும் அதிகாரம்

சட்டமியற்றும் அதிகாரம், ஆணையுரிமை அனைத்தும் நா.க.த.அ. பேரவையிடம் தங்கி நிற்கும்; இவ்வாறு இயற்றப்படுவது சட்டமாக வேண்டுமானால் முதன்மை நிறைவேற்றுனரின் இசைவு தேவைப்படும்.

சட்டப் பேரவை

சட்டப்பேரவை என்பது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களையும் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களையும் கொண்டதாய் இருக்கும்.

நா.க.த.அ. பேரவையின் இயைபு

நா.க.த.அ. பேரவையானது 115 என்ற எண்ணிக்கையில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களையும் 20. என்ற எண்ணிக்கையில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களையும் கொண்டதாய் இருக்கும்.

நா.க.த.அ. பேரவை உறுப்பினருக்கான தகுதிகள்

நா.க.த.அ பேரவை உறுப்பினராவதற்குப் பின்வரும் தகுதிகள் தேவைப்படும்:

அ) 2010 மார்ச் 15ஆம் நாள் வெளியிடப்பட்ட அறிக்கையில் வரையறுக்கப்பட்டுள்ளபடி தமிழீழக் குடிமகனாய் இருத்தல் வேண்டும்.

ஆ) 17 வயதைப்பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

8

இ) எந்த நீதிமன்றத்தாலும் சுயலாப அல்லது, மற்றும் சுயநோக்க செயல்பாடுகளுக்காக தண்டிக்கப்படாதவர்களாய் இருக்கவேண்டும். குறிப்பிட்ட உறுப்பினர் அந்தந்த நாடுகளின் சட்டங்களின் குற்றப்பதிவு நீக்கப்பட்டவராயின் உறுப்பினராகும் தகுதியுடையவராவர்.

ஈ) தமிழீழ மக்களின் நலனுக்குக் கேடான விதத்தில் பிற நாடுகளிலிருந்து சேவை, தகுதிநிலை அல்லது பொருளியல் நன்மை அடையாதவராய் இருத்தல் வேண்டும்.

உ) அரசமைப்பில் கூறப்பட்டுள்ளவாறு நா.க.த. அரசாங்கத்தின் நோக்கங்களை ஏற்றுக்கொள்கிறவராய் இருத்தல் வேண்டும்.

நா.க.த.அ. பேரவையின் பதவிக் காலம்

நா.க.த.அ. பேரவை ஒவ்வொன்றினதும் பதவிக் காலம் அனைத்து உறுப்பினர்களுக்குமான தேர்தல் நடைபெற்ற பின்னரான முதல் அமர்வில் இருந்து மூன்று (3) ஆண்டுகளுக்கானதாக இருக்கும்.

நா.க.த.அ. பேரவையின் அமர்வுகள்

நா.க.த.அ பேரவையின் சபாநாயகரதும் பெரும்பான்மையான பேரவை உறுப்பினர்களினதும் பரிந்துரைக்கிணங்க பேரவையின் கூட்டத்தை கூட்டுவதற்கான காலம், நேரம,; இடம் குறித்து முதன்மைநிறைவேற்றுனர் அழைப்புவிடுப்பார்.

மேலவை ( நிபுணர்கள் குழு )

மேலவையானது .............. என்ற எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்டதாய் இருக்கும்.

மேலவை உறுப்பினர்கள் நா.க.த.அ. பேரவையின் பரிந்துரையின் பேரில் முதன்மை நிறைவேற்றுநரால் அமர்த்தப்படுவார்கள். சட்டமுன்வடிவு அல்லது வேறுவகைச் சட்டம் எதுவும் மேலவையிலிருந்து பிறப்பிக்க முடியாது.

பேரவையால் இயற்றப்படும் ஒவ்வொரு சட்டமும் அல்லது முதன்மை நிறைவேற்றுநர் அல்லது நிறைவேற்றுக் குழுவினால் மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையையும் கட்டுப்படுத்தும் தன்மை இல்லாத கருத்துச் சொல்வதற்காக மேலவைக்கு அனுப்பப்படும்.

மேலவையின் பதவிக் காலம் பேரவையின் பதவிக்காலத்தை ஒத்ததாக இருக்கும்.

நா.க.த.அ. பேரவை உறுப்பினர்களின் உரிமை

நா.க.த.அ. பேரவையின் அமர்வுகளில் விவாதத்திலும் கருத்தாடலிலும் பங்கேற்பதற்கும், பரிந்துரை அல்லது விளக்கமேதும் அளிப்பதற்கும், வாக்களிப்பதற்கும் உறுப்பினர்கள் உரிமை பெற்றவராவர்.

நா.க.த.அ. பேரவையின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ( சபாநாயகர், துணைச்சபாநாயகர் )

1) நா.க.த.அ. பேரவை ஒவ்வொன்றினதும் முதல் அமர்வின் தொடக்கத்தில் உறுப்பினர்கள் பேரவைத் தலைவர் ஒருவரையும் துணைத் தலைவர் ஒருவரையும் பேரவை உறுப்பினர்களிடையிலிருந்து இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவுசெய்வார்கள்.

2) நா.க.த.அ. பேரவைத் தலைவரும,; துணைத் தலைவரும் தெரிவுசெய்யப்பட்ட பின், அவர்கள் பதவிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். பேரவைத்தலைவர் அவர்கள் அவைஉறுப்பினர்களுள் மூத்தோராக அடையாளம் காணப்பட்டவர் முன்னால் சட்டம் குறித்துரைத்துள்ள வடிவத்தில் உறுதி எடுத்துப் பதவியேற்பார். துணைத்தலைவர் பேரவைத் தலைவர் முன்னனால் சட்டம் குறித்துரைத்துள்ள வடிவத்தில் உறுதி எடுத்துப் பதவியேற்பார்.

3) இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் பேரவைத் தலைவர் அல்லது துணைத் தலைவர் நா.க.த.அ. பேரவையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் நீக்கம்

9

செய்யப்பட்டால், அவர் இவ்வாறு தீர்மானம் இயற்றப்பட்ட நாளிலிருந்து பதவியை விட்டகல்வார்.

4) நா.க.த.அ. பேரவையானது பேரவைத் தலைவர் அல்லது துணைத் தலைவரை நீக்குவது தொடர்பான ஒரு பொருட்பாடு குறித்துக் கூடி விவாதித்துக் கொண்டிருக்கையில் அவர் அத்தகைய அமர்விற்கு தலைமை தாங்க மாட்டார்.

5) நா.க.த.அ. பேரவைத் தலைவர் அல்லது துணைத் தலைவர் இருக்கையானது அவரது நீக்கம், இறப்பு, அல்லது வேறு காரணத்தால் வெற்றிடமாகுமானால், கூடிய விரைவில் அவருக்கான மாற்றீடு தெரிவுசெய்யப்டுவார்.

நா.க.த.அ. பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பு அல்லது உறுதி எடுத்தல்

நா.க.த.அ. பேரவை உறுப்பினர் ஒவ்வொருவரும் தமது இருக்கையில் அமருவதற்கு முன் பேரவைத் தலைவர் அல்லது துணைத் தலைவரின் முன் அல்லது அவர் சார்பில் அமர்த்தப்படுகிற ஒருவரின் முன், சட்டம் குறித்துரைத்துள்ள வடிவில் பதவியேற்பும், உறுதி எடுப்பும் மேற்கொண்டு ஒப்பமிடுவார்.

நா.க.த.அ. பேரவையில் வாக்களித்தல்

இந்த ஆவணத்தின் உறுப்புகளிலும் பிற வழிகளாலும் வழிசெய்யப்பட்டுள்ளவை தவிர, நா.க.த.அ. பேரவையின் பிற பணிகள் யாவும் பெரும்பான்மை வாக்கினால் தீர்வு செய்யப்படும். பணிப் பொருட்பாடுகள் தொடர்பாக வாக்குகளின் சரிசம நிலை அல்லது முட்டுக்கட்டை ஏற்படுமானால், நா.க.த.அ. பேரவையின் பேரவைத் தலைவர் தம் விருப்புரிமையின் பேரில் முடிவெடுக்கும் வாக்கு அளிப்பதன் மூலம் அப்பொருட்பாடுக்குத் தீர்வு காணலாம்.

நா.க.த.அ. பேரவையின் நிறைவெண்

நா.க.த.அ. அரசவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கினர் வருகை தந்திருந்தால், எந்தப் பொருட்பாடு குறித்தும் தீர்வு காண அதற்கு உரிமை உண்டு.

சட்டமுன்வடிவுகள் அறிமுகமும் இயற்றலும்

நா.க.த.அ. பேரவை உறுப்பினர் எவரும் எந்தவொரு சட்ட முன்வடிவு அல்லது தீர்மானத்தை அறிமுகம் செய்வதற்கும், நா.க.த.அ. பேரவை விதிகளில் குறித்துரைத்துள்ளபடி எந்தவொரு திருத்தமும் முன்மொழிவிற்கும் உரிமை உடையவராவார்.

நா.க.த.அ. பேரவையின் நடைமுறை விதிகள்

நா.க.த.அ. பேரவை இந்த அரசமைப்பின் வழிவகைகளுக்கு இணங்க மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரு பங்குக்கு மேற்பட்டவர்களின் ஒப்புதலோடு நடைமுறை விதிகளையும் கூட்ட வழிமுறையையும் வகுத்துக்கொள்ளும்: இவ்வாறான விதிகள் அதுமுதல் செயலுக்கு வரும்.

அவசரச் சட்டங்கள் பிறப்பித்தல்

1) நா.க.த.அ. பேரவையினால் இயற்றப்பட்டு முதன்மை நிறைவேற்றுநருக்கு அனுப்பப்படும் சட்டமுன்வடிவு அல்லது முன்மொழிவு எதுவாயினும் அவர் அதற்கு இசைவளித்த உடனே சட்;டமாக கருதப்படும.; இவ்வாறான சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதா என்பதை முதன்மை நிறைவேற்றுநர் 14 வேலை-நாட்களுக்குள் முடிவு செய்யவேண்டும்;;; அல்லது அவர் தக்கவை எனக் கருதப்படும் பரிந்துரைகளோடு முன்மொழிவை அக்காலத்திற்குள் சபாநாயகருக்கு அனுப்பலாம.; அதன் பிறகு, நா.க.த.அ. பேரவை முன்மொழிவுக்கான முதன்மை

10

நிறைவேற்றுநரின் பரிந்துரைகள் மீது கலந்தாய்வு செய்து, அடுத்த 14 வேலை-நாட்களுக்குள் மறுஒப்புதலுக்காக முதன்மை நிறைவேற்றுநருக்கு அதை அளித்திடும்.

2) நா.க.த.அ. பேரவை அமர்வில் இல்லாத நேரத்தில் பெருமுக்கியத்துவம் வாய்ந்த சிக்கலேதும் எழுந்து பேரவையைக் கூட்ட வேண்டிய அவசரத் தேவை எழுமானால், முதன்மை நிறைவேற்றுநர் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பெரும்பான்மையுடன் இணங்கிப்போய் அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கலாம். இவற்றுக்குச் சட்டத்திற்குரிய அதே வலிமை இருக்கும்.

3) மேற்குறிக்கப்பட்ட அவசரச் சட்டங்கள் எதைவும் சபாநாயகர் ஊடாக தாமதப்படுத்தாது – ஆகக்கூடியது மூன்று வேலைநாட்களுக்குள் அனுப்பி வைக்கவேண்டும். பேரவை உறுப்பினர்கள் அதுபற்றி கலந்து ஆய்வு செய்து திருத்தவோ, மாற்றவோ, நீக்கவோ முடியும்.

நா.க.த.அ. பேரவையின்; உறுப்பினர் அங்கத்துவ நீக்கம்

1) நா.க.த.அ. பேரவையின் உறுப்பினர் எவரேனும் பதவியேற்ற பின் அவரது நடத்தை நா.க.த.அ. பேரவையின் தகுதிகளுக்கு இணங்கி வராதெனத் தெரிந்தால், இது குறித்து நெறிமுறை ஆணையத்திற்கு ( நுவாiஉ உழஅஅளைளழைn ) அறிவிக்கப்படும். நெறிமுறை ஆணையம் இதுபற்றி விசாரணை செய்து உறுப்பினர் எவரையாவது நீக்க வேண்டும் என தெரிவித்தால் அந்த அறிக்கை சபாநாயகர் ஊடாக தாக்கல் செய்யப்படும். இது குறித்துத் நெறிமுறை ஆணையக அறிக்கை பேரவையில் விவாதிக்கப்பட்டு; பேரவையின் மூன்றில் இரண்டு (2ஃ3) பெரும்பான்மையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அவர் நா.க.த.அ. பேரவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டாக வேண்டும்.

2) நா.க.த.அ. பேரவை உறுப்பினர்கள் இவ்வாறு நீக்கப்பட்டால், பதவி விலகினால்;, புதிய உறுப்பினர்களுக்கான தேர்தல் அந்த நாளிலிருந்து 90 நாட்களுக்குள் நடத்தப்படவேண்டும்.

சிறப்புப் பொது பேரவை

1) நிறைவேற்றுக்குழு, நா.க.த.அ. பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரின் கூட்டு முன்மொழிவின் பேரில் சிறப்புப் பொதுப் பேரவையைக் கூட்டலாம்.

2) இப்படி ஒரு கூட்டத்திற்கான பிரதிநிதிகளின் இயைபில் நா.க.த.அ. பேரவையின் உறுப்பினர்கள் இடம்பெறுவர். நிறைவேற்றுக் குழு நா.க.த.அ. பேரவையுடன கலந்தாலோசித்து, அந்த அமர்விற்கான திட்டம், காலம் மற்றும் இடத்தைக் கூட்டாக முடிவு செய்யும்.

3) கூட்டத்தின் திட்டப் பொருள், காலம், இடம் ஆகியவை முடிவு செய்யப்பட்ட பின்னர் நா.க.த.அ. பேரவைத் தலைவர் இக்கூட்டத்திற்குரிய அறிவித்தலை; 15 நாட்களுக்குள் தெரிவிக்கவேண்டும்.

திருப்பியழைக்கும் இயங்குமுறை

பேரவை உறுப்பினர் எவரையும், சொல்;வழியாகவோ செயல்வழியாகவோ நா.க.த.அ. நோக்கங்களுக்கும் குறிக்கோள்களுக்கும் புறம்பான விதத்தில் நடந்து கொண்டதற்காக, அல்லது நா.க.த.அ. நோக்கங்களுக்கும் குறிக்கோள்களுக்கும் பங்களிப்பு செய்யாததற்காக, அல்லது நா.க.த.அ. தில் தன் நிலையைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக அவ்வட்டார வாக்காளர்கள் திருப்பி அழைக்கலாம். நா.க.த.அ. பேரவை எந்தவோர் உறுப்பினரையும் திருப்பி அழைப்பதானால் அதற்கான நடைமுறையைத் தொடங்கும் பொருட்டு உறுப்பினரைத் தேர்ந்தெடுத்த நாட்டின் அவரது தேர்தல் வட்டாரத்தில் பங்குபற்றிய வாக்காளர் தொகையில் மூன்றில் ஒரு (1ஃ3) பங்குக்கு மேற்பட்டவர்கள், அல்லது வாக்களிப்பில்லாமல் தெரிவாகியிருப்பின் அவரது வட்டாரத்தில் 300 வாக்காளர்கள் அதற்கான காரணத்தை எடுத்துரைத்து ஒரு விண்ணப்பத்தில் ஒப்பமிட்டு, அதனை நா.க.த.அ. அவைத்தலைவரிடம் அனுப்பிவைக்க வேண்டும். திருப்பி அழைக்கும் இயங்குமுறைக்கு உட்பட்ட உறுப்பினர், அது தொடர்பாக பேரவைக்கு விடையளிக்க 45 நாட்கள் வழங்கப்படும். பேரவை திருப்பியழைக்கும் இயங்குமுறைக்கு அறுதிப்பெரும்பான்மை வாக்குமூலம் இசைவளிக்கலாம்.

11

ஏனைய விடயங்கள்

உள்நாட்டு அமைப்புகளுடன் உறவு

நா.க.த.அ. கட்டமைப்புக்கள் இவ்யாப்பின் குறிக்கோள்களுக்கு முரணாகத உள்நாட்டு அமைப்புகளோடு கூட்டாக வேலை செய்யும்.

தேர்தல் ஆணையம்

முதன்மை நிறைவேற்றுநர் நா.க.த.அ. பேரவையின் பரிந்துரை அடிப்படையில் மூன்று உறுப்பினர் கொண்ட தேர்தல் ஆணையத்தை அமர்த்துவார். வருங்கால நா.க.த.அ. தேர்தல்களை நடத்துவதற்குத் தேர்தல் ஆணையம் பொறுப்பாகும். தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் பேரவையிலோ அல்லது மதியுரைக்குழுவிலோ அல்லலது பேரவை சார்ந்த எந்தக்குழுவிலும் உறுப்பினராய் இருக்கக் முடியாது.

மதியுரைக் குழு

நா.க.த.அ. அமைக்கப்படுவதில் மதியுரைககுழு வகித்த தனித்துவமான முக்கியப் பங்கினைக் கருத்தில் கொண்டு இப்போதைய இயைபுடன் மதியுரைக்குழு நா.க.த.அ. முதல் பதவிக் காலத்தின் போதும் தொடர்ந்து இயங்கிவரும்.

நா.க.த.அ. பேரவை, முதன்மை நிiவேற்றுனர் அல்லது நிறைவேற்றுக்குழு ஆகியோர் எந்த விடயங்களிலும் மதியுரைக்குழுவிடம் ஆலொசனை கேட்கலாம். மதியுரைக்குழு முதன்மை நிiவேற்றுனரிற்கு அல்லது நிறைவேற்றுக்குழுவிற்கு ஆலொசனைகள் வழங்கலாம். மதியுரைக்குழவின் ஆலோசனைகள் நா.க.த.அ. பேரவையையோ, முதன்மை நிiவேற்றுனரையோ அல்லது நிறைவேற்றுக்குழவையோ கட்டுப்கடுத்தாது.

நெறிமுறை ஆணையம்

நா.க.த.அ. பேரவையின் இணக்கப்பாட்டுடன் நிறைவேற்றுக்குழு நெறிமுறை ஆணையத்தை நியமிக்கும். இவ்வாணையத்தில் மூன்று உறுப்பினர்கள் அங்கம் வகிப்பர

http://www.tgte-us.org/

http://www.tgte-us.org/images/TGTE_Tamil_Con.pdf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.