Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் அழிவுக்கு ஐ.தே.க.வே காரணம்: அரியநேத்திரன்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களின் விடுதலைக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டமே தோல்வியடைந்துள்ளதே தவிர தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் இன்னும் முடிவுறவில்லை என த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

புலிகளைத் தோற்கடித்ததால் அரசியல் தீர்வுக்கான தேவை இல்லையென ஐ.தே.க செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அவர்கள் பி.பி.சி செய்திச் சேவைக்கு தெரிவித்திருந்தார். இவ்வாறு இவர் கூறிய விடயம்பற்றி கருத்து தெரிவிக்கையிலேயே திரு அரியநேத்திரன் அவர்கள் மேலுள்ளவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் அழிவிற்கும் அவல வாழ்க்கைக்கும் ஆளும் அரசாங்கம் மாத்திரம் காரணமல்ல பிரதான பாத்திரம் ஐக்கிய தேசிய கட்சிதான். அன்று ஐக்கிய தேசிய கட்சி தீர்வினை முன் வைத்திருந்தால் இன்று இவ்வாறானதோர் நிலை உருவாகியிருக்காது.

அன்று அவ்வாறு தமிழ் மக்களை ஏமாற்றிய ஐக்கிய தேசிய கட்சி இன்று தமிழ் மக்களின் போராட்டம் முடிந்து விட்டதாக அறிக்கை விடுவது விந்தையானதாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகளின் அழிவுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகள் முடிந்து விட்டதாக திஸ்ஸ அத்தநாயக்காவினால் எவ்வாறு கூறமுடியும். புலிகளின் ஆயுதப்போராட்டம் தோல்வியில் முடிந்ததை நாங்கள் அங்கீகரிக்கின்றோம். ஆனால் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கான போராட்டம் இன்னும் முடிவடையவில்லை.

இந்த ஜனநாயக போராட்டத்தின் வெற்றியில்தான் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம் தங்கியுள்ளது. இந்ந சூழ்நிலையில் அத்தநாயக்க போராட்டத்தின் முடிவுடன் எல்லாம் முடிந்து விட்டதாக கூறுவது எந்த வகையில் நியாயமாகும். தமிழ் மக்களை நேசிப்பதாக காட்டும் ஐக்கிய தேசிய கட்சி இவ்வாறு கூறுவதன் மூலம் அதன் இரட்டை முகம் வெளிப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்களாகிய நாங்கள் எங்களுடைய சுயநிர்ணய உரிமைக்காக அறுபது ஆண்டுகளாக போராடி வருகிறோம். இந்த போராட்டத்தின் ஒரு அங்கமாகத்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் எமது உரிமையை பெறுவதற்காக ஆயுதம் ஏந்தி போராடியது. ஆனால் அவர்களின் போராட்டம் கடந்த வருடம் தோல்வியில் முடிவடைந்து தற்போது மௌனிக்கப்பட்ட நிலையில் உள்ளது.

ஆனால் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் இன்னும் ஓயவில்லை. நாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்று கிடைக்கும்வரை எங்களின் போராட்டம் தொடரும். போராட்டத்தின் வடிவம் மாறலாம் ஆனால் எங்களின் போராட்டம் தீர்வு கிடைக்கும் வரை தொடரும்.

ஐ.தே.கட்சியின் மாறுபட்ட முகங்களும் அவர்களின் இனவாதப் போக்கும் என்னவென்று இவ்வாறான கருத்துக்களில் இருந்து தமிழ் மக்கள் நன்கு அறிந்து கொள்வார்கள். என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.tharavu.com/2010/09/blog-post_4557.html

புலிகள் தோற்றுவிட்டதால் அரசியல் தீர்வு தேவையில்லையா?

ஐ.தே.கட்சியின் கருத்தால் கொதிக்கின்றன தமிழ்க் கட்சிகள்!

தமிழர் பிரச்சினை தொடர் பாக ஐ.தே.கட்சி பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க பி.பி.ஸியின் "சந் தேஷய' சேவைக்கு வழங்கிய செவ்வி தமிழ்க் கட் சிகள் மத்தியில் கடும் கொதிப்பை ஏற்படுத்தி இருக் கிறது. யுத்தத்தில் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்ட தால் தமிழ் மக்களின்

புலிகள் தோற்றுவிட்டதால் அரசியல் தீர்வு தேவையில்லையா? ஐ.தே.கட்சியின் கருத்தால் கொதிக்கின்றன தமிழ்க் கட்சிகள்!

கொழும்பு, செப். 29

தமிழர் பிரச்சினை தொடர் பாக ஐ.தே.கட்சி பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க பி.பி.ஸியின் "சந் தேஷய' சேவைக்கு வழங்கிய செவ்வி தமிழ்க் கட் சிகள் மத்தியில் கடும் கொதிப்பை ஏற்படுத்தி இருக் கிறது.

யுத்தத்தில் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்ட தால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டிய தேவை இப்போது இல்லை என்று பி.பி.ஸி. சிங்களச் சேவையான "சந்தேஷய'வுக்கு அளித்த பேட்டியில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித் திருந்திருக்கிறார். அது குறித்து தமிழ்க் கட்சிகள் கொதிப்படைந்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பியுமான சுரேஷ் பிரேமச்சந் திரன் இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்:

""ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும், ஐக் கிய தேசியக் கட்சியும் ஒரே குட்டையில் ஊறிய மட் டைகள். ஆயுதம் ஏந்திப் போராடினால் மட்டுமே தமிழ் மக்களுக்கு ஏதாவது தருவோம் என்ற நிலைப்பாட்டில் பெரும்பான்மைக் கட்சிகள் இருக்கின்றன என்பதையே ஐ.தே.கட்சிப் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் கூற்று நிரூ பிக்கின்றது'' என்று தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுக்கான தேவை இப்போது இல்லை என ஐ.தே.கட்சி தெரிவித்திருப்பது அதன் சுயரூபத்தை தமிழ் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது என ஈ.பி.டி.பி. தெரிவித்துள்ளது.

ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதித் தலைவருமான எம்.சந்திரகுமார் தெரிவிக்கையில்,

""புலிகள் வன்முறையை மேற் கொண்டனர். இப்போது தமிழ் மக்கள் ஜனநாயகக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்துள்ளனர். ஏனைய மக்களைப் போல் தமிழ் மக்களும் சரி சமமாக வாழவேண்டும். அதற்கு அரசியல் தீர்வு அவசியமானது. அரசியல் தீர்வுக்கான தேவை இப்போது இல்லை என ஐ.தே.கட்சி கூறியிருப்பது முட்டாள்தனமானது என்றார்.

மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கருத்துத் தெரிவிக்கையில்;

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு தேவை என்பதை ஜனாதிபதியே ஏற்றுக்கொண்டுள்ளார். நாங்கள் இப்போது எந்த மாதிரியான தீர்வு தேவை என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றோம். வெளிநாடுகளிலுள்ள தீர்வு மாதிரிகள் குறித்து வெளிநாட்டுத் தூதரகங்களுடன் பேசி வருகின்றோம்.

சமீபத்தில் அமெரிக்கத் தூதுவரைச் சந்தித்து இனப் பிரச்சினைத் தீர்வுக்காக அமெரிக்கா மேற்கொண்ட வழிமுறைகள், மாதிரிகள் குறித்து பேச்சு நடத்தினோம்.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் ஆகியோரும் கலந்துகொண்டனர். இதற்கு முன்னர் இதேமாதிரியான சந்திப்பொன்று இத்தாலி தூதுவருடனும் இடம்பெற்றது என்றார்.

http://www.uthayan.com/Welcome/full.php?id=3999&Uthayan1285793476

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.