Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொன்சேகாவுக்கு இரண்டரை வருட சிறை! ஜனாதிபதி மஹிந்தர் தீர்மானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொன்சேகாவுக்கு இரண்டரை வருட சிறை! ஜனாதிபதி மஹிந்தர் தீர்மானம்

வியாழன், 30 செப்டம்பர் 2010 05:22

மின்னஞ்சல் அச்சிடுக PDF

இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தால் குற்றவாளியாக காணப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை இரண்டரை வருடங்கள் சிறையில் அடைக்கின்றமைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அனுமதி வழங்கி உள்ளார்.

ஜனாதிபதியால்அமைக்கப்பட்டிருந்த இராணுவ நீதிமன்றத்தின் விசாரணையாளர்கள் குழு ஆயுதக் கொள்வனவில் மோசடி செய்தமை மூலம் இராணுவ சட்டங்களை மீறி நடந்தார் என்கிற வழக்கில் கடந்த 17 ஆம் திகதி பொன்சேகாவைக் குற்றவாளியாக கண்டு மூன்று வருட சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

முப்படைகளின் தளபதி என்கிற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இத்தீர்ப்பை அமுலாக்குகின்றமைக்கு அனுமதி வழங்க வேண்டும். அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்ற ஐ.நாவின் 66 ஆவது பொதுச்சபைக் கூட்டத் தொடரை நிறைவு செய்துகொண்டு ஜனாதிபதி நேற்றுத்தான் நாடு திரும்பி இருந்தார். இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தால் பொன்சேகாவுக்கு மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தண்டனையை இரண்டரை வருடங்கள் ஆக்கி உள்ளார்.

tamilcnn.com

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு இராணுவ நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனை தீர்ப்பை முப்படைகளின் பிரதம தளபதியான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷநேற்று முன்தினம் புதன்கிழமை உறுதி செய்து கையெழுத்திட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையப் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

30 மாத கடூழியச் சிறைத்தண்டனை

எம்.பி. பதவியையும் இழந்தர் பொன்சேகா

ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்லவின் அறிக்கையை இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபயமெதவல நேற்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்தச் செய்தியாளர் மாநாட்டில் வாசித்தார்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

சேவையிலிருந்த போது இராணுவ கேள்வி மனு செயற்பாட்டு விதிமுறைகளை மீறி செயற்பட்டமை தொடர்பான விசாரணை இரண்டாவது நீதிமன்றத்தால் மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் பொன்சேகா மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இந்த நான்கு குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டார். இதனடிப்படையில் இராணுவ நீதிமன்றம் சரத் பொன்சேகாவுக்கு 30 மாத கால கடூழிய சிறைத் தண்டனையை விதித்தது.

இந்தத் தண்டனையை இராணுவ நீதிமன்ற நிர்வாக அதிகாரியும், தண்டனைகளை உறுதிப்படுத்தும் அதிகாரியும், முப்படைகளின் பிரதம தளபதியுமான ஜனாதிபதியினால் 2010 செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜீ.எஸ்.சீ.பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றச் சட்டத்தின் 109 (இ) பிரிவுக்கமைய அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டமை தொடர்பில் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன எனக் குறிப்பிட்டிருந்தது.

இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல இந்த அறிக்கையை வாசித்த பின்னர், அவரிடம் ஊடகவியலாளர்கள் கேள்விகளைத் தொடுக்க முற்பட்டபோது. இந்தத் தீர்ப்பு தொடர்பில் எந்தவிமான கேள்விக்கும் தம்மால் பதிலளிக்க முடியாதிருப்பதாகவும் தீர்ப்பை அறிவிக்கும் பொறுப்பு மட்டுமே தம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்து விட்டு செய்தியாளர் மாநாட்டிலிருந்து வெளியேறிவிட்டார்.

இதேவேளை, சரத் பொன்சேகா மீது விதிக்கப்பட்ட 30 மாத காலச் சிறைத் தண்டனை தீர்ப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதிப்படுத்தியதையடுத்து இராணுவப் பாதுகாப்பிலிருக்கும் அவரை உடனடியாகவே சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல சிறை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும்,அதன் பிரகாரம் நேற்று பிற்பகல் அவர் வெலிக்கடைச் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

"அரசியலமைப்பு ரீதியான நடவடிக்கை"

ஜனநாயக தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரான சரத் பொன்சேகா உடனடியாகவே பாராளுமன்றில் அமர்வதற்கான தகுதியை இழந்துவிட்டதாக தெரிவித்த தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரது எம்.பி.பதவி அரசியலமைப்பு ரீதியாக இல்லாமல் போய்விட்டதாகவும் குறிப்பிட்டார்.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்தச் செய்தியாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது தகவல் மற்றும் ஊடகத் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில் கூறியதாவது;

இராணுவ நீதிமன்றம் சரத் பொன்சேகாவை குற்றவாளியாகக் கண்டு 30 மாத கால சிறைத் தண்டனைத் தீர்ப்பை வழங்கியிருந்தது. இந்தத் தீர்ப்பை முப்படைகளின் தளபதியான ஜனாதிபதியால் உறுதிப்படுத்தப்பட வேண்டியிருந்ததால் தீர்ப்பை அமுல்படுத்துவதற்கு வெளிநாடு சென்றிருந்த ஜனாதிபதி நாடு திரும்பும் வரை தாமதப்படுத்த வேண்டியேற்பட்டது.29 ஆம் திகதி அதிகாலை ஜனாதிபதி நாடு திரும்பினார். அதன் பின்னர் இராணுவ நீதிமன்றத் தீர்ப்பு உடனடியாகவே ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பை ஜனாதிபதி உறுதிப்படுத்தி கையெழுத்திட்டார்.

ஜனாதிபதியின் இந்த அங்கீகாரத்தின் விளைவாக சரத் பொன்சேகா உடனடியாகவே பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கின்றார்.அரசியலமைப்பு விதிகளுக்கமைய சிறைத்தண்டனைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டு விட்டதாகவும் அமைச்சர் ரம்புக்வெல தெரிவித்தார்.

நீதிமன்றத்தை நாட ஜ.தே.கூ. முடிவு

இராணுவ நீதிமன்றத்தினால் குற்றவாளியாக காணப்பட்டவர் பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்க வேண்டி வரும் என்ற ஏற்பாடுகள் அரசியலமைப்பில் இல்லாமையால், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்புரிமையை பாதுகாத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடப்போவதாக அவர்தலைமை வகிக்கும் ஜனநாயக தேசியக் கூட்டணி தெரிவித்துள்ளது.

நாவல சோலிஸ் ஹோட்டலில் நேற்றுவியாழக்கிழமை நடைபெற்ற ஜனநாயக தேசிய கூட்டணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் விஜித ஹேரத் எம்.பி.இது பற்றிய கருத்துக்களை வெளியிட்டார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

"இரண்டாவது இராணுவ நீதிமன்ற தீர்ப்புக்கு கையெழுத்திட்டு சரத் பொன்சேகாவுக்கு 30 மாத (இரண்டரை வருடங்கள்) கடூழியச் சிறைத் தண்டனையை ஜனாதிபதி உறுதி செய்துள்ளார். நாம் இந்த இராணுவ நீதிமன்றத்தையும், அதன் தீர்ப்பையும் ஏற்க தயாராக இல்லை. ஏனெனில் இது பக்கச் சார்பான தீர்ப்பு. நாம் ஏற்கனவே சரத் பொன்சேகாவுக்கு எதிரான முதலாவது இராணுவ நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு அக்டோபர் 8 ஆம் திகதி விசாரிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் இந்த இரண்டாவது இராணுவ நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் விரைவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளோம். இராணுவ சட்டத்தின் 79 ஆவது சரத்தானது இராணுவ நீதிமன்ற தீர்ப்பை ஆட்சேபித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் செல்ல உரிமை இருப்பதாக விதைந்துரைக்கிறது. அதன் பிரகாரமே நாம் மேன்முறையீட்டு நீதிமன்றம் செல்கிறோம்.

இதேநேரம், சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்புரிமையைப் பொறுத்த வரையில், சிவில் நீதிமன்றத்தில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க முடியாதென அரசியலமைப்பில் கூறப்படுகிறது. எனினும் இராணுவ நீதிமன்றத்தினால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவரது பாராளுமன்ற உரிமை பறிபோகும் என்று எங்கும் கூறப்படவில்லை. அந்த வகையில் நாம் இந்த இராணுவ நீதிமன்றத் தீர்ப்பை சிவில் சட்டத்தின் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆட்சேபனைக்குட்படுத்தி சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்புரிமையைப் பாதுகாத்துக்கொள்ளக் கூடிய தீர்ப்பொன்றை விரைவில் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம். நாம் இவ்விடயத்தில் அதிகபட்ச நீதிமன்ற நடவடிக்கைகளை எடுப்போம். சரத் பொன்சேகாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக இன, மத, குல பேதங்களின்றி அனைத்து மக்களும் அணிதிரள வேண்டும்%27 என்றார்.

[ தினக்குரல் ] - [ Oct 01, 2010 04:00 GMT ]

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டரை வருடம் போதாது.

பத்துப் பன்னிரண்டு வருடங்கள் உள்ளே இருந்தால் தான்

மகனுக்குப் புத்தி வரும்

வாத்தியார்

********

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.