Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு -2010

Featured Replies

மருத்துவத் துறைக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு பிரிட்டிஷ் விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்ஸுக்கு வழங்கப்படுகிறது.

1988 ஆம் ஆண்டு மரணமடைந்த பாட்ரிக் ஸ்டெப்டோப்புடன் இணைந்து அவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் சோதனைக் குழாய் குழந்தைகளுக்கு வழி வகுத்தன.

இவர்களது ஆராய்ச்சியானது மனிதக் கருவை உடலுக்கு வெளியே உருவாக வைத்து அதை கருப்பைக்குள் செலுத்தும் தொழில்நுட்பத்துக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. அப்படி உருவாக்கப்பட்ட ஒரு கரு கருப்பையினுள் செலுத்தவும் பட்டது.

1950 களில் தொடங்கப்பட்ட அவரது ஆய்வுகளின் மூலம் 1978 ஆம் ஆண்டு உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தை பிறக்க வழி செய்தது.

அதற்கு பிறகு சோதனை குழாய் மூலமாக நாற்பது லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன.

உலகளவில் பத்து சதவீதமான மக்கள் மலட்டுத் தன்மையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டாக்டர் எட்வர்ட்ஸின் ஆய்வுகள் அந்தத் தன்மையிலிருந்து விடுபடுவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தது என்று நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/10/101004_medicine_nobel.shtml

  • தொடங்கியவர்

இயற்பியல்: 2 பிரிட்டிஷ் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு

லண்டன், அக். 5: இயற்பியல் சம்பந்தப்பட்ட கண்டுபிடிப்புக்காக 2010ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 2 பேருக்கு வழங்கப்படுகிறது. பரிசாக வழங்கப்படும் 9 லட்சம் பவுண்டு ( 6.57 கோடி) ரொக்கத்தை இருவரும் பகிர்ந்து கொள்வார்கள்.

இந்த இருவரும் ரஷியாவில் பிறந்து தற்போது பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக பணியாற்றுகின்றனர்.

அணுவின் அளவு தடிமனைக் கொண்ட கிராபீன் என்ற கார்பனை உருவாக்கியதற்காக ஆண்ட்ரீ கெய்ம் ( 51), கான்ஸ்டான்டின் நொவோ செலேவ் (36) ஆகிய இந்த விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.

இந்த விருது கிடைத்தது பற்றி கெய்ம் கூறியதாவது:

நோபல் விருது கிடைத்த தகவல் தெரியவந்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். நிம்மதியாக உறங்கினேன். இந்த ஆண்டு எனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என எதிர்பார்க்கவே இல்லை என்றார் நெதர்லாந்து நாட்டவரான கெய்ம்.

நொவோ செலேவ் பிரிட்டிஷ் மற்றம் ரஷிய குடியுரிமை பெற்றவர்.

கெய்முடன் இணைந்து பிஎச்டி மாணவராக நெதர்லாந்தில் ஆய்வில் ஈடுபட்டார் நொவோ செலேவ்.

இவ்விருவருமே ரஷியாவில் இயற்பியல் விஞ்ஞானிகளாக பணியாற்றியுள்ளனர்.

தற்போது இவ்விரு விஞ்ஞானிகளும் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

கிராபீன்

பல அதிசயிக்கத்தக்க பண்புகளை உள்ளடக்கியது இவர்கள் உருவாக்கியுள்ள கிராபீன். இது எதிர்காலத்தில் பல்வேறு சாதனைகளுக்கு அடித்தளமிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தட்டையான வடிவில் கிராபீனை உருவாக்கியிருக்கிறார்கள். தாமிரத்துக்கு நிகராக மின் கடத்தும் திறன் உடையது இந்த கிராபீன். மேலும் வெப்பத்தையும் எளிதில் கடத்தும் தன்மை உடையது. குவாண்டம் இயற்பியல் துறை சார்ந்தது இந்த கண்டுபிடிப்பு. கிராபீன் என்கிற இந்த கார்பன் ஒரு புது வகை பொருள் என நோபல் கமிட்டி வர்ணித்துள்ளது.

ஹீலியம் வாயு கூட ஊடுருவ முடியாத வகையில் மிகவும் அடர்த்தி மிக்கது கிராபீன்.

சாதாரண பென்சில்களில் உள்ள கிராபைட் கார்பனிலிருந்து கிராபீனை தமது அயராத கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு மூலமாக இருவரும் உருவாக்கியுள்ளனர்.

மின்னணுவியல் துறையில் இந்த கண்டுபிடிப்பு பல புதுமைகளுக்கு வழி செய்யும் என்று எதிர்பார்க்கலாம். சோலார் (சூரிய) பேட்டரிகள் உருவாக்கவும் இது பயன்பட வாய்ப்பு உள்ளது. மேலும் பிளாஸ்டிக்குடன் இதை சேர்த்து புதுவகை மின் கடத்தியாக பயன்படுத்தலாம். மெல்லியதாகவும், மீட்சித்தன்மை உடையதாகவும், லேசான எடை கொண்டதாகவும் இருப்பதால் எதிர்காலத்தில் செயற்கைக்கோள்கள், விமானங்கள், கார்கள் தயாரிப்பில் கிராபீன் கலப்புப் பொருள்கள் பயன்படுத்தப்படுவது உறுதி.

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=World&artid=313892&SectionID=131&MainSectionID=131&SEO=&Title=இயற்பியல்: 2 பிரிட்டிஷ் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு

----------------------------------------------------

ஒரு சாதாரண பென்சில் 'ஊக்கு' (முனைப்பகுதி) தான் இந்த இரு விஞ்ஞானிகளுக்கும் நோபல் பரிசை வாங்கித் தந்துள்ளது. இவர்களின் கண்டுபிடிப்பான கிராஃபைன் உண்மையிலேயே மிகவும் அற்புதமானது என்பதில் சந்தேகம் இல்லை. கிராபைட்டிலிருந்து (பென்சில் நுனிப்பகுதியில் உள்ள கார்பன்) கிராஃபைனை பிரித்து எடுத்ததுதான் இந்த இரு வி்ஞ்ஞானிகளும் செய்த சாதனை. ஒரு மில்லிமீட்டர் கிராபைட்டில், கிட்டத்தட்ட 30 லட்சம் அடுக்குக் கொண்ட கிராஃபைன் இருப்பதாக கண்டுபிடித்துச் சொன்னவர்கள் இந்த ரஷ்யர்கள். அதை விட முக்கியமானது மட்டுமல்ல, ஆச்சரியமானதும் கூட இந்த கிராஃபைனின் தன்மைகள்.

இது ஒரு நானோ மெட்டீரியல். மிக மிக மெல்லிய படலம் போன்றது இந்த கிராஃபைன். அதேசமயம், இருப்பதிலேயே மிகவும் வலுவானதுதான் இதுதான். நல்ல அடர்த்தியானதும் கூட. இருப்பதிலேயே மிகவும் சிறிய வாயு அணு ஹீலியம்தான். ஆனால் அந்த ஹீலியத்தால் கூட இந்த கிராஃபைனை துளைத்துக் கொண்டு போக முடியாது என்றால்,அது எவ்வளவு அடர்த்தியானது என்பது புரியும்.

கார்பனின் இன்னொரு வடிவம் இந்த கிராஃபைன். கார்பனை விட ஒரு அணு அடர்த்தி அதிகம் கொண்டது, அவ்வளவுதான். படுக்கை வசமான அடுக்குகளுடன் கூடிய கார்பன் அணுக்கள் இவை. இரு பரிமாணம் கொண்ட தேன் கூட்டைப் போன்ற வடிவம் கொண்ட மிகவும் இறுக்கமான அடுக்குகளாக இவை கிராபைட்டில் காணப்படுகிறது.

மின் கடத்தியாகவும், வெப்பக் கடத்தியாகவும் இதை பயன்படுத்தலாம். இதனால், சிலிக்கான் செமி கண்டக்டார்களுக்குப் பதிலாக இந்த கிராஃபைனைப் பயன்படுத்த முடியும்.

கிராஃபைனை, கைக்கடிகாரங்கள், சோலார் பேனல்கள், செல்போன்கள், கம்ப்யூட்டர்கள், கார்கள், விமானங்கள், செயற்கைக் கோள்கள் என பலவற்றுக்கும் பயன்படுத்த முடியும். மேலும் டச் ஸ்க்ரீன் தயாரிப்புக்கும் இதை பயன்படுத்த முடியும்.

மிகவும் எளியது, மெல்லியது, அதேசமயம், உறுதியான நானோ மெட்டீரியல் கிராஃபைன் என்பதால் இது எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், பல்வேறு தயாரிப்புகளுக்கும் மிகப் பெரிய உதவியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனால்தான் இதை 21ம் நூற்றாண்டின் அற்புதம் என இயற்பியலாளர்கள் வர்ணிக்கின்றனர்.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் தற்போது ஆன்ட்ரியும், நோவோசெலவோவும் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்குப் பரிசாக 9 லட்சம் பவுண்டுகள் கிடைக்கும்.

Edited by akootha

  • தொடங்கியவர்

மூன்று பேருக்குவேதியியல் துறை நோபல் பரிசு

வேதியியல் துறைக்கான இந்தாண்டு நோபல் பரிசு அமெரிக்கர் மற்றும் இரண்டு ஜப்பானிய விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க விஞ்ஞானி ரிச்சர்ட் ஹெக், ஜப்பானிய விஞ்ஞானிகள் எய்-இச்சி நெஜிஷி, அகிரா சுசூகி ஆகியோர் வேதியியல் துறையில் மேற்கொண்ட "பல்லாடியம்' மூலக்கூறுகள் குறித்த ஆய்வை பாராட்டி, இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழு கோடி ரூபாய் ரொக்கப் பரிசு இந்த மூன்று விஞ்ஞானிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது. பல்லாடியம் மூலக்கூறுகள் மூலம் மருத்துவத் துறைக்கும், எலக்ட்ரானிக் தொழில் துறைக்கும் பயனுள்ளதாக இருக்கும் என, அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=100894

பெரு நாட்டு எழுத்தாளர் மரியோ வர்காஸ் லோசாவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

பெரு நாட்டைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் மரியோ வர்காஸ் லோசாவுக்கு 2010ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.

பெரு நாட்டு அதிபர் தேர்தலில் முன்பு போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் லோசா. சிறந்த எழுத்தாளர், பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். ஸ்பானிஷ் மொழி பேசும் இலக்கிய கர்த்தாக்களில் முக்கியமானவர் லோசா.

74 வயதாகும் லோசாவை வெகுவாகப் பாராட்டியுள்ள நோபல் பரிசுக் கமிட்டி, அரசியல் அதிகாரம் குறித்த அவரது அலசல், தனி நபர்கள் அதிகார வர்க்கத்தை எதிர்த்துப் போராடும் நிலை, அதில் அவர்கள் அடையும் தோல்விகள், புரட்சிகள் குறித்து மிகுந்த ஞானத்துடன் எழுதி வருபவர் லோசா என புகழாரம் சூட்டியுள்ளது. மேலும் 60களிலும், 70களிலும் லத்தீன் அமெரிக்க இலக்கியம் பெரும் புகழ் பெறவும், பிரபலம் அடையவும் வித்தாக அமைந்தவர்களில் மிக முக்கியமானவர் லோசா என்றும் புகழ்ந்துள்ளது.

லோசா, 30க்கும் மேற்பட்ட நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். அவற்றில் புகழ் பெற்றவை கான்வர்சேஷன் இன் கதீட்ரல், தி கிரீன் ஹவுஸ் ஆகியவையாகும்.

1995ம் ஆண்டு இவருக்கு ஸ்பானிஷ் மொழி இலக்கிய வட்டாரத்தில் அளிக்கப்படும் உயரிய விருதான கார்வன்டஸ் பிரைஸ் கிடைத்தது.

60களில் இவர் எழுதிய தி டைம் ஆப் தி ஹீரோ என்ற நாவல்தான் சர்வதேச அளவில் லோசாவை உயர்த்திப் பிடிக்கக் காரணமாகும். பெரு ராணுவ அகாடமியில் தான் சந்தித்த அனுபவங்களை இதில் அழகாக வடித்திருப்பார் லோசா. இந்த நூல் பெருவில் பெரும் பிரளயத்தைக் கிளப்பியது. ஆயிரக்கணக்கான நூல்களை ராணுவ அகாடமி முன்பு போட்டு ராணுவ அதிகாரிகள் தீயிட்டுப் போராட்டங்களையும் நடத்தினர். ராணுவ அகாடமியின் அடக்குமுறைகளை சொன்னதால் இந்த எதிர்ப்பு.

1982ம் ஆண்டுதான் கடைசியாக இலக்கியத்துக்கான நோபல் பரிசை தென் அமெரிக்கர் ஒருவர் (கொலம்பியாவின் காப்ரியல் கார்சியா) பெற்றிருந்தார். அதன் பின்னர் ஐரோப்பியர்களே தொடர்ந்து வாங்கிக் கொண்டிருந்தனர். இதனால் நோபல் பரிசுக் கமிட்டி கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தென் அமெரிக்க எழுத்தாளர் ஒருவரைத் தேடி நோபல் வந்துள்ளது.

பெருவின் அரிக்யூபாவில் பிறந்தவர் லோசா. இவரது பெற்றோர் விவாகரத்து வாங்கியதால் பொலிவியாவில் தனது தாத்தா, பாட்டியுடன் வளர்ந்தார். பின்னர் 1946ல் மீண்டும் பெரு திரும்பினார்.அங்கு ராணுவப் பள்ளியில் சேர்ந்தார். பிறகு லிமா மற்றும் மாட்ரிட் நகர்களில் இலக்கியம் மற்றும் சட்டம் பயின்றார்.

1959ல் பாரீஸுக்கு இடம் பெயர்ந்தார். மொழி ஆசிரியராகப் பணியாற்றினார். ஏஎப்பி எனப்படும் ஏஜென்சி பிரான்ஸ் பிரஸ்ஸேவில் செய்தியாளராகப் பணியாற்றினார். பிரான்ஸ் டிவியிலும் வேலை பார்த்துள்ளார்.

அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இவர் ஆசிரியராகப் பணியாற்றியவர்.இப்போது கூட பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் வருகைப் பேராசிரியராக இருக்கிறார்.

1990ல் பெரு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு அல்பர்டோ பிஜிமோரியிடம் தோல்வியுற்றார். பின்னர் 1994ம் ஆண்டு ஸ்பானிஷ் அகாடமியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிறந்த எழுத்தாளராக மட்டுமல்லாமல் சாதாரண மக்கள் மீதான அடக்குமுறைகளை தைரியமாக தட்டிக் கேட்கும் புரட்சிவாதியாகவும் திகழ்பவர் லோசா என்பது அவருக்கான கூடுதல் சிறப்பாகும்.

http://thatstamil.oneindia.in/news/2010/10/07/nobel-prize-literature-mario-vargas-llosa.html

  • தொடங்கியவர்

சீன கம்னீசிய அரசு எதிர்ப்பாளருக்கு அமைதிக்கான நோபல் பரிசு 2010

http://www.yarl.com/forum3/index.php?showtopic=76197

மனித உரிமைக்காக சீன அரசை எதிர்த்து போராட்டம் நடத்திய சமூக ஆவலருக்கு இந்த ஆண்டுக்கான புகழ்பெற்ற அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வார காலமாக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ துறையில் பிரிட்டனை சேர்ந்த டெஸ்ட் டியூப் பேபி முøறையை கண்டுபிடித்த எட்வர்டுக்கு நோபல் பரிசு கிடைத்தது.

நேற்று இலக்கியத்துக்கான விருது பெரு நாட்டை சேர்ந்த மரியோ வர்கோஸ் லோசாவுக்கு கிடைத்தது. இந்நிலையில் இன்று அமைதிக்கான நோபல் பரிசு சீன நாட்டை சேர்ந்த வியூஜியாபோவுக்கு கிடைத்துள்ளது. பேச்சு சுதந்திரம் தொடர்பான குற்றத்திற்கு தற்போது இவர் சிறையில் இருக்கிறர் என்பது குறிப்பிடத்தக்கது.

1989 முதல் சீன அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர். மனித உரிமைக்காக குரல் கொடுக்கும் பல போரட்டங்களை முன் நின்று நடத்தியவர். புரட்சி ஏற்படுத்தும் பல்வேறு நாவல்களை எழுதியவர். இதற்கு முன்னர் இந்த அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க அதிபர் ஒபாமா பெற்றார்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=102229

Liu Xiaobo of China awarded Nobel Peace Prize

http://www.theglobeandmail.com/news/world/liu-xiaobo-of-china-awarded-nobel-peace-prize/article1748944/

China warns Nobel official: Don't honor dissident

http://www.theglobeandmail.com/news/world/americas/china-warns-nobel-official-dont-honor-dissident/article1729643/

  • தொடங்கியவர்

பொருளாதாரம்: இரு அமெரிக்கர்கள், பிரிட்டிஷ் நிபுணருக்கு நோபல் பரிசு

பொருளாதாரத்துக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு, இரண்டு அமெரிக்கர்கள் மற்றும் பிரிட்டனில் பணியாற்றும் சைப்ரஸ் பொருளாதார நிபுணருக்கு கூட்டாக வழங்கப்படுகிறது.

இதற்கான அறிவிப்பை நோபல் பரிசுக்கான தேர்வுக்குழு திங்கள்கிழமை வெளியிட்டது.

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கழகத்தின் பேராசிரியர் பீட்டர் ஏ டைமண்ட் (70), வடமேற்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டேல் டி மார்டன்சென் (71), பிரிட்டனில் உள்ள "லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ்' மையத்தின் பேராசிரியர் கிறிஸ்டோபர் ஏ பிஸôரைட்ஸ் (62) ஆகிய 3 பேரும் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தொழிலாளர் சந்தை நிபுணர்களான அவர்கள், பொருளாதார கொள்கைகள் எந்த அளவிற்கு வேலை வாய்ப்பின்மையை உருவாக்கிறது என்பது குறித்தும், அதற்குத் தீர்வு காணும் வகையிலும் வெளியிட்ட ஆய்வு முடிவுகளுக்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசுத் தொகை மூவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.

பீட்டர் ஏ டைமண்ட்

யேல் பல்கலைக்கழகத்தில் கணிதம் பயின்ற டைமண்ட், மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. பட்டம் பெற்றார். அதன்பின், பல்வேறு பல்கலைக்கழகங்களில் கல்வி சேவையாற்றிய அவர், இப்போது மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் மூத்த பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

அமெரிக்காவின் சமூக பாதுகாப்பு கொள்கை குறித்து அவர் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைகள் அவருக்கு நோபல் பரிசை பெற்றுத் தந்துள்ளன. "சமூக பாதுகாப்பை காப்போம்' என்ற தலைப்பில்

2004-ல் அவர் வெளியிட்ட கட்டுரை பெரும் வரவேற்பைப் பெற்றது.

அமெரிக்காவின் பொருளாதார நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் "பெடரல் ரிசர்வ் போர்டுவின்' தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்ட 3 பேரில் டைமண்டும் ஒருவர். இறுதியில் பென் பெர்னன்கி என்பவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் டைமண்டின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டேல் டி மார்டன்சென்

வில்லாமெட்டி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பி.ஏ. பட்டம் பெற்ற மார்டன்சென், மார்னஜி மெல்லான் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. ஆய்வுப் படிப்பை முடித்தார். 1965 முதல் வடமேற்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

தொழிலாளர் சந்தை பொருளாதாரம், பேரியல்பொருளாதாரம் துறை நிபுணரான அவர், வேலைவாய்ப்பின்மை குறித்து பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். "ஒரே பணியில் வேறுபட்ட சம்பள விகிதம் ஏன்?', "வேலை தேடுதலும், தொழிலாளர் சந்தை நிலவரமும்' ஆகியவை அவரது கட்டுரைகளில் குறிப்பிடத்தக்கவை.

கிறிஸ்டோபர் ஏ பிஸôரைட்ஸ்

சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த கிரேக்க வம்சாவளியினரான பிஸôரைட்ஸ், பிரிட்டனில் குடியேறி "லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ்' மையத்தில் பி.எச்டி ஆய்வுப் படிப்பை முடித்தார். அதே மையத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் அவர், நார்மன் சாஸ்னோ சேர் ஆப் எக்னாமிக்ஸ் அமைப்பின் பேரியல் பொருளாதார ஆய்வு மைய இயக்குநராகவும் உள்ளார்.

தொழிலாளர் சந்தை- பேரியல் பொருளாதாரம் குறித்து பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள அவர், வேலைவாய்ப்பின்மையில் இருந்து வேலைவாய்ப்பை உருவாக்குவது குறித்து புதிய கொள்கையை வெளியிட்டு உலகின் கவனத்தை ஈர்த்தார்.

மார்டன்செனுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டு அவர் சமர்ப்பித்த "வேலை உருவாக்கல், அழிப்பு' என்ற தலைப்பிலான கட்டுரை பொருளாதார நிபுணர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D:+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,++%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81&artid=316717&SectionID=131&MainSectionID=131&SEO=&SectionName=World

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.