Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படகுகளை மீட்க தமிழக மீனவர்கள் இலங்கை பயணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை, 15, அக்டோபர் 2010 (10:41 IST)

படகுகளை மீட்க தமிழக மீனவர்கள் இலங்கை பயணம்

இலங்கை கடலில் மூழ்கி, அங்குள்ள கடற்படையினரால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் படகுகளை ராமேஸ்வரம் கொண்டு வர, 17பேர் கொண்ட மீனவர்கள் குழு இலங்கை சென்றுள்ளது.

ராமேஸ்வரத்திலிருந்து கடந்த ஜூலை 17ல் மீன்பிடிக்க சென்ற செல்லத்துரை என்பவரின் படகின் மீது, இலங்கை மீனவர்கள் வெடி குண்டு வீசியதால், படகு கடலில் மூழ்கியது. தப்பி வந்த மீனவர்கள் தெரிவித்த தகவலை தொடர்ந்து, இதன் படகை மீட்க மீன்துறை அனுமதியுடன் ஜூலை 22ல் நான்கு படகில் ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடல் பகுதிக்கு சென்றனர்.

யரணைதீவு கடல் பகுதியில் மூழ்கிய படகை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, அங்கு வந்த இலங்கை மீனவர்கள் நான்கு படகின் மீதும் வெடிகுண்டுகளை வீசியதில், பால்துரை என்பவரின் படகு மூழ்கியது. படகில் இருந்த மீனவர்கள் வேறு படகில் ஏறி, மற்ற மூன்று படகுகளில் திரும்பினர். வழியில் ரோந்துப் பணியில் இருந்த இலங்கை கடற்படையினரிடம், நடந்த விபரங்களை தெரிவித்ததை தொடர்ந்து, இலங்கை கடற்படையினர், மீனவர்களுடன் இணைந்து மூழ்கிய படகை மீட்க முயற்சித்தனர்.

மீட்க முடியாததால், ராமேஸ்வரம் மீனவர்களை அனுப்பிவைத்த இலங்கை கடற்படையினர், அடுத்த சில நாட்களில் இரண்டு படகையும் மீட்டு, தலைமன்னார் கடற்படை முகாமில் நிறுத்தினர். இலங்கை தலைமன்னார் செல்ல மத்தியஅரசிடம் இருந்து உத்தரவு வந்தது. இதை தொடர்ந்து மூன்று படகில் மீனவர்கள் கணேசன், பாக்கியராஜ், உட்பட 17பேர் தலைமன்னார் புறப்பட்டுச்சென்றனர்.

கடலோர காவல் படை கப்பலின் பாதுகாப்புடன் இந்திய கடல் எல்லை பகுதிக்கு அழைத்துச்செல்லப்பட்ட 17 மீனவர்களும், இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அங்கிருந்து இலங்கை கடற்படையினரின் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்படும் மீனவர்கள் ,தலைமன்னார் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரண்டு படகுகளையும் மீட்டு ராமேஸ்வரம் திரும்ப உள்ளனர்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=41352

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.