Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நகைகளை ஒப்படைக்க வேண்டும் - மனோகணேசன்

Featured Replies

நகைகளை ஒப்படைக்க வேண்டும் - மனோகணேசன்

இலங்கை அரசு, ராணுவத்தினரால் போரின் இறுதிக்கட்டங்களில் கைப்பற்றப்பட்ட நகைகளை, மீண்டும் நகைகளின் சொந்தக்காரர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கூறினார்.

இலங்கை ராணுவத்தினர், போரின் இறுதி மாதங்களில், வடக்கே பல்வேறு இடங்களில் சுமார் 49 கோடி இலங்கை ருபாய் மதிப்புள்ள தங்க நகைகளை சேகரித்திருப்பதாகவும், இந்த நகைகள் சட்ட ரீதியாக இலங்கை மத்திய வங்கியிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும், இலங்கை நாடாளுமன்றத்தில் அரசாங்கத் தலைமைக் கொறடா, தினேஷ் குணவர்த்தன கூறியதாக செய்திகள் கூறின.

இது குறித்து தமிழோசைக்கு பேட்டியளித்த மனோகணேசன், இந்த நகைகள் தமிழீழ வங்கி என்ற பெயரில் விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வங்கியிடம் , தமிழ் மக்கள், தங்கள் அவசரத்தேவைகளுக்காக ஈடாக வைத்தவைகளாக இருக்கவேண்டும் என்றார்.

இந்த நகைகள் விடுதலைப்புலிகளின் வங்கிகளிலிருந்து பெறப்பட்டவையாக இருந்தாலும், அவை அப்பாவி தமிழ் மக்களின் உடமைகள், அவைகளின் சொந்தக்காரர்கள் யார் என்பதைக் கண்டறிந்து அவைகளை உரியவர்களிடம் சேர்க்கவேண்டியது அரசின் கடமை என்றார் மனோ கணேசன்.

இந்த நகைகள் இவ்வாறு ராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன என்று அவ்வப்போது சொல்லப்பட்டு வந்தாலும், இது குறித்து போர் முடிந்த ஒன்றரை ஆண்டு ஆன பிறகு இப்போதுதான் அரசாங்கம் வாய் திறந்திருக்கிறது என்றார் மனோ கணேசன்.

போரின் இறுதிக்கட்டங்களில் சுமார் மூன்று லட்சம் தமிழ் மக்கள் வன்னிப்பகுதியிலிருந்து வெளியேறி, வவுனியா பகுதியில் தஞ்சம் புகுந்தார்கள். அவர்கள் பொதுவாக தங்களது உடமைகள் அனைத்தையும் விட்டுவிட்ட நிலையிலேயே ஓடிவர நேர்ந்தது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/10/101021_jewels.shtml

Sri Lankan government urged to return gold and jewels

By Thirumalai Manivannan BBC Tamil Service

Tamils in Sri Lanka The plight of displaced Tamils has caused international concern

A Sri Lankan politician has demanded that the government return gold and jewels seized during the final stages of the war against Tamil Tiger rebels last year.

Mano Ganesan's demand comes after the government reportedly disclosed details about gold jewels "collected" by the army in the Wanni region.

Reports say the jewels weighed 110kg and were valued at about $4.4m.

http://www.bbc.co.uk/news/world-south-asia-11603871

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.