Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயகத்தில் ஏதிலிகளுக்கு பட்டுப்புடவையை அனுப்புங்கள்!!!!!?????

Featured Replies

தாயகத்தில் ஏதிலிகளுக்கு பட்டுப்புடவையை அனுப்புங்கள்!!!!!????? - "ஐ.பி.சி" ரேடியோ

silk-sarees.jpg?w=500&h=333

கடந்த சனி வீட்டில் இருந்தால் கடி என்று வேலைக்கு சென்றேன், கொஞ்சகாசும் வந்ததாக போகும்! அங்கு வேறொருவரும் இல்லை, நானோ என்னிடன் இருந்த டப் ரேடியோவில் "ஐ.பி.சி" ரேடியோவை ரியூன் பண்ணி விட்டதால் ... அதில் "சமூக சிந்தனையாம்" ... நல்ல அனுபவம்/திறமை வாய்ந்த இரு அறிவிப்பாளர்கள்!! நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்கள்!!

அதுவும், சமூக சிந்தனையில், ஆலயங்களின் செயற்பாடுகள்/அங்கு எழும் பிரட்சனைகள்/.... பலவற்றை தோண்டிக்கொண்டிருந்தார்கள்! நல்ல விடயம்!! கேட்க வேண்டும்/கதைக்க வேண்டும் இல்லையேல் நாம் செய்வது சரி என்று நினைத்து விடுவார்கள்! பலவற்றை விவாதித்து கொண்டிருக்கும் போது இடையில் ஒரு அறிவிப்பாளர் ...

... இங்கு லண்டனிலுள்ள அம்மன் ஆலயம் ஒன்றில், அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் புது பட்டுப்புடைவை சாத்துகிறார்கள், அப்பட்டுபுடைவைகளை அடுத்த நாட்களே ஏலத்தில் அங்கு வரும் பக்த்தர்களுக்கு விற்று, அப்பணத்தை தாயகத்தில் உள்ள மக்களுக்கு அனுப்புகிறார்கள். அப்புடைவைகளை வாங்கிய பக்தர்களோ, அவற்றை அடுத்த அடுத்த நாட்களில் உடுத்து வந்து பெருமை அடிக்கிறார்களாம்!!!???. இப்புடைவையை விற்று வந்த காசை தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்கு அனுப்புவதிலும் பார்க்க, அப்புடைவைகளையே அம்மக்களுக்கு அனுப்புதல்தான் சிறந்தது!!!! அது அம்ம்னுக்கு செய்யும் தொண்டு என்றளவிற்கு தொடர்ந்தது அந்த அறிவிப்பாளரின் சிந்தனை! இந்த பட்டுச்சேலை அலசல் ஒருதடவையல்ல ஒன்றுக்கு மேற்பட்ட தடவை அந்த அறிவிப்பாளரும் எடுத்து வீசி விளாசினார்!!

... நல்லது முதலில் லண்டனிலுள்ள அந்த அம்மன் ஆலயம் பற்றி ...

புலத்தில் நாள் தோறும் ஆலயங்கள் தோன்றுவதும், அவ்வாலயங்களே பலருக்கு வாழ்வாதாரம் ஆகியும் இருக்கும் நிலையில், சில விரல் விட்டு எண்ணக்கூடிய எம்மவர்களின் ஆலயங்களே, கடந்த காலங்களில் தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்கு, சிங்கள இனவறியர்களால் பெற்றார்களை இழந்த மக்களுக்கு, இயற்கை அழிவுகள் வரும்போது முன்னின்று அம்மக்களுக்கு அதன் வருமானத்தில் பாரிய பங்கினை அர்ப்பணிக்கிறது. இதில் லண்டனிலுள்ள அந்த அம்மன் ஆலயம் முன்னணி வகிக்கிறது. கடந்த காலங்களில் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்துடன் இணைந்து இவ்வாலயம் தாயகத்தில் செய்த தொண்டு கற்பனைக்கு எட்டாதது. ஆலயத்தில் நிர்வாகங்களில் சிக்கல்கள், குழி பறிப்புகள், இத்தொண்டையே சிங்களம் சிலரை கொண்டு நிறுத்த படாதபாடு கூட படுகிறது. எத்தனையோ உட்பிரட்சனைகள் இருந்தும் இவ்வாலயம் இத்தொண்டை இன்றும் யாழ், வன்னி, மன்னார், திருமலை, மட்டு/அம்பாறை, மலையகம் போன்ற பகுதிகளில் அனாதரவாக வாழும் சிறுவர்களை தத்தெடுத்து அவர்களுக்கு மறு வாழ்வு கொடுத்திரிக்கிறது. கடந்த வாரம் சரஸ்வதி பூசை தினங்களில் ஓர் நாள் இவ்வாலயத்துக்கு சென்றால் அங்கு "கடந்த காலங்களில் கிளிநொச்சியில், தமிழர் புனர்வாழ்வுகழகத்தின் குருகுலத்தால் வாழ்வழிக்கப்பட்டு வந்த 200 குழந்தைகள் மீண்டும் இன்னொமோர் ஆலயத்துடன் இணைந்து பராமரிக்கும் செலவை இவ்வாலயம் ஏற்றிருக்கிறதென்றூ அறிவித்து கொண்டிருந்தார்கள்".....

கடந்த சனி காலை ஐ.பி.சியில் நடைபெற்ற இந்நிகழ்சி இவ்வறிவிப்பாளருக்கு தெரியாதா, அங்குள்ள ஏதிலி மக்கள் பட்டுச்சேலைக்கா காத்திருக்கிறார்கள் என்று? இல்லை அம்மக்கள் பட்டுசேலை அணியக்கூடிய நிலையிலா இருக்கிறார்கள்? ...??? ஏன், இத்தாக்குதல் இவ்வாலயம் மீது, இவ்வானொலிக்கோ அல்லது அவ்வறிவிப்பாளருக்கோ என்று புரிய முடியவில்லை?

இன்று நடக்க முடியாத நிலையிலுள்ள என் தாயாரும், கடந்த காலங்களில் அந்த அம்மனின் சேலைகளை வாங்கி அணிவதுண்டு! அம்மனின் அச்சேலைகளை வாங்குவோர் பெருமைக்காகவோ அல்லது வசதி அற்றோ அதனை வாங்க முற்படவில்லை. அங்கு அம்மனுக்கு சாத்திய சேலைகளை, அதன் பின், அச்சேலைகள் கிட்டத்தட்ட வாங்கிய விலைக்கே மீள விற்கப்படுகின்றன. பலர் ஏனிந்த சேலைகளை வாங்குகிறார்கள்? அதன் பணம் எம்மக்களுக்கு போகிறதென்றுதான்!

மற்றும் இங்கிருந்து இந்த சேலைகளை எம்மக்களுக்கு அனுப்புதல்? .. இதன் சுமைகூலிக்கே, அங்கு பல சேலைகளை வாங்கியும் விடலாம்!

இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்கள் மிக திறமை வாய்ந்த அறிவிப்பாளர்கள்! அவ்வறிவிப்பாளர்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை முன் தயார் இல்லாமல் செய்கின்றார்களா? அல்லது வாயில் வருவதுகளை எல்லாம் கதைக்கின்றார்களா? புரியவில்லை! இல்லை "முட்டையில் மயிர் பிடுங்குதல்" என்பார்கள், இதைனையா?????

நிகழ்ச்சியில் இறுதியில் ஒரு பாடல் ஒலிபரப்பினார்கள் .... மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான். வாழும் வகை புரிந்து கொண்டான். இருந்த போதும் மனிதனுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை????? .....

Edited by Nellaiyan

நன்றாக எழுதியுள்ளீர்கள். எல்லாவற்றுக்குமே நமது சனங்களை குறைகூறுவது சரியாகபடவில்லை. கதைப்பது, எழுதுவது என்றால் எப்படியும் கதைக்கலாம், எழுதலாம். வாகனத்தில் பயணம் செய்யாது கால்நடையாக பயணம் செய்து அல்லது பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தி அதில் சேமிக்கும் தொகையை தாயகத்தில் உள்ள ஏதிலிகளிற்கு அனுப்புமாறும் கூறலாம். எல்லாருக்குமே அடிப்படையில் வாழ்வு தேவைப்படுகின்றது; அது தாயகத்தில் வாழ்பவர்களாக இருக்கட்டும், வெளிநாடுகளில் வாழ்பவர்களாக இருக்கட்டும். தாயகத்தில் ஏதாவது கோயில் - நல்லூர் திருவிழா என்று போகும்போதே டாம்பீகமாகத்தானே மக்கள் ஆடை, அணிகலங்களை உடுத்து சென்று வருகின்றார்கள். அம்மனுக்கு உடுத்த சேலையை உடுப்பது என்பது... சிலருக்கு தெய்வ நம்பிக்கையாய் காணப்படலாம். சிலர் அதை உடுக்கும்போது உடல்நலம் - ஆரோக்கியம் கிடைப்பதாகவும், ஓர் உளப்பாதுகாப்பாகவும் கூட தமக்குள் கருதக்கூடும்.

Edited by கலைஞன்

  • தொடங்கியவர்

கலைஞன், நாம் எல்லோரையும் ஒதுக்க/பிழை கூற/பட்டமளித்து மகிழ ... அவர்களை சில கேடுகெட்ட கூட்டம் அரவணைக்காப்பார்க்கிறது. இது இந்த அம்மன் ஆலயத்திலும் கூட ...

... இங்கு லண்டனிலிருந்து விளம்பரம்/பெயர் அடிபடும் என்றால் உரிந்து விட்டுட்டும் ஓடும் ஒரு கூட்டத்தினால் மனித நேய அமைப்பென்ற பெயரில் நடத்தப்படும் ஒரு அமைப்பு, அக்கூட்டத்தில் உள்ளவர்களே அதற்கு ஐந்து சதம் கொடுக்காத நிலையில், அக்கூட்டம் இதே அம்மனை நெருங்கி தமக்கு சில சாதகமான வேலைகளை செய்யப்பார்க்கிறது. இக்கும்பலின் குழுவில் இருக்கும் பலர் சிங்களவர்கள். அதற்கு மேல் இக்கும்பல், அண்மையில் ஊணமுற்ற சிங்கள இராணுவத்துக்கு இன்ரநெட் சென்டர் ஒன்றை கொழும்பிலும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. இது அவர்களின் பணமுமில்லை, இங்குள்ள சில அமைப்புகளை அணுகி, அங்குள்ள மக்களுக்கு எம்முடன் இணைந்து செய்ய வாருங்கள்(தமிழர் புனர்வாழ்வுக்கழகம் இயங்க முடியாத நிலையில் சில மேலைநாட்டு உதவி நிறுவனங்களை இக்கும்பல் அணுக்கத் தொடங்கியிருக்கிறது) என்று பெற்ற பணத்தில் எம்மை கொன்றவனுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படியான கேடு கெட்டதுகள் எங்கே என்று காத்திருக்க நாம் செய்பவர்களை, அவர்களிடம் தள்ளிக் கொண்டு போய் விடுகிறோம், இது கடந்த காலங்களிலும் சிறப்பாக புலத்தில் நடந்தேறியது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.