Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொடூரமாக சிறிலங்காவால் கொலை செய்யப்பட்ட பி.பி.சி. பத்திரிகையாளரின் குடும்பத்திற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை: பி. பி. சி.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொடூரமாக சிறிலங்காவால் கொலை செய்யப்பட்ட பி.பி.சி. பத்திரிகையாளரின் குடும்பத்திற்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை: பி. பி. சி.

பி. பி. சி பத்திரிகையாளரின் குடும்பம், கொலை நடந்து பத்து வருடமாகியும் ஸ்ரீ லங்கா காவல் துறையினரால் இன்னும் ஒருவரையும் கைது செய்யமுடியவில்லை என்று குற்றம் சாட்டினர்.

மயில்வாகனம் நிமலராஜன் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் 19, ஒக்டோபர், 2000 அன்று அவரது யாழ் வீட்டில் வைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

மனித உரிமை ஆர்வலர்கள் இந்த படுகொலை ஸ்ரீ லங்காவுடன் சேர்ந்து இயங்கும் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்களால் செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

நிமலராஜனின் தந்தை ஜி. மயில்வாகனம் கனடாவில் இருந்து, இன்னும் யாழில் குற்றவாளிகளின் ஆட்சியே கொலோச்சுக்கிறது என்று ஆதங்கப்பட்டார்.

"இந்த படுகொலையை செய்தவர்கள் இப்போது அரசில் இருக்கிறார்கள். அதனால் அரசும் ஒருத்தரையும் கண்டுபிடிக்காது" என்று கூறினார்.

போரால் சீரழிந்த யாழில் இரண்டாயிரமாம் ஆண்டில் சுதந்திரமான பத்திரிகையாளராக இருந்தவர்களில் ஒருவர் நிமலராஜன். அவர் போர் சம்பந்தப்பட்ட விடயங்களை பற்றி எழுதி பிரபலமானவர்.

இரண்டாயிரம் ஆண்டில் யாழில் பதட்ட நிலைமை நிலவினாலும் அவர் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் பற்றியும் அரசியல் குறைபாடுகள் பற்றியும் எழுதினார்.

'முற்றாக தண்டனை தவிர்ப்பு'

அவர் வீட்டில் இருக்கும் போது ஆயுதாரி கூலி கும்பல் வீட்டை உடைத்து பாய்ந்து உள்ளே சென்றது.

அந்த காடையர் அவரை ஐந்து முறை சுட்டு கொன்றுவிட்டு அவரது தந்தையாரை கத்தியால் கொடூரமாக குத்தியது. அந்த ஒட்டுண்ணி குழு காடையர் ஒரு கிரனைட்டையும் வீசி நிமலராஜனின் தாயரையும், மருமகனையும் காயப்படுத்தினர்.

இந்த பத்திரிகையாளர் பி.பி.சி சிங்கள, தமிழ் மற்றும் பல சுதந்திர ஊடகங்களுக்காக எழுதியவர். அவர் கொலை செய்யப்படுமுன் ஒக்டோபர் பத்தாம் திகதி வாக்கெடுப்பை பற்றி எழுதியிருந்தார்.

ஈழம் பீபில் தேமொகிரடிக் பார்ட்டி(ஈ. பி. டி. பி.) ஒரு ஆயுதாரி கும்பல். இப்போது அரசியல் கட்சியாக தன்னை காட்டிகொள்கிறது. இறந்த பத்திரிகையாளரின் செய்திகளில் ஈ. பி. டி. பி கும்பலின் மனித உரிமை மீறல்களையும், வாக்கு சேகரிப்பு சுத்து மாத்துக்களை பற்றியும் சுட்டிக்காட்டி இருந்திருந்தார்.

பத்திரிக்கை துறையினர், ஈ. பி. டி. பி ஆயுத ஒட்டுண்ணி குழுவின் தலைவர், அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவே இந்த கொடூர படுகொலையை செய்திகள் வெளியாகாமல் இருக்கவும், மற்றைய பத்திரிகையாளரை அச்சுறுத்தவும் செய்தார் என்று குற்றம் சாட்டியுள்ளார்கள். ஆயுத குழுவின் தலைவர் எப்போதும் போல் அதை மறுத்துள்ளார்.

படுகொலையின் பின் நிமலராஜனின் குடும்பத்தினர் நாட்டை விட்டு தப்பி வெளியேறினர்.

"கடந்த பத்து வருடங்களாக யாழ் மக்களின் துன்பத்தை பற்றி வேறு ஒருத்தரும் நிமலராஜன் போல் எழுதவில்லை. அவர்கள் எல்லோரும் உயிருக்கு அஞ்சி பத்திரிகைகளுக்கு செய்தி அளிப்பதில்லை" என்று அவரது தந்தையார் கூறினார்.

"கொலையாளிகள் யாழில் இருந்து வரும் ஒரே சுதந்திர குரலை அடக்க நினைத்தார்கள். அவர்கள் அதை எனது மகனை கொல்வது மூலம் சாதித்துவிட்டார்கள்."

பி.பி.சி. சிங்கள ஊடகத்தின் தலைவர் பிரியத் லியனகே, நிமலராஜனின் குரல் அடங்கியதால் வடக்கில் நடக்கும் பல அட்டூழியங்கள் வெளிச்சத்திற்கு வராமல் சென்றுவிட்டது என்று ஆதங்கப்பட்டார்.

"அவரின் கொலைக்கு பின், வேறு ஒருவராலும் யாழ் மக்களின் துயரத்தை எடுத்து கூற முடியவில்லை. அவர் ஒரு வீரமான பாத்திரிகையாளர்" என்றும் கூறினார்.

"நான் அவருடன் பத்து வருடங்காள சேவை ஆற்றியதில் பெருமை அடைகிறேன், அதே நேரம் கொலைதாரிகள் இன்றும் சுதந்திரமாக உலவுவதை பார்த்து மிகவும் வருந்துகிறேன்"

இந்த படுகொலை நிகழ்வில் சம்பந்தப்பட்டவர்கள் சிலர் கைது செய்யப்பட்டார்கள் ஆனால் அவர்கள் பிணையில் உடனே விடுவிக்கப்பட்டுவிட்டார்கள். இப்போது அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள்.

பத்துவருடமாக ஒருத்தரும் கைது செய்யப்படவில்லை.

'மிகமுக்கியமான குற்ற நிகழ்வு"

உலக பத்திரிகை குழுக்கள் ஸ்ரீ லங்காவிற்கு கடன் கொடுப்போரை குறை கூறுகிறது.

உலக பத்திரிகையாளர் குழுமம், ஸ்ரீ லங்காவிற்கு கடன் கொடுக்கும் நிறுவனங்களை அங்கு பத்திரிக்கை சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை காக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகிறது.

உலக பத்திரிகையாளர் குழுமத்தின் தலைவர், ஐடன் வைட் உலக நாணய நிதியம் (ஐ.எம். எப்) ஸ்ரீ லங்காவிற்கு பணம் கொடுத்து உதவியதை கண்டித்தார்.

"ஐ. எம். எப். போன்ற நிறுவனங்கள் கடன் கொடுக்கும்போது மனித உரிமை மீறல்கள், ஜனநாயக குறைகள் போறவற்றை கருத்தில் கொள்ளவேண்டும். குறிப்பாக பத்திரிகையாளர்களினதும், ஊடகங்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்" என்றும் அவர்க் கூறினார்.

ஐ. எம். எப், தாம் மனித உரிமைகளை பற்றி கவனம் கொண்டாலும் இந்த கடன் கொடுப்பு பொருளாதரத்தை மட்டும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என்று பி.பி.சிக்கு கூறியது.

அந்த நிறுவனத்தின் பேச்சாளர், "எங்களது பார்வையில், வேறு பல உலக அமைப்புக்களால் மனித உரிமை மீறலை இன்னும் கவனத்துடன் கையாள முடியும்" என்று கூறினார்.

ஸ்ரீ லங்காவில் இருந்து தப்பி வெளிநாடுகளில் தஞ்சம் கோரியிருக்கும் பத்திரிகையாளர்களின் அமைப்பு, ஸ்ரீ லங்கா மனித உரிமை மீறல்களை தொடர்ந்து நடத்தினாலும், இந்த வெளிநாட்டு கடன் கொடுக்கும் நிறுவனங்கள் ஸ்ரீ லங்காவை கடன் கொடுத்து ஊக்குவிப்பதாக குறை கூறியது.

பாரிஸ் அமைப்பான, எல்லை இல்லாத பத்திரிகையாளர் அமைப்பு, ஸ்ரீ லங்காவில் சட்டத்தை நிலை நிறுத்தவேண்டும் என்று கோரிக்கை விட்டுள்ளது.

அந்த அமைப்பின் தலைவர் வின்சன்ட் புரோசல், ஸ்ரீ லங்கா அரசு இப்படியான மிக முக்கியமான குற்றங்களுக்கு முதலில் விசாரித்து தண்டனை அளிக்க தொடங்கவேண்டும் என்று ஆதங்கப்பட்டார்.

அவர், இப்படி தண்டனை அளிப்பதால் மட்டும் தான் போரால் தோன்றிய விழுப்புண்களை ஆற்ற முடியும் என்று வாதாடினார்.

ஈ. பி.டி. பி. குழுவினர் பி.பி.சிக்கு பேட்டி அளிக்க மறுத்துவிட்டனர்.

http://www.bbc.co.uk/news/world-south-asia-11568133

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.