Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொலிஸாரால் கூட்டாக கற்பழிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் பெண் தற்கொலை செய்த விவகாரம் மீண்டும் சூடு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொலிஸாரால் கூட்டாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட இலங்கைத் தமிழ் பெண் தற்கொலை செய்த விவகாரம் மீண்டும் சூடு!

புதன், 24 நவம்பர் 2010 10:30

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கரூர் மாவட்டத்தில் உள்ள ராயனூர் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த இலங்கைத் தமிழ் யுவதி ஒருவர் கடந்த மார்ச் மாதம் பொலிஸாரால் கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பின் தீக்குளித்து தற்கொலை செய்த விவகாரம் தற்போது மீண்டும் சூடு பெற்றுள்ளது.

பத்மாவதி (வயது-28) என்பவரே பொலிஸாரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பின் தற்கொலை செய்தவர் ஆவார். இவரது கணவன் குமார்.

கரூரில் இருவருடங்களுக்கு முன் இரு குழந்தைகள் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டமை தொடர்பாக சந்தேகத்தில் குமாரையும் பசுபதி பாளையம் பொலிஸ் நிலைய பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இப்பொலிஸார் கடந்த மார்ச் 07 ஆம் திகதி பத்மாவதியை விசாரணைக்கு அழைத்துச் சென்று கற்பழித்து விட்டனர். முகாமுக்கு இரவு 7.00 மணியளவில் திரும்பி வந்த பத்மாவதி உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீப்பற்ற வைத்துக் கொண்டார்.

ஏனைய அகதிகள் இவரை மீட்டு கரூர் அரச வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு 21 நாட்கள் தீவிர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட பத்மாவதி பலன் எதுவும் இல்லாமல் அதே மாதம் 28 ஆம் திகதி இறந்து விட்டார்.

இந்நிலையில் இவ்விவகாரம் சுமார் 07 மாதங்களுக்கு பின் மீண்டும் சூடு பிடித்துள்ளது. பத்மாவதியின் தாய் நீதி கோரி சென்னை மேல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

மகளின் மரணம் தொடர்பாக மத்திய புலனாய்வு பிரிவு பொலிஸாரின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் நட்டஈடாக இந்திய ரூபாய் ஐந்து இலட்சம் பெற்றுத் தர வேண்டும் என்றும் இவர் நீதிமன்றில் கோரி உள்ளார்.

இம்மரணம் தொடர்பாக இது வரை முறையான விசாரணை எதுவும் நடத்தப்ப்படவே இல்லை என்றும் மகளின் மரணத்துக்கு காரணமான பொலிஸார் தொடர்ந்தும் பொலிஸ் சேவையில் இருக்கின்றார்கள் என்றும் இவர் மன்றின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

இவ்வழக்கு நீதிபதி கே.சுகுணா முன்னிலையில் நேற்று அழைக்கப்பட்டது. இம்மனுவின் பிரதிவாதிகள் அடுத்த தவணைக்கு மன்றில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

tamilsnn

இதன் தொடர்பாக இணைக்கப்பட்ட முன்னைய செய்தி:-

http://www.yarl.com/forum3/index.php?showtopic=70540&st=0&p=577941&hl=%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%20&fromsearch=1&#entry577941

Edited by கறுப்பி

இந்த நாய்கள் நிச்சயம் தண்டிக்க பட வேண்டியவர்கள்....குறிப்பாக சென்னை சூளைமேடு பொலிஸில் உள்ள ஒருவர் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ய முற்பட்டு...அதை நான் தடுத்து மிருக்கின்றேன்.....என்னால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை .ஏதும் பேசினால் என்னையும் புலி எண்டு உள்ள போட்டுவிடுவான்....அதனால் அவனில் கைவைக்கவில்லை......

Status of Sri Lankan Tamil refugees in India, including information on identity documents, citizenship, movement, employment, property, education, government aid, camp conditions and repatriation (2008 - January 2010) [ZZZ103357.E]

Research Directorate, Immigration and Refugee Board of Canada, Ottawa

Sources indicate that there are approximately 100,000 Sri Lankan Tamil refugees living in India (US 21 Jan. 2008; USCRI 29 July 2009). The U.S. Committee for Refugees and Immigrants (USCRI) World Refugee Survey states that approximately 73,300 Sri Lankan Tamil refugees live in more than 100 camps in the state of Tamil Nadu, while another 26,300 live outside of the camps and are registered with the local police (29 July 2009).

http://www.ecoi.net/local_link/134878/234949_en.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Nov 24, 2010 / பகுதி: முக்கியச் செய்தி /

ஈழத்தமிழ் பெண்ணை மூன்று தமிழக பொலிசார் பாலியல் வக்கிரம்

இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் இந்தியாவில் மூன்று பொலிஸ் கான்ஸ்டபில்களால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து, குறித்தப் பெண்ணின் தாய் சென்னை நீதிமன்றில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்திய அரச நிறுவனங்களின் குறைபாடுகளை தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ள குறித்தத் தாய், இந்திய வெளியுறவுச் செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் என்போரை மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பத்மவதி என்ற பெண்ணும் அவருடைய மகளும் ரயனூர் என்ற முகாமில் வசித்து வந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 7ம் திகதி குறித்த முகாமிற்குச் சென்ற தமிழ்நாடு கரூர் பொலிஸார் பத்மவதியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மனைவியையும், பிள்ளையையும் பார்க்க வேண்டுமெனக் கூறுவதாகக் குறிப்பிட்டு அவர்களை வான் ஒன்றில் அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலதிக பொலிஸாருக்கென ஒதுக்கப்பட்டுள்ள கட்டடம் ஒன்றிற்கு அழைத்துச் சென்று தாயான பத்மவதியை வானிலேயே இருக்குமாறுக் கூறி அவரது மகளை அழைத்துச் சென்றுள்ளனர். மூன்று மணித்தியாலங்களின் பின்னர் தாயை உள்ளே செல்ல அனுமதித்தபோது, மகள் தலைவிரிக்கோலமாக இருப்பதையும், அவருடைய அறையிலிருந்து மூன்று பொலிஸார் சிவில் உடையில் செல்வதையும் கண்டுள்ளார்.

பின்னர் பொலிஸார் குறித்தப் பெண்ணையும். பத்மவதியையும் அவர்களுடைய விட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளதுடன், நடந்த சம்பவத்தை வெளியில் கூறினால் கொலை செய்வதாகவும் அச்சுறுத்தியுள்ளனர். வீட்டுக்கு வந்த ஒருசில நிமிடங்களில் குறித்தப் பெண் தனக்கும் தானே தீ வைத்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார்.

இதனை அடுத்து குறித்தப் பெண்ணை பத்மவதி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். வைத்தியசாலைக்கு விசாரணை செய்ய வந்த நீதவானைச் சுற்றி பொலிஸார் இருந்ததன் காரணமாக பாதிக்கப்பட்ட பெண் நடந்த முழுவதையும் கூற மறுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த பெண்கள் அமைப்பின் அதிகாரி ஒருவரான தமயந்தி பொலிஸார் இல்லாத சமயத்தில் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றுள்ளார். அத்துடன் வாக்குமூலத்தை தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.

அந்த வாக்குமூலத்தினை அவர் பிரதான நீதிபதியான யூசுப் இக்பாலிடம் சமர்பிக்க, பிரதான நீதிபதியும் மார்ச் 9ம் திகதி பெண் ஒருவரை அனுப்பி வாக்குமூலம் பெற்று அதனை கையடக்கத் தொலைபேசியிலும் பதிவு செய்துள்ளார்.

சம்பவம் நடந்து 3 வாரங்களுக்குப் பின்னர் மார்ச் 28ம் திகதி, பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பெண் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் இதுவரை எதுவித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்வில்லை.

இந்த நிலையில் இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த சென்னை உயர் நீதிமன்ற நீதவான் கே.சுகுநா சந்தேகநபர்களான மூன்று பொலிஸ் கான்ஸ்டபில்களையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னறிவித்தல் கடிதம் விடுத்துள்ளார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட தனது மகளுக்கு தற்காலிக நிவாரணமாக 5 லட்சம் இந்திய ரூபாயும், மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் மேற்கொள்ள வேண்டும் என தாயான பத்மவதி தனது மனுவில் கோரியுள்ளார்.

pathivu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.