Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீசாலைப் பகுதியில் படையினரால் பொதுமகன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் ‐

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீசாலைப் பகுதியில் படையினரால் பொதுமகன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் ‐ ஜீரிஎன் செய்தியாளர்

03 December 10 10:03 am (BST)

தென்மராட்சியின் மீசாலைப் பகுதியில் படையினரால் பொதுமகன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சுட்டுக் கொல்லப்பட்டவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் உயிரிழந்தவர் அடையாளம் காணப்படவில்லை. இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. படைச்சிப்பாய் ஒருவரை இந்த நபர் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து படைச்சிப்பாய்கள் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படுகின்றது. உயிரிழந்த பொதுமகனின் சடலம் அதே இடத்திலேயே காணப்படுவதாக எமது ஜீரிஎன் செய்தியாளர் குறிப்பிட்டள்ளார்.

மனநிலை பாதிக்கப்பட்ட இவர் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த வேளை படையினர் அவரை வம்புக்கிழுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை குறித்த மனநோயாளியால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சிப்பாய் ஒருவர் சாவகச்சேரி அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

GTN

இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இராணுவத்தின் மனித உரிமை மீறலை நீதிமன்றம் கொண்டு செல்ல வேண்டும்.. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும்..

ஒரு கையில் "உலக யுத்த சட்டகோப்புவையும்" மறுகையில் ஆயுதத்தையும் வைத்துக்கொண்டு இருக்கும் சிங்கள இராணுவ வீரர்கள் தங்களின் திரு முகத்தை மீண்டும் காட்டியுள்ளனர்.

நிச்சயமாக இந்த பயங்கரவாதத்தை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்,

இந்த அநியாய கொலைக்கு நீதி கிடைக்காது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீசாலையில் இராணுவ வீரர் உட்பட இருவர் பலி

2010-12-03 06:49:23 [

யாழ்ப்பாணம் மீசாலை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற சம்பவமொன்றில் இராணுவ வீரர் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புக்கான காரணங்கள் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் மீசாலை பகுதியில் துரைசிங்கம் துசியந்தன் எனப்படும் 25 வயதுடைய இளைஞன் அங்கிருந்த மினி பஸ் ஒன்றை அடித்து உடைத்துள்ளதுடன், இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஒன்றையும் அடித்து நொறுக்கியுள்ளார்.

இதனைக் கண்ட அருகிலிருந்த இராணுவ வீரர் ஒருவர், குறித்த இளைஞனை தடுக்க முயற்சித்த போது குறித்த இளைஞன் இராணுவ வீரரைத் தாக்கி கொலை செய்துள்ளார். இதனை அடுத்து அருகிலிருந்த மற்றுமொரு இராணுவ வீரர் துரைசிங்கம் துசியந்தன் எனப்படும் 25 வயதுடைய இளைஞனை துப்பாக்கியால் சுட்டு உயிரிழக்கச் செய்துள்ளார்.

பஸ்களை உடைத்த குறித்த இளைஞன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களின் சடலம் யாழ், போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://newjaffna.com/fullview.php?id=MTExOA==

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.