Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலண்டன் போர்க்குற்ற வழக்கு: சிறிலங்கா இராணுவ அதிகாரியை கைது செய்ய முயன்றது நீதிமன்றம்!

Featured Replies

தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை, போர்க்குற்றம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினர் மீது இலண்டனில் இன்று பதியப்பட்ட வழக்கில் முதன்மைக் குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்ட இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சாஜி கலகேயைக் கைது செய்வதற்கு நீதிமன்றம் முயற்சித்தபோதும் இவ் இராணுவ அதிகாரி பிரித்தானிய மண்ணைவிட்டு வெளியேறியுள்ளதால் நீதிமன்றத்தால் கைது உத்தரவைப் பிறப்பிக்க முடியவில்லை என உலகத் தமிழர் பேரவையைச் சேர்ந்த சுரேன் சுரேந்திரன் பொங்குதமிழுக்குத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

உலகத் தமிழர் பேரவையின் சார்பாக வணக்கத்திற்குரிய இம்மானுவேல் அடிகள் மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோன் றையன் அம்மையார் ஆகியோர் சார்பில் இன்று இலண்டன் வெஸ்மினிஸ்டர் நீதிமன்றத்தில் பிடியாணை வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

யுத்தமீறல்கள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் பிரித்தானிய மண்ணில் இருக்கும் பட்சத்தில் அவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் கைது செய்வதற்கும் உரிமை வழங்கும் ஒரு சட்டப்பிரிவின் அடிப்படையில் இவ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது மேற்கொள்ளப்பட்டதாக நம்பப்படும் யுத்தமீறல்களில் பங்குகொண்டவர் என்ற அடிப்படையில் சிறிலங்கா இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சாஜி கலகே என்பவர் இவ்வழக்கில் முதன்மைக் குற்றவாளியாகக் குறிக்கப்பட்டிருந்தார்.

இவ்வழக்கை விசாரணைக்கு எடுப்பதா என்பதை ஆராய்ந்த நீதிமன்ற சட்ட ஆலோசகர், இவ்வழக்கை விசாரணை செய்வதற்கான அடிப்படைகள் உண்டு என வழங்கிய ஆலோசனையைத் தொடர்ந்து குற்றவாளிகள் நாட்டில் தொடர்ந்தும் உள்ளனரா என்பதை ஆராயுமாறு நீதிமன்றம் ஸ்கொட்லன்யார்ட் பொலிசாருக்கு உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவினைத் தொடர்ந்து, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொண்ட ஸ்கொட்லன்யார்ட் பொலிசார், சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினரில் பாதிக்கு மேற்பட்டோர் வியாழக்கிழமை இரவே பிரித்தானிய மண்ணைவிட்டு வெளியேறிவிட்டனர் என்பதை உறுதிப்படுத்தியபோதும், இக்குழுவில் முதன்மைக் குற்றவாளியாகத் தேடப்படும் மேஜர் ஜெனரல் சாஜி கலகே உள்ளாரா என்பது தொடர்பாக பிரித்தானிய வெளிவிவகார அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை.

ஆனாலும் நேற்று சிறிலங்கா விமானசேவை மூலம் பயணம் செய்த பயணிகள் விபரத்தை ஆராய்ந்த ஸ்கொட்லன்யார்ட் பொலிசார் முதன்மைக் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் மேஜர் ஜெனரல் சாஜி கலகே நாட்டைவிட்டு வெளியேறிய தகவலை உறுதிப்படுத்தியதுடன் அதனை நீதிமன்றத்திற்கும் தெரியப்படுத்தினர்.

குற்றம் சுமத்தப்பட்டவர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ள தகவலை பொலிசார் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து, இவ்வழக்கை தொடர்ந்து நடத்துவது அவசியமற்றது என நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக உலகத் தமிழர் பேரவையைச் சேர்ந்த திரு சுரேன் சுரேந்திரன் பொங்குதமிழுக்குத் தெரிவித்தார்.

எனினும் பல்வேறு சாட்சியங்களின் அடிப்படையில் முதன்மைக் குற்றவாளியாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ் இராணுவ அதிகாரி மட்டுமன்றி, இனக்கொலையுடன் தொடர்பான சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் எவரும் ஐரோப்பிய மண்ணில் கால் வைப்பது இனி கடினமான ஒன்றாகவே இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேஜர் ஜெனரல் சாஜி கலகே வன்னியுத்தத்தின்போது போர்க்குற்றம் புரிந்த சிறிலங்காவின் படையணி ஒன்றுக்குத் தலைமை தாங்கியவர். சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இவர் பிரித்தானியாவிற்கு வருகை தரும் தகவல்களை சிறிலங்கா அரசு இரகசியமாகவே வைத்திருந்தது. இவர் பிரித்தானியாவிற்கு வந்திருக்கும் தகவலை அறிந்து உடனடியாவே களத்தில் இறங்கிய உலகத் தமிழர் பேரவையினர் அவர் தொடர்பான சாட்சியங்களையும் ஆதாரங்களையும் திரட்டி இரு தினங்களுக்குள் இவ் வழக்கைத் தாக்கல் செய்திருந்தனர்.

கடந்த வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சிக்குப் பேட்டியொன்றை வழங்கிய உலகத் தமிழர் பேரவையினர் வெள்ளிக்கிழமை இவ் அதிகாரி மீது வழக்கு ஒன்றைப் பதிவு செய்யும் தகவலை வெளியிட்டனர்.

அன்றைய தினம் இரவு 11 மணிக்கு இவ் இராணுவ அதிகாரி பிரித்தானிய மண்ணைவிட்டு வெளியேறியுள்ளதைப் பார்க்கும்போது, வழக்கு பற்றிய தகவலை அறிந்தபின்பே இவ் இராணுவ அதிகாரி சிறிலங்காவிற்குத் தப்பி ஒடியிருக்கலாம் என நம்புவதாக உலகத் தமிழர் பேரவை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={C3628BE4-5379-46CF-BD2D-296957CAD222}

  • தொடங்கியவர்

Suspect Sri Lankan war criminal, Major General Chagi Gallage, a member of Mahinda Rajapaksa's entourage to London, escaped arrest by his premature departure from Britain, British daily Guardian reported. "An application [for arrest warrant] was lodged at Horseferry Road magistrates court, central London, but inquiries by Scotland Yard established that he [Chagi Gallage] had left on Thursday night," the paper said. Tamil campaigners sought the arrest warrant claiming that the ex-General who was in-charge of 53 & 59 divisions committed war-crimes by intentionally shelling civilian hospitals while advancing towards Mullaiththeevu area.

....

Jan Jananayagam, the British-representative of US-based activist group, Tamils Against Genocide (TAG), said, "while we are disappointed in allowing the suspect criminal to escape, the legal activists will learn from this experience and will have to be better prepared next time a suspect criminal enters the British shores."

http://tamilnet.com/art.html?catid=13&artid=33164

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.