Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மைக்குப் புறம்பானதைக் கூறி அரசியல் நடத்துவது அரசாங்கத்தின் கைவந்த கலை:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைக்குப் புறம்பானதைக் கூறி அரசியல் நடத்துவது அரசாங்கத்தின் கைவந்த கலை:

[saturday, 2010-12-04 06:01:38]

ஜனாதிபதி லண்டன் சென்று விமான நிலையத்தில் இறங்கிய தினமான டிசெம்பர் 29ஆம் திகதி லண்டனில் இருந்திராத ஜயலத் ஜயவர்தன எம்பியை குற்றம் சாட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். அப்பட்டமான உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை சுமத்தி அரசியல் நடத்துவது இன்றைய அரசாங்கத்திற்கு கைவந்த கலையாகும். ஜனாதிபதியிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக இத்தகைய கைங்கரியங்களில் ஈடுபட்டு, நாடாளுமன்றத்தையே சண்டைக்களமாக்கியவர்கள்தான் உண்மையிலேயே ஜனாதிபதியையும், நாட்டையும் அவமரியாதைக்கு உள்ளாக்கியுள்ளார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மனோகணேசன் விடுத்துள்ள அறிக்கையில்:

ஜயலத் எம்பி லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நேரடியாக கலந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அமைச்சரும், அரசாங்கத்தரப்பு பிரதம கொறடவுமான தினேஷ் குணவர்தன கூச்சலிட்டு உரையாற்றியதை முழு நாடுமே ஊடகங்கள் மூலமாக பார்க்கவும், படிக்கவும் நேர்ந்துள்ளது. ஜயலத் எம்பி லண்டனில் இருந்து எப்போது வெளியேறினார் உட்பட அனைத்து தகவல்களும் அவரது கடவுச்சீட்டில் பதிவாகியுள்ளன. இந்த தகவல்களை கவனத்தில் எடுக்கும் எந்தவொரு புத்தியுள்ள மனிதரும், இந்த குற்றச்சாட்டுகள் சோடிக்கப்பட்ட போலிக்குற்றசாட்டுகள் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

இத்தகைய குற்றச்சாட்டுக்கள் தமது அரசியலுடன் முரண்படுவர்கள் மீது சுமத்துவது இன்றைய அரசாங்க அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலையாகும். கடந்த காலங்களில் இத்தகைய குற்றச்சாட்டுகள் என்மீதும் எந்த அடிப்படையும் இல்லாமல் சுமத்தப்பட்டன.

நான் கிளிநொச்சிக்கு சென்று புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் நீச்சல் தடாகத்தில் நீச்சலடித்து குளித்ததாக அமைச்சர் விமல் வீரவன்ச கடந்த தேர்தல் காலத்தில் மேடைதோறும் சொல்லித்திரிந்தார். இதுதொடர்பான வீடியோ ஒளி நாடா தன்னிடம் இருப்பதாகவும் அவர் சொன்னார். இது அப்பட்டமான சோடிக்கப்பட்ட பொய் கதையாகும்.

அந்த ஒளி நாடாவை ஒளிபரப்பும்படி பாராளுமன்றத்தில் நான் அமைச்சர் விமல் வீரவன்சவிடம் கோரியிருந்தேன். இதை அவர் ஒளிபரப்பினால் அரசியலில் இருந்து விலகுவதாகவும் கூறியிருந்தேன். ஆனால் அது ஒருபோதும் ஒளிபரப்படவில்லை. ஏனென்னால் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை. இதுதொடர்பாக அன்று இதே அமைச்சர் தினேஷ் குணவர்தன அரசியலில் இத்தகைய குற்றச்சாட்டுகள் சகஜமானவை. எனவே இவற்றை கணக்கில் எடுக்கவேண்டாம் என என்னை பாராளுமன்றத்தில் சமாதானப்படுத்தினார்.

அதேபோல் பொங்குத்தமிழ் நிகழ்வில் கலந்துகொண்டு இந்நாட்டை இரண்டாக பிரிக்கவேண்டும் என்று நான் உரையாடினேன் என்ற செய்தியை அரசு தொலைக்காட்சி கடந்த தேர்தல்களின் போது மீண்டும், மீண்டும் ஒளிபரப்பியது. அரசாங்க கட்சியின் அரசியல்வாதிகள் பலர் தொலைக்காட்சி விவாதங்களிலும், தேர்தல் மேடைகளிலும் இந்த குற்றச்சாட்டை என்மீது சுமத்தினார்கள். ஆனால் உண்மையில் நான் தமிழில் ஆற்றிய உரையை தலைகீழாக மாற்றி சிங்கள மொழியிலே அரசு தொலைக்காட்சி திட்டமிட்டு ஒளிபரப்பியது. அன்று புலிகள் தடைசெய்யப்படாத கால கட்டத்தில் இன்றைய அரசாங்கத்தில் இடம்பெறும் பலருடன் சேர்ந்து நானும் பொங்குத்தமிழ் விழாவில் கலந்துகொண்டிருந்தேன்.

பொங்குத்தமிழ் மேடையில் ஏறி, இந்நாட்டில் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையிலேயே உண்மையான சமத்துவம் ஏற்படுத்தப்படுமானால், இந்நாடு ஒரே நாடாக தொடர்ந்து இருக்க முடியும் என்றே நான் உரையாற்றினேன். எனது இந்த உரை இப்பொழுதும் யுடியூப் இணையத்தளத்தில் இருக்கின்றது. எவருக்கும் அதை பார்த்து அறிந்துகொள்ளலாம். தனி நாட்டை கோரியவர்களின் மேடையில் ஏறி ஒரே நாட்டை பற்றி பேசியதற்கு இலங்கை அரசாங்கம் எனக்கு விருது கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அரசாங்கத்தின் பங்காளியாக நானும், எங்களது கட்சியும் இல்லை என்ற காரணத்தினாலேயே என் மீது திட்டமிட்டு இத்தகைய குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள்.

அதேபோல் கொழும்பிலும், நாடுமுழுக்கவும் தமிழ் மக்களை குறிவைத்த பாரிய மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நான் போராட்டங்களை தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் முன்னெடுத்த பொழுது என் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள். அன்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்த என்னை பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு அழைத்து சென்று எட்டு மணித்தியாலங்களாக விசாரணை நடத்தி பயமுறுத்தினார்கள். இறுதியில் அனைத்து போலி குற்றச்சாட்டுகளையும் முறியடித்து நான் பயங்கரவாத தடுப்பு பிரிவிலிருந்து வெளிவந்தேன்.

அவ்வேளையிலேயே என்னுடன் துணை வந்து அந்த எட்டு மணித்தியாலங்களும் எனக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவிலேயே அமர்ந்து இருந்தவர் நண்பர் ஜயலத் ஜயவர்தனவாகும். நண்பர் ஜயலத் ஜயவர்தன எம்பி ஐக்கிய தேசியக் கட்சிக்கு அப்பாற்பட்ட நிலையில் நின்று தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துவருபவர். அவர் மீது தாக்குதல் நடத்தி, காயப்படுத்தும் பொழுது அதற்கு எதிராக கண்டனத்தை தெரிவிக்க வேண்டியது ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் என்ற முறையிலும், தனிப்பட்ட முறையிலும் எனது கடமையாகும்.

Edited by கறுப்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

seithy.com

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி கறுப்பி! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் ஒன்னு கூடி இந்த கொடிய அரசாங்கத்தின் பொய் போலி முகத்தை வெளி உலகுக்கு எடுத்து சொல்லனும்

பச்சைக் கள்ளன் வெள்ள வேட்டி :rolleyes::rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.