Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மந்திரப் புன்னகை: மாறுபட்ட முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மந்திரப் புன்னகை: மாறுபட்ட முயற்சி

செல்லமுத்து குப்புசாமி

தமிழில் வலைப்பதிவர்களின் உலகம் ஒரு தனி உலகம். சாதி, அரசியல், ஆரிய-திராவிடச் சண்டைகள், ஈழம், பொதுவுடமை, சமையல், வெட்டிப்பேச்சு என அங்கே அலசப்படாத சங்கதிகளே இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் வலைப்பதிவுகள் அடைந்திருக்கும் எண்ணிக்கை பெருக்கமும், அவை இணையமும் நேரமும் இலகுவாகக் கிடைக்கிற வாசகர்களுக்குத் தீனி போடும் ரீதியும் நிச்சயம் கவனிக்கத்தக்கது.

நினைத்த கருத்தை தெளிவாகப் பதிவு செய்யக்கூடிய கட்டற்ற சுதந்திரம் அவர்களுக்கு உண்டு. எதை வேண்டுமானாலும், யாரைப் பற்றி வேண்டுமானாலும் போகிற போக்கில் எழுதி விடலாம் என்பதாலும், மரபு ஊடகத்தினைச் சார்ந்திராமல் தன்னிச்சையாக இயங்க இயலும் என்பதாலும் மரபு ஊடகத்தினர் ஒரு மூன்றாந்தர கண்ணோட்டத்துடனேயே வலைப்பதிவர்களைக் கருதுவதுண்டு. பெரும்பாலான இலக்கியவாதிகளும், மரபு ஊடகத்தினரும் அவர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.

இப்படிப்பட்ட சூழலில், வலைப்பதிவினருக்கு ஒரு முக்கியமான அங்கீகாரம் என்று கருதக் கூடிய நிகழ்வு கடந்த வாரம் நடந்தது. தனது ‘மந்திரப் புன்னகை’யை’ வலைப்பதிவர்களுக்காக சிறப்புக் காட்சி மூலம் திரையிட்டுக் காட்டும் ஏற்பாட்டைச் செய்திருந்தார் இயக்குனர் கரு.பழனியப்பன்.

இந்நிகழ்வு ஒற்றை நிகழ்வாக அமையப் போகிறதா அல்லது தமிழ் ஊடகப் பரிணாமப் படிநிலை மாற்றத்தின் துவக்கமாக அமையப் போகிறதா என்பதை வருங்காலம் தீர்மானிக்கும்.

எனினும் மரபு ஊடகங்களும், சில இணைய இதழ்களும் கரு.பழனியப்பன் வலைப்பதிவர்களுக்குத் தந்த அங்கீகாரத்தை ஜீரணிக்க முடியாமல் போனதை தட்ஸ்தமிழ் பிரதிபலிக்கிறது.

"வலைப்பூ எனப்படும் பிளாக் எழுதுவது இன்று ஒரு ஃபேஷனாகவே மாறிவிட்டது. தெரிந்ததையெல்லாம் மொழி, இலக்கணம், நடை எதைப் பற்றியும் கவலைப்படாமல் எழுதித் தள்ளலாம் என்ற வசதி, எல்லோரையுமே ஒரு முறை எழுதிப் பார்க்கத் தூண்டியுள்ளது வலையுலகில்."

ஊடகங்களின் வளர்ச்சி மட்டுமல்ல, இருப்பும் கூட ஒன்றோடொன்று தொடர்புடையது என்ற எதார்த்தம் ஏனோ இன்றைக்கும் கூட பலருக்கும் ஒப்ப முடியாமல் உள்ளது.

சரி, விசயத்துக்கு வருவோம்.

‘மந்திரப் புன்னகை’ வழக்கமான தமிழ் சினிமாவில் இருந்து வேறுபட்ட ஒரு படம். இயக்குனரின் முந்தைய படங்களான ’பார்த்திபன் கனவு’ மற்றும் ’பிரிவோம் சந்திப்போம்’ ஆகியவற்றைப் போலவே இதுவும் கவித்துவமான ஒரு படைப்பாக இருக்குமென்ற எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.

திறமையான, அதே நேரம் திமிரான ஒரு ஆர்க்கிடெக்ட். புல்லெட் ஓட்டிச் சுற்றுகிறான். வேலை செய்கிறவன் கூழைக் கும்பிடு போட மாட்டான் என முதலாளியால் ஏற்றுக்கொள்ளப்படுகிற பாத்திரம். இஷ்டம் போல மதுவையும், மாதுவையும் துய்க்கும் வெளிப்பார்வைக்கு கரடுமுரடான இளைஞனான அவன், பல காமம் கடந்த பிறகு ஒரு காதலைக் காண்கிறான்.

அவனது பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து அவள் முழுமையாக ஏற்றுக்கொள்கிறாள். எந்த உறவையுமே மனதுக்கு அருகில் நெருங்க விடாத அவன் அவளை மட்டும் நெருங்க விடுகிறான். அடிக்கடி தன் தாயை நினைவுபடுத்தும் அவளுக்காக குடிப் பழக்கத்தை விடுகிறான். திருமணம் செய்துகொள்ளத் தீர்மானிக்கிறார்கள்.

"உன்னை மாதிரி ஒருத்தனுக்கே நல்ல பொண்ணு கிடைக்குதுன்னா, நல்ல பையனுக்கெல்லாம் என்ன மாதிரி பொண்ணு கிடைக்கணும்? எனக்கென்னவோ அவளும் உன்னை மாதிரியே இருப்பாளோனு தோணுது. ஏனா கல்யாணத்துக்கு அப்புறம் நீ கண்டுக்க மாட்டே பாரு. It is a marriage of convenience" என்று அவனது அப்பா அவனை எச்சரிக்கிறார்.

அவர் சொன்னது போலவே அவள் சீமான் ஒருவனோடு சொகுசு காரில் ஏறிச் சென்று நட்சத்திர விடுதி அறையில் கூடிக் குலவுகிறாள். அதைக் கண்டு அவன் அதிர்ச்சியடைகிறான்.

"நீ மட்டும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அவள் இருக்க்க் கூடாதா?" என்ற சமத்துவச் சிந்தனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு அவள் தன்னிடம் உண்மையைச் சொல்லாமல் மறைத்து விட்டாள் என்ற ஆத்திரமே மேலிடுகிறது. அவளை அடித்துக் கொன்று விடுகிறான். போலீசில் சென்று தானே சரணடைகிறான்.

இதற்குப் பிறகுதான் தெரிய வருகிறது. எல்லாமே மாயை என்பது. திரைக்கதைக் குடைக்குள் மழை வந்து மிரட்டுகிறது. அதாகப்பட்டது. அவள் இன்னொருவனோடு கூடியிருந்தது, அவளை இவன் கொலை செய்து விட்டது எல்லாமே அவனே செய்துகொண்ட கற்பனை. அடிக்கடி அப்பாவோடு பேசுவது கூட அப்படி ஒரு பிரமையே.

தான் சின்ன வயதில் மிகவும் நேசித்த அம்மா அப்பாவின் நண்பனோடு ஓடிப் போனதும், அவனது அப்பா அதைத் தாங்க முடியாமல் தன்னை மாய்த்துக்கொண்டதும் அவனை வெகுவாகப் பாதித்திருக்கிறது. அதன் பிறகு தனக்கென தனியொரு உலகத்தில் வாழ்கிறான். யாரையும் மனதளவில் நெருங்க விட்டதில்லை. அடிக்கடி அவனைப் பார்க்க வரும் அப்பாவோடு பேசிக்கொள்கிறான்.

நாயகனின் பிரச்சினை தெரிந்தும் அவனைத் தன் அன்பால் பராமரித்து இயல்பு நிலைக்குத் திருப்பி விடலாம் என்று விடாமல் காதலிக்கிறாள் நாயகி. அவனோ அவளை வெறுப்பது போல நடித்தால் வேறு ஒருவனை அவள் கல்யாணம் செய்துகொள்வாள் என நினைக்கிறான். கடைசியில் ஒன்று சேர்ந்து விடுகிறார்கள்.

கதை என்னவோ இவ்வளவுதான். ஆனால் திரைக்கதையில் வெகுவாக உழைத்திருக்கிறார்கள். அதைக் காட்டிலும் படத்தின் மிகப் பெரிய பலம் வசனங்கள்.

மனதில் நிற்க்க் கூடிய வசனங்கள் கரு.பழனியப்பன் படங்களின் சிறப்பு. ‘பார்த்திபன் கனவு’ படத்தில் மணிவண்ணன் ஒரு பெண்ணுக்கு உதவுவார். அப்போது உடன் இருப்பவர் தவறான கண்ணோட்டத்துடன் ஏதோ சொல்லும் போது, "ஒரு வயசுல எந்தப் பொண்ணப் பாத்தாலும் அம்மா மாதிரியே தெரியும். ஒரு வயசுல பொண்டாட்டி மாதிரியே தெரியும். ஒரு வயசுல மகள் மாதிரியே தெரியும். இந்தப் பொண்ணைப் பாக்கும்போது எனக்கு மக மாதிரி தான் தெரியுது" என்று பேசுவது போல ஒரு வசனம் வரும். முதுமையின் விளிம்பில் இருந்த என் தாத்தா பார்த்து நெகிழ்ந்த வசனம் அது.

பழனியப்பன் இலக்கியப் பரிச்சயம் உள்ளவர் என்பதும், அவருக்கு உலகளாவிய பார்வை உண்டு என்பதும் அவரது படங்களில் பிரதிபலித்துள்ளது. இந்தப் படத்திலும் பல காட்சிகள்/வசனங்கள் அதற்குச் சான்று பகர்கின்றன.

பெண்களுக்கு வேண்டியது அன்பான வார்த்தைகளும், சின்னச் சின்ன அங்கீகாரங்களும். கதாநாயகனின் அம்மா ஓடிப் போவதற்கு முன்பு ஒரு சில ஃபிளாஸ்பேக் காட்சிகளில் இதை நுட்பமாகக் காட்டியிருக்கிறார்கள்.

· நான் ஃபர்ஸ்ட் நைட் முடிஞ்ச உடனே அந்த ஸ்கூல்ல போய் அப்ளிகேஷன் வாங்கிட்டேன் – சந்தானம்

· கல்யாணம் பண்ணிக்கிட்டு தீபாவளிக்கும், பொங்கலுக்கும் கடை கடையா ஏறி இறங்கி ஷாப்பிங் செய்யற லட்சிய வாழ்க்கைய வாழுங்க – ஆரம்ப கட்டத்தில் நாயகன் சொல்வது

· மனநிலைச் சிக்கல் உடையவன் என்பது பார்வையாளர்களுக்கு வெளிப்படும் தருணத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல், ஆனால் இடைவிடாமல், பேசும் வசனங்களை - மனசுல நினைக்கறதையெல்லாம் பேசுவதாக இருந்தால் இன்னைக்குப் போதாது என்று டாக்டர் கூறுவது – ரசிக்க முடிகிறது. நக்சலைட்டுகளைத் துப்பாக்கி ஏந்திய காந்தி என்று அருந்ததி ராய் வர்ணித்ததை துணிச்சல் என்று பாராட்ட முடிகிறது இவர்களால்.

· தன் பொண்டாட்டி மேல நம்பிக்கை இல்லாதவந்தான் அடுத்தவன் பொண்டாட்டியைத் தப்பா பேசுவான் – பிளாஷ்பேக்கில் பக்கத்து வீட்டு தாத்தாவிடம் அப்பா பேசுவது.

· பார்க்கில் அப்பாவுடன் வாக்கிங் போகும்போது நாயகன் செய்யும் அறிவுபூர்வமான தர்க்கம், ஆரோக்கியமான அப்பா-மகன் உறவு இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதற்கு உதாரணம்.

· கதாநாயகனிடம் அடிக்கடி வந்து போகும் கால்கேர்ள் புரோக்கரிடம் சொல்கிறாள்: "இனி மேல் கதிர் கூப்பிட்டா என்னை அனுப்பாதே. அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னன்னு ஒரு நிமிசம் தோணுச்சு. அது அவருக்கும் நல்லதில்லை. எனக்கும் நல்லதில்லை."

· மருத்துவனையில் இருக்கும் கதிரைப் பார்க்க கால்கேர்ள் வரும்போது, "உடம்புல இளமை இருக்கும்போது போய் சம்பாதிக்கிற வழியப் பாரு. அத விட்டுட்டு ஆப்பிள், ஆரஞ்சுனு வாங்கி வந்து சீன் போடாதே" என்று காயப்படுத்தி திருப்பி அனுப்புகிறான். அவள் வெளியே போகும்போது நாயகியைப் பார்த்து, "எனக்குத் தெரிஞ்ச அளவுக்கு உனக்கு ஆம்பிளைகளைத் தெரியாது. உனக்கு இவன் ஒத்து வரமாட்டான். வேற நல்ல பையனா பாத்துக் கல்யாணம் செஞ்சுக்கோ" என்று அட்வைஸ் செய்கிறாள். அதற்கு நாயகி சொல்லும் பதில் பாக்யராஜ் படங்களை நினைவுபடுத்துகிறது. "உனக்கு எத்தனை ஆம்பிளைகளத் தெரியும்? ஒரு 500? அத்தனை ஆம்பிளைகளைத் தெரிஞ்ச உனக்கே கதிரை மட்டுந்தான் ஆஸ்பிட்டல் வந்து பாக்கணும்னு தோணுச்சு. எனக்கு கதிரை மட்டுந்தான் தெரியும்" என்ற அவளது பதில் பெண்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

· "இந்த உலகத்துல கோபம் தாங்க முடியாதவங்க இருக்கலாம். அநியாயம் தாங்க முடியாதவங்க இருக்கலாம். வலி தாங்க முடியாதவங்க இருக்கலாம். ஆனா அன்பைத் தாங்க முடியாதவங்க இருப்பாங்களா? நீ அன்பைத் தாங்க முடியாதவனா இருக்கியே! நீ ரொம்ப பாவம் கதிர்" என்ற க்ளைமேக்ஸ் வசனம் நெகிழ்ச்சி. தான் மிகவும் நேசித்த அம்மா தன்னை விட்டுப்போன பிறகு யாரையுமே ஏற்றுக்கொள்ளாத கதிர், தன் அம்மாவை நினைவுபடுத்துகிற நாயகியும் எங்கே யாருடனாவது ஓடி விடுவாளோ என்ற பயத்தில் அவளை ஏற்றுக்கொள்ளாமலே இருந்தவன், அந்த நெகிழ்ச்சியில் இளகுகிறான்.

· அதைக் காட்டிலும் 2010 இல் தமிழ்த் திரைப்படம் ஒன்றின் நாயகன் பழனியப்பன் என்ற பெயர் தாங்கி துணிச்சலாக நடிக்க முடிந்திருப்பது என்னைப் பொறுத்தமட்டில் ஆரோக்கியமான ஒரு செய்தி.

· படம் துவங்கும் போது புகை பிடிப்பது மற்றும் மது அருந்துவதற்கு ஒரு டிஸ்கிளைமர் போடுவார்கள். இவர்கள் கூடவே கள்ளுண்ணாமை அதிகாரத்தில் (தப்பென்றால் தமிழாசிரியர்கள் மன்னிக்க) ஒரு குறளையும் எடுத்துப் போட்டுக் காட்டுகிறார்கள்.

· ‘மந்திரப் புன்னைகை’யில் சண்டைக் காட்சியே இல்லை என்பது எனக்கு மிகவும் பிடித்த ஒரு சங்கதி. ஒரு விறுவிறுப்பான மனதைத் தொடுகிற நாவலை வாசிப்பது அல்லது உயர்தர மலையாளப் படம் பார்ப்பது போன்றதொரு உணர்வு ஏற்படுகிறது.

· குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு ப்ளஸ் தம்பி ராமையா. மனிதர் நகைச்சுவையிலும், குணச்சித்திர நடிப்பிலும் கலக்குகிறார். ‘மைனா’விற்குப் பிறகு இதிலும் அவருக்கு முக்கியமான பாத்திரம்.

http://www.uyirmmai.com/uyirosai/ContentDetails.aspx?cid=3714

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.