Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளுக்கு முன்னைய காலங்களில் நிதி உதவி புரிந்ததான குற்றச்சாட்டின் கீழ் யாழ் வர்த்தகர்களிடம் விசாரணை அரம்பம்‐GTN செய்தியாளர்

Featured Replies

புலிகளுக்கு முன்னைய காலங்களில் நிதி உதவி புரிந்ததான குற்றச்சாட்டின் கீழ் யாழ் வர்த்தகர்களிடம் விசாரணை அரம்பம்‐GTN செய்தியாளர்

04 December 10 03:03 pm (BST)

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கு முன்னைய காலங்களில் நிதி உதவி புரிந்ததான குற்றச்சாட்டின் கீழ் விசாரணைகள் நடைபெறவிருக்கின்றது. இன்றைய தினம் கொழும்பிலிருந்த வருகை தந்திருந்த விசேட குற்றப் புலனாய்வு காவற்துறையினர் யாழ்ப்பாண வணிக கழகத்தினது 20க்கும் அதிகமான வணிகர்களை விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர். ஏற்கனவே இந்தக் குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணத்தின் முன்னணி வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரைப் பற்றிய தகவல்கள் இல்லாமல் உள்ளது. இந்த நிலையிலேயே கொழும்புக்கு அழைக்கப்பட்ட முன்னணி வர்த்தகர்கள் சிலர் தொடர்ச்சியாக விசாரணைக்குள்ளாக்கப்பட்டு அவர்களின் வாக்குமூலங்க்ள பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில் தற்போது யயாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 20 வர்;த்தகர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்திருக்கின்றது. அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் நிதிப்பிரிவின் ஊடாக வழங்கப்பட்ட நிதிகள் தொடர்பாகவே விசாரணைகள் தம்மிடம் மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளால் வரியாகவும் கப்பமாகவும் பல்வேறு நிதிகள் தம்மிடம் அறிவிடப்பட்டதாக இந்த வாக்குமூலத்தின் போது விலாவாரியாக விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக மேற்படி விசாரணைக்குட்படுத்தப்பட்ட வர்த்தகர் ஒருவர் தொவித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கு வழங்கப்பட்ட நிதிகள் தொடர்பான பட்டியலை படைத்தரப்பின் புலனாய்வுப் பிரிவு வைத்திருப்பதாகவும் அதனை வைத்துக் கொண்டே விசாரணைகள் தொடர்வதாகவும் விசாரணைக்குட்படுத்தப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர் கூட கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஈபிடிபி அமைப்பின் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தேர்தலில் முதன்மையான பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வதற்காக அவரது பிணாமியாகவும் செயற்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் கூட கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய வர்த்தகர்களின் நிலை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=33265&cat=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.