Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்: ஐகோர்ட்டில் வைகோ வழக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வியாழக்கிழமை, 9, டிசம்பர் 2010 (14:22 IST)

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்: ஐகோர்ட்டில் வைகோ வழக்கு

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட்டில் வைகோ வழக்கு தொடர்ந்துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:

கடந்தமே 14ந் தேதி விடு தலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து மத்திய அரசு அறி விப்பாணை ஒன்றை வெளியிட்டது. இதுபற்றி விசாரித்த தீர்ப்பாயம் புலிகள் மீதான தடை நீட்டிப்பை உறுதி செய்தது. மேலும் அதை சட்ட விரோத அமைப்பாக அறிவித்து கடந்த நவம்பர் 12 ந்தேதி தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பானது இயற்கை நீதிக்கு முரணானது.

மத்திய அரசு வெளியிட்ட அரசாணையில் புலிகள் இயக்கம் தமிழ்நாட்டின் பகுதியையும் சேர்த்து தனி நாடு வேண்டி போராடுவது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று கூறி உள்ளது.

அமெரிக்கா விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடை செய்திருந்தாலும் அந்நாட்டில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு செயல்பட அனு மதிக்கப்பட்டுள்ளது.

போரில் சிதறடிக்கப்பட்ட புலிகள் உறுப்பினர்கள் தமிழ்நாட்டில் ஒன்று கூடி மீண்டும்

போராடுவார்கள் என்ற அனுமானத்தின் அடிப்படையில் கூறி இருப்பது தவறு. ஈழ போராட்டம் தொடர்பாக செய்திகள் வெளியாகும் இணைய தளங்கள் யாவும் புலிகள் இயக்கத்திற்கு சொந்தமானதல்ல. இதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் தீர்ப்பாயம் விடு தலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை உறுதி செய்வது அதனை சட்ட விரோத அமைப்பு என அறிவித்தது தவறு. எனவே தீர்ப்பாயத்தின் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் வைகோ குறிப்பிட்டுள்ளார். இவ்வழக்கு வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.

nakkheeran

  • கருத்துக்கள உறவுகள்

திரு வைகோ அவர்கட்கு இப்படியான வழக்குகள் தேவைதான் அதேவேளை, சிங்களம் தமிழர் விரோததேசம் இந்தியாவடன் சேர்ந்து முள்ளிவாய்காலில் கொலைவெறி நர்த்தனமாடியதே, அதனை விண்ணிலிருந்து நெறியாள்கை செய்தது இந்தியாதான் அப்போது பெறப்பட்ட தகவல்களை இந்தியாவின் தமிழர்மீதான கொலைவெறியுடன் அலையும் சோணியா மற்றும் ராகுலது ஏவல்நாய்களான "ரா" எனம் உளவுப்பிரிவு பத்திரப்படுத்தி வைத்துள்ளது. அதனை இந்தியாவின் தகவல் அறியும் சட்டத்தினைப் பயன்படுத்தி வெளிக்கொணர முயற்சிக்கவும். உண்மைகளை எவ்வளவு ஆளமாகப் போட்டுப் புதைத்தாலும் அவை எவ்வளவு ஆழத்தில் பதைக்கப்பட்டதோ அவ்வளவு ஆழத்திற்குரித்தான வீரியத்துடனும் வேகத்துடனும் வெளிவரும் தமிழர் மீதான கொலைவெறச்p சோணியா மற்றும் ராகுல் அவர்களே! பொறுத்திருங்கள் மெல்லமெல்ல தமிழர்களது பழி பற்றிப்படரும் தளிர்க்கொடியாக அங்குமிங்கும் உங்கள் அங்கத்தில் ஒருபகுதிகூட அசைக்கமுடியாதபடி சுற்றிப்படரும். இது எமது தேசத்தின் விடியலுக்காக தமது இன்னுயிரையும் உதிரத்தையும் ஊனையும் எமது மண்ணக்கு ஈகம்செய்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்ச்செல்வங்களதும் இந்திய மற்றம் சிங்களப்பேய்களால், உயிர்களைச் சூறையாடபட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களின் கனவகள் மீது ஆணையாகப் பதிவிடுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதிமுக கட்சியில் பல சிக்கல்கள் இருந்தாலும் (கட்சியை திமுகவினர் உடைத்துக்கொண்டிருந்தாலும்) ஈழ விடயத்தில் வைகோவின் தளராத முயற்சி வரவேற்கத்தக்கதே....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.