Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவின் பொறுப்பற்ற நடவடிக்கைகளே ஒக்ஸ்பொர்ட் சர்ச்சைக்குக் காரணம் - அரசாங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவின் பொறுப்பற்ற நடவடிக்கைகளே ஒக்ஸ்பொர்ட் சர்ச்சைக்குக் காரணம் - அரசாங்கம்

பிரித்தானிய அரசாங்கத்தின் பொறுப்பற்ற நடவடிக்கைகளே ஒக்ஸ்பொர்ட் சர்ச்சைக்குக் காரணம் - அரசாங்கம்

பிரித்தானிய அரசாங்கத்தின் பொறுப்பற்ற நடவடிக்கைகளே ஒக்ஸ்பொர்ட் பல்கலைக்கழக சர்ச்சைக்கு காரணம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி லண்டனில் எதிர்நோக்கிய நெருக்கடியான நிலைமைகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் பொறுப்பு சொல்ல வேண்டுமென ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கடந்த 2ம் திகதி ஒக்ஸ்பொர்ட் ஒன்றியத்தில் ஜனாதிபதியினால் ஆற்றப்படவிருந்த உரையை ஒரு தலைப்பட்சமாக ஒக்ஸ்பொர்ட் ஒன்றியம் ரத்து செய்திருந்ததாகவும், இது குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தலைவர் என்ற ரீதியில் ஒக்ஸ்பொர்ட் பல்கலைக்கழகத்தின் அழைப்பினை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டதாகவும், போதியளவு பாதுகாப்பு வழங்ப்பட வேண்டியது பிரித்தானிய அரசாங்கத்தின் கடமையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேம்ஸ்வெலி காவல்துறையினரும், ஒக்ஸ்பொர்ட் ஒன்றியமும் பாதுகாப்பு நிலைமைகளை சரியாக மதிப்பீடு செய்யவில்லை எனவும், இறுதி நேரத்தில் 400 விடுதலைப் புலி ஆதரவாளர்களின் எதிர்ப்பிற்கு காவல்துறையினர் அடிபணிந்து விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சகல நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டிருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

ஐந்து நட்சத்திர ஜனநாயகம் காணப்படும் நாடொன்றில் இவ்வாறு பேச்சு சுதந்திரம் மறுக்கப்பட்டமை நகைப்புக்குரியதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் பிரித்தானிய அரசாங்கத்திற்கும், ஒக்ஸ்பொர்ட் ஒன்றியத்திற்கும் ஓர் இழுக்காக அமைந்துள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியின் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழக உரை இரத்து நீண்டகாலமாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சம்பவங்களா?

ஜனாதிபதியின் லண்டனன் விஜயத்தின் போது, இடம்பெற்ற ஆர்;ப்பாட்டங்கள் மற்றும் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவிருந்த உரை இரத்துச் செய்யப்பட்டமை ஆகிய சம்பவங்கள் நீண்டகாலமாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சம்பவங்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அதேபோல் ஜனாதிபதியின் லண்டன் விஜயத்தின் அனைத்து செயற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் திருப்தியடைய முடியாது எனவும் அசைமச்ர் கூறியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியாளர் சந்திப்பில் ஊடகதுறை அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த பயணத்தின் போது, தனது தனிப்பட்ட பாதுகாப்பை ஜனாதிபி ஏற்படுத்திக் கொண்டிருந்த போதிலும் அனைத்து செயற்பாடுகளையும் நோக்கும் போது, அரச தலைவர் ஒருவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறித்து திருப்தியடைய முடியாது.

அல்-கைதா, விடுதலைப்புலிகள் அமைப்பு உள்ளிட்ட பல பயங்கரவாத அமைப்புகள் பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் விடுதலைப்புலிகளுக்காக இவ்வாறு சுதந்திரமாக ஆர்ப்பாட்டம் நடத்த முடியுமானால் எதிர்காலத்தில் அல்-கைதா அமைப்புக்கு இந்த விதமான ஆர்ப்பாட்டங்களை நடத்த சந்தப்பம் கிடைக்குமா என்பது சிக்கலுக்குரியது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் உரை இரத்துச் செய்யப்பட்டதை அடுத்து இலங்கை மாணவர் சங்கத்தின் தலைவர் உடனடியாக பதவி விலகினார். அதன் பின்னர் தெரிவுசெய்யப்பட்ட புதிய தலைவர், ஜனாதிபதி மேலும் இரண்டு நாட்கள் தங்கியிருந்தால் ஜனாதிபதி உரையாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும் என யோசனை தெரிவித்திருந்தார். எனினும் அதனை நிராகரித்த ஜனாதிபதி இலங்கை திரும்பியதாகவும் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/55075/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.