Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களவர்கள் பெரும்பான்மையாக மாற தமிழர்களே காரணமானார்கள் ! -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் பெரும்பான்மையாக மாற தமிழர்களே காரணமானார்கள் ! - பேராசிரியர் கீத பொங்கலன் உரை

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-11 06:47:47| யாழ்ப்பாணம்]

பெரும்பான்மை இனம் என தம் மை எண்ணிக்கொண்டு சிறுபான் மைக் கட்டமைப்புக்குள் தமிழர்கள் இருந்துகொண்டதால் சிங்களவர்கள் பெரும்பான்மை இனமாக தோற்றம் பெற்றனர் என கொழும்பு பல்கலைக்கழக அரசறிவியல்துறை பேராசிரியர் ஈ.எஸ். ஐ.கீதபொங்கலன் தெரிவித்தார்.

பரமேஸ்வராக் கல்லூரி இயக்குனர் சபையினால் சேர் பொன். இராம நாதனின் நினைவுப் பேருரை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.அவர் மேலும் கூறியதாவது, தமிழன் எல்லாவற்றையும் இழந்து விட்ட நிலையிலும் எதையும் இழக்காதவன் போல் இருக்கின்ற இயல்பை எவ்வாறு விமர்சிக்காமல் இருக்க முடியும்.

கடந்த காலங்களில் விடப்பட்ட தவறுகளை திருத்திக் கொள்வதற் கும் அவ்வாறான தவறுகள் மீண் டும் ஏற்படாத வகையில் நடந்து கொள்வதற்காகவுமே விமர்சனங்கள் செய்யப்படுகின்றன. விமர்சனங்கள் செய்வது எமக்குப் பிடித்தமானதல்ல. ஆனால் விமர்சனங்கள் செய்வேண்டிய சூழ் நிலையில் நாம் உள்ளோம். எமது நாட்டைப் பொறுத்தவரை ஒன்றும் இல்லாதவர்கள் உயர் குழா மில் உள்ளார்கள். ஆனால் எல்லாம் உள்ளவர்கள் எதுவுமே இல்லாத வர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

சிங்களவர்கள் பெரும்பான்மை யினமாக மாற தமிழ் இனமே காரண மானது. தாம் பெரும்பான்மை இனம் என தம்மை எண்ணிக் கொண்டு சிறுபான்மை கட்டமைப் பிற்குள் தமிழர்கள் இருந்து கொண் டனர். இத்தகைய நிலையில் சிங்களவர்கள் பெரும்பான்மை இனமாக தோற்றம் பெற்றனர்.

1950 ஆம் ஆண்டுகளில் சிங்கள வர்களை விட தமிழர்களே அதிகமாக இருந்தனர். அது மட்டுமன்றி தேசிய ரீதியில் சிறந்தவர்களாக தமிழர் களே இருந்திருக்கின்றனர்.1900 ஆண்டுகளை அரசியல் ரீதியாகப் பார்த்தால் அது பொன்னம் பலம் சகோதரர்களின் காலம் என்றே கூற முடியும். அவ்வாறான முறை யில்பொன்னம்பலம் சகோதரர் களின் பங்களிப்பு இருந்துவந்தது.

அது மட்டுமன்றி அரசியல் ரீதியாகவும் முற்போக்கு சிந்தனையாளர் களாகவும் செயற்பட்டு வந்தனர். குறிப்பாக சேர். பொன்.இராமநாத னின் சமூக சீர்திருத்தப் பணியில் சாதிப்பாகுபாடு, தீண்டாமை,சீதனப் பிணக்கு என்பவற்றுக்கு எதிராக செயற்பட்டு வந்தார். முற்போக்கு சிந்தனைவாதி யாக மட்டுமன்றி நாட்டுப்பற்றாளரா கவும் அவர் தீவிர போராட்டத்தில் ஈடு பட்டு வந்தார். குறிப்பாக பிரித்தானிய நாட்டின் ஆட்சியை எதிர்த்து அவர் களின் கொடியை எரிப்பதும் இலங்கைக் கொடியை ஏற்றுவதும் தேர்தல்களை பகிஷ்கரிப்பதும் என பல எதிர்ப்புக்களைக் காட்டிவந்தார். சிங்களவர்களுக்கு ஆதரவாக செயற்பட்ட தமிழ் அரசியல் தலை வர்களில் சேர் பொன்.இராமநாதன் முக்கியமானவர். இத்தகைய நிலை பிற்காலத்தில் தமிழர்களுக்கு பார தூரமான விளைவுகளைத் தோற்று வித்துவிட்டது.

இதேவேளை 1921 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் தமிழர் களுக்கு விசேட ஆசனம் என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது அதை சிங்களவர்கள் மறுத்துவிட்டனர்.தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும் என விடுதலைப் புலிகள் இயக்கம் கோரியிருந்தது. இதனை இந்தியா ஏன் மறுத்தது என்பதை நோக்கின் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானதாக இவர்களின் கோரிக்கை இருந்தமையே எனவே தமிழர் களின் இத்தகைய நிலைக்கு தமிழர்களே காரணம் என அவர் மேலும் தெரிவித்தார்

valampurii.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சேர் பொன். இராம நாதனை சிங்களவர்களும் தோள் மீது தூக்கி வைத்துக்கொண்டாடினார்கள். அக்காலம் திரும்ப வருமா...?

  • கருத்துக்கள உறவுகள்

சேர் பொன். இராம நாதனை சிங்களவர்களும் தோள் மீது தூக்கி வைத்துக்கொண்டாடினார்கள். அக்காலம் திரும்ப வருமா...?

முத்தையா முரளிதரனை சிங்களவர்கள் அண்மையில் தோளில் தூக்கினார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.