Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியத்தலைவரால் ஆழமாக நேசிக்கப்பட்ட விடுதலைவீரன் அன்ரன் பாலசிங்கம் – அய்ங்கரன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசியத்தலைவரால் ஆழமாக நேசிக்கப்பட்ட விடுதலைவீரன் அன்ரன் பாலசிங்கம் – அய்ங்கரன்

தேசத்தின்குரல் அன்ரன் பாலசி;ங்கம் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது, தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டு 2006ஆம் ஆண்டு 12ஆம் மாதம் 14 ஆம்நாள் வரலாறாhனார்.

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநிகழ்வு புலம்பெயர்தாயக உறவுகளினால் நினைவிற்கொள்ளப்படுகின்றது, தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு தமிழீழ மக்கள், விடுதலைப்போராட்டபாதையில் இன்றும் நிரப்பமுடியாத இடமாக காணப்படுகின்றது, தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் ஆழமாக நேசித்த ஒரு விடுதலைவீரனாக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் காணப்பட்டார்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்காலத்தில் இருந்து செயற்பட்ட பாலாஅண்ணா விடுதலை இயக்கத்தின் பிதாவாக காணப்பட்டார்.

தமிழீழ தேசியத்தலைவர் அவர்களுக்கும் விடுதலைப்போராளிகளுக்கும் உலக போராட்ட வரலாறுகளை எடுத்துககூறி பல்வேறு நாடுகளின் அரசியலாளர்களின் தொடர்புகளை ஏற்படுத்தி அதனுடாக விடுதலைக்கான உழைப்பினை மேற்கொண்டதில் தேசத்தின்குரல் முதன்மையானவர்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தனது துணைவியினையம் இணைத்துக்கொண்ட் ஒரு மூத்தஅரசியல்போரளியாக,ஒரு மதியுரைஞ்ஞராக,தத்துவஆசிரியராக, தமிழீழ தேசியத்தலைவர்அவர்களுக்கு அருகில் இருந்து விடுதலைப்போராட்டததிற்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்துள்ளார்.

பரந்துவாழும் உலகத்தில் தமிழ்மக்கள் பெருமைகொள்ளும்வகையில் அரசியல் உலகிலும் இராயதந்திரஉலகிலும் முடிவில்லா சாதனை புரிந்து தமிழ்மக்களின் சுதந்திரபோராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பெரும் போராட்டப்பணிக்காக தமிழீழதேசியத்தலைவர்அவர்கள் தேசத்தின் குரல் என்ற மாபெரும் மதிப்பினை வழங்கிமதிப்பளித்தார்,தாயகத்தில்போர் உக்கிரம்பெற்ற காலகட்டப்பகுதிகளில் தாயத்தில் இருந்து கொண்டு அரசியல்செயற்பாடுகளை நகர்தமுடியாதசூளலிலும் உடல்நலத்திpனை கருத்தில்கொண்டும் கடற்புலிகளின் சிறப்பு பாதுகாப்புடன் கடல்வழியாக பன்னாட்டிற்கு சென்று பன்னாடுகளுக்கு தமிழ்மக்களின் அரசியல் செயற்பாடுகளை எடுத்துகூறி, 2002 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா அரசுடன் ஏற்பட்ட போர்நிறுத் உடன்பாட்டிற்கு முதன்மை வகித்தார், ஸ்ரீலங்காஅரசின் பல மறைமுக எதிர்புக்களுக்கு மத்தியிலும் உயில் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் விடுதலைப்பற்றுக்கொண்டவனாக அன்று இரணைமடு குளத்தில் விமானத்தில் வந்திறங்கி தனது அரசியல் சக்தியினை ஸ்ரீலங்கா அரசிற்கு தெரியப்படுத்தினார்.

அதனை தொடர்ந்து தாய்லாந்து தொடக்கம் ஜெனீவாவரையான பலசுற்று பேச்சுவார்தைகளில் பங்கொடுத்து தமிழ்மக்களின் அரசியல் வேட்கையினை உலகிற்கு எடுத்துக்கூறி ஸ்ரீலங்காஅரசாங்கத்துடன் பேச்சுக்களில் ஈடுபட்டு பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் அவர்களை தனக்கு அடுத்த அரசியல் செயற்பாட்டாளனாக வளர்த்தெடுத்தபெருமை அன்ரன் பாலசிங்கம் அவர்களை சாரும் தமிPழமண்ணில் பலகல்விக்கூடங்களையும் அரசியல் நிர்வாக அலகுகளின் அலுவலங்களையும் திறந்துவைத்தும் பல போராளிகளுக்கு அரசியல் வகுப்புக்களை கற்பித்த எங்கள் ஆசானாக என்றும் அவர் எங்கள் மனங்களில் நிறைந்திருப்பார்.

ஸ்ரீலங்கா அரசு போர்நிறுத்த மீறல்களை மேற்கொண்டு தமிழர்தாயகப்பரப்பில் அத்துமீறிய போர்நடவடிக்கையினை மேற்கொண்ட காலகட்டப்பகுதியான 2006 ஆம் ஆண்டு காலகடத்தில் உடல்உபாதையால் பாதிப்புற்ற அன்ரன் பாலசிங்கம் அவர்கள் 2006 ஆம் ஆண்டு இன்றையநாள் தமிழ்மக்களை விட்டு பிரிந்துசென்றார், தேசத்தின் குரலின் நான்காம் ஆண்டு நினைவுநாளன இன்று தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றது,

- மீனகம் தளத்துக்காக அய்ங்கரன்

http://meenakam.com/2010/12/14/16228.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.