Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் மீன்பிடி வலையில் சிக்கிய கடல் பன்றிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னாரில் மீன்பிடி வலையில் சிக்கிய கடல் பன்றிகள்

மன்னார் கடலில் மீன்பிடிப்பதற்காக வீசியிருந்த வலையில் சுமார் ஆயிரம் கிலோ கிராம் நிறையுடைய இரண்டு கடற்பன்றிகள் உயிரிழந்த நிலையில் அகப்பட்டிருக்கின்றன. மன்னாரின் வடபகுதியான பேசாலையில் உள்ள வங்காலைப்பாட்டில் தங்கியிருந்து கடல்தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர் ஒருவரின் வலையிலேயே குறித்த கடற்பன்றிகள் அகப்பட்டிருக்கின்றன.

குறித்த மீனவர் நேற்று முன்தினம் வழமை பிரகாரம் கடலுக்குச்சென்று மீன்பிடிவலைகளை வீசிவிட்டு கரைசேர்ந்து பின் மறுநாளான நேற்று காலை குறித்த மீன்பிடிவலையினை எடுப்பதற்காக சென்றிருக்கின்றார். இதன்போது மீன்பிடிவலைகள் வழமைக்கு மாறான எடையைக் கொண்டிருந்ததாகவும், மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் வலையை கடலில் இருந்து எடுத்தபோது குறித்த கடற்பன்றிகள் தென்பட்டதாகவும் தெரிய வருகின்றது.

மீனவரின் வலையில் அகப்பட்ட கடற்பன்றிகளினால் குறித்த மீனவரின் மீன்பிடி வலைகள் பல இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த இராட்சத கடற்பன்றிகள் வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டு மன்னார் காவல் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்ட நிலையில் மன்னார் வாசிகள் இரவு பகலாக அவற்றை பார்வையிட்டு வருகின்றனர்.

குறித்த கடற்பன்றிகளில் ஒன்று ஆண் இனத்தையும் மற்றையது பெண்னினத்தையும் சேர்ந்ததாக இருக்கின்ற இந்நிலையில் இவற்றை என்ன செய்வது என்பது தொடர்பான சட்ட ரீதியிலான நடவடிக்கைக்காக மன்னார் நீதிமன்றத்தின் ஆலோசனைக்கு முன்னெடுக்கப்படும் என காவல்துறையினர் தரப்பு தெரிவிக்கின்றது.

kadalpandri001.jpg

kadalpandri002.jpg

http://meenakam.com/2010/12/16/16435.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.