Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு வேளை உணவுக்கு கையேந்திய அந்த கொடுமையான நாள் இன்றும் நம் கண்முன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வேளை உணவுக்கு கையேந்திய அந்த கொடுமையான நாள் இன்றும் நம் கண்முன்! வன்னித் தாய் உருக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 19 டிசம்பர் 2010 10:40

யுத்தம் என்ற கோரப்பசிக்கு ஆளானவர்கள் இலட்சம் பேர். பல இலட்சம் பேர் அங்கவீனர்களாகவும், மனநிலை பாதிப்புக்கு உள்ளானவர்களாகவும் இருக்கிறார்கள்.

குடும்பங்களின் உறவுகளை இழந்து அனாதைகளாகவும் அடைக்கலம் இன்றியும் இருக்கிறார்கள் பல்லாயிரக்கணக்கானோர்.

யுத்த நிறுத்தம், சமாதானம், மீள் குடியேற்றம் என்று அரசு வாய் வார்த்தைகளை அள்ளி வீசி வந்த போதிலும் எமது மக்கள் இன்னும் துயரிலேயே வாழ்ந்து வருகிறார்கள்.

ஒரு புறம் குடும்பத்தவர்களை இழந்த மன உளைச்சல் நிறைந்த துயரம். மறுபுறம் வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாத அளவு வறுமை. இன்னொரு புறம் யுத்தத்தின் போது அங்கவீனமானவர்களின் நிலை என மக்கள் மனக்காயத்தில் இருந்து மீள முடியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கிளிநொச்சி மாவட்டத்தின் தருமபுரம் பகுதியில் மீள்குடியேறி வந்திருக்கும் திருமதி. செல்வராசா விஐயலட்சுமியின் குடும்பமும் இவ்வாறான துயரங்களை சந்தித்து வரும் குடும்பம் தான்.

நாங்கள் அவரை சந்திக்கும் போது கூட அன்றைய நாள் பொழுதுக்கு தேவையான உணவு தயாரிக்க இருக்கும் சில்லறைகளை எண்ணிக்கொண்டிருந்தார். அந்த ஒரு விநாடி கடவுள் மேல் கோபம் கூட வந்தது.

முட்டு வருத்த நோயில் இருந்த தன்னுடைய கணவனுக்கு சரியான மருத்துவ வசதியின்றி 2005 ஆம் ஆண்டு தன் கணவனை இழந்தார். 3 பெண்பிள்ளைகளுடனும் ஒரு மகனுடனும் வசித்து வருகிறார்.

யுத்தத்தின் போது இவர்கள் அனுபவித்த வேதனையை விவரித்தார் விஐயலட்சுமி…

தேராவிலில் தான் எங்களினுடைய வீடு இருந்தது. அது உண்மையில் என் மகளின் வீடு. நாங்கள் வீடு வாசல் இன்றி அங்கு தான் இருந்தோம். எறிகணை எங்களின் வீட்டின் மீது தான் விழுந்தது. அதில் தான் எனது மூத்த மகளுக்கு பார்வை பறிபோனது.

கடைசி மகளான தரிஷிகாவுக்கு கால் பாதித்தது. காலில் முழங்காலின் கீழ், பாதிக்கு மேல் சதையில்லை. கால் இருக்கு ஆனால் மடக்கவோ, நடக்கவோ அவளால் முடியாது. ஒருபக்க காலில் இருந்து தான் மற்ற காலுக்கு தசை துண்டம் எடுத்து அறுவைச் சிகிச்சை செய்தார்கள்.

ஒரு காலை விட ஒரு கால் நாலரை இஞ்சி குறைவு. ஊன்று கோல் இல்லாமல் நடக்க முடியாது. அதனுடைய தாக்கம் இடுப்பு விலாவில் கூட முறிவு ஏற்பட்டிருக்கிறது. ஓவ்வொரு மாதமும் கொழும்பு தேசிய சைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக போக வேண்டும்.

நான் தான் அவளை வவுனியாவுக்குச் சென்று அங்கிருந்து கூட்டிக்கொண்டு கொழும்புக்குப் போவேன். எங்களுக்கு உறவுகள் என்றோ, தெரிந்தவர்கள் என்றோ யாரும் இல்லை.

நாங்கள் போய் லொட்ஜில் தங்கி தான் மறுநாள் காலையில் ஆஸ்பத்திரிக்கு போவோம். போக்குவரத்துச் செலவு, தங்குகின்ற செலவு சில மருந்துகள் வைத்தியசாலையில் இல்லை என்று சொல்லி வெளியிடத்தில் வாங்கச் சொல்லுவார்கள்.

இதனால் மாதா மாதம் அவளின் மருந்துத் தேவைக்கு மட்டுமே பணம் இருக்க வேணும். அது தவிர இனி வருகிற தை மாதம் அவளுடைய இடுப்பில் ஒரு பெரிய அறுவைச் சிகிச்சை இருக்கு. அதற்கு வேறு தேடவேணும்.

வவுனியாவில் உள்ள ஒரு கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் மடத்தில் தான் விட்டிருக்கிறோம். அவங்களே அவளை ஆட்டோவில் பாடசாலைக்கு கூட்டிக்கொண்டு போய் கொண்டு வந்து விடுவார்கள். அவள் படிப்பில் நல்ல திறமைசாலி.

உண்மையில் அவள் 11 ஆம் ஆண்டு தான் படிக்க வேண்டும். அவள் ஆண்டு 9 படிக்கும் போது தை மாதம் தான் எறிகணை விழுந்தது. காயப்பட்ட காலப்பகுதியில் படிக்க முடியாமல் போய் விட்டது.அதனால் இப்பொழுது ஆண்டு 10 இல் கல்வி பயில்கின்றார்.

மூத்த மகள் வித்தியா அவளுடைய கணவன் மற்றும் பிள்ளையும், நானும் எனது 22 வயதான மகன் லிக்டேஸ், மற்றும் 19 வயதான மகள் ராதிகா என எல்லோரும் ஒன்றாக தான் இருக்கிறோம். மூத்த மகளுடைய கணவர் கூலி வேலை செய்கிறார்.

அவர் கொண்டு வரும் காசில் தான் எங்களின் குடும்பம் போகுது. இப்ப இங்கு மீள் குடியேறி வந்திருக்கிறோம். ஆனால் எந்த வித வருமானத்திற்கான வசதியும் எங்களுக்கு இல்லை. மீள் குடியேறி வந்தவர்கள் அனைவருக்கும் இதே நிலை தான்.

வந்தவுடன் 12 தகரமும் தரப்பாலும் தந்தார்கள். வேறு ஒன்றும் இல்லை. வாரத்திற்கு ஒரு ஆளுக்கு 3 கிலோ மா, 3 கிலோ அரிசி தருகிறார்கள் வேறு எந்த ஒரு நிவாரணமும் இல்லை. வெறும் மாவும் அரிசியும் மட்டு பசியை ஆற்றுமா. இதற்கு பதில் எங்களின் பிள்ளைகளுக்கு தொழில் வாய்ப்பு எதனையும் கொடுத்தால் மாத மாதம் வருமானம் சரி கிடைக்கும்.

அநியாயம் சொல்லக் கூடாது இயக்கத்தின் கட்டுப்பாடு இருக்கும் போது எல்லா இளைஞர், யுவதிகளுக்கும் தொழில் வாய்ப்பு கொடுத்து மாதா மாதம் 10, 000 ரூபாவுக்கு மேல் சம்பளமும் கொடுத்தார்கள். அப்போது யுத்தம் நடந்தாலும் பசி, பட்டினி இருக்கவில்லை.

ஆனால் இப்போது நிம்மதி இருக்கிறது சந்தோஷம் இல்லை. எங்களுக்கு சுய தொழில் வாய்ப்பிற்கு ஏதேனும் வழி செய்தால் குடும்பத்தை நடாத்திச்செல்லலாம்.

எங்கள் வாழ்க்கை தான் நரகமாகியது எங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை சரி நல்ல படியாக இருக்கட்டும். ஒரு வேளை உணவிற்கு கையேந்திய அந்த கொடூரமான அந்த நாள் இன்றும் எங்கள் கண் முன் தெரிகிறது. என்று கடந்த கால கசப்பான நினைவுகளை கண்ணீருடன் கூறினார் விஜயலட்சுமி.

tamilcnn.com

பாவம் தமிழனுக்கு எப்பதான் விடிவு கிட்டுமோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.