Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் முடிந்தது – பொருளாதார அபிவிருத்தியில்லை

Featured Replies

போர் நிறைவுபெற்றபோதும் சிறீலங்காவில் பொருளாதார மேம்பாடுகள் முடக்கமடைந்துள்ளன. வெளிநாட்டு முதலீடுகளும், போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு பகுதிகளின் கட்டுமானத்திற்கான உதவிகளும் சிறீலங்கா அரசு எதிர்பார்த்தவாறு கிடைக்கவில்லை.

போர் நிறைவடைந்த பின்னர் பெருமளவிலான முதலீடுகளை கவர்ந்துகொள்ளலாம் எனவும், வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கு என அதிக நிதியை வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் எனவும் சிறீலங்கா அரசு எதிர்பார்த்திருந்தது.

ஆனால் அவை எவையும் நிகழவில்லை. சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள், தமிழ் மக்கள் மீதான இராணுவ அழுத்தங்கள், புலம்பெயர் தமிழ் மக்களின் தொடர்போராட்டங்கள் என்பன சிறீலங்கா அரசின் கனவை தகர்த்துள்ளது.

மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு கூட நிதியை வழங்க அனைத்துலக சமூகம் பின்னடித்துவருகின்றது. சிறீலங்கா அரசின் நேர்மையற்றபோக்கே அதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்துலக உதவி அமைப்புக்களின் ஊடாகவே நிதியை வழங்க அனைத்துலக நிறுவனங்கள் ஆர்வம் கொண்டுள்ளன. ஆனால் அனைத்துலக உதவி அமைப்புக்களை போர் இடம்பெற்ற பகுதிகளுக்கு அனுமதிக்க அரசு தொடர்ந்து மறுத்து வருகின்றது.

பாராளுமன்றத்தில் வரவுசெலவுத்திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னரும் கொழும்பு பங்குச்சந்தையில் முன்னேற்றம் காணப்படவில்லை. இது முதலீட்டாளர்கள் வரவுசெலவுத்திட்டத்தில் கொண்ட நம்பிக்கையீனத்தையே காட்டுவதாக கொழும்பை தளமாகக் கொண்ட பொருளியில் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் ஆடம்பர விடுதிகளை அமைப்பதில் தான் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஏனைய கைத்தொழில்துறைகள் முடங்கிப்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://www.eelampress.com/2010/12/9254/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.