Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் அணு சக்தி உற்பத்திக்கு இந்தியா, ரஷ்யா உதவி: சீனாவுக்கு எதிரான நகர்வு!

Featured Replies

தெற்காசியப் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கைத் தடுப்பதற்கான ஒரு நடவடிக்கையாக இலங்கையில் அணுசக்தி உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான உதவிகளை வழங்குவதாக இந்தியாவும், ரஷ்யாவும் உறுதியளித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் தெற்காசியப் பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிரான காய் நகர்த்தல்களை இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து மேற்கொள்ள இருக்கின்றன.

அணுசக்தி வர்த்தகத்தில் இணைந்து செயற்படுவதற்கு முடிவெடுத்துள்ள இந்தியாவும், ரஷ்யாவும் சிறியளவிலான அணுசக்தி நிலையங்களை இலங்கை மற்றும் பங்களாதேஷ் போன்ற தெற்காசிய நாடுகளில் அமைப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக இந்திய ஆங்கிலத் தினசரி ஒன்று தெரிவித்திருக்கின்றது.

ரஷ்யாவின் ஜனாதிபதி Medvedov அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தை அடுத்தே இது தொடர்பாகத் தீர்மானிக்கப்பட்டதாகவும் இந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷில் அணுசக்தி நிலையங்களை அமைத்துக் கொடுப்பது தொடர்பாக ஆராய்வதற்கு இந்தியாவும், ரஷ்யாவும் இணங்கியுள்ளன எனவும் இந்தப் பத்திரிகை தனது செய்தியில் தெரிவித்திருக்கின்றது.

தெற்காசியவிலுள்ள பெரும்பாலான நாடுகளில் உள்கட்டுமாணப் பணிகளில் பெரியளவில் சீனா ஈடுபட்டுள்ளது. இதற்கு எதிரான நடவடிக்கையாக இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவில் சீனாவின் செல்வாக்கு அதிகமுள்ள நாடுகளில் இவ்விரு நாடுகளும் இணைந்து இத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்ள உள்ளதாக தொவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் உலக நாடுகளில் அணு சக்தியை சமாதான நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஒத்துழைப்பதை இட்டு பரிசீலனை செய்வதற்கு இந்தியாவும், ரஷ்யாவும் இணங்கியுள்ளன. இது தொடர்பாக இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது ஆராயப்பட்டுள்ளதுடன், இதனை இணைந்த செயற்திட்டங்களாக நடைமுறைப்படுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

தெற்காசியப் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டங்களின் மூலமாக இவ்விரு நாடுகளும் பொருளாதார மற்றும் அரசியல் நலன்களைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கையும், பங்களாதேஷும் சத்தித் தேவையைக் கொண்டவையாக இருப்பதால் இந்த முயற்சி பெருமளவுக்குப் பயனளிப்பதாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பங்களாதேஷைப் பொறுத்த வரையில் மேற்கு வங்காளத்தின் ஊடாக இந்தியாவிலிருந்து பங்களாதேஷை இணைக்கும் அணுசக்தியைக் கொண்டு செல்லும் கம்பிகள் பொருத்தப்படும். அதேவேளை, இலங்கையைப் பொறுத்த வரையில் கடலுக்கடியிலான கேபிள்கள் மூலமாக இந்த இணைப்பை ஏற்படுத்துவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={E6051B4E-B25C-4D50-80CD-F97BEBAF6AF0}

  • தொடங்கியவர்

N-plants: India, Russia to counter China in South Asia

India and Russia have decided to work together in the field of nuclear commerce. The two countries will help set up smaller nuclear power plants in South Asian countries such as Bangladesh and Sri Lanka, sources said. This, according to South Block sources, is a key outcome of Russian President Dmitry Medvedev’s visit to India.

China is active in most South Asian countries, building infrastructure in a big way, and hence, the India-Russia joint initiative will be an attempt to counter that as well.

India and Russia agreed “to consider cooperation in the peaceful uses of nuclear energy with third countries”. Negotiators from New Delhi and Moscow said both sides are confident of executing projects jointly. Sources said both sides said the projects in South Asian countries will yield economic and political dividends. South Asian countries, sources said, need smaller nuclear power plants, generating 200-250 MW of power.

Both Bangladesh and Sri Lanka are energy starved, and India is helping them by linking their grids with its own. In case of Bangladesh, India is making efforts to link its eastern grid through its border in West Bengal, while in case of Sri Lanka, India is planning to lay underwater cables to connect the power grids in both countries.

For the first time, Russia has also recognised India as a “supplier state” in the nuclear business — both in terms of equipment and fuel.

http://www.indianexpress.com/news/N-plants--India--Russia-to-counter-China-in-South-Asia/729704

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களைப் பார்த்து... சீனாவும் அதிக அணுசக்தி உதவிகளை, ஸ்ரீலங்காவுக்கு செய்யப்போகுது.

பொங்கினவன் பானையில் உள்ள புக்கையை விட.... தண்டினவன் பானையில் உள்ள‌ புக்கை தான் அதிகம்.msn_smiley_086.gif

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.