Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்மக்களின் உணர்வுகள் என்ன வியாபாரப் பொருளா? சீமான் வருகை கூறுவது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மக்களின் உணர்வுகள் என்ன வியாபாரப் பொருளா? சீமான் வருகை கூறுவது என்ன?

வெள்ளி, 31 டிசம்பர் 2010 23:50

காலத்திற்கு காலம் ஈழ யுத்தத்தை தளமாகக் கொண்டு வியாபாரப்பொருளாக பல அரசியல் சந்தைக்கு வந்து போய்விட்டது. இதில் ஒட்டுமொத்தமாக, மொத்த வியாபாரியாக இருந்த இலங்கை அரசிற்கே முழு இலாபமும்.

இன்றைய சூழலில் எதை வியாபாரப் பொருளாக்கி பலனடையலாம் என சிந்தித்த அனுபவம்கொண்ட வியாபாரிகள், இந்தியாவின் தமிழ்நாட்டு திரையுலக நட்சத்திரங்களை குத்தகைக்கு எடுத்து இலாபம் காண முயற்சி செய்து வருகிறார்கள். சில்லறை வியாபாரிகளாக இருக்கும் புலம்பெயர் வியாபாரிகள் இலாபம் பெறப்போவது என்பது உண்மையோ பொய்யோ, மொத்த இலாபம் அடையப்போவது மொத்த வியாபாரியான இலங்கை அரசே.

இதன் உண்மைத்தன்மையை உணர்வுடன் இருக்கும் தமிழ்மக்களுக்கு புரிய வைக்கவேண்டியது, தாயகத்தை நேசிக்கின்ற ஒவ்வொரு தமிழனின் கடமையாக எண்ணவேண்டியது ஒரு பொறுப்பு மிக்க செயலாகும். சீமான் போன்றோரின் வருகை புது நிமிர்வைத் தருமா? உணர்ச்சிகளற்றுக் கிடக்கும் ஜடங்களுக்குத் தான் உணர்வைக் கொடுக்க வேண்டும். ஈழத்தமிழர்கள் என்றுமே உணர்வுகளைத் தொலைத்தவர்கள் அல்லர். அவர்களின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை.

தமிழருக்கான தனியாட்சி கிடைக்கும் வரை என்றுமே ஆறாத காயங்கள். முள்ளிவாய்க்கால் பின்னடைவுக்கு 'முன்னரும் பின்னரும்' நடந்தவைகள் தற்பொழுது பழைய கதையாகப் போய்விட்டது. இதிலிருந்து கற்ற பாடங்கள் என்ன? அதைக்கொண்டு எதிர்காலத்தில் தமிழருக்கான சுதந்திரத்தைப் பெறுவதற்கு நாம் சாதிக்கப் போவது என்ன? இந்த இரண்டு கேள்விகளுக்கும் தான் விடை காணப்படல் வேண்டும். வெறுமனே உணர்ச்சிகள் கொப்பளிக்க பேசுவதற்கு மேடையமைத்து தமிழ்மக்களுக்கு உணர்வூட்டுவது என்பது குழந்தைகள் மிட்டாய்க்காக பந்தயத்தில் ஓடுவது போலாகும்.

தமிழீழத்து மக்கள் உணர்ச்சிப் பேச்சுகளைக் கேட்டவர்கள் அல்ல, வெறும் காகிதப்படன்களைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டவர்களும் அல்ல. நிஜமாகவும் நிதர்சனமாகவும் வீரங்களையும் அவலங்களையும் தரிசித்தவர்கள். இதனால், சீமான் போன்றவர்களின் உணர்வு மதிக்கப்படவேண்டியவை. ஆனால், அதற்கொரு களமமைத்து சந்தையில் வைத்து ஏலம் போடவேண்டியதேவை எதற்கு? இதனோடு இன்னுமொரு கூத்து அரங்கேறுகிறது. 'கீரைக்கடைக்கு எதிர்க்கடைபோல்' சீமானின் அரங்கிற்கு எதிரரங்காக நடிகை சினேகா, சியாம்(நம்பேன்டா) கூட்டம் வந்திறங்கப்போகிறது. இந்த கூட்டத்திற்கு புத்தாண்டு, பொங்கல் சலுகைக்கழிவாக கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதை நடாத்துபவர்கள் எப்படித்தான் மூடிபோட்டு தடுத்தாலும் வெளிவரவேண்டியது வெளிவந்துதான் தீரும்.

அதாவது, இந்த நிகழ்ச்சியை குத்தகைக்கு எடுத்திருப்பது இலங்கை அரசாங்கமும், அவர்களின் பினாமிகளும் தான் என்பது வெளிச்சத்துக்கு வந்த விஷயம். புலம்பெயர் தமிழ்மக்களே! தயவுசெய்து சுயமாக சிந்திக்க பழகிக்கொள்ளுங்கள்! இதைத் தெளிவுபடுத்துவதன் நோக்கத்தை தயவு செய்து குட்டையைக் குழப்பி அதில் சுகம் காண்பவர்களாக எண்ண வேண்டாம். மேலும், நடைமுறை ஜதார்த்தத்தைச் சொல்லுவதால் ஈழத்தமிழரின் கெளரவம் மிக்க வாழ்விற்கு எதிரானவன் என்றோ, K P யின் ஆள் என்றோ, அரசாங்கத்திற்கு சோரம் போனவன் என்றோ, நாடுகடந்த தமிழீழத்தின் ஆள் என்றோ, நெடியவனின் ஆள் என்றோ, பேரவையின் ஆள் என்றோ, கருணாவின் ஆள் என்றோ, டக்கிளசின் ஆள் என்றோ, விடுதலைப்புலிகளின் அனைத்துலக செயலகத்தின், தலைமைச் செயலகத்தின் ஆள் என்றோ சாயம் பூசவும் வேண்டாம்.

ஆனால், யாருடைய ஆளுமில்லை. தேசியத்தை ஏற்றுக்கொண்டவனும், தமிழீழத்தை கனவில் கண்டுகொண்டிருப்பவன் என்பதே சத்தியமான உண்மை. எது எப்படியோ உண்மையைக் கூறுவதனால் தொடர்புடையவர்களுக்கு வலிக்கும். சீமான் போன்றவர்களின் வருகைக்கு களமமைத்து எமது உணர்வுகளை வாங்கி, பணமாக்கி கொள்ள இடமளியாதீர்கள். இதற்கு பல சாக்குப் போக்குகள் சொல்லலாம். அதிலும் குறிப்பாக 'பழைய கடன்களை அடைத்தல்' கருப்பொருளாக அமையும். இது எதற்கும் மயங்காதீர்கள். ஈழத்தமிழ் மக்கள் மேல் உண்மையான பற்றுதல் இருந்தால், புலம்பெயர் நாடுகளில் சீமான் போன்றவர்களின் வருகையாலும், உணர்ச்சிப் பேச்சாலும் நிறைந்த வருவாய் கிடைக்க வழியிருக்கிறது.

இதனை உண்மையான செலவுகள் நீங்கலாக(அத்தியாவசிய செலவுகள் மட்டும்) மிகுதியாக கிடைக்கும் அனைத்து பணத்தொகையையும் இன்று வன்னியில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எமது உறவுகளின் நல்வாழ்வுக்கு கொடுக்கப்படவேண்டும் என்பதோடு, சரியானதும், ஒழுங்கானதுமான கணக்கறிக்கையும் மக்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கும் பட்சத்தில், அதுவே உண்மையான நாட்டுப்பற்றாகும். இவர்களே உண்மையான நாட்டுப் பற்றாளர்களுமாவார்கள். எல்லோருமாகக் காத்திருப்போம்! நல்ல பதில் கிடைக்குமென்ற வாஞ்ஞையோடு!

tamilcnn.com

Edited by கறுப்பி

சீமான் யாரை எதிர்க்கிறார்..... ஏன் எதிர்க்கிறார்.....?

நாதியற்ற ஈழ தமிழினத்துக்கு சீமான் குரல் கொடுப்பது தவறா....?

சீமான் பேசாமல் இருந்து விடுவது நல்லதா?.... அப்படியானால் யாருக்கு நல்லது....?

இல்லை சீமான் சுப்ரமணிய சுவாமி போன்று பேசுவது நல்லதா....?

ஒன்றை ஞாபகம் கொள்ளுங்கள்..... நெடுமாறன், வைகோ, சீமான் போன்றவர்கள் இல்லாவிடில் புலிகள் எனும் கப்பல் தமிழ்நாட்டில்

என்றோ தரை தட்டியிருக்கும்..... ஈழம் என்ற சொல் பேச்சு வழக்கிலே இல்லாது போயிருக்கும்....

நூறு சுப்ரமணிய சுவாமிகளும் சோவும் தோன்றியிருப்பார்கள்....

சீமான் கத்துவது, கதறுவது சிறை செல்வது ஈழத் தமிழர்களை கவர்வதற்காக அல்ல..... மாட்டு மந்தைகளாக கிடக்கும் தமிழகத்து மக்களுக்காகவே.... 90 % தமிழ்நாட்டு மக்கள் உணர்ச்சியற்ற பிண்டமாகவும் அறியாமையிலும் திளைக்கிறார்கள்.... இல்லையானால் ஒரு கருணாநிதி தமிழ்நாட்டை ஆள முடியுமா...? ஒரு நாட்டியக்காரி ஜெயலலிதா தமிழ்நாட்டையும் காபரே நாட்டிய சோனியா இந்தியாவை ஆள முடியுமா.....? வாழ்வில் யாரையும் நம்பக்கூடாது வாஸ்தவம் தான்.... ஆனால் குறைந்த பட்சம் ஒருத்தரையாவது நம்பித்தான் ஆக வேண்டும் என்பது தான் நியதி.....

இது சீமானுக்கு நல்லதா....கெட்டதா.... இல்லை லாபகரமானதா என்று பார்ப்பதையிட்டு.....ஆளுமைமிக்க, தன்னலமற்ற, இன உணர்வு முறுக்கேறிய எந்த ஒரு மனிதனும் ஒரு இனத்துக்கு தலைமை தாங்கலாம்...... அந்த ஒரு நபரை நம்பலாம்....

எம்முடிய வீண் விவாதங்களால், தேவையற்ற சஞ்சலன்களால் எமக்கான ஆதரவுத் தளத்தை சிதைப்பதை விட்டு எமக்கான ஆதரவினை ஒருன்கூட்டுவதே இன்றைய எம் ஒவ்வொருவரின் பணியாகும்....

Edited by Rudran

சீமான் கத்துவது, கதறுவது சிறை செல்வது ஈழத் தமிழர்களை கவர்வதற்காக அல்ல..... மாட்டு மந்தைகளாக கிடக்கும் தமிழகத்து மக்களுக்காகவே.... 90 % தமிழ்நாட்டு மக்கள் உணர்ச்சியற்ற பிண்டமாகவும் அறியாமையிலும் திளைக்கிறார்கள்.... இல்லையானால் ஒரு கருணாநிதி தமிழ்நாட்டை ஆள முடியுமா...? ஒரு நாட்டியக்காரி ஜெயலலிதா தமிழ்நாட்டையும் காபரே நாட்டிய சோனியா இந்தியாவை ஆள முடியுமா.....? வாழ்வில் யாரையும் நம்பக்கூடாது வாஸ்தவம் தான்.... ஆனால் குறைந்த பட்சம் ஒருத்தரையாவது நம்பித்தான் ஆக வேண்டும் என்பது தான் நியதி.....

இது சீமானுக்கு நல்லதா....கெட்டதா.... இல்லை லாபகரமானதா என்று பார்ப்பதையிட்டு.....ஆளுமைமிக்க, தன்னலமற்ற, இன உணர்வு முறுக்கேறிய எந்த ஒரு மனிதனும் ஒரு இனத்துக்கு தலைமை தாங்கலாம்...... அந்த ஒரு நபரை நம்பலாம்....

எம்முடிய வீண் விவாதங்களால், தேவையற்ற சஞ்சலன்களால் எமக்கான ஆதரவுத் தளத்தை சிதைப்பதை விட்டு எமக்கான ஆதரவினை ஒருன்கூட்டுவதே இன்றைய எம் ஒவ்வொருவரின் பணியாகும்....

மேலே இணைக்கப்பட்டுள்ளது ஒரு தனி நபர் எழுதியது, செய்தி அல்ல.

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=16585:2010-12-31-18-25-52&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

நிச்சயமாக ஈழம் என்ற சொல் இனி உச்சரிக்கப்படுவது தமிழகத்தில் தான்.

தமிழக மக்களின் மாற்றம் இல்லாமல் ஈழத்தமிழருக்கு விடுதலை இல்லை.

நாங்கள் விட்ட தவறு போராட்டம் ந்டைபெற்ற போது தமிழக மக்களையும் கொந்தளிப்பு நிலையில் வைத்திருந்திருக்க வேண்டும்..

அவர்களை ரஜனிபடத்துக்கு பால் ஊற்ற விட்டு விட்டு நாங்கள் மாத்திரம் செத்தது பிழை. மகா பிழை.

மீண்டும் அந்த தவறை செய்ய கூடாது.

யார் யார் எல்லாம் புலிகள் ஈழம் என்று கத்து கிறார்களோ அவர்களுக்கு தமிழக இளைஞர் பால் வார்க்க மாற்றம் கொண்டு வர வேண்டும்.

தமிழகம் மாறினால் தான் வடைந்தியன் அடங்குவான். புரட்சி ஆயுதம் அகிம்சை எல்லாவற்றாலும் வரும்.

தமிழகத்தை மாற்றும் கடமை புலம் பெயர்தமிழரிடம் தான் இருக்கின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.