Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடிவுதராத புத்தாண்டுகளே தமிழருக்குத் தொடர்கின்றன

Featured Replies

விடிவுதராத புத்தாண்டுகளே தமிழருக்குத் தொடர்கின்றன- இதயச்சந்திரன்

யாழ். குடாவில் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், கொள்ளைகள் என பதட்டமான பாது காப்பற்ற சூழல் நிலவுவதாக அங்கிருந்துவரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.இவை ஒருபுறமிருக்க, தென்னிலங்கையில், “புலிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்” என்று தலைப்பிட்டு புத்தக வெளியீடுகளும் நடைபெ றுகின்றன.

இவ்விதமான இரண்டு வகைப்பட்ட முரண் நிலைப் போக்குகளுக்கிடையே தமிழ் இளைஞர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பூசா முகாமில் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்கும் நாடகங்களும் அரங்கேறுகின்றன.

அதேவேளை சரித்திரப் பிராந்திய பாதுகாப்பு வலயத்துள் இலங்கையை உள்ளடக்கிவிட வேண்டுமென அவசரப்படும் இந்தியப் பேரரசு, தொடர்ச்சியாக தனது இராஜதந்திரிகளை அனுப்பிக் கொண்டிருக்கிறது.

இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் அவர்கள், தமிழ் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த இங்கு வரவில்லை என்பது புரியக்கூடிய விடயம்.

வடக்கு கிழக்கில் வாழும் பூர்வீக தமிழ் பேசும் மக்களின் வாழ் நிலங்கள் திட்டமிட்ட குடியேற்றங்களால் அபகரிக்கப்படும் இவ்வேளையில், பன்னாட்டு நிறுவனங்களும் பிராந்திய வல்லரசுகளும் தமது பங்கினைப் பெற்றுக் கொள்ள, பயணங்களை மேற்கொள்வது போல் தெரிகிறது.

வன்னியில் வீடு கட்டித் தருவதாக அரியாலையில் அடிக்கல் நாட்டியவர்கள், கடல் பரப்பில் கூட்டு நடவடிக்கையில் ஈடுபடும் ஒப்பந்தத்தினை ஏற்படுத்த காத்திருக்கின்றார்கள்.வெலிஓயாவில் 500 ஏக்கர் நிலம், சிங்களக் குடியேற்றத்திற்கு ஒதுக்கப்பட்டிருப்பதனையிட்டு கவலையடையும் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. அதிபருக்கு கடிதம் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாவற்குழியிலிருந்து வேகமாகப் பரவிய இந்நோய் அம்பாறை வரை விரிந்து செல்வதை, கண்டன அறிக்கைகள் மூலம் தடுத்திட முடியாது. இந்த கடிதங்களுக்கு தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் குணதாஸ அமரசேகரவும் ஜாதிக ஹெல உறுமயவின் சம்பிக்க ரணவக்கவும் விமல் வீரவன்ஸவும் பதிலளிப்பதால் ஜனாதிபதி தரப்பிலிருந்து எதுவுமே கூறப்படுவதில்லை.எவரும் எங்கும் வாழலாம், எல்லோரும் ஒருதாய் பெற்ற பிள்ளைகள் என்பதன் தாற்பரியம் இப்போதுதான் சிலருக்கும் புரிகிறது.

சிறுபான்மை தேசிய இனங்கள், ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்படும் ஒரு நாட்டில் சிறுபான்மை இனத்தவரை நீதிக்குப் பொறுப்பான அமைச்சராக்கி, ஒடுக்குதலை நியாயப்படுத்தும் புதிய இராஜதந்திரத்தையும் இலங்கையிலேயே காணலாம்.

ஒடுக்கும் இயந்திரம் பலமாக இருக்கும் போது, போராடிப் பயணில்லை என்கிற அடிபணிவு அரசியலை அரவணைத்துக் கொள்வது தான், நாடாளுமன்ற நாற்காலியை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்ளும் என்று சிலர் முடிவெடுத்து விட்டார்கள்.வேறு தெரிவற்ற மக்களும் தம்மையே தெரிவு செய்வார்கள் என்கிற திடமான நம்பிக்கையில் மக்களிடமிருந்து அந்நியமாகி இருக்கும் போக்கே காணப்படுகிறது.

““ஸ்ரீ லங்கா என்பது சிங்களத்தைக் குறிக்கும். இது ஒரு பௌத்த நாடு. எந்த ஆட்சியாளரும் இந்த உண்மையை மறுக்க முடியாது. இதனை மறுப்பவர்கள், 24 மணி நேரத்திற்கு மேலாக தமது ஆட்சியை நீடிக்க முடியாது.

ஸ்ரீலங்காவானது சிங்களவர்களிற்கான பௌத்த நாடென்பதை கண்டிய ஒப்பந்தம் உறுதிப்படுத்துகிறது” என்று சிறில் மத்தியூ அன்று பிரகடனம் செய்த விடயமே இன்று நினைவிற்கு வருகின்றது.

இலங்கையை சிலோன், லங்கா என்று அழைக்காமல் ஸ்ரீலங்கா என்று அழைக்க வேண்டுமாம்.சிங்கள தேசிய கீதம், ஸ்ரீலங்கா போன்ற விவகாரங்கள், அடுத்த கட்டமாக, “சிங்களம் மட்டும்’ என்கிற நிலைப்பாட்டினை அடைய, வெகு தூரம் இல்லை போன்று தெரிகிறது.

“தமிழ் மக்களின் கருத்து குறித்து நான் கவலை கொள்ளவில்லை. அவர்களின் வாழ்வு குறித்தோ அல்லது சிந்தனை பற்றியோ நான் நினைத்துப் பார்க்கவில்லை. வட பகுதி மக்கள் மீது நாம் செலுத்தும் அதிகளவு அழுத்தமே, இங்கு வாழும் சிங்கள மக்களை மகிழ்ச்சிப்படுத்தும். தமிழர்களைப் பட்டினி போட்டால், சிங்களவர்கள் ஆனந்தமடைவார்கள்” இப்படிச் சொன்னவர் வேறுயாருமல்ல.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை உருவாக்கி, அதன் முதல் அதிபராக பதவியேற்ற ஐ.தே. கட்சியைச் சார்ந்த ஜே.ஆர். ஜெயவர்தன என்பவர்தான்.அவரது பேனவாதச் சிந்தனைப் பாதையை, இற்றைவரை எவரும் மாற்றவுமில்லை.மறுத்தலிக்கவுமில்லை.

அநகாரிக தர்மபால முதல் குணதாஸ அமரசேகர வரை நிராகக்கப்படாத போற்றிப் பாதுகாக்கப்படும் ஒரு இன வெறித் தத்துவமாக இது இருந்து வருகிறது என்பதை மறுக்க முடியாது.அனைத்துலக அளவில் பேசப்படும், சுயாதீன போர்க்குற்ற விசாரணை ஓரங்கட்டப்படுமாயின் பல ஜே.ஆர். களின் குரல்களை மறுபடியும் தமிழ் மக்கள் செவிமடுப்பார்கள். அடக்கி வாசித்தாலும் ஒடுக்கு முறைகளும் நில ஆக்கிரமிப்புக்களும் குறைவில்லாமல் சிங்களத்தால் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தெற்கு மற்றும் கிழக்கு சீனக் கடற்பரப்பையும் இந்து சத்திரப் பிராந்திய கடல் பிரதேசத்தையும் தனது கேந்திர முக்கியத்துவமிக்க பகுதிகளாகக் கருதும் சீனா, அமெரிக்கா, இந்தியா போன்ற வல்லரசாளர்கள், இலங்கையில் பூர்வீக தேசிய இனமொன்று நசுக்கப்படுவது குறித்து கவலைப்படாது.போர் அற்ற சூழலை உருவாக்க, பயங்கரவாதமென்கிற அளவு கோலால் விடுதலைப் போராட்டத்தை அழித்தார்கள்.ஆனால் இன்று தமக்குள் மோதியவாறு, ஆதிக்கப் போட்டியில் குதித்துள்ளார்கள்.

இலங்கையில் சாந்தியும், சமாதானம் நிலைபெற வேண்டுமென்பதற்காக ஸ்ரீலங்கா அரசிற்கு இராணுவ உதவி புரிந்ததாகக் கூறுபவர்கள், ஆயுதப் போராட்டம் முடிவடைந்த பின்னரும், ஆயுதங்களை வழங்குவது எதற்காக என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

இப்புத்தாண்டில், பலமாற்றங்கள், ஆசியப் பிராந்தியத்தில் நிகழும் சாத்தியப்பாடுகள் தென்படுகின்றன.

ஆப்கானிஸ்தானில் ஏற்படும் ஸ்திரமற்ற தன்மை, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் புதிய அணிகளை உருவாக்கலாம்.அத்தோடு கொரிய வளைகுடாவில் உருவாகும் முறுகல் நிலை, சீனாவின் இறுக்கமான போக்கினை அதிகரிக்கச் செய்யும்.

சீன வட கொரிய உறவு ஜப்பானிற்கு அச்சுறுத்தலாக அமைவது போன்று, சீன பாகிஸ்தான் இணைவு இந்தியாவிற்கு ஆபத்தாக இருக்குமென்று ஜப்பானிய அறிவுஜீவிகள் எச்சரிக்கின்றனர்.அத்தோடு தனது இறுக்கமான அமெரிக்க உறவுச் சமன்பாட்டில், இந்தியாவும் இணைய வேண்டுமென்பதே ஜப்பானின் எதிர்பார்ப்பாகவிருக்கிறது.

வட கொரியாவிற்கெதிராக கிழக்குச் சீனக் கடலில் தென் கொரியா மற்றும் அமெரிக்கா வோடு அணி சேர்ந்துள்ள ஜப்பான், இந்தியாவையும் அந்த அணிக்குள் இணைப்பதனூடாக ஆசியாவில் சீனாவிற்கெதிரான வலுவான முகாம் ஒன்றினை அமைக்க முயல்வதைக் காணலாம்.

ஆனால் இந்தியாவின் தெரிவோ, ரஷ்யாவை உள்வாங்கிய அணியொன்றினை நோக்கிய நகர்வாக அமைகிறது.தன்னைத் தவிர்த்து, அணுமின் உலைகளை அமைக்கும் திட்டத்தை, இந்து சமுத்திர பிராந்திய இந்தியா கருதுவதாக அந்நாட்டின் தினசரி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் ஏற்கனவே ரஷ்யாவும் பங்களாதேஷûம், 3 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இரண்டு அணு உலைகளை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தில் கடந்த வருடம் மே மாதம் கைச்சாத்திட்ட விவகாரத்தை கவனிக்க வேண்டும்.

ஆகவே தன்னைச் சுற்றிவர உள்ள நாடுகளில் சீனாவின் பொருண்மிய ஆக்கிரமிப்பினைத் தடுப்பதற்கு ரஷ்யாவுடன் இணைந்து செல்ல இந்தியா முயல்வதை இனிவரும் நாட்களில் காணக்கூடியதாகவிருக்கும்.

இந்தியா ரஷ்யாவின் கூட்டு நகர்வுகள், ஸ்ரீலங்கா அரசின் சீன சார்பு நிலைப்பாட்டில் பல சிக்கல்களை நிச்சயம் உருவாக்குமென எதிர்பார்க்கலாம்.

நன்றி – வீரகேசரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.