Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு சென்னைப் பல்கலை முழுமையாக உதவும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு சென்னைப் பல்கலை முழுமையாக உதவும்

[06 ஜனவரி 2011, வியாழக்கிழமை 8:15 மு.ப இலங்கை]

துணைவேந்தர் திருவாசகம் உறுதி

சென்னை, ஜன. 6

யாழ்ப்பாண மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உதவ சென்னைப்பல்கலைக்கழகம் தயாராக உள்ளது என்று தெரிவித் துள்ளார் அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்.

"எதிர்காலத்தில் சென்னைப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏறபடுத்திக்கொள்ளவும் விரும்புகின்றது. இதற்கான ஏற்பாடுகள் விரைவில் மேற்கொள்ளப்படும். யுத்தச் சூழலில் வாழ்ந்து கொண் டிருக்கின்ற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஒத்துழைப்பதற்கு நாம் எப்போதும் தயாராகவே உள்ளோம்' என்றார் துணைவேந்தர் பேராசிரியர் திருவாசகம்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் 36 மாணவர்கள் புத்தாக்கப் பயிற்சிக்காக சென்னைக்குச் சென்றுள்ளனர். விசேடமாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இரண்டு வார கால இந்தப் பயிற்சியை நேற்றுக் காலை பேராசிரியர் திருவாசகம் ஆரம்பித்து வைத்தார்.நிகழ்வில் உரையாற்றிய அவா மேலும் தெரிவிக்கையில், "போரினால் பொருளாதாரமும் கல்வி, பண்பாடும் சிதைக்கப் பட்டதான சூழலில் வாழ்கின்ற தமிழர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதன் மூலம் இழந்தவற்றை மீளப் பெறமுடியும். சிதைந்துபோன கல்வியையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும். தமிழ் மாணவர்களின் கல்வியை மேம்படுத்து வதற்கு உதவநாம் தயாராக உள்ளோம். மனிதன் தலை நிமிர்ந்து நிற்பதற்கு கல்வியே சிறந்த ஆயுதமாகும்' என்றார் துணைவேந்தர்.

இலங்கை தமிழ் மாணவர்கள் கற்பதற்கு ஏதுவாகச் சென்னைப் பல்கலைக்கழகக் கதவுகள் திறந்தே இருக்கும் என்றும் குறிப்பிட்ட அவர், "அண்மையில் சென்னைப் பல்கலைக்கழகம் முக்கியமான ஒரு முடிவை எடுத்துள்ளது. இலங்கை தமிழ் மாணவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கல்விகற்பதாக இருந்தால் அவர்கள் இந்திய மாணவர்கள் செலுத்தும் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். வெளிநாட்டு மாணவர்களாக அவர்கள் இனிவரும் காலங்களில் கருதப்படமாட்டார்கள் சென்னைப் பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர்களிடம் இருந்து இந்திய மாணவர்களுக்கான கட்டணத்தை விடப் பலமடங்கு கட்டணத்தை அறவிடுகின்றது' என்று தெரிவித்தார்.

எதிர்காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இதழியல்துறையின் வளர்ச்சிக்குச் சென்னைப் பல்கலைக்கழகம் அனைத்து வகைகளிலும் உதவிசெய்யும் என்றும் துணை வேந்தர் உறுதி அளித்தார். இந்த நிகழ்வில் சென்னைப் பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பாடல்துறைத் தலைவர் பேராசிரியர் ரவீந்திரன் தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் வி.அரசு, யாழ்.பல்கலைக்கழக ஊடகவளங்கள் பயிற்சிமைய இணைப்பாளர் தே.தேவானந்த் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

முதல் இரண்டு நாள் பயிற்சியில் குமுதம்பத்திரிகை, ஆறாந்திணை, என்.டி ரி.வி,ஸி ரி.வி,அகில இந்திய வானொலி, பொதிகை தொலைக்காட்சி, இந்தியா ருடே ஆகிய ஊடக நிறு வனங்கள் சார்ந்த பல மூத்த பத்திரிகையாளர்கள் பயிற்சிகை வழங்குகிறார்கள். இவர்களோடு இந்திய மத்திய அரசெய்தித்துறை உயர்அதிகாரி சண்முகம், மூத்த பத்திரிகையாளர் ஞானி, அமெரிக்காவின் லொயோலா பல்கலைக்கழக பேராசிரியை ஆர்டிமிஸ் ஆகியோரும் மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்கஉள்ளனர்.

uthayan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.