Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்ன செய்யலாம் இதற்காக?” நூல்

Featured Replies

09012011002a-512x1024.jpg

நூலில் அடங்கியவை

1. ஈழ இனப்படுகொலை துயரங்களை காட்டும் 371 புகைப்படங்கள்.

2. 4 முக்கிய அட்டவணைகள்

(i) ஈழத்தமிழ் இனப்படுகொலைகள்ள் 1956 -2009 .

(ii) தோல்வி அடைந்த ஓப்பந்தங்களும் , பேச்சு வார்த்தைகளும்,

(iii) ஈழத்தமிழரின் அறவழிப் போராட்டங்கள்.

(iv) இலங்கைத்தீவில் தமிழரின் பூர்வீகம்.

3. ஈழம் குறித்து உலகப்பிரமுகர்களின் முக்கிய கருத்துக்கள்.

4.நீதி கேட்கும் 80 மனித நேய கூற்றுக்கள்

5. மனித உரிமை போராளிகளின் அணிந்துரைகள்

(i).V.R.கிருஷ்ணய்யர்,

முன்னாள் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி.

(ii). டாக்டர். எலன் சாண்டர் ,

மனித நேய மருத்துவர் அமெரிக்கா.

(iii) விராஜ் மென்டிஸ்,

தலைவர், சரவதேச மனித உரிமைகள் கழகம் ஜெர்மனி,

(iv) சிறிதுங்க ஜெயசூர்யா,

பொதுச் செயலாளர் ஐக்கிய சோசலிசக் கட்சி இலங்கை.

6. மொத்தம் 216 பக்கங்கள்.

7. 12 " * 8 .5 அளவுகளில்,

தமிழ்,ஆங்கிலம்,பிரெஞ்சு மொழிகளில்

வாங்க http://srilankagenocidealbum.com

ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம் “என்ன செய்யலாம் இதற்காக?” நூல் வெளியீட்டு நிகழ்வு வரும் ஞாயிறு 09.01.2011 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. பல தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்கிறார்கள். எழுத்தாளர் செயப்பிரகாசம், தமிழருவி மணியன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பாமக சட்ட மன்ற உறுப்பினர் வேல் முருகன், நிமல்கா பெர்ணான்டோ மற்றும் பலர் கலந்துகொள்கின்றனர். இந்நிகழ்வினை உலகத்தமிழர்கள் காணும் வண்ணம் நமது நாம் தமிழர் இணையதள வலைதிரை பக்கத்தில் (http://www.naamtamilar.org/valaithirai) நேரலை செய்யப்படும்.

  • தொடங்கியவர்

இவ் தளத்தில் புத்தகம் வாங்க முடியவில்லை, உங்களுக்கும் அவ்வாறு இருந்தால் அறியத்தரவும், தள வடிவமைப்பாளருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்

  • தொடங்கியவர்

இந் நூலைப் பெற்றுக் கொள்ள விரும்புகின்றவர்கள் நூல் வெளியீட்டுக் குழுவின் கீழ் வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம். 00 91 94864 86321, 00 91 90038 27608

ஈழப் படுகொலைக்காக நான் செய்யப்போவது - நடிகர் நாசர்

நான் இங்கு பேசுவதற்காக அழைக்கப்பட்டு பேசவரவில்லை. இந்தப் புத்தகம் என் நண்பர் ஒருவரின் மூலம் கிடைத்தது. இந்தப் புத்தகத்தை நான் பார்த்துக்கொண்டிருக்கும் போது என் மகன்களும் பார்க்க நேர்ந்தது. மூத்தவனுக்கு 21 வயது. அவன் இலங்கைப் பிரச்சனை குறித்து ஓரளவு அறிவான். இரண்டாவது மகனுக்கு இதைப்பற்றி தெரியாது. மூன்றாவது மகன் 7ஆம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கு இதைப்பற்றி அறியும் பக்குவமான வயதுகூட இல்லை. இவர்கள் இந்தப் படங்களை எல்லாம் பார்த்துவிட்டு இரவில் சாப்பிடவில்லை. இதுபற்றி இரவு 2 மணி வரை பேசிக்கொண்டிருந்தோம். அப்போது 7வது படிக்கும் எனது மூன்றாவது பையன், இந்த புத்தகத்தின் தலைப்பையே என்னிடம் கேள்வியாக கேட்டான். இதற்காக நான் என்ன செய்ய முடியும்?. அப்படிக் கேட்டவனுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. பெரியவர்களான நாமே இதற்காக ஒன்றும் செய்யவில்லையே!

நான் தமிழனாக அல்ல. இந்தியனாகவும் அல்ல. ஒரு மனித நேயமுள்ளவனாக, ஈழத்தமிழனின் படுகொலைக்கு நான் செய்யப்போவது ஒன்றே ஒன்றுதான். இந்தப் புத்தகத்தை தமிழர்களிடம் கூட காட்டி இதைப் பற்றி விளக்கப்போவதும் இல்லை. நான் எனது தொழில் நிமித்தமாக ஆந்திரா, கேரளா, கர்நாடக மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் போது விமானப் பயணத்தின் போது என்னுடன் கூடவே இந்தப் புத்தகத்தையும் எடுத்துச் செல்வேன்.

அப்போது, நான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் இது பற்றி பேசப் போகிறேன். நான் சந்திக்கும் மொழியறியாத பல்வேறு நாட்டு மக்களிடம் ராஜபட்சேவின் போர்க்குற்றம் பற்றி விளக்கப்போகிறேன். அப்படிப்பட்ட வேற்று நாட்டு மக்களும் ஈழத் தமிழனின் அவலநிலையை அறியச்செய்யப் முயற்கிக்கப் போகிறேன். இதுதான் ஈழத்திற்காக நான் செய்யப்போகும் ஒரு சிறு பணியாக நினைக்கிறேன். இது என் கடமை.

தனி ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் - சீமான்

இந்த நூலில், இவர்களுக்கு கிடைத்த 2000 நிழற்படங்களில் 371 படங்கள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன. அதுவும் நம்மால் ஓரளவு சகித்துப் பார்க்கக்கூடிய படங்களாகவே உள்ளன. இவற்றை பார்க்கும் போதே நமது மனம் பதைபதைக்கிறது. இவற்றைவிட கொடூரமான படங்கள் நிறைய உள்ளன. அவற்றை எல்லாம் பார்த்தால் உண்மையில் நம் மனநிலை பாதிக்கப்பட்டுவிடும். ஆனால், அதையெல்லாம் 60 வருடங்களாக எம் ஈழத்தமிழன் கண்ணெதிரே கண்டுகொண்டு வாழ்கிறார்கள். அப்படிப்பட்ட கடல் அளவு துயரினில் இந்த உலகம் அறிந்திட ஒரு துளியளவே இந்நூலில் தரப்பட்டுள்ளது. இன்னும் ஆவணப்படுத்தப்படாத, ஆவணப்படுத்த முடியாத எத்தனையோ அவலங்கள் உள்ளன.

பாலூட்டும் போது ஒரு தாய் குண்டு பாய்ந்து இறந்துவிடுகிறாள். இறந்துவிட்ட தாயின் மார்பில் பால்குடித்தபடி இருக்கிறது அந்தக் குழந்தை. இதை எப்படி ஆவணப்படுத்துவது. பெற்றவர்கள் கண்முன்பாகவே மகள், சிங்கள ராணுவத்தினரால் மானபங்கப்படுத்தப்படுவதை எப்படி ஆவணப்படுத்துவது.

ஒருமுறை அங்குள்ள பள்ளிச் சிறுவர்கள் என்னிடம் கூறினார்கள்... அண்ணா, நாங்கள் பெரும்பாலும் பதுங்கு குழிகளுக்குள்தான் பதுங்கி வாழ்வோம். அப்போது நாங்கள் அமர்ந்திருப்பதற்கே இடமிருக்காது. அப்படி இருக்கையில் எப்படி உணவு சமைப்பது. அப்படி உணவு சமைப்பதற்காக பதுங்குக் குழிகளின் மேட்டில் உலைவைப்போம். விறகுத் தீ பற்றி எரிகிறதா?, தண்ணீர் கொதித்துவிட்டதா?, அரிசி வெந்துவிட்டது என்று தலைதூக்கி எட்டி எட்டிப் பார்க்கும் ஒவ்வொரு நிமிடங்களிலும் மனித உடல்கள் கைவேறு, கால்வேறாக சிதறுவதைதான் பார்க்க முடியும் என்று அவர்கள் கண்ணீருடன் கூறினார்கள். அவற்றை எல்லாம் எப்படி ஆவணப்படுத்துவது.

இப்படி தம் மக்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள் என்பதைக்கூட கூப்பிடும் தூரத்தில் இங்கு இருக்கும் தமிழன் அறிய வழியில்லை. இலங்கையில் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை. அப்படி ஒரு சூழலிலும் துணிந்து எடுக்கப்பட்ட காணொளிக் காட்சிகள் அடங்கிய குறுந்தகடுகளை எம் சகோதரர்கள் கொண்டுவந்து தந்தால், அதனை ஒளிபரப்ப இங்கிருக்கும் ஊடகங்களும், பத்திரிகைகளும் முன்வரவில்லை. இது ஊடக பயங்கரவாதம் இல்லையா?

குண்டுவைத்தால் தேசிய பாதுகாப்புச்சட்டம் போடுவது நியாயம். ஆனால் குறுந்தகடு வைத்திருந்தவர்கள் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டதே.

அமைதியாக போராடிய தமிழர்கள் மீது, இலங்கை அரசு ஆயுதம் ஏந்தி தாக்கியது. தம் மக்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டு பொறுக்கமுடியாமல், ஆயுதத்தால் தாக்குபவர்களுக்கு ஆயுதத்தால்தான் பதில் சொல்ல வேண்டும் என்று நினைத்து பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார். பிரபாகரன் ஆயுதம் ஏந்தியது பயங்கரவாதம் என்றால், அந்தப் பயங்கரவாதம் தோன்றக் காரணமாக இருந்த ராஜபட்சேவின் இலங்கை அரசு பயங்கரவாதத்தின் தாய்.

புலிகள் பயங்கரவாதிகள், அதனால்தான் அவர்கள் கொல்லப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால், இந்தப் போரில், பச்சிளம் குழந்தைகள் கூட கொடூரமாக கொல்லப்பட்டனரே. அதற்கு என்ன பதில் கூறப்போகிறீர்கள்.

ஐ.நா சபையே ராஜபட்சேவை போர்க்குற்றவாளி என்கிறது. ஆனால் இந்தியா தங்கள் நண்பன் என்கிறது. காமன் வெல்த் விளையாட்டுக்கு விருந்தினராக அழைத்து, ரத்தினக் கம்பளம் விரிக்கிறது. அது ரத்தினக் கம்பளம் அல்ல. அங்கே படுகொலை செய்யப்பட்ட நம் தமிழனின் ‘ரத்தக் கம்பளம்’. 20 மைல்கல் தூரத்தில் இருக்கும் தம் இனம் கொல்லப்பட்டதற்கு, இந்தத் தமிழக திமுக அரசு ராஜபட்சேவிற்கு எதிராக ஒரு அறிக்கைகூட விடவில்லை.

ஈழத்தமிழன் கொல்லப்பட்டதிற்கு நாம் என்ன செய்யலாம்?. நாம் என்ன செய்ய முடியும். உள்ளத்தில் பற்றி எரியும் தீயை, முத்துக்குமாரன் போல் உடலில் ஏற்றி நம்மை சாம்பலாக்கிக்கொள்ளதான் முடியும். இதற்காக குரல் கொடுக்க வேண்டியவர்கள் தமிழக ஆட்சியில் இருக்கும் கலைஞரும், ஜெயலலிதாவும்தான். ஆனால் அவர்களும் அந்த நேரத்தில் குரல் கொடுக்கவில்லை.

இலங்கையில் புலிகளை ஒடுக்குவதற்காகத்தான் ஆயுத உதவி, போருக்கு பிறகு இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பான, அமைதியான வாழ்க்கையை இலங்கை அரசு அமைத்து தர வழிவகைச் செய்வோம் என்று இந்திய அரசு கூறியதே. ஆனால், நடந்தது என்ன? இப்போதும் நடப்பது என்ன?.

போரில் புலிகள் அல்லாத லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்களே. பெண்களும் குழந்தைகளுமாய் ஏராளமானோர் கொத்துக் குண்டுகளுக்கு பலியானார்களே. போர் முடிந்தும் ஆயிரக் கணக்கானோர் முள்வேலி முகாமிற்குள் இன்றும் வாழ்கிறார்களே. அவர்களுக்கு இலங்கை அரசும் ஏதும் செய்யவில்லை. இந்திய அரசும் ஒன்றும் செய்யவில்லை.

மறு குடியேற்றத்திற்கான வீடுகள் கட்ட இந்தியா கோடிக்கணக்கில் பணம் அனுப்பியதாக குறிப்பிடுகிறது. ஆனால் அந்தப் பணம் சிங்கள ராணுவத்தினர்களுக்கு பயிற்சி முகாம்கள் அமைக்கவும், ராணுவ குடும்பத்தினர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கவும்தான் பயன்படுகிறது. ஆனால், போரில் பாதிக்கப்பட்ட எம் தமிழ் மக்கள் இன்னும் முள்வேலி முகாமிற்குள்தான் வதைபடுகிறார்கள்.

இந்தவேளையில், இந்திய அரசையும், இலங்கை அரசையும், தமிழக அரசையும் ஒன்று கேட்கிறோம். தனி ஈழம் ஒன்றுதான் எங்கள் மக்களுக்கு அமைதியையும் பாதுகாப்பையும் தரும். அதற்கு நாங்கள் இனி யுத்தம் செய்யப்போவதில்லை. இனியும் ரத்தம் சிந்த விரும்பவில்லை. அவையெல்லாம் தேவைக்கு அதிகமாக ஏற்கனவே அளிக்கபட்டுவிட்டது. இப்போது நாங்கள் கோட்பது ஜனநாயக முறையில் இலங்கையில் ஓட்டெடுப்பு நடத்துங்கள் என்பதே.

அப்போது தனி ஈழம்தான் வேண்டும் என்று எம் தமிழ் மக்கள் கேட்பார்கள். அப்படி அவர்கள் கேட்கும் பட்சத்தில் பேசாமல் தனி ஈழம் கொடுத்துவிடுங்கள். இல்லை, சிங்களவர்களுடன் இணைந்து ஒரே இலங்கை தேசமாக வாழ எம் தமிழர்கள் விரும்புவார்களேயானால் நாங்கள் பேசாமல் வாய்மூடி இருந்துவிடுகிறோம். நாங்கள் உங்களை கேட்பது இதுதான், போரினால் பெரும் இழப்பை சந்தித்துவிட்ட எம் தமிழ் சகோதர சகோதரிகள் அமைதியுடன் வாழ ஜனநாயக முறையில் பொது வாக்கெடுப்பு நடத்துங்கள். எம் தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் இதைத்தான் விரும்புவார்கள்.

ராஜபட்சேவை லண்டனில் விரட்டியடித்தார்கள் அங்கு அகதிகளாக குடியேறிய நம் தமிழ்ச் சகோதர சகோதரிகள். அதேபோல், நடக்கவிருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை கிரிக்கெட் அணி ஆடுவதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது. இலங்கை அணியை ஆடவிடாமல் ஆறரைக்கோடி தமிழர்களும் ஒன்றிணைந்து விரட்டியடிக்க வேண்டும். நம் இனப் படுகொலைக்கு நாம் இதுவரை என்ன செய்துவிட்டோம்?. இதையாவது செய்ய நாம் ஒன்று படுவோம். இலங்கை கிரிக்கெட் அணியை உலககோப்பையில் ஆடவிடாமல் விரட்டியடிப்போம்.

“கண்ணீரோடு விதைப்பவர்கள், கௌரவத்தோடு அறுவடை செய்வார்கள்” என்று பைபிளில் வாசகம் ஒன்று உள்ளது. நாம் கண்ணீர் மட்டுமல்ல ரத்தமும் சிந்தி விதைத்திருக்கிறோம். நிச்சயம் கௌரவத்தோடு அறுவடை செய்வோம். தனி ஈழத் தமிழ் நாட்டை வென்றெடுப்போம்.

http://ilakkiyam.nakkheeran.in/Grammar.aspx?GRM=112

சென்னை தியாகராயர் நகர் தெய்வநாயகம் பள்ளியில் கடந்த 9-1-2011ம் தேதி நடைபெற்ற ஈழ இனப்படுகொலை புகைப்பட ஆவணம் "என்ன செய்யலாம் இதற்காக?" வெளியீட்டு நிகழ்வில் தமிழருவி மணியன் ஆற்றிய உரையின் காணொளி.

http://www.youtube.com/watch?v=4j52PAGoQ8I&feature=player_embedded#!

  • 2 weeks later...

வழக்கமான சினிமா நடிகர்களைப் போல இல்லை நாசர்.வெள்ளித் திரைக்கு முன்னால் கிடைக்கும் நட்சத்திர அந்தஸ்தை தன் அன்றாட வாழ்க்கையோடு முடிச்சுப்போட்டு பார்க்க விரும்பாத எளிய மனிதர்.

‘என்ன செய்யப் போகிறோம், இதற்காக?’ ஈழப் போராட்ட நூல் வெளியீட்டு விழாவுக்கு எந்த அழைப்புமே இல்லாமல் தானே வந்து மேடையின் முன்னே ஏறி நின்றார்.அந்த நியாயம் அவரை சுட்டு இருக்கிறது. அவரோடு பேசினோம்.’

‘‘நண்பர்கள் மூலம் தான் இந்தப் புத்தகம் என் கைக்கு வந்து சேர்ந்தது. பல நாட்கள் வேலையில்,புரட்டாமல் மேஜையிலேயே வைத்திருந்தேன். ஒருநாள் இரவு உட்கார்ந்து திறந்து பார்த்தபோது பக்கத்தில் என் மகன்கள் இருந்தார்கள்.அவர்களின் கண்ணில் பட்டுவிடக் கூடாதே என்று மறைத்தேன்.

பிஞ்சுப் பிள்ளைகள் ரத்தமும் சதையுமாக சாகக் கிடக்கும் காட்சியை எப்படி என் குழந்தைகளிடம் காட்டுவது? உயிரோடு செத்துக் கொண்டிருக்கும் சக மனிதனின் துயரத்தை எப்படி அவர்களுக்கு சின்ன வயதிலேயே பழக்குவது? என்ற பயம் நெஞ்சுக்குள் பதைத்தது. ராத்திரி நேரத்தில் தனியாக உட்கார்ந்துகொண்டு நான் கண் கலங்குவதை என் மகன்கள் பார்த்தார்கள்.உடனே ‘‘என்னப்பா அது?ஏன் ஒரு மாதிரி இருக்கிறீங்க?’’ என்றார்கள். நான் அப்போதும் மௌனம் பழகினேன்.

என் கையில் இருந்த புத்தகம் என் பெரிய மகனின் கைக்கு மாறியது. அதில் உள்ள ஈழத் தமிழர்களின் படுகொலைக் காட்சியைப் பார்த்துவிட்டு அவன் பதறிப் போனான். ‘‘என்னப்பா? இதுக்காக நாம என்ன செய்யப் போறோம்?’’ என்றான். என்னிடம் பதில் இல்லை?! இப்படி ஒரு துயரத்தைக் கண்டும் காணாமல் நாம் வாய்மூடி மௌனமாய் இருக்கிறோமே?நமக்கு மனசாட்சி இல்லையா? என்று என்னை நானே கேட்டுக் கொண்டிருந்தேன்.’’

அழைப்பிதழில் உங்கள் பெயரே இல்லை.ஆனாலும் மேடையில் ஒருவனாய் நின்றீர்களே?

‘‘யூதர்கள் பிரச்னையைப் பேச நான் யூதனாக இருக்கத் தேவையில்லை. பாலஸ்தீனியர் களின் பிரச்னையை ஒரு பாலஸ்தீனியர்தான் பேசவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ஈழத் தமிழனின் கொடுமையைத் தமிழன்தான் பேசவேண்டும் என்று நினைப்பதுகூட தவறுதான். இது ஒரு மனிதப் படுகொலை.இதை எதிர்த்துப் பேச நான் மனிதனாக இருந்தால் போதும்.

இங்குள்ள மக்களுக்கு இது பெரிய விஷயமாகவே படவில்லை.பெரிய விவாதப் பேச்சாக ஈழப்பிரச்னை தமிழக மக்களிடம் மாறவில்லை.இது வேதனைக்குரிய விஷயம் இல்லையா?சக உறவு செத்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டு கைப்பாவையாய் நாம் இருக்கிறோமே?இந்தப் போக்கிற்கு உள்ளூர் அரசியல்வாதிதான் காரணம் என்கிறேன்!’’

இவ்வளவு பெரிய கொடுமையைப் பார்த்துக்கொண்டு மக்கள் மௌனமாக இருப்பதற்கு என்ன காரணமாக இருக்கும்?

‘‘இங்குள்ள தமிழன் தன்னுடைய உரிமையைக் கேட்டுப் பெறவே தைரியம் இல்லாமல் இருக்கிறான். தனக்கு எந்த உரிமைகள் வேண்டும் என்று ஒரு பட்டியல் போடக்கூட விரும்பாதவன்தான் இந்தியத் தமிழன். இந்தப் பிரச்னையை மீடியா பெரிய அளவில் கொண்டு சேர்க்காததும் ஒரு காரணம். ஊடகங்களின் இருட்டடிப்பு பெரிய சதியாகப் படுகிறது எனக்கு.’’

சீமான் போன்ற உங்களின் சக துறை ஆட்கள் இதில் விசேஷ கவனம் செலுத்துகிறார்கள். அவர்களோடு சேர்ந்து நிற்பீர்களா?

‘‘நெல்லிக்காய் மூட்டை இல்லை மக்கள். எல்லோரையும் ஒரு இடத்தில் கொண்டு வந்து குவிப்பதற்கு.இந்தப் பிரச்னை ஏன் மீண்டும் மீண்டும் அரசியல் ஆக்கப்படுகிறது? அரசியல் கலப்பில்லாமல் பேச நம்மால் முடியாதா? எந்த சாயலும் இல்லாமல் மக்களின் பிரச்னையைப் பேச பெரியாரால் முடிந்தது இல்லையா? காந்தி கூட அரசியல் ரீதியாகப் போராடினார். ஆனால் அரசியல் கட்சியாக காங்கிரஸ் நீடிப்பதை அவர் எதிர்த்தார்.

சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரசை கலைக்கச் சொன்னார். ஓட்டு மாற்றப்படுவதை நாம் விரும்பவில்லை. இயக்கங்கள் மீது எனக்கு மரியாதை உண்டு. மக்களை கட்டாயப்படுத்தி ஒன்று சேர்த்துக் காட்டுவதில் ஒரு பயனுமில்லை. மனதளவில் ஒரு எதிர்ப்பை வலுவாக கட்டமைக்கவேண்டும்.

சினிமா நடிகர்,நடிகைகள் எல்லோரும் ராமேஸ்-வரத்தில் கூடினார்கள்.காவேரிப் பிரச்னைக்காக கூட கூடினோம். அதுக்கப்புறம் என்ன? அமைதிதான். இவ்வாறு கூடி தொழில்துறை சார்ந்த பலத்தைக் காட்டலாம். அது எதற்குப் புண்ணியம்? தனிநபர் விவாதமாக இந்தப் போராட்டம் மாறவேண்டும். எல்லாவற்றிற்கும் அடையாள ரீதியாக ஆதரவைக் காட்டுவதோடு நின்றுவிட்டால் அதற்கு நான் என்ன பதில் சொல்லமுடியும்?’’

மக்களை சமூகம் சார்ந்து சிந்திக்கவிடாமல் தடுப்பது சினிமாதான் என்ற எதிர்க்குரல் பலகாலமாக எழுப்பப்படுகிறது.இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?

‘‘பெரிய விவாதத்திற்குரிய விஷயம் இது. போகுற போக்கில் பதில் சொல்ல முடியாது. நீங்கள் சொல்வதைப் போல சினிமா இங்கே பவர்ஃபுல் மீடியாவாக இருக்கிறது. பிராக்டிக்கலாகவும் அரசியல் ரீதியாகவும் அதன் வீச்சு பெரிய அளவில் போய்ச் சேர்ந்திருக்கிறது உண்மைதான்.

உலகத்திலேயே ஊழலை எதிர்த்தும் அரசியலை எதிர்த்தும் நிறைய படங்கள் வெளிவந்த நாடு நம்முடைய நாடாகத்தான் இருக்கும். ஆனால் நாம் ஊழலை எதிர்த்து என்றைக்காவது போராடி இருக்கிறோமா? அரசை எதிர்த்து ஒரு சின்ன எதிர்ப்பையாவது காட்டி இருக்கிறோமா? முதலில் விழிப்புணர்வு தேவை.அந்த உணர்வு இருந்தால்தான் உங்களின் உரிமையை முதலில் கேட்கமுடியும்!’’.

நன்றி.....

http://www.thedipaar.com/cinema/cinema.php?id=6092

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.