Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீதிக்கு இறங்கவேண்டுமா??

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமீப நாட்களாக முக்கியமாகக் கனடாவிற்கு வருகை தந்த இரு கப்பல்களின் பின்னர், தமிழர் தொடர்பாகக் கனடா அரசு ஒரு எதிர்மறையான நடவடிக்கைகளையே எடுக்க முயல்கின்றது. தமிழரின் புலப்பெயர்வு தொடர்பாக சில நடவடிக்கைகளை மேற்கொள்ள எத்தனிக்கின்றது. அதற்கு கனடா அரசு மட்டும் பொறுப்பல்ல. இக்காலப்பகுதியில் சிறிலங்காவுக்குச் செல்கின்ற எம் தமிழ்மக்களாலும் தான் இவ்வித நடவடிக்கையைக் கனடா அரசு மேற்கொள்ளக் காரணமாகவும் அமைகின்றது.

பாதுகாப்பில்லாத நாடு என்று குற்றம்சாட்டிய நாட்டிற்குள், அகதிக் கோரிக்கை ஏற்கப்பட்ட பின்னர் திரும்பிப் போய் வருவதை தனக்குச் செய்ய ஏமாற்றுவேலையாகவே கனடா அரசு நோக்குகின்றது. தன்னை நாங்கள் ஏமாற்றிவிட்டதாகவே அது நினைக்கின்றது.

இதனால் மெதுமெதுவாக எம் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க அது முயல்கின்றது. அந்த அடிப்படையில் இலங்கை ஒரு பாதுகாப்பான நாடு என்று அது நிறுவ முயல்கின்றது. எனவே இலங்கை பாதுகாப்பற்ற நாடு என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுத்த பாராளுமன்று முன்பாக ஒரு கண்டண ஆர்ப்பாட்டம் செய்வது அவசியமானது.

இதனால் சில அனுகூலங்கள்:

சிறிலங்காவின் மனித உரிமை வெளிப்படுத்தப்படும்.

அகதிக் கோரிக்கை தொடர்பாகக் கனடா மேற்கொள்ளும் நடடிக்கைகளுக்கு எம் ஆட்சேபனையைத் தெரியப்படுத்துதல்.

ஒற்றுமையான ஆர்பாட்டம் மூலம், அடுத்த தேர்தலில் தமிழ் மக்களின் தேவையை அரசியல்வாதிகளுக்கு இனம் காட்டுதல்

போன்ற செயல்களுக்கு உதவக்கூடும்.

மற்றவன் அசைலம் அடிக்கிறதைப்பற்றி நாங்கள் சிந்திக்கமாட்டோம்.....நாங்கள் அசைலம் அடிச்சுப்போட்டு திருப்பி சிறிலங்காவுக்கு போய் கலர் காட்டுவதைத்தான் அதிகம்பேர் விரும்புகிறார்கள்...

கனடா அரசு புது சட்டம் கொண்டு வரவேண்டும் ...கனடாவில் பிரஜாவுரிமை கிடைத்தபின்பு 20 வருடத்திற்கு சிறிலன்காவுக்கு போக ஏலாது..இதற்கு உடன்பட்டால் பிரஜாவுரிமை இல்லை என்றால் நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டியதுதான்... :o

எல்லா இடங்களிலும் நடக்கும் சம்பவம் இதுதான். இது பற்றிக் கதைக்க வெளிக்கிட்டால், அகதி அந்தஸ்துக் கோருவதும், அது கிடைத்த பின்பு இலங்கைக்குப் போய் வருவதும் அவரவர் விருப்பங்களும் சுதந்திரமும் என்றாகி விட்டது.

எல்லா இடங்களிலும் நடக்கும் சம்பவம் இதுதான். இது பற்றிக் கதைக்க வெளிக்கிட்டால், அகதி அந்தஸ்துக் கோருவதும், அது கிடைத்த பின்பு இலங்கைக்குப் போய் வருவதும் அவரவர் விருப்பங்களும் சுதந்திரமும் என்றாகி விட்டது.

அந்தஸ்து கிடைப்பதற்க்கு புலி வேணும், சிறிலங்காபிரச்சனை வேணும் ,அந்தஸ்து கிடைச்ச பிறகு சுதந்திரம் வேணும் சிறிலங்கா செல்வதற்கு ....என்ன கொடுமையடா சாமி

  • ஏப்ரல் 21, 2009 ஆம் திகதி 40000 மேற்பட்ட தமிழ் கனேடியர்கள் உடனடி போர்நிறுத்தத்தை கோரி கொட்டும் மழை/பனியில்கனடாவின் பாராளுமன்றத்திற்கு முன்னர் நின்றார்கள்
  • - ஒரு பெருந்தெருவை மறித்து, Gardiner Expresseway, உணர்வுபூர்வமாக ஆர்ப்பாட்டம் செய்தனர்
  • - அகதிமுகாம்களில் உள்ள மக்களை விடச்சொல்லி இருநூறு நாட்களுக்கும் மேலாக டொராண்டோ கனடா அமெரிக்க துணை தூதுவராலயத்திற்கு முன்னால் இருபத்தி நாலு மணி நேரமும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இவை எல்லாம் மிக குறந்தளவு பலாபலன்களை தந்தன. ஆனால், இன்று தமிழ் மக்களின் ஒரே காப்பரணாக இருந்த விடுதலைபுலிகளின் ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னர், போராட்டம் புலம் பெயர் நாடுகளின் கைகளில் தரப்பட்ட நிலையில், சர்வதேசம் மக்களை காப்பேன் என தந்த உறுதி மொழி காற்றில் பறக்கவிடப்பட்ட நிலையில், வீதியில் இறங்குவது பலன்களை தரலாம்.

இத்துடன், நாம் புதிய வழிமுறைகளில் கூட இறங்கலாம், புதிய அணுகுமுறைகளை ஆராயலாம்

- இளையோர்களிடம் கலந்தாலோசித்தல். புதிய சமூக இணையத்தளங்களை பாவித்தல் ( Facebook /Twitter)

- வர இருக்கும் கனேடிய பொது தேர்தலில் ஒரு கட்சியில் இணைவது, அந்த கட்சியில் ஒரு தமிழர் அமைப்பாக இணைவது ( உதாரணத்திற்கு Tamils Conservatives of Canada )

- கட்சிகளுக்கு ஆதரவாக நிதி சேர்ப்பது, அதன் மூலம் கட்சிகளில் நம்பிக்கையனவர்களை கட்சிகளின் தலைமைகளை அணுக வைத்தல்

- மக்களால் தெரிவுசெய்யப்பட்ட கனேடிய அமைப்புக்கள் உடாக ( உதாரணத்திற்கு கனேடிய தமிழர் பேரவை ) செயல்பாடுகளை முன்னெடுத்தல்

Edited by akootha

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளைத் தடை செய்தபோது, நாங்கள் பயந்து ஒழிந்து கொண்டிருந்தமையால், அதனால் பல பாதிப்புக்களை நாங்கள் சந்தித்திருந்தோம். அன்று அதற்கான எதிர்ப்பினை நாங்கள் காட்டியிருந்தால், அரசு மனதில் சில சிந்தனைகளை உள்வாங்கியிருக்கும். எம் அமைதி, அதை ஆதரிப்பது போல ஆகியிருந்தது. எனவே இன்றைய சூழ்நிலையில் சிறிலங்கா பாதுகாப்பான நாடு என அங்கிகரிக்கவிடுவது என்பது, முன்பு புலிகள் இருந்தமையால் தான் பாதுகாப்பற்ற நாடு என்ற Nதூற்றப்பாட்டையும் வேற்றினத்தவர் மனதில் ஏற்படுத்த ஏதுவாகின்றது. இதை அமைதியாக இருந்து அங்கிகரிக்க வேண்டுமா?

சிறிலங்கா அரசின் மனித உரிமைகள் பற்றியும், சகோதரி இசைப்பிரியா தொடர்பான காணோளியும் வைத்து, ஏதோ செய்வோம், வெட்டுவோம் என்று எல்லாம் உணர்ச்சிகரமான ஆக்கங்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள். ஒரு மாதம் கழிந்தநிலையில் அதைப் பற்றிய உருப்படியான ஒரு செயலும் தொடர்வது போலத் தோன்றவில்லை. அல்லது அந்த சிந்தனையை மாற்றுவதற்கோ என்னவோ, நந்தகோபன், நெடியவன் பிரச்சனை என்று புதிததாக கட்டுரைகள் கொண்டுவரப்பட்டு, மற்றய பிரச்சனைகள் பின்னடிக்கப்படுகின்றன.

ஒரு விடுதலப்போராட்டம் தொடர்பான பாதையில் தீர்க்கமான சிந்தனையில்லாமல் இப்படி அடிபட்டுக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு, ஏதாவது செய்ய தயாரா??

இச் சந்தர்ப்பங்களில் சிறிலங்கா அடக்குமுறையால் பாதிக்கப்பட்டு, உண்மையாக அகதி கோரிக்கை கோருகின்ற மக்களுக்கு ஏதாவது உதவி செய்திட வேண்டும். ஒட்டாவாவில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய முன்பு, குறைந்தது கனடா அரசுக்கு அஞ்சல் அனுப்பி வைக்கும் முயற்சியாவது செய்யலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.