Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மக்களிற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் மக்கள் உதவி

Featured Replies

கிழக்கு மக்களிற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் மக்கள் உதவி

கிழக்கில் இயற்கை அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ள மக்களிற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் அத்தியாவசியப் பொருளுதவி செய்வதற்கு யாழ் மக்கள் முன்வந்துள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தன்னெழுச்சியாக மேற்கொண்ட முயற்சியின் விளைவாக இன்று (புதன்கிழமை) அரை நாளுக்குள் ஒன்றரை மில்லியன் (15 இலட்சம்) ரூபா பெறுமதியான உடனடித் தேவைப் பொருள்கள் சேகரிக்கப்பட்டு பொதி செய்யப்பட்டுள்ளன.

கிழக்கில் தொடரும் அடை மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பல இலட்சம் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளார்கள். அவர்களின் உடனடித் தேவகைள் சிலற்றை பூர்த்தி செய்யும் முகமாக யாழ் பல்கலைக்கழக மாணர்கள் ஒருங்கிணைப்புடன் யாழ் மக்கள் நிவாரணப் பொருளு;களை சேகரித்து வருகின்றனர்.

உலர் உணவுகள், மருந்துப் பொருள்கள், உடுபுடைகைள், சிறுவர்களுக்கான உணவுகள், பால்மாக்கள் மற்றும் சுகாதார பொருள்கள் என்பனவற்றை தந்துதமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதற்கு இணங்க யாழ் மக்கள் தாமாக முன்வந்து பெருமளவு பொருள்களை தமக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள யாழ் பல்கலைக்கழக சமூகத்தினர் தொடந்தும் தாம் பொருட் சேகரிப்பில் ஈடுபட்டு வருவதாக அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே சேகரிப்பட்ட பொருள்கள் தரம் பிரிக்கப்பட்டு குடும்பங்களுக்கு ஏற்றவாறு பொதியிடப்பட்டு நாளை அல்லது நாளை மறுநாள் உரிய மக்களிடம் சென்றடைய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தாம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், இன்று காலை முதல் யாழ் நகரை அண்டிய பல்கலைச் சூழலில் நிவாரணச் சேகரிப்பில் ஈடுபட்டு பெற்றுக்கொண்ட பொருள்களை பொதியிட்டு போக்குவரத்து வசதிகளுக்காக காத்திருப்பதாக மேலும் தெரித்துள்ளனர்.

தாயகத்தில் உள்ள நல்லுள்ளம் படைத்தோரும், புலம்பெயர்ந்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ள எமது உறவுகளுக்கு உதவ முன்வருமாறும், நிர்கதியாக உள்ள கிழக்கு உறவுகளிற்கு உடனயாக உதவி செய்து, எமது உறவுப் பிணைப்பை வலுப்படுத்த விரைந்து உதவுமாறும் யாழ் பல்கலைக்கழக சமூகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Photos: http://meenakam.com/2011/01/13/18641.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.