Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸ் கைதுகளும்! உணர்த்தும் உண்மைகளும்!

Featured Replies

சுவிஸ் கைதுகளும்! உணர்த்தும் உண்மைகளும்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ் வாழ் முக்கியஸ்தர்களும், முகவர்களும் தற்பொழுது கைது செய்யப்பட்டது, தமிழீழ எதிர்ப்பாளர்களுக்கும் இலங்கை அரசுக்கும் கரும்பாக இனிக்கும் செய்தியாகும்.

தமிழீழப் பகுதியான வடகிழக்கு மாகாணம் வெள்ளத்தில் முற்று முழுதாக அமிழ்ந்து போயிருப்பது அரசின் கண்ணுக்கு படாத நிலையில், சுவிஸ் கைதுகள் மட்டும் இலங்கை அரசின் கண்களுக்கு பூதாகரமாக தெரிவது ஒன்றும் புதியதல்ல. இலங்கை அரச ஊடகங்கள் இச்செய்திகளை 'தாறுமாறாக' விமர்சனப் படுத்திக் கொண்டிருப்பதும் வழமையான விடயங்களில் ஒன்று. தமிழ்மக்கள் எங்கெல்லாம் பாதிக்கப்படுகின்றார்களோ அதையிட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கும். இலங்கை அரசின் நிலைப்பாடு எப்போதும் தமிழினத்தை 'வேற்று இனமாக' நோக்குவதிலிருந்து தமிழினம் ஒரு தனித்துவமான இனம் என்ற செய்தியை உலகுக்கு சொல்லுகிறது.

சுவிஸ் கைதையும் கூட ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழினத்துக்கு 'ஆப்பு' வைக்கும் முயற்சியாக முன்னெடுக்கும் இலங்கை அரசின் திட்டத்தை புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் சுயநலப் பிளவுகள், இலங்கை அரசுக்கு வெற்றியைத் தேடிக்கொடுக்கப் போகின்றது. வெளிதிறந்து உண்மைகளைப் பேசவேண்டிய காலங்களில், உண்மையை மறைத்ததன் வெளிப்பாடுதான் இன்று நடக்கும் இந்த நிலைக்கு காரணமாகும்.

சேகரிக்கப்பட்ட நிதித் தொகையின் விபரம், காலங்கள் விபரம், அனுப்பப்பட்ட நிதித் தொகையின் விபரம் உட்பட அனைத்து விபரங்களையும் வெளிப்படைத்தன்மையுடன் நிதி வழங்கிய மக்களுக்கு காட்சிப் படுத்தியிருக்க வேண்டும். இந்த ஒழுங்கீனத்தால் மக்கள் தவறாகவும், ஐயப்படவும் வாய்ப்புண்டு. நீண்ட காலங்களாக கணக்குச் சம்பந்தாமான விபரங்கள் வெளிவராமையின் காரணமே நிதி வழங்கிய மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி அதுவே தம்மிடமிருந்து சூறையாடப்பட்டதாக ஒரு வெஞ்சத்தை ஏற்படுத்தி, அதுவே சுவிஸ் சட்ட நடவடிக்கையின் முன் தற்பொழுது தள்ளி நிறுத்தியுள்ளது. இதுபற்றிக் காட்டிக்கொடுத்த மக்களை தமிழீழ உணர்வுக்கு எதிரானவர்கள் என்றோ, துரோகிகள் என்றோ எண்ணிவிடக்கூடாது. ஒழுங்கில்லா நடவடிக்கையே இதற்கு காரணமாகும்.

தேசியத்தலைவர் உயிரோடு உள்ளாரா இல்லையா என்ற விடயத்தை சர்ச்சையாக்கி தத்தமது அரசியல் இருப்புக்களையும், வாழ்வின் மேம்பாடுகளையும் கருத்திற்கொண்டு சுயநலன்களிற்காக உண்மைகளை மூடிபோட்டு மூடிவைத்ததனால் ஏற்பட்ட விளைவு இது என்பதை அப்பாவித் தமிழ்மக்கள் உணர இன்னும் எவ்வளவு காலம் எடுக்குமோ?

இந்த நிலையால், எந்த ஒரு அமைப்புக்குள்ளும் ஏற்படாத பிளவுகள் விடுதலைப் புலிகளுக்குள் ஏற்பட்டு சின்னாபின்னமாகியுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் ஒருவரை ஐயத்துடன் நோக்கும் நிலை உருவாகியுள்ளது என்பது எவ்வளவு வெட்கக்கேடான விடயம். தவிரவும், தலைவர் இல்லை என்பது உண்மையாக இருந்தால் அது கசப்பான செய்தியாக இருந்தாலும் பொறுப்புக்கூறக்கூடிய உரிமை கொண்டவர்களால் அதை வெளித்திறந்து துணிந்து கூறியிருக்க வேண்டும். தமிழ்மக்கள் விரும்புவார்கள் அல்லது மகிழ்ச்சிப்படுவார்கள் என்பதற்காக யதார்த்தத்தை மீறிய பொய்யை கூறியதால் இன்று இந்தக் கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

முள்ளி வாய்க்கால் அனர்த்தத்திற்காக திரண்டெழுந்ததும், ஆகுதியாக்கியதுமான இந்தியத் தமிழ்நாட்டு மக்கள் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் சிங்கள இனவெறி இராணுவத்தால் கொல்லப்பட்டாரென்ற செய்தி தெரியவந்திருக்குமேயானால் அவர்மேல் உயிரையே வைத்திருக்கும் அந்தத் தமிழ்மக்கள் மேலும் நிலைமையை மோசமடைய வைத்து அதியுச்ச வன்முறை போராட்டங்களினூடாக உலக நாடுகளின் கவனத்தை ஈழத்தமிழர்கள் சார்பாகவும், ஈழ விடுதலையை நோக்கியும் திருப்பியிருப்பார்கள். மேலும், இலங்கை இந்தியாவுக்கெதிரான நிலையை சர்வதேச சமூகம் எடுத்திருக்கும்.

தேசியத்தலைவர் பிரபாகரன் வீர மரணமடைந்த செய்தியை மறைத்து, அவர் உயிரோடு இருக்கிறார் என்று சொல்லிக்கொண்டிருப்பதனால் தமிழ்த் தேசியத்தின் விடிவில் ஏற்படப்போகும் நன்மையை விட, பின்னாளில் அவர் உயிரோடில்லை எனத் தெரியவரும்போது தமிழரின் சுதந்திர தாகத்தில் விழப்போகும் மரண அடி மிக மிகப் பாதகமாக அமையுமென்பது உண்மையாகும். அதுவே, தமிழ் இனம் முற்றாக அழிந்து போவதற்கும் வழிவகுத்துவிடும்.

தேசியத்தலைவரின் வீர மரணம் சம்பந்தமாக இழுபறி நடந்துகொண்டிருந்த நிலையில் முடிவை அறிவித்து விட்டு இலங்கையும் இந்தியாவும் மெளனமாகவே இருந்தது. இது ஒரு புத்திசாலித்தனமான நிலை. அதோடு தலைவர் பிரபாகரனின் இறப்பை இந்தியா உறுதி செய்வதை அதிக காலத்திற்கு இழுத்தடித்தது கூட தமிழ்நாட்டைப் பொங்கியெழ விடாமல் தவிர்க்கும் நிலையாகும். அந்தக் காலப்பகுதியிலேயே உரித்துடையவர்கள் உண்மையை வெளிப்படுத்தியிருந்தால் 'புலிகளின் தடைகள்' கூட உலக நாடுகளில் தளர்த்தப்பட வாய்ப்பிருந்திருக்கும். இப்போது கூட 'புலிகள் மீதான தடை' நீக்கப்படாமல் இருப்பதற்கு இந்த 'உண்மைகள்' வெளிக்காமல் இருப்பதே காரணம். 'புலிகளின் தடை' நீக்கப்பட்டிருந்தால் தற்போது புலிகள் சார்பாக திரட்டப்பட்ட நிதி சம்பந்தமாக எந்த சட்ட சிக்கல்களும் ஏற்பட்டிருக்காது. கைதுகளும் இடம்பெற்றிருக்காது. இது 'தனது தலையிலேயே மண் அள்ளிப்போட்ட யானையின்' நிலைக்கு ஒப்பானதாகும்.

தமிழீழ விடுதலிப்புலிகளின் அடுத்த தலைமைப்பீடமாக அமைய இருந்த அமைப்புகள் கூட தலைவர் இருக்கின்றார் என்ற நிலைப்பாட்டால் வேறு ஒரு தலைமைப் பீடத்தை தமிழ்மக்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது போய்விட்டது. தலைவரின் உண்மை வெளிப்படாமையை, வியாபாரமாகவும், அரசியலாகவும் கொண்டு வாழ்ந்தவர்கள் தங்களின் சுயநலத்தை மாத்திரம் நோக்கங்களாகக் கொண்டிருந்தார்கள். 90 ம் ஆண்டு காலப்பகுதிகளில் விடுதலைப்புலிகளின் சுவிஸ் பொறுப்பாளராகவிருந்த நடராஜா முரளீதரன் போன்றவர்கள் பணத்துடன் ஓடிமறைந்தது, நினைவூட்டலுக்குரியது.

தமிழீழ விடுதலைக்கு உண்மையான எதிராளிகள் இவர்களே. இவர்கள் ஏனையோரை 'துரோகிகளென' சுட்டிக்காட்ட முயன்றது எந்த அளவிலும் நியாயமே இல்லை.

சுவிஸ் கைதுகள் சார்பாக நோக்கின், இது எழுந்தவாரியாக நடைபெற்றதில்லை. சுவிஸ் புலனாய்வாளர்கள் பல ஆதாரங்களை திரட்டிய நிலையில் இக்கைதுகள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக பணம் வழங்கிய மக்களே இதை வெளிக்கொண்டுவந்திருப்பார்கள். இதற்கு மூல காரணம் வெளிப்படைத்தன்மை இல்லாமையே ஆகும். போராளிகள் வெளிப்படைத் தன்மையை பேணாமைக்கும், பணம் வசூலித்த முகவர்கள் பணம் வழங்கிய மக்களுக்கு வெளிப்படைத்தன்மையை பேணாமைக்கும் நிறைய வித்தியாசமுண்டு. பணம் வழங்கிய மக்களுக்கு, அவர்கள் பணம் பற்றிய உண்மைகளை நீண்ட காலங்களிற்கு கூறாவிட்டால் அது பலவிதமான சந்தேகங்களையும் உருவாக்கி இறுதியில் திருட்டில் போய் நிற்கும். இதற்கு சார்பாக இலங்கை அரசின் உளவாளிகள் தொடங்கி உள்வீட்டு உளவாளிகள் வரை ஒத்துழைத்திருப்பார்கள். இது ஒரு இயங்குநிலை தத்துவமாகும். இதற்கு இத்தனை காலமும் ஒத்துழைப்பு வழங்கிய தமிழ்மக்களை குறை கூறவோ அல்லது அவர்களிற்கு துரோகிப் பட்டம் வழங்குவதோ தவறாகும்.

மக்களின் நிலைப்பாட்டைப் பொறுத்தவரையில் உண்மைகள் வெளிக்கொணரப்படாத வரையில் இந்த நிலை தொடர்ந்துகொண்டே இருப்பதை தடுக்கமுடியாது.

தமிழரின் நிலையை மோசமாக்காமல் விடுதலைப்புலிகளிடையே உள்ள அனைத்துப் பிளவுகளையும் சரிசெய்து, புத்திசாலித்தனமாக நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையில் தற்போதைய 'பொறுப்பாளர்கள்' உள்ளார்கள். தமிழீழ விடுதலையை நோக்காகக் கொண்டு குத்துவெட்டுகளை விட்டு, விட்டுக்கொடுப்பு மனப்பான்மையோடு நடந்துகொண்டால் மட்டுமே வெற்றி காணலாம். அதாவது மாவீரர்களின் கல்லறைகள் 'வெடியோடு திறக்கவேண்டும்' என்று போலிக்கூச்சல் போடாமல், பொறுப்பாளர்கள் உண்மையென்ற 'வெடியோடு' தங்களது மனங்களைத் திறந்து அனைத்து உண்மைகளையும் மக்களுக்கு வெளிப்படையாகக் கூறவேண்டும்.

இவை சார்பான உண்மைகளை இனியும் வெளிக்கொண்டுவராவிடின் தானாகவே உடைபட்டு உண்மைகள் வெளிவருவதோடு, கூடவே 'தமிழ் எதிப்பாளர்களின்' பொய்களும் இணைந்து ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு விஷமாகும். அதுவே இலங்கை அரசுக்கு அமிர்தமுமாகும்.

நாகலிங்கம் மதியழகன்

mathiyalakan1@hotmail.com

சரி நாகலிங்கம் இப்ப என்ன சொல்ல வாறியள்?

கணக்கு காட்டினா சரியோ?

தலைவர் இல்லை என்று ஏற்கனுமா?

வெளிப்படையா சொல்லுங்கோ.

ஏன் எல்லாரும் புளுங்கிறியள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.