Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பயணத் திகதியை ஆராய்கிறது ஐ.நா.நிபுணர் குழு

Featured Replies

நல்லிணக்க ஆணைக்குழுவுடன் ஏனைய தரப்பையும் சந்திக்கும் சாத்தியம்; பான்கீ மூன் கூறுகிறார்

இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடுகள் தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்திருந்த நிபுணர் குழுவானது இலங்கைக்கான தனது விஜயத்தின் திகதிகள் தொடர்பாக இறுதி தீர்மானத்தை எடுத்துக்கொண்டிருப்பதாகவும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவைத் தவிர ஏனைய தரப்பினரைச் சந்திப்பதற்கான சாத்தியம் குறித்து தற்போது கலந்துரையாடிவருவதாகவும் பான் கீ மூன் தெரிவித்திருக்கிறார்.

இந்த மாதம் தனது அறிக்கையை நிபுணர் குழு சமர்ப்பிக்கவிருந்தது.ஆனால், அடுத்த மாதம் வரை அதனை ஒத்திவைத்திருப்பதை ஐ.நா. உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை இந்த விடயம் தொடர்பாக நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட இன்னர் சிற்றி பிரஸ் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தனது தளத்தில் தெரிவித்திருப்பதாவது;

ஐ.நா. செயலாளர்நாயகம் பான் கீ மூன் டிசம்பர் 17 இல் தான் நியமித்திருந்த நிபுணர் குழு இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமென அறிவித்திருந்தார். அத்துடன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நெகிழ்வுத்தன்மையைப் பாராட்டியிருந்தார். அதன் பின்னர் நான்கு வாரங்கள் கழிந்துள்ள நிலையில் பான் கீ மூனின் பேச்சாளர் அலுவலகம் கேள்விகளுக்கு பதிலளிப்பதை நிராகரித்திருந்தது. பான் கீ மூனின் நிபுணர் குழுவிற்கு நிபந்தனை அடிப்படையில் மட்டுமே விசா வழங்கப்படுமெனவும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவை மட்டுமே சந்திக்க முடியுமெனவும் விசாரணை நடத்த முடியாதெனவும் இலங்கை அதிகாரிகள் விடுத்துள்ள அறிக்கைகள் தொடர்பாக கேள்விகளுக்கு பதிலளிக்க பேச்சாளரின் அலுவலகம் மறுத்துள்ளது.

ஜனவரி 14 இல் அடுத்த மாதத்திற்கான செய்தியாளர் மாநாட்டை பான் கீ மூன் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடத்தினார். தனது கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லையென இன்னர் சிற்றி பிரஸ் கேட்டுக்கொண்டது. எப்போது எந்த நிபந்தனைகளின் அடிப்படையில் நிபுணர் குழு இலங்கைக்கு பயணம் செய்யக்கூடுமெனவும் அது கேட்டிருந்தது. பான் கீ மூன் 45 நிமிடங்கள் செய்தியாளர் மாநாட்டை நடத்தியிருந்தார். அதன் போது கேள்விகளை எழுப்புவதற்கு இன்னர் சிற்றி பிரஸ் கையெழுத்திட்டிருந்ததுடன் கையையும் உயர்த்தியது. ஆயினும் எந்தவொரு கேள்வியையும் கேட்பதற்கு இன்னர் சிற்றி பிரஸ்ஸிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது ஒரு புதிய விடயமாகும்.

பான் கீ மூனின் நிர்வாகத்தின் ஊழல்கள் தொடர்பாக ஏனைய நிருபர்கள் கேள்விகளை சத்தமிட்டு எழுப்பியிருந்தனர். பான் கீ மூன் 2 ஆவது பதவிக்காலத்தை நாடுவாரா என்று அவர்கள் கேட்டனர். கருத்தெதுவும் தெரிவிக்கப்படவில்லை. இன்னர் சிற்றி பிரஸ் சத்தமிட்டுக் கேட்பதை தெரிவு செய்யவில்லை. டக் ஹம்மர்ஸ் கோல்ட் நூலகத்தின் வெளியேற்றப்பாதையில் பான் கீ மூன் நடந்து செல்வார் என எதிர்பார்த்து இன்னர் சிற்றி பிரஸ் காத்திருந்தது.

"திருவாளர் செயலாளர் நாயகம் அவர்களே! உங்களின் நிபுணர் குழு இலங்கைக்கு செல்வதாக நீங்கள் கூறியிருந்தீர்களே என்று இன்னர் சிற்றி பிரஸ் கேட்டதுடன் அதற்கு என்ன நடந்தது எனவும் கேள்வி எழுப்பியது.

"அவர்கள் இப்போது தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதற்கான திகதிகளை தீர்மானிப்பதில் அவர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்' என்று பான் கீ மூன் பதிலளித்தார்.

நிபுணர் குழு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவுடன் மட்டுமே பேச முடியுமென அரசாங்கம் கூறியுள்ளதே அவர்களால் எதனை விசாரிக்க முடியாதா? என்று இன்னர் சிற்றி பிரஸ் கேட்டது.

அவர்களால் முடியும். அவர்கள் அதனைப் பற்றி இப்போது ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர் என்று பான் கீ மூன் பதிலளித்தார்.

இலங்கை அரசாங்கம் என்ன கூறியுள்ளது பான் கீ மூனின் பேச்சாளர்கள் என்ன கூறியுள்ளனர் என்பது தொடர்பாக தற்போது மீண்டும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு வெளியே நல்லிணக்க ஆணைக்குழுவை ஐ.நா. நிபுணர் குழு சந்திக்கக்கூடுமென்று பி.பி.சி.யின் சிங்கள சேவைக்கு பான் கீ மூனின் பதில் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் கூறியிருந்தார். பின்னர் இன்னர் சிற்றி பிரஸ் கேள்விகளை எழுப்பியபோது பான் கீ மூனின் நிபுணர் குழுவின் அதிகாரம் நல்லிணக்க ஆணைக்குழுவிலும் பார்க்க பரந்துபட்டதென பர்ஹான் ஹக் தெரிவித்திருந்தார். இலங்கைக்கு நிபுணர் குழுவோ அல்லது அக் குழுவின் அலுவலர்களோ பயணம் மேற்கொள்வார்கள் என்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்க பர்ஹான் ஹக் மறுத்திருந்தார்.

நல்லிணக்க ஆணைக்குழுவை மட்டுமே நிபுணர் குழுவானது சந்திக்க முடியுமெனவும் விசாரணையோ அல்லது ஏனைய கலந்துரையாடலோ சாத்தியமில்லையெனவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தது. இந்த விடயத்திற்கு மட்டுமே விசா வழங்குவது மட்டுப்படுத்தப்படுமென இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தது.

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=5466:2011-01-16-08-49-09&catid=34:hotn-news&Itemid=99

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.