Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு தேசியக் கொடியின் கீழ் ஒன்றிணைவோம்! - சூரியப் பொங்கல் நிகழ்வில் மகிந்தா

Featured Replies

இன, மத பேதங்களைக் கடந்து நாம் ஒரு தேசியக் கொடியின் கீழ் ஒன்றிணைவோம் என சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

'எங்களுக்கு ஒரு பொறுப்பிருக்கிறது. இந் நாட்டின் தலைவர்கள் எமது மக்களை சரியாக வழிநடத்த வேண்டும். குறுகிய அரசியல் லாபத்திற்காக இம் மக்களைப் பிரிக்க வேண்டாம். இன, மத பேதங்களைக் கடந்து நாம் ஒரு தேசியக் கொடியின் கீழ் ஒன்றிணைவோம்' என அவர் தெரிவித்துள்ளார்.

யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் இன்று இடம்பெற்ற தேசிய பொங்கல் விழாவில் பிரதம விருந்தினராக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர், சர்வதேசத்திற்கு பிழையான தகவல்களை வழங்கி அதன் உதவிகளைத் தடுக்க சில சக்திகள் முயல்வதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், வடக்கில் கடமை புரியும் ஊடகவியலாளர்களை தகவல்களை திரிபுபடுத்தி வழங்க வேண்டாம் எனவும் அவர் தனதுரையில் குறிப்பிட்டுள்ளார். இந் நிகழ்வில் அவர் உரையாற்றும் போது மேலும் தெரிவித்துள்ளதாவது:

'வடபகுதி மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதி மிக்க ஒரு சொத்து. நாம் எந்தவொரு கட்டத்திலும் எமது மக்களைக் கைவிட மாட்டோம். நாட்டின் ஏனைய பகுதிகள் போன்றே சகல வளங்களும், வசதிகளும் கொண்ட பிரதேசமாக வடமாகாணத்தையும் அபிவிருத்தி செய்வோம். அதற்கான நோக்குடன் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவதே வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டமாகும்.

வடக்கில் நாம் மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட சிலர் முயற்சிக்கின்றனர். சர்வதேச மட்டத்தில் அது தொடர்பான போலிப் பிரச்சாரங்களை அவர்கள் முன்னெடுத்துள்ளனர். அதன் மூலம் எமது பணி முழுமையடையாமல் தடைப்பட்டுள்ளது உண்மைதான்.

ஆயினும் எந்தக் கட்டத்திலும் நாம் எமது அபிவிருத்தித் திட்டங்களை இடை நிறுத்த மாட்டோம். வடக்கின் கல்வி, பொருளாதாரம், அபிவிருத்தி போன்றவற்றில் புரட்சியை ஏற்படுத்துவோம். உங்களுக்கோர் வளமான வாழ்வை ஏற்படுத்தித் தரவே நான் பாடுபடுகின்றேன். என்னை நம்புங்கள். நான் உங்களை வழிநடத்திச் செல்வேன்.

தென் பகுதியிலும், வட பகுதியிலும் மீண்டும் தீவிரவாதம் உருவாகுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது. வடக்கிலும் தெற்கிலும் பாதாள உலகக் குழுவினர் உருவாவதற்கும் நாம் இடமளிக்கப் போவதில்லை.

வட பகுதியில் இடம்பெற்று வரும் அபிவிருத்திப் பணிகள் சர்வதேச நாடுகளின் கடனடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்றது. அந்தக் கடனை நாம் வட்டியுடன் செலுத்த வேண்டும். வடபகுதி மக்களுக்கு என்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வேன். வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் இத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

வடபகுதி மக்கள் 30 வருட காலமாக அனுபவித்த கஸ்டங்களை இனிமேலும் அனுபவிக்க வேண்டியதில்லை. என்னை நம்புங்கள். நான் உங்களை வழிநடத்திச் செல்வேன். மீண்டும் உங்களுக்கொரு வளமான வாழ்வை அமைப்பதற்காக நான் மிகவும் பாடுபடுகிறேன்' என சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனதுரையில் தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்வில் சிறிலங்காவின் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, எம்.கே.குணரட்ன, வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினர்களான மு.சந்திரகுமார், சில்வஸ்டர் அலன்ரின், யாழ் மற்றும் கிளிநொச்சி அரசாங்க அதிபர்கள், யாழ் மாவட்ட மேயர், சர்வமத குருக்கள் மற்றும் படையதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியும் கலந்து கொண்டிருந்த போதிலும், கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={0DF41883-E522-4932-B7DA-8EA1FE1071C4}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.