Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேச பயங்கரவாதப் பட்டியலில் புலிகளை நீடிக்கச் செய்யும் சுவிஸ் கொள்ளை!

Featured Replies

சர்வதேச பயங்கரவாதப் பட்டியலில் புலிகளை நீடிக்கச் செய்யும் சுவிஸ் கொள்ளை!

சுவிஸ் 'எம்புரோட்டிய' திருடர்களின் 'குட்டு' உடைபட்டதன் பின் மீண்டும் உங்களையெல்லாம் சந்திப்பதில் திருப்தியடைகிறேன். இது பற்றி எதிர்வு கூறியதற்காக இன்றுவரை நான் பெற்றுக்கொண்ட துரோகிப்பட்ட மின்னஞ்சல்கள் ஏராளம். இருந்தாலும் உண்மையாகவே தேசியத்தை நேசிப்பவன் செய்யவேண்டிய கடமையில் ஒன்றான இந்த குட்டை வெளிப்படுத்தியதில் மாவீரர் மரணத்தின்பால் ஒரு மன நிறைவு உண்டு. இதற்கும் மேலாக இந்தத் திருடர்களின் மர்மங்களை வெளிக்கொண்டு வருவதற்காக நான் துணிந்து எழுதி பல ஊடகங்களுக்கு அனுப்பியிருந்தும் ஒரு சில ஊடகங்களே அதை தைரியத்துடன் வெளியிட்டன. குறிப்பாக மீனகம், தரவு, தணல், எம்தமிழ் போன்ற ஊடகங்கள் எனது கட்டுரையை துணிந்து பிரசுரித்திருந்தார்கள். பிழைப்புவாத ஊடகத்துறையை நடாத்தும் ஏனைய ஊடகங்களிலிருந்து இவை வேறுபட்டு தமிழரின் பால் உண்மையான அக்கறை கொண்டவர்கள் என வெளிப்படுத்தியிருப்பதையிட்டு நன்றியும் பெருமிதமும் கொள்கிறேன்.

தமிழீழ விடுதலைப்புலிகள் தமக்கு முகவர்களாகத் தெரிவு செய்தவர்கள் கோடீஸ்வரர்களா? அல்லது முகவர்கள் ஆனபின்பு கோடீஸ்வரர்கள் ஆனவர்களா? அல்லது 'அலிபாபா கொளையர்களென' என அறிந்தே தெரிவு செய்தார்களா?, அல்லது முகவர்கள் ஆனபின்பு அலிபாபா கொள்ளையர்கள் ஆனவர்களா?

இது கோழியா? முட்டையா? முதல் வந்தது போலாகும். இந்த ஐயத்துக்குள் தான் பல அப்பாவித் தமிழர்களின் பொருளாதாரம் முடங்கிக் கிடக்கிறது. இதைக் கண்டறிவதில் சுவிஸ் அரசாங்கம் கவனமாக நிற்கிறது. அதாவது தமிழரின் சொத்தை அரச உடமை ஆக்குவதில் தான் சுவிஸ் அரசாங்கம் முனைப்பாக நிற்கும் என்பதை நிதி வழங்கிய தமிழ் மக்கள் உணர்தல் வேண்டும்.

சுவிஸ் கொள்ளையர் கும்பலின் பதுக்கல் நாடகம், முள்ளிவாய்க்கால் யுத்தம் ஓய்ந்ததன் பின்னால் எம்முறவுகள் படும் துயரத்தை எண்ணிய போதுதான் பல விடயங்கள் என்மனதில் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்தது. அதாவது, மக்களிடம் பெற்ற நிதிப்பணம் விடுதலைப்புலிகளுக்கு சென்று சேரவில்லை என்பதும், யுத்தத்திற்குப் பின்னர் அனர்த்தப்படும் வன்னிமக்களுக்காவது அந்தப் பணம் போகவில்லை என்பதும் தெரியவந்த போது எங்கோ ஓரிடத்தில் பதுக்கல் நடைபெற்றது என்பது புரியத் தொடங்கியது. இதனை ஊர்ஜிதப்படுத்த, உண்மைகளை சிலர் வெளிக்கொண்டுவரும் பொழுது இந்தக் 'கொள்ளையர்களின்' தூண்டுதலுக்கு இரையான ஊடகங்கள் பல அவர்களையெல்லாம் எட்டப்பனாகவும் 'துரோகிகளாகவும்' சோடித்து மக்களைத் தெளிவடைய வைக்காமல், உண்மை கூறுபவர்களிடமிருந்து பிரித்து வைத்திருந்தமையாகும். 'கெட்டிக்காரர்களின் பொய்யும் புரட்டெல்லாம் எட்டு நாளைக்குத் தான்' என்று அறியாத கொள்ளையர்களின் நிலையை இப்போது உலகம் அறியக்கூடியதாக இருக்கின்றது.

உண்மையிலே, தேசியத்தை நேசிக்கும் எவரும் இந்தக் கொள்ளையர்கள் பிடிபடவேண்டும் என்ற கருத்து இருந்தாலும், இப்படியான நிலை தமிழருக்கு ஏற்படக்கூடாதென மனச் சாட்சியுடன் வேதனைப் படுவோர் ஏராளம். யார் என்ன சொன்னாலும் இதுதான் யதார்த்தம். ஏனெனில் உலக வரலாற்றை உசுப்பி விட்ட பெருமை தமிழீழ விடுதலைப்புலிகளுக்குத் தான் உண்டு. இன்றைய நிலையில் புலிகளுக்கு எதிராக நின்றவர்கள் கூட, விடுதலைப்புலிகளின் அழிவுக்குப் பின்னர் தமிழரின் நிலை கண்டு மனதாரத் துக்கப்படும் நிலையக் காண்கின்றோம். மலைபோல நம்பியிருந்த இந்தியத் தமிழ்நாட்டு உணர்வாளர்கள் உட்பட உலகத் தமிழர்கள் முகங்களிலும் இந்தக் கொள்ளையடித்த தமிழர்கள் கரிபூசிவிட்டார்கள். இப்படியொரு சம்பவம் நடந்திருக்கக் கூடாதென்று மனதாரக் கண்ணீர் வடிக்கின்றார்கள். உண்மையும் அதுதான்.

சர்வதேசரீதியாக விடுதலைப்புலிகள் இன்றுவரை எதிர்நோக்கிக்கொண்டிருக்கும் பிரச்சனை யாதெனில் அவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதுதான். இந்த முடிச்சு அவிழ்ப்பதற்கான காரியங்களை எமது புத்திஜீவித் தமிழ்மக்கள் மேற்கொண்டு வருவது அறிந்ததே. அது மேலும் பின்னடைவைத் தருவதற்கான செயல்களில் ஒன்றாக இந்தக் கொள்ளையரின் செயல்களைக் கணிக்கலாம். இவர்கள் விடுதலைப்புலிகளுக்கும், தமிழ்மக்களுக்கும் அழிக்கமுடியா இழிகரத்தையும், பின்னடைவையும், தொடர் பயங்கரவாதிப் பட்டத்தையும் தந்துள்ளார்கள்.

இப்படியே பேசிக்கொண்டு, இப்படியே கட்டுரைகளை எழுதிக்கொண்டு காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தால் முடிவுதான் என்ன? ஈழத்தமிழ் எம்முறவுகள் சிங்களவனிடம் பிச்சை ஏந்திக்கொண்டிருப்பதா? அல்லது எம் தமிழ் மாதுக்கள் வயிற்றுக்கொடுமைக்காக, உயிர்ப் பாதுகாப்புக்காக தம் உடுக்கையை இழந்து சிங்கள அரக்கர்கள் முன்னால் நிர்வாணமாக நிற்பதா? அங்கவீனக் குழந்தைகள் தெருவோரம் தங்கள் அங்கவீனத்தைக் காட்டி கையேந்தி நிற்பதா? இவையெல்லாவற்றையும் கண்டும் காணாமல் புலம்பெயர் தேசத்து தமிழ்மக்கள் விழாக்களிலும், திருவிழாக்களிலும் இன்பம் தேடி மயங்கிக் கிடப்பது முறையா? ஈழத்தமிழர்கள் இலங்கை அரசை நம்புவதை விட புலம்பெயர் உறவுகளை விடிவெள்ளியாக எதிர்பார்த்து நிற்பதை இங்குள்ளவர்கள் அறிவார்களா? புலம்பெயர் உறவுகளை தம்முறவுகளாகக் கொண்டு அனர்த்தத்தின் மத்தியில் நம்பிக்கையோடு வாழ்வதை அறிவார்களா? இப்படி ஏராளமான வினாக்கள் புலம்பெயர் சமூகத்தின் முன்னே தூங்கிக் கிடக்கிறது. இந்த வினாக்களுக்கான நல்ல பதில்கள் வெளிவருவதற்கு இங்குள்ள அனைவரும் ஒன்றுசேர்ந்து பாடுபடவேண்டும்.

புலம்பெயர் தமிழ்மக்களைப் பொறுத்தவரையில் ஈழத்தமிழ் உறவுகளுக்கு உதவி வழங்குவதற்காக தாராள மனத்துடன் உள்ளார்கள். இப்பேர்பட்ட கொள்ளையர்களால் யாரிடம் பணம் வழங்குவதென்று தெரியாமல் தவித்து நிற்கிறார்கள். உண்மையும் நேர்மையும் கொண்டவர்களாக மனதில் உருவகித்துக் கொண்ட 'விடுதலைப் புலிகளின் முகவர்கள்' இப்படி நடந்து கொண்டது பெரும் பின்னடைவைத் தரும். உண்மையும் நேர்மையும் கொண்டவர்களென மனதார உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அள்ளிவழங்க ஆயத்தமாக இருக்கிறார்கள். இப்பொழுது அவர்களுக்குத் தான் பஞ்சம். நல்லவர்கள் முன்வருவதற்கு 'துரோகிப்பட்டங்களும்' தடையாக உள்ளது. இவையெல்லாவற்றையும் உடைத்து முன்வருவதற்கு நேர்மையான புதிய சக்திகள் உருவாக வேண்டும். நிட்சயமாக தமிழுலகம் ஏற்கும்.

இந்தத் துரோகத்தனம் கொண்ட கொள்ளையர்களையும், தமிழர் நலன்களை காரணம் காட்டி ஆங்காங்கே காளான்களாக முளைத்துக் கிடக்கும் தமிழர் அமைப்புகளையும், மேலும் தேவைக்கேற்ப இனம்கண்டு ஒதுக்க வேண்டிய அனைத்தையும் ஒதுக்கிவிட்டு புலம்பெயர் நாடுகளில், ஒரு புதிய வேற்றுமைகளைக் கடந்த புத்தி ஜீவிகள் கொண்ட தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் வெளிப்படைத் தன்மை கொண்ட புதிய சக்திகள் ஈழத்தமிழர்களின் சார்பில் தலைமை ஏற்க முன்வரவேண்டும்.

'நல்லவங்க எல்லோரும் உங்க பின்னாலே

நீங்க நினைச்சதெல்லாம் நடக்கும் உங்க கண்ணுமுன்னாலே'

நாகலிங்கம் மதியழகன்

mathiyalakan1@hotmail.com

"பயங்கரவாத அமைப்பு" இல்லை "தடை" என்பன அரசியல் நோக்கங்களுக்கவே இடப்பட்டன. அரசியல் தேவைகளுக்காகவே இவை நீடிக்கப்படுகின்றன.

இப்படியான செயல்கள் தடையை நீடிக்க உதவ மாட்டா. ஆனால், இவை தான் தடையை நீடிக்க காரணம் என்றில்லை.

காலம் வரும்போது, தமக்கு தேவை வரும்போது சர்வதேசம் தடையை அகற்றும். அந்த சரசியல் காலத்தை, தேவையை நாம் உருவாக்கல் வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.