Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது மாணவர்கள் சமூகப்பணிகளில் தொடர்ந்தும் பங்களிப்பார்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எமது மாணவர்கள் சமூகப்பணிகளில் தொடர்ந்தும் பங்களிப்பார்கள் -

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அரிஹரன் - GTNற்கு வழங்கிய நேர்காணல்:-

அண்மையில் கிழக்கில் பெருமழையும் கொடுவெள்ளமும் ஏற்பட்டது. கிழக்கு வாவிகளை மூடிய வெள்ளம் நாளடைவில் தெருக்களை கிராமங்களை வீடுகளை நகரங்களை என்று முழுமையாக மூழ்கடித்தது. லட்சக்கணக்கான மக்கள் மழைவெள்ள அகதிகளாக இடம்பெயர்ந்து இடை முகாங்களில் தஞ்சமடைந்தார்கள். பலர் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர். வாரக்கணக்கில் நீடித்த மழைவெள்ளத்தினால் பெரும் சொத்தழிவுகள் ஏற்பட்டன. கடந்த சில வருடங்களின் முன்னர் யுத்தம் அழித்த கிழக்கு பகுதியை எதிர்பார்க்காத வகையில் மழைவெள்ளம் அழித்திருக்கிறது.

கிழக்கு மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டது யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம். சுமார் 35 லட்சம் பெறுமதியான பொருட்களை குறுகிய காலத்தில் சேகரித்து மக்களிடம் கையளித்து அவர்களின் துயரை தீர்க்கும் நடவடிக்கையில் மிகுந்த உற்சாகத்துடன் ஈடுபட்டார்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள். கிழக்கில் கள நிலமைகள் குறித்து அங்கு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவர்களில் பொறுப்பு வகித்த யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் எஸ். அரிஹரனிடம் குளோபல் தமிழ் செய்திகளுக்காக இந்த நேர்காணலை நிகழ்த்தினேன்.

நேர்காணல் - நவராஜ் பார்த்தீபன்

01.பெருமழைக்கும் கொடும் வெள்ளத்திற்கும் முகம் கொடுத்த கிழக்கு என்ன நிலமையில் இருக்கிறது?

வரலாறு காணாத பெருவெள்ளத்தால் கிழக்கின் எல்லப் பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நகரத்தை அண்டிய பிரதேசங்களில் தற்பொழுது ஓரளவு வெள்ளம் வடிந்துள்ளது. குளங்களுக்கு அருகில் இருக்கும் கிராமங்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தக் கிராமங்களில் வாழும் மக்கள் கூலித் தொழில் செய்து வாழ்க்கை நடத்துபாவர்கள். இப்பொழுது இவர்களின் நிலமை மிக மோசமாக காணபபடுகிறது. இதைவிட வவுணதீவுப் பிரதேசம் நாங்கள் நிற்கும் வரை தரைவழித் தொடர்புகள் இன்றி அங்கிருக்கிற மக்கள் பெரும் அசளகரியங்களை எதிர்கொள்கிகறார்கள். இவ்வாறான நிலமைதான் அங்கு காணப்படுகிறது.

02. எந்தெந்தப் பகுதிகளுக்குச் சென்றீர்கள்?

நாங்கள் பல பகுதிகளுக்கு சென்றோம். ஆனால் எங்களால் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் மகிழடித்தீவு, பண்டாரியவெளி, பன்குடாவெளி, அரசடித்தீவு, பட்டிப்பளை, அம்பிலாத்துறை, விளாந்தோட்டம், சித்தாண்டிக்குடியிருப்பு 01, சித்தாண்டிக்குடியிருப்பு 02 மற்றும் கல்முனை, ஏறாவூர் போன்ற இடங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டன. சென்ற இடங்கள் ழுமுவதும் வெள்ளத்தால் பாதித்த நிலையில் இருப்பதை பார்த்தோம்.

03.கிழக்கு மக்கள் இந்த வெள்ளம் மiயினால் எத்தகைய இழப்பை சந்தித்திருக்கிறார்கள் என்று குறிப்படுங்கள்?

கிழக்கில் மக்கள் குறிப்பாக கிராமப் புரமக்களின் வசிப்போரின் வீடுகள் முற்றாக பாதிப்படைநந்துள்ளன. அவர்களின் வீடுகளில் உள்ள பொருட்கள் ஆவணங்கள் எல்லாம் வெள்ளத்தில் அழிந்துள்ளன. அதைவிட அன்றாடம் தொழில் செய்து வருமானம் பெறுபவர்களின் வருமானம் பறிபோய் விட்டது. வயல் பிரதேசங்கள் முற்றாக பாதிப்படைந்துள்ளது. போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வசிப்போரோ அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

04. தற்பொழுது நிலமை எப்பிடி இருக்கிறது?

நகரை அண்டிய பிரதேசங்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. கிராமப்புராங்கள் இன்னும் இயல்புநிலைக்கு திரும்பவில்லை. அவர்கள் தங்கள் அடுத்த கட்ட வாழ்வை முன்னெடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். இவர்களுக்கான உதவிகளை சரியான முறையில் சென்று சேரவில்லை. குறிப்பாக வவுணதீவு பிரதேசம் தற்பொழுது வரை நீரில் மூழ்கியிருக்கிறது. கிழக்கு மக்களுக்கு இன்னும் பல உதவிகள் தேவைப்படுகின்றன.

05. தமிழர் தாயகமான கிழக்கின் மக்களுக்குரிய உதவிகளை வழங்கும் பொழுது உங்கள் மனநிலை எப்பிடி இருந்தது?

கிழக்கு மக்களுக்கான உதவிப்பொருட்களை நேரடியாகச் சென்று அந்த மக்களுக்கு வழங்கும் பொழுது அந்த மக்களின் மன உணர்வுகளை புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. அவர்களின் பாதிப்புக்களை நேரடியாக அறிந்து கொண்டோம். அதேவேளை அவர்களுக்கு மேலும் எவ்வாறான உதவிப் பொருட்கள் தேவை என்பதை உணர்ந்து கொண்டோம். எங்கள் மாணவர்கள் மிகுந்த ஆரவத்துடன் சேகரித்த பொருட்கள் எல்லாம் அந்த மக்களிடம் சென்று சேர்ந்து விட்டன என்று எமகுக்கு மகிழ்ச்சியாகவும் ஆறுதலாகவும் இருந்தது.

06. உதவிப் பொருட்களை எப்படி சேகரித்தீர்கள்? எவ்வளவு பெறுமதியான பொருட்கள் சேகரிக்கப்பட்டன?

உதவிப் பொருட்கள் யாழ் மாவட்டத்தில் உள்ள மக்களிடம் இருந்து சேகரிக்கப்ட்டது. குறிப்பாக பாராளமன்ற உறுப்பினர் மற்றும் அரசியல் கட்சிகள், மற்றும் சமூக அமைப்புக்கள், வர்த்தகர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டன. அத்தோடு புலம்பெயர் சமூகத்திடம் இருந்தும் மக்களுக்கான உதவிகள் கிடைக்கப்பெற்றன. இதற்காக அவர்களுக்கு எமது மாணவர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். குறுகிய காலத்துள் எங்களால் சுமார் முப்பத்தைந்து லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சேகரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்க முடிந்தது.

.

07. இதுபோன்ற மனிதாபிமா சேவைகளில் யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் அல்லது மாணவர் ஒன்றியம் எந்தளவ அக்கறை காட்டுகிறது? அதன் முக்கியத்துவம் குறித்து குறிப்பிடுங்கள்?

எமது பல்கலைக்கழகத்திற்கு தனித்துவமான வரலாறு ஒன்று இருகக்கிறது. எமது மாணவர்களின் சமூகப் பணியும் அக்கறையும் நோக்கும் தனித்துவமானது. எமது பல்கலைக்ககை மாணவர் ஒன்றியம் கடந்த காலங்களில் பிரமிக்கத்தக்க வைக்க அளவில் மாணவர்களை ஒருங்கிணைத்து மனிதாபிமான வேலைகளில் ஈடுபட்டிருக்கிறது. மனிதாபிமான உதவிகளை செய்திருக்கிறது. மனிதாபிமானத்திற்காய் குரல் கொடுத்திருக்கிறது.

நாங்கள் கடந்த கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை முன்னிட்டு முன்னோடியாக சில செயலமவுர்களை நடத்தியிருந்தோம். கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா வடக்கு போன்ற பிரதேங்களில் உள்ள 14 நாட்கள் தங்கியிருந்து இந்த செயலமவுர்களை நடத்தினோம். கணித விஞ்ஞான கற்பித்தல் செயல் அமர்வுகள் 44 பாடசாலைகளில் நடத்தப்பட்டது. இலசவசப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இதைப்போலவேதான் கிழக்கில் அவசியமான சமூகப் பணி ஒன்றை மேற்கொண்டோம். இந்தப் பணிகளில் எமது பல்கலைக்ககழக மாணவர்கள் மிகுந்த சமூக அக்கறையுடனும் எங்கள் மக்கள்மீதான பற்றுடனும் செய்தார்கள். கால் கடுக்க நடந்து மாணவ மாணவிகள் பொருட்களை வீடு வீடாக சேகரித்தார்கள். அவற்றை பொதி செய்து வாகனங்களில் கொண்டு சென்று உரிய சந்தர்த்தில் கொடுத்திருக்கிறோம். இதற்காக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஒத்துழைத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறது. கிழக்கிலும் மாணவர்கள் மிகுந்த அக்கறையுடன் பணியாற்றுகிறார்கள். இதுபோன்ற சமூகப் பணிகள் எமது சமூகத்திற்கு தேவைப்படுகின்றன. இதைப் புரிந்து கொண்டு இதைப்போன்ற பணிகளில் எமது மாணவர்கள் பற்றுடன் செயற்பட வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

09. உங்கள் இந்தப் பணிக்கு மக்கள் மத்தியில் எந்தளவு வரவேற்பும் பங்களிப்பும் இருந்தது?

எங்கள் நிவாரணப் பணிச் செயற்பாடுகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அங்கு பல இடங்களில் அரசாங்கத்தால் உதவிகள் வழங்கப்படவில்லை. எங்கள் மாணவர்கள் யாழ்ப்பாண மக்களிடம் சேகரித்த பொருட்களை தேவையான நேரத்தில் வழங்குகிறார்கள் என்று கிழக்கு மக்கள் தெரிவித்தார்கள். அங்குள்ள கிராம அபிவிருத்தித் தலைவர்கள் இந்த நடவடிக்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை தந்தார்கள். அதேவேளை இந்தப் பொருட்களை சேகரிக்கும் பொழுது யாழ் மக்களுக்கும் மிகுந்த உற்சாகத்துடன் உதவிகளை வழங்கினார்கள்.

10. இறுதியாக வேறு எதாவது குறிப்பிட விருப்புவீர்களா?

ஆம், கிழக்கு மககளுக்கான பொருள் செகரிப்புக்கு என நாம் அழைப்பு விடுத்த பொழுது பொருள் சேகரித்ததிலிருந்து அந்த பொருட்களை மக்களிடம் சேர்க்கும் வரை பொறுப்பாக செயற்பட்ட எமது மாணவ மாணவியரை, எமக்காக ஒத்துழைத்த வர்த்தக நிறுவனங்கள், சமூகநிறுவனங்கள், ஊடகங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன்.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக நவராஜ் பார்த்தீபன்

அத்தோடு புலம்பெயர் சமூகத்திடம் இருந்தும் மக்களுக்கான உதவிகள் கிடைக்கப்பெற்றன. இதற்காக அவர்களுக்கு எமது மாணவர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். குறுகிய காலத்துள் எங்களால் சுமார் முப்பத்தைந்து லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள்

புலம் பெயர் மக்களுக்கு நன்றி சொன்னதற்க்கு நன்றிகள்....புலம்பெயர் சனமும் கொடுக்குறமல்ல......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.