Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது தாயகத்தின் பொருளாதார நிலமை

Featured Replies

  • தொடங்கியவர்

IMF wants Sri Lankan Rupee to be floated, but Sri Lanka wants to keep it pegged to US Dollar- Who will win?

Little our Tamil Diaspora knows that they are the trump card. I will show you how you can punish the enemy and profit from it both directions.

Let us use our bargaining power to make the enemy come to terms.

1. Stop sending (more than needed) money to Sri Lanka that way you are denying and draining the foreign reserves to pay for imports

2. Stop imports from Sri Lanka, this way to you are denying the enemy foreign exchange (reserves).

But there are advantages to you, sooner than later they have to devalue the currency, hold your horses, by about 50%. So then your remittances will get more money and your imports from Sri Lanka will get cheaper.

Isn't it more palatable way of teaching the enemy that a country travels on the stomach and not on the back of the Military.

Think about it. I stopped buying Sri Lankan, I stopped sending money to Sri Lanka.

Please, every Tamil must do their part. We are not asking for your life, blood or money, just your participation.

Diaspora holds tremendous bargaining power, if only we can unite. we have political power and monetary power, lets start using it.

by Subramaniam Masilamany

IMF= International Monetary Funds. a lender of the last resort.

  • Replies 55
  • Views 13.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கொழும்புப் பொருளாதாரம் பாதாளத்திற்குச் செல்லும் நிலை -ரணில்

கொழும்பு நகரின் பொருளாதாரம் பாதாளத்திற்குச் செல்லும் நிலை தோன்றியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கின்றார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கொழும்பு மாநகரில் தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் ஆட்டோக்களை நிறுத்தி புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்நிலை ஏற்படுமானால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்படுவர்.

கொழும்பு நகரின் பொருளாதாரம் பெருமளவில் நடுத்தர வர்க்கத்தினரையே சார்ந்துள்ளது. இவ்வாறானதொரு நிலை ஏற்படுமானால் கொழும்புப் பொருளாதாரம் பாதாளத்திற்கு செல்லக் கூடிய வாய்ப்பே பெரிதும் ஏற்படும். அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைக்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியினால் 1978 ஆம் ஆண்டு ஆட்டோ முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அது மாத்திரமன்றி அம்பாந்தோட்டை அபிவிருத்திக்கு மட்டும் பெருமளவான தொகையை அரசாங்கம் செலவிடுகிறது. அத்துடன் உள்ளுராட்சித் தேர்தலுக்கும் பெருமளவான நிதியை செலவிடுகிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

http://www.alaikal.com/news/?p=83786

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

பாசி வளர்க்கலாம் வாங்க!

பாசி என்றதும் காலை வழுக்கிவிடும் ஈரப் பரப்புதான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். உண்மையில், பாசியைக் கண்டு நாம் அஞ்சவேண்டியதில்லை. அவற்றைப் பற்றி தெரிந்துகொண்டால், லாபம் சம்பாதிக்கும் ஒரு தொழிலை நம்மால் மேற்கொள்ளமுடியும். ஆம், பாசிகள் நமக்குப் பலவிதமான நன்மைகளைச் செய்கின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருள்களில் பாசி கலந்துள்ளது. நம் உணவுக்குச் சுவை கூட்டும் பணியையும் மேற்கொள்கிறது.

ராமேஸ்வரம் தீவில் உள்ள கடலோர மீனவ கிராமங்களில், மீனவப் பெண்கள் பாசி சேகரிப்பைத் தங்கள் பிழைப்பாதாரமாகக் கொண்டிருக்கிறார்கள். சமீப காலமாக, பாசி சேகரித்தலோடு, பாசி வளர்க்கவும் ஆரம்பித்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிகளவில் இதில் ஈடுபடுகின்றனர். எப்படி விவசாயிகள் நிலத்தில் ஏர் பூட்டி உழுது, விதை விதைத்து, நீர் பாய்ச்சி, களையகற்றி, அறுவடை செய்கிறார்களோ அதைப் போல பாசி வளர்ப்பும் பல நிலைகளைக் கொண்ட கடல் விவசாயமாகும்.

பொதுவாக, பாசிகள் (Algae) ஒளிச் சேர்க்கை செய்ய வல்ல தாவர உயிரினங்கள். இவை நீர் நிலைகளிலும் ஈரப்பரப்புகளிலும் காணப்படுகின்றன. ஆறுகள், குளங்கள், ஏரிகள் மற்றும் கடல்களில் அவை வாழ்கின்றன. பாசிகள் பலவகைப்படும். அவற்றில் சிலவற்றை மட்டுமே நம்மால் வளர்த்தெடுக்கமுடியும். உயிரியல் தொழில்நுட்பம் இதனைச் சாத்தியமாக்கியுள்ளது. அவற்றில் ஒன்று கப்பா பைகஸ் பாசி. இது வளர்ப்பதற்குத் தோதானது என்பதால் ராமேஸ்வரம் பகுதியில் கப்பா பாசி விவசாயம் பிரபலமாகி வருகிறது. இந்தப் பாசியை உள்ளூர்வாசிகள் கப்பா பாசி என்றும் பெப்சி பாசி என்றும் கூறுகின்றனர். பெப்சி நிறுவனமே, விதைப்பாசியைக் கொடுத்து, அதை வளர்க்கும் முறையையும் சொல்லிக்கொடுத்து, வளர்த்த பாசியைக் கொள்முதல் செய்து, வெளிநாடுகளுக்கு (மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா) ஏற்றுமதி செய்வதால் பெப்சி பாசி என்னும் பெயர் கிடைத்துள்ளது.

கப்பா பாசியானது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேஷியாவில் இருந்து கொண்டுவரப்பட்டது என்று மக்கள் கூறுகின்றனர். கடல் நீரில் உள்ள தாது உப்புகளையும் சூரிய வெளிச்சத்தையும் கொண்டு அதிக செலவில்லாமல் வளரும் தாவரம் இது. அதனால் இந்தத் தாவரத்தை இயற்கை மனிதனுக்குக் கொடுத்த கொடையாகக் கருதலாம். இந்த கப்பா பைகஸ் கடல் பாசியிலிருந்து 250க்கும் அதிகமான பொருள்கள் தயாரிக்கப்படுவதாகச் சொல்கிறார்கள்.

குறிப்பாக, உணவு, குளிர்பானம், அழகுச் சாதனம், மூலிகைப் பொருட்கள், மருந்து, வாசனைத் திரவியங்கள், பல்பொடி, ஜெல்லி மிட்டாய் போன்றவற்றில் இந்த வகை பாசி பயன்படுத்தப்படுகிறது. இப்பாசியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்களுக்கு உலகச் சந்தையில் தேவை அதிகரித்துகொண்டே போகிறது. தேவைக்கு ஏற்ற அளவு உற்பத்தி இல்லாததால் பாசியின் விலையும் கூடுகிறது. அறிமுகமான கட்டத்தில் ஒரு கிலோ காய்ந்த பாசி 12 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது 20 ரூபாய். கப்பா பாசி வளர்ப்புக்கு ஆதரவு அதிகரித்திருப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

ராமேஸ்வரததில், ஆண்கள், பெண்கள் இருவரும் பாசி வளர்ப்பில் ஈடுபடுகிறார்கள். ஆண்கள் கடலுக்குப் போகும் நேரங்களில் பெண்கள் பாசியை வளர்க்கிறார்கள். துணை வருமானத்துக்கான சிறு தொழிலாக இது இருப்பதால், ராமேஸ்வரம் கிராமங்களில் கணிசமான குடும்பங்கள் பாசி வளர்ப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

மூங்கில் மிதவையைப் பயன்படுத்தி இந்தப் பாசியை வளர்க்கவேண்டும். கடலில் வைத்துதான் வளர்க்கவேண்டும் என்பதால் அதற்குத் தகுந்த சூழல் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

http://www.tamilpaper.net/?p=4529

Edited by akootha

  • தொடங்கியவர்

தொடர்ச்சி .....

கப்பா பைகஸ் கடல் பாசி வளர்ப்பின் பயன்கள்

  • எளிதாக யாரும் செய்யக்கூடிய லாபகரமான தொழில்.
  • கடலில் போட்ட 45 முதல் 60 நாட்களில் வளர்ந்து பயன் தருவதால் போட்ட முதலீட்டை விரைவில் பெற முடியும். தினந்தோறும் அறுவடை செய்வதால் தொடர்ந்து வருமானம் கிடைக்கும்.
  • கடல் நீரில் உள்ள தாதுப் பொருட்களை உறிஞ்சி சூரிய வெளிச்சத்தின் உதவியுடன் வளர்வதால் மிகக் குறைந்த செலவில் உற்பத்தி செய்யலாம். எளிதாகக் கிடைக்கும் மூங்கில், நைலான் கயிற்றை கொண்டு குறைந்த முதலீட்டில் பாசி வளர்ப்புக்கான மிதவை செய்து தொழில் தொடங்கலாம்.
  • இது தவிர வங்கிக் கடன் உதவியும் அரசு மானியக் கடனும் கிடைக்கிறது.
  • தன் உழைப்பால் சுய தொழில் செய்து முன்னேற விரும்பும் மக்களுக்கு இது ஓர் அருமையான வாய்ப்பு.
  • கடலில் இயற்கை சீற்றத்தினால் வரும் எதிர்பாராத இழப்பைச் சரிக்கட்ட காப்பீடு வசதியும் உண்டு.
  • உதாரணமாக ஒரு நபர் ரூ.10,000 முதலீட்டில் தொழில் செய்தால் ஓர் ஆண்டு இறுதியில் ரூ.60,000 முதல் 1 லட்சம் வரை லாபம் கிடைக்கிறது.

கப்பாபைகஸ் கடல் பாசி கடலில் வளர்ப்பதற்கான உகந்த கடல் சூழல்

  • ஆற்று நீர் கலக்காத கடல் பகுதி
  • இயற்கை சீற்றங்கள் அடிக்கடி வராத கடல் பகுதி
  • நல்ல நீரோட்டமான ஆழம் குறைந்த கடல் பகுதி
  • தேவையான வெப்பமும் சூரிய வெளிச்சமும் கிடைக்கும் பகுதி

கப்பாபைகஸ் கடல் பாசி கடலில் வளர்ப்பதற்கான மூங்கில் மிதவையின் விவரம்

  • மிதவையின் அளவு – 3மீ x 3மீ
  • ஒரு மிதவையில் இருபது குறுக்குக் கயிறுகள் கட்ட வேண்டும்.
  • ஒரு கயிற்றில் இருபது கண்ணிகள் இருக்க வேண்டும்.
  • ஒரு கண்ணியில் 150 கிராம் அளவுள்ள விதைப்பாசி சொருக வேண்டும். அப்படியானால் இருபது கண்ணியில் (அதாவது 1 கயிறு) 20 x 150 = 3 கிலோ விதைப்பாசி சொருக வேண்டும். ஆக ஒரு மிதவைக்கு 20 x 3 கிலோ = 60 கிலோ விதைப் பாசி தேவைப்படும்.
  • கடலில் போட்ட 45 முதல் 60 நாள்களில், நான்கில் இருந்து ஆறு மடங்கு வரை பாசி வளர்ச்சி அடையும். அதாவது 60 கிலோ விதைப்பாசியிலிருந்து, மிதவை ஒன்றுக்கு 240 முதல் 360 கிலோ வரை பாசியை அறுவடை செய்யலாம்.
  • ஒரு மிதவையில் குறைந்தபட்சம் 240 கிலோ அறுவடை செய்தாலே, விதைப் பாசி 60 கிலோ போக, 180 கிலோ உற்பத்தி கிடைக்கும். இதை இரண்டு நாட்கள் வெயிலில் காய வைத்தால், 18 கிலோவாகக் குறையும். காய்ந்த பாசி ஒரு கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. அப்படி பார்க்கும் போது 18 கிலோ காய்ந்த பாசி ரூ.360க்கு விற்பனையாகிறது. ஒரு நாள் ஒரு அறுவடையில் ஒரு மிதவைக்கே ரூ360 வருமானம் கிடைக்கிறது.
  • ஒரு நபருக்கு 40 மிதவை கொடுத்து, நாள் ஒன்றுக்கு ஒரு மிதவை அறுவடை செய்தால் ஒரு மாதத்திற்கு – 30 x ரூ. 360 =ரூ.10,800 மாத வருமானம் கிடைக்கிறது.
  • மழைக் காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் தவிர்த்து 9 மாதங்களில் 9 x ரூ 10,800 = ரூ.97,200 வருட வருமானம் கிடைக்கிறது.

மூங்கில் மிதவை தயார் செய்யத் தேவையான உபகரணங்கள்

  • 3 முதல் 4 அங்குலம் கொண்ட 5 மூங்கில்கள். (மிதவை செய்ய).
  • மிதவையைக் கடல் அலை அடித்து செல்லாமல் இருக்க ஐந்து பல் கொண்ட நங்கூரம் இரண்டு.
  • முங்கில்களைக் கட்ட நைலான் கயறு.
  • 400 விதை பாசி கோர்க்கும் கண்ணிகள்.
  • 6 மி.மீ தடிமன் கொண்ட 36மீ நீளமுள்ள நைலான் கயறு (மிதவை கட்ட).
  • மிதவையைச் சுற்றி கட்ட நைலான் மீன் வலை ஒரு கிலோ. (மீன்கள் கடிக்காமல் இருக்க)
  • 10 மி.மீ தடிமன் கொண்ட 28மீ நங்கூரம் கட்டும் கயிறு.
  • மிதவையை இணைத்துக் கட்ட 6 மி.மீ தடிமன் கொண்ட 5 மீ நீளமுள்ள நைலான் கயிறு.
  • கண்ணி ஒன்றுக்கு 150 கிராம் வீதம் 400 கண்ணிகளுக்கு 60 கிலோ விதைப் பாசி.

ஒரு மிதவைக்கு மேற்கண்ட பொருட்களை வாங்க ரூ.700 முதல் 800 வரை செலவாகும். ஒரு மிதவை அதிக பட்சமாக 2 ஆண்டுகள் வரை உழைக்கும். மேலும், அதிகக் காற்று, ஆக்ரோஷமான அலைகள் அடிக்கும் சமயத்தில் மூங்கில் மிதவைகள் அதிகமாக சேதமடைந்து பயனற்றதாக ஆகிவிடும். கடற்கரையில் பாசிகளைக் காயவைக்கும்போது மழை பெய்தால் அவற்றை நனையாமல் பாதுகாக்க வேண்டும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கடற்கரையிலே குடிசைகளை ஏற்படுத்தி பாசிகளை பாதுகாத்து வருகின்றனர்.

இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட்டாகவேண்டும். கப்பா பாசி வளர்ப்பைப் பற்றிய மாறுபட்ட கருத்துகளும் உள்ளன. இந்தப் பாசி பெப்சி நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டதால், பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகளைச் சந்தேகிப்பவர்களால் இப்பாசி வளர்ப்பும் சந்தேகிக்கப்படுகின்றது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்ததல்ல என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

மன்னார் வளைகுடா தேசியக் கடல் பூங்காவாக அறிவிக்கப்பட்டதால், கடலில் இயற்கையாகக் கிடைக்கும் பாசிகளைச் சேகரிப்பதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பபட்டுள்ளன. பாசி சேகரிப்பைத் தொழிலாகச் செய்து வந்த மீனவப் பெண்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. அவர்களுக்கு இருக்கும் ஒரே மாற்று வழி, பாசிகளைச் சேகரிக்க கடலுக்குள் செல்லாமல் பாதுகாப்பாக பாசி வளர்ப்பதே. கப்பா பாசி அந்த வாய்ப்பைத் தந்து, மீனவக் குடும்பங்களில் நம்பிக்கையை விதைத்துள்ளது.

http://www.tamilpaper.net/?p=4529

  • 1 month later...
  • தொடங்கியவர்

அமெரிக்காவின் பலதேச நிறுவனமான 'டோல்' இலங்கையில் செய்யவிருந்த முதலீட்டை நிறுத்தியது

இதற்கு அந்த நிறுவனம் மீது விலங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க இருந்த இடத்தில் தாம் மேற்கொள்ளவிருந்த பழச்செய்கை நிறுத்தப்பட்டதாக' கூறுகின்ற செய்தியை மறுத்துள்ளது.

US multinational Dole scraps Sri Lanka banana plans

In a statement to the BBC, Dole said it had "ceased all commercial operations" on the land and was vacating it. It denied earlier that the plantation would have been located on "land designated as forest land". "The Department of Wildlife Conservation has been requested to visit the area for their confirmation," the statement said.

http://www.bbc.co.uk/news/world-asia-15845457

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

மட்டக்களப்பு மரமுந்திரிகை சாகுபடி வீழ்ச்சி

இலங்கையில் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் 2010 - 2011ம் ஆண்டுகளில் மர முந்திரிகை சாகுபடியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் 2010 - 2011ம் ஆண்டுகளில் மர முந்திரிகை சாகுபடியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மட்டக்களப்பு ஏறாவுர் மற்றும் கோட்டைக் கல்லாறு பிரதேசங்களில் மரமுந்திரிகை பதனிடல்இ விற்பனையை தமது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரச மரமுந்திரிகைக் கூட்டுத்தாபன தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

மர முந்திரிகை சாகுபடியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக பதனிடப்பட்ட மரமுந்திரிகைப் பருப்பின் விலையும் தற்போது கிலோ ரூபா 1800 - 2000 வரை உள்ளுர் சந்தையில் விற்பனையாகின்றது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த விலை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இம்மாவட்டங்களில் 2010 -2011ம் ஆண்டுகளில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாகவே மரமுந்திரிகைச் சாகுபடியில் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மர முந்திரிகைக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய இணைப்பாளர் டேவிட் நிதர்சன் கூறுகின்றார்

இம் மாவட்டங்களில் 40 ஆயிரம் ஏக்கர் மர முந்திரிகைச் செய்கைக்கு ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் 20 சத வீதமான நிலப்பரப்பிலேயே செய்கை பண்ணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

வழமையாக வருடாந்தம் 75 தொடக்கம் 90 மெற்றிக் தொன்கள் அளவில் இருந்த மர முந்திரிகைப் பருப்பு உற்பத்திஇ இந்த ஆண்டு 40 மெற்றிக் தொன் ஆக உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2011/12/111204_ceshewbatti.shtml

  • 1 month later...
  • தொடங்கியவர்

குடாநாட்டின் உள்ளூர் உற்பத்தியும் ஏற்றுமதி சந்தைப்படுத்தல் வாய்ப்புக்களும்

"உப்புக்கும் தண்ணீருக்குமே நாதியில்லாத நிலையில் குடாநாட்டின் உற்பத்தி தற்போது காணப்டுவதாக" யாழ்மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்பேளனத்தின் தலைவர் பூரணச்சந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

“ஆனையிறவில் உற்பத்தி செய்யபட்ட உப்பினை இலங்கையின் எல்லா மாவட்டங்களிற்கும் விநியோகித்து வந்த யாழ்ப்பாணம், இந்தியாவில் இருந்து உப்பை இறக்குமதி செய்து நுகருகின்ற நிலைக்கு வந்துள்ளதுடன் தற்போது குடிநீரும் இறக்குமதி செய்தே நுகரப்படுகின்றது. இது யாழ்ப்பாணத்தின் நாதியற்ற நிலையினை வெளிப்படுத்துகின்றது” என்று பூரணச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

மறுபுறத்தில், "உள்ளூர் கமநல சேவையில் உள்ள 100 வெற்றிடங்களிற்கு 11,000 படித்த இளைஞர் யுவதிகளிடமிருந்து விண்ணப்பம் கிடைத்தாக" யாழ்மாவட்டத்தின் செயலாளர் இமெல்டா சுகுமாரும் அண்மையில் கூறியுள்ளார். இவற்றை கவணத்தில் கொண்டு “குடாநாட்டில் தற்போது சுமார் 10% - 20% இடைப்படதான அளவு உயர் வேலையின்மை நிலவுவதாக” பொருளாதார ஆய்வாளர் முத்துகிருஷ்னன் சர்வானந்தா தெரிவித்துள்ளார். இவற்றுக்கும் மேலாக ,"குடாநாடு உட்பட வடக்கு மாகணத்தில் உள்ள மக்களில் சுமார் 50% பேர் இன்னும் வறியவர்களாகவே உள்ளனர்" என உலக உணவு நிறுவனம் (FAO) கடந்த மாதம் தனது ஆய்வில் சுட்டிகாட்டியிருந்தது.

இவையனைத்தும் குடாநாட்டின் தற்போது உள்ள உள்ளூர் உற்பத்திகளின் கையாளாகாதனத்தினையே வெளிப்படுத்துகின்றன. எனினும் 1980கள் வரை யாழ்ப்பாணம் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் (GDP) வடகிழக்கு மாகணங்களிலேயே முதல் தர மாவட்டமாகவும் இலங்கையில் முன்னிலை மாவட்டமாகவும் பங்களிப்பு நல்கி வந்தது. கடந்த மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்ற ஆயுதப் போராட்டமானது பல்வேறு நிலைகளிலும் குடாநாட்டின் உற்பத்தி இயங்கு நிலையினை பாதித்து வந்ததுடன், தற்போது யுத்தம் ஓய்ந்துள்ள நிலையிலும் கூடவிரைவாக மீள முடியாத நிலையில் பல்வேறு சமூக பொருளாதார தடைகளை கொண்டுள்ளது.

Edited by akootha

  • தொடங்கியவர்

குடாநாட்டின் வளங்கள்

1025 Sq. Km பரப்பளவு கொண்ட யாழ் மாவட்டத்தில், 34.2% (98,600 ha) நிலமானது நெல் மற்றும் மேட்டு நில பயிர் செய்கைக்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. எனினும் 44.5% நிலங்கள் பயிர் செய்கை அல்லது குடியிருப்பிற்கு பொருந்தாத நிலங்களாக (மணல் வெளிகள், கட்டாந் தரைகள், உவர் நிலங்கள்) காணப்படுகின்றன.

குடாநாடு என்ற வகையில் மூன்று பக்கமும் சூழ்ந்து காணப்படும் கடல் நீரானது உவர் நீர் மீன் பிடிக்கும், உள்ளூரில் காணப்படும் நண்ணீர் ஏரிகள் (45.7 Sq.Km) விவசாயம் மற்றும் நண்ணீர் மீன் பிடிக்கும் உகந்தனவாக உள்ளன.

இலங்கையிலேயே சிறந்த மனித வளத்தினை வெளியீடு செய்யும் மாவட்டமாக 1980கள் வரையில் யாழ்மாவட்டம் காணப்பட்ட போதும் தற்போது இதில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாகவும் மாறியுள்ளது. தற்போது சுமார் 650, 000 மக்கள் தொகையினை யாழ்மாவட்டம் கொண்டுள்ளதுடன், 1981ம் ஆண்டு கணக்கெடுப்பின் போது 831, 800 பேர் காணப்பட்டனர். அப்போது, “2006 ம் ஆண்டளவில் ஒரு மில்லியனுக்கும் மேலான மக்கள் தொகையினை குடாநாடு கொண்டிருந்திருக்கும்” என யாழ்மாவட்ட செயலகத்தின் புள்ளி விபரக் கிளை எதிர்வு கூறியிருந்தது.

எனினும் இதனை இடப்பெயர்வு, புலப்பெயர்வு, வேலையின்மை, வறுமை மற்றும் திருமணமாகும் வயதெல்லையிலான உயர்வு போன்றன குடாநாட்டின் சனத்தொகையினை ஐந்து தொடக்கம் ஆறு இலட்சத்திற்குள் மட்டுப்படுத்தின.

பிரதேசம் ஒன்றில் காணப்படும் வளங்களின் கிடைப்பனவு மற்றும் பயன்பாட்டு தன்மைகளிற்கு ஏற்ப உள்ளூர் உற்பத்திகளின் தரம் மற்றும் அளவு நிலைகள் வேறுபடும். இத்தகைய வளங்களின் கிடைப்பனவு மற்றும் பயன்பாட்டில் ஏற்படும் தடைகள், உற்பத்தி - வேலைவாய்ப்பு - வருமானம் என்பனவற்றை பாதித்து குறித்த சமூகத்தில் வறுமையை தோற்றுவிக்கின்றது.

மறுபுறத்தில், வளங்களின் பயன்பாடு தொடர்பாக அதிகார வர்க்கம் ஒன்றினால் காட்டப்படுகின்ற பாரபட்ஷ நிலமையானது, குறித்த சமூகத்தில் வருமான ஏற்றத் தாழ்வுகளை அதிகரித்து ஒப்பீட்டு வறுமையை தோற்றுவிக்கின்றது.

இவையனைத்தும் சேர்ந்து குறித்த சமூகத்தின் சமூக பொருளாதார சீரழிவுகளை தோற்றுவிப்பதுடன் எல்லா நிலைகளிலும் தங்கியே வாழும் நிலையினை உருவாக்குகின்றன. இதனையே கடந்த மூன்று தசாப்த கால யுத்தம் குடாநாடு உட்பட இலங்கையின் வடகிழக்கு மாகணங்களில் ஏற்படுத்தியுள்ளது.

Edited by akootha

  • தொடங்கியவர்

குடாநாட்டின் உள்ளூர் உற்பத்திகள்

விவசாய உற்பத்தி துறையில் 65,411 குடும்பங்கள் ஈடுபட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலகத்தின் 2010 ம் ஆண்டுக்கான புள்ளிவிபர கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிலை, முந்திரிகை, சின்ன வெங்காயம், மிளகாய், உருளைக்கிழங்கு, வாழைப் பழம் மற்றும் பணம் பொருள் உற்பத்திகள் ஏற்றுமதி தரத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வந்ததுடன் ஏனைய மரக்கறி மற்றும் தாணியங்கள், பழவகைகளும் உள்ளூர் தேவைக்காக உற்பத்தி செய்யப்பட்டு தன்னிறைவு கண்டிருந்தன. குடாநாட்டின் நெல் உற்பத்தியானது உள்ளூர் தேவையில் 12% பூர்த்தி செய்திருந்தது.

மேலும் உள்ளூர் தேவையில் 80% ஐ பூர்த்தி செய்ய கூடியதாக இறைச்சியும் 50% ஐ பூர்த்தி செய்யக் கூடியதாக பாலும் உற்பத்தி செய்யப்படுவதாக யாழ்மாவட்ட செயலகத்தின் புள்ளிவிபரக் கிளை தெரிவிக்கின்றது.

எனினும் 1980களில் மொத்த தேசிய கால்நடை உற்பத்தியில் 7% கோழிகளையும் 10% மாடுகளையும் 20% ஆடுகளையும் 60% செம்மறி ஆடுகளையும் யாழ்மாவட்டமே உற்பத்தி செய்ததாக புள்ளிவிபரக் கிளையின் கையேட்டில் இருந்து தெரிய வருகின்றது. எனினும் யுத்தம் தற்போது இந்த நிலையை மாற்றியமைத்துள்ளதுடன் கால்நடை வளர்ப்பு கைவிடும் நிலையில் காணப்படுகின்றது. இதேபோல 1983 ல் யாழ்மாவட்டமானது இலங்கையின் மொத்த மீன் உற்பத்தியில் 20% (48,677 Mt), கருவாட்டு உற்பத்தியில் 57% (5,484 Mt) என்ற அளவில் பங்களிப்பு நல்கியிருந்தது. இதனால் 24,839 பேர் நேரடியாக வேலை வாய்ப்பினை பெற்றிருந்தனர். எனினும் பாதுகாப்பு காரணங்களிற்காக அரசு பல்வேறு தடைகளை மீன் பிடி தொழிலுக்கு ஏற்படுத்தியதுடன் குறிப்பாக, மீன் பிடி கடல் எல்லை, நேரம், படகின் வலு, மீனவர் எண்ணிக்கை என்பவற்றில் ஏற்படுத்திய கட்டுப்பாடுகள் மீன் உற்பத்தியை குடாநாட்டில் வீழ்ச்சியடைய செய்துள்ளது. 2009 ல் 2% - 3% (11,978 Mt) என்ற அளவில் வீழ்ச்சி கண்டதுடன் தற்போது மீன்பிடியில் உள்ள தடைகள் அகற்றப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

குடாநாட்டின் கைத்தெழில் துறையை எடுத்துக் கொண்டால், இங்கு பாரிய கைத்தொழில் முயற்சிகளாக அரச முயற்சியில் அமைந்த சீமெந்து கூட்டுத்தாபனம் மட்டுமே காணப்பட்டதுடன் இதனையும் 1990 ல் அரசு மூடிவிட்டது. நடுத்தர கைத்தொழில் முயற்சிகளாக அலுமினிய உலோக தொழிற்சாலைகள்,

பனிக்கட்டி தொழிற்சாலை, கடல் உணவு பதனிடும் தொழிற்சாலை, படகு கட்டுதல், கனியநார் கூரைதகடு உற்பத்தி, கண்ணாடி தொழிற்சாலை, வடிசாலை, மின்தறி, உப்பளங்கள், கால்நடை தீவின உற்பத்தி, பனம் பொருள் உற்பத்தி, சலவை கட்டி, கடதாசி, ஆடைக் கைத்தொழிற் சாலைகள் போன்றன காணப்பட்டதுடன் இவற்றில் ஒரு சில தற்போது சிறு தொழில் அல்லது குடிசைக் கைத்தெழில் முயற்ச்சி என்ற நிலையிலேயே இயங்குகின்றன.

1983 ல் யாழ்மாவட்டத்தில் 3,121 உற்பத்தி தொழிற்சாலைகள் காணப்பட்டதுடன் இவை 18,553 பேருக்கு நேரடியான வேலைவாய்ப்பினை வழங்கி வந்தன. எனினும் தொடர்ந்து வந்த யுத்தம் 1997 ல் 3,101 உற்பத்தி தொழிற்சாலைகள் என வீழ்ச்சி காண்டதுடன் இவற்றில் 9,879 பேருக்கே நேரடி வேலை வாய்ப்பு கிடைத்ததாக மாவட்ட செயலகத்தின் புள்ளிவிபரக் கிளை தரவுகள் காட்டுகின்றன. இவ்வாறு படிப்படியாக வீழ்ச்சி கண்டு வந்த விவசாயம்,கால்நடை, மீன்பிடி மற்றும் கைத்தொழில் துறையானது இன்னும் வழமை மாறாத நிலையில், மந்தமாக நகர்வதோடு இதற்கு பல சமூக பொருளாதார காரணிகளும் தடையாக காணப்படுகின்றன. விசேடமாக குடாநாட்டின் உற்பத்திகள் தற்போது உள்ளூர் தேவை கருதியே இடம்பெறுவதோடு சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்தி ஏற்றுமதி தரத்திலான உற்பத்திகளுக்கு அரசு உத்தரவாதம் அளிப்பதுடன் ஊக்கமளிக்க வேண்டியும் உள்ளது.

  • தொடங்கியவர்

குடாநாட்டின் ஏற்றுமதி, சந்தை வாய்ப்புக்கள்

ஏ9 வீதி தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வாழை, மாம்பழம், முந்திரிகை, புகையிலை, சின்ன வெங்காயம், மிளகாய், கத்தரி, கோவா, பணம் பொருட்கள் போன்ற விவசாய உற்பத்திகள் தென்பகுதி சந்தைகளிற்காக குடாநாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. எனினும் கூட குடாநாட்டின் உள்ளூர் உற்பத்திகள், தற்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு தொழில் அல்லது குடிசைக் கைத்தொழில் முயற்ச்சி என்ற நிலையில் செயல்பட்டு வருவதோடு இவை போதிய முதலீடு, தொழில் நுட்பம், கீழ் கட்டுமான வசதிகள் மற்றும் ஒழுங்குபடுத்திய சந்தை வாய்ப்பு போன்றன இல்லாத நிலையில் ஏற்றுமதி தரமற்றவையாகவும் உள்ளூர் தேவையை மட்டும் கருத்தில் கொண்டு பெரும்பாலன உற்பத்திகள் இடம்பெறுகின்றன.

தற்போது குடாநாட்டில் வளங்களும் வாய்ப்புக்களும் சிறப்பாகக் காணப்படும் துறைகள் தொடர்பாக முதலீட்டுச் சபையின் யாழ்.பிராந்திய பிரதிப்பணிப்பாளர் ஆர்.ஜெயமானன் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தார். “விவசாயம் - மீன்பிடி, சுற்றுலா - விடுதிகள், வீடமைப்பு, மருத்துவ - சுகாதார கவனிப்பு சேவைகள், தகவல் தொழில் நுட்பம், கல்விச் சேவைகள் ஆகியவற்றுக்கு அதிக கேள்வியும், வளங்களின் உதவியும் யாழ்ப்பாணத்தில் தாராளமாக உள்ளதாகவும்” அவர் தெரிவித்தார். சாவகச்சேரி, கைதடி, கோப்பாய் போன்ற பிரதேசங்கள் நடுத்தர வகுப்பு மக்களிற்கான தொடர்மாடிக் கட்டடங்கள் அமைப்பதற்குப் பொருத்தமாக உள்ளன.

யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் மட்டுமே தரமான மருத்துவ, சுகாதாரச் சேவையை பெற முடிகின்றது. இங்கு உள்ள மிகைக் கேள்வியை கருத்தில் கொண்டு தனியாரும் அதில் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது. இவற்றுக்கு மேலாக யாழ். பல்கலைக்கழகம், தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களால் வெளியீடு செய்யப்படும் திறமையான மனிதவளத்தை உள்வாங்கிக் கொள்வதற்கு தகவல் தொழில்நுட்பம், கல்விச் சேவை துறைகளிலும் நல்ல வாய்ப்புள்ளது எனவும் ஜெயமானன் சுட்டிகாட்டியுள்ளார்.

தவிரவும் தற்போது குடாநாட்டில் அதிகளவு வேலை வாய்பு மற்றும் வருமானத்தினை ஈட்டித் தரும் துறைகளாக கட்டிட நிர்மான துறையும் சுற்றுலாவும் அதனுடன் இணைந்த உணவு - விடுதிகள், போக்குவரத்து துறைகள் மற்றும் நிதிச் சேவை நிறுவனங்கள் காணப்படுகின்றன. எனினும் இந்த துறைகளில் குடாநாட்டு தொழில் முயற்சியாளர்கள் அதிகளவில் ஈடுபடாமையானது, வருமான ஏற்றத்தாழ்வு மற்றும் வளச் சுறண்டல் போன்ற பொருளாதார பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில் முகம் கொடுக்க வேண்டிய நிலையில் குடாநாட்டின் பொருளாதாரம் நகர்கின்றது.

  • தொடங்கியவர்

குடாநாட்டு உற்பத்தியில் உள்ள சவால்கள்

இதேவேளை தென் பகுதியில் சந்தை வாய்ப்பினை பெறும் வகையில் ஏ9 வீதி திறந்து வைக்கப்பட்டுள்ள போதும் இது ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை வாய்ப்பாக அமையாத காரணத்தினால் குடாநாட்டு முயற்சிகள் பல சந்தர்பங்களில் சோர்வடைகின்றன. எடுத்துக்காட்டாக, குடாநாட்டில் உருளைக் கிழங்கு அறுடை காலத்திலேயே அதிகளவான உருளைக்கிழங்குகள் தென்பகுதியில் இருந்து தங்கு தடையின்றி குடாநாட்டிற்கு இறக்குமதியாகின்றன. இதனால் உரிய விலையினை பெற முடிவதில்லை என குடாநாட்டு விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இவை தவிர குடாநாட்டின் தொழில் முயற்சிகள் நிறுவனமயம் ஆக்கப்பட்டு இடம்பெறாமை, ஊழியர்களிற்கு நவீன தொழிற் பயிற்ச்சி அளிக்கும் நிறுவனங்கள் போதாமை, உற்பத்தி சந்தை வாய்ப்புக்கள் தொடர்பான ஆய்வு நிறுவனங்களின் செயற்பாடின்மை, வங்கிகளின் தொழில் முயற்சி கடன்களில் காணப்படும் குறைபாடுகள், வலு குறைந்த மின்சாரம், வீதி போன்ற உட்கட்டுமான வசதிகளில் காணப்படும் சீரற்ற தன்மை என்பவற்றுடன் குடாநாட்டு வளங்களின் கிடைப்பனவு மற்றும் பயன்பாடு தொடர்பில் அரச இயந்திரம் காட்டி வருகின்ற தடைகள், பாரபட்ஷம், கெடுபிடிகள் போன்றன உள்ளூர் உற்பத்திகள் உற்சாகமாகவும் ஏற்றுமதி தரத்திலும் இடம்பெறாமைக்கு காரணமாக அமைகின்றன.

தொகுப்பு

என்.சிவரூபன்

http://184.107.230.170/~onlineut/Business/index.php?view=introduction_news_more&id=24

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வடக்கு சிவில் நிர்வாகம் இராணுவத் தலையீடு இருக்கக் கூடாது

ஆயுதப் பயிற்சியை மாத்திரம் உள்வாங்கியுள்ள இராணுவத்தினர் வட பகுதியில் சிவில் நிர்வாகத்தில் தலையிடுவதனை தவிர்க்க வேண்டுமெனவும் சமூக அபிவிருத்திக்குரிய பயிற்சி இராணுவத்தினருக்கு வழங்கப்படவில்லையெனவும் குறிப்பிட்டுள்ள சர்வதேச பொருளாதார நிபுணரான கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, வட பகுதியில் குறிப்பிடத்தக்க அபிவிருத்திகள் காணப்பட்டாலும் அது சவால்கள் நிறைந்ததாக உள்ளதெனவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் யாழ்.மாவட்டத்தில் காணப்படும் பொருளாதார வளர்ச்சி வீதமானது நாட்டின் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மனிதநேய அமைப்புக்களின் கூட்டு நிறுவனமான சி.எச்.ஏ.யின் ஏற்பாட்டில் செடக் நிறுவன கேட்போர் கூடத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பொதுநலவாய செயலகத்தின் பொருளாதார விவகாரப் பிரிவின் முன்னாள் செயலாளரான டாக்டர் இந்திரஜித் குமாரசுவாமி இவ்வாறு தெரிவித்தார்.

போருக்கு பின்னரான நல்லிணக்கத்தில் பொருளாதார தோற்றப்பாடுகள் எனும் தலைப்பில் டாக்டர் இந்திரஜித் தொடர்ந்து தெரிவிக்கையில்;

நாட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் பொருளாதாரம் அபிவிருத்திக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

எமது நாட்டைப் பொறுத்தவரையில் தெற்கில் இருதடவைகள் இடம்பெற்ற கொடூரமான கலவரங்களும் வடக்கில் இடம்பெற்ற வலிமிக்க யுத்தமும் எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் பாரிய தடைகளாக இருந்துள்ளன.

இந்த இரு தடைகளும் தோன்றுவதற்கு இளைஞர்கள் தான் முக்கிய காரணம். ஏனெனில், யுத்தமும் கலவரமும் இளைய சமுதாயத்தினரிலிருந்தே தோற்றம் பெற்றது.

இளைஞர்கள் மத்தியில் இவ்வாறான உணர்வு தோன்றி அது கலவரமாகவும் யுத்தமாகவும் மாற்றமடைந்தமைக்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிவது மீண்டும் அதற்கான சூழல் உருவாவதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உண்டு.

குறிப்பாக பல்வேறு விடயங்களில் காணப்பட்ட பாரபட்சங்கள் மற்றும் சமத்துவமின்மை ஆகியவையே இளைஞரின் மத்தியில் அதிருப்தியின்மையைத் தோற்றுவித்தது.

யுத்தம் மற்றும் கலவரங்களின் போதான வன்முறைகளில் பல மில்லியன் கணக்கான சொத்துக்கள் நாசமாக்கப்பட்டுள்ளன. அத்துடன் பல புலமையாளர்கள் உள்ளிட்ட பெறுமதிமிக்க உயிரிழப்புகள் இடம்பெற்றது.

இதேபோன்ற காரணங்களும் எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பாரிய தடைகளை ஏற்படுத்தியது.

இலங்கையைப் பொறுத்தவரையில் சமூக அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்பன திருப்திகரமானதாகவே காணப்படுகின்றது. அதேவேளை பொருளாதார வலையமைப்பு பரந்து காணப்படுகின்றது.

1950 களின் பிற்பகுதியில் சமூக அபிவிருத்தியும் முதலீட்டு அபிவிருத்தியும் சமாந்தரமாக காணப்பட்டிருந்தாலும் சில விடயங்களில் தமிழ் மக்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டார்கள். உதாரணமாக அரச நிறுவனங்களில் பணிப்புறக்கணிப்பு போன்றவற்றினை குறிப்பிட்டுக் கொள்ளலாம்.

இவ்விடயங்களில் தமிழர்கள் உள்வாங்கப்படாமை மிகவும் சிக்கலான விடயமாகும்.

அரசாங்கம் தனது சொந்த மக்களின் அபிலாஷைகளைத் தீர்க்க முடியாதுவிடின் அந்த அரசாங்கத்தினால் உரிய முறையில் ஆட்சி நடத்த முடியாது.

போருக்குப் பின்னரான இலங்கையின் பொருளாதார வளர்ச்சியினை எடுத்துக் கொண்டால் சகல துறைகளிலும் பொருளாதார மீட்சியினைக் காண முடிகின்றது. குறிப்பாக வடக்கினை எடுத்துக் கொண்டால் போருக்குப் பின்னர் 59 வீத பொருளாதார வளர்ச்சியினை காண முடிகின்றது. இதனைத் தேசிய பொருளாதார வளர்ச்சியிலும் சம அளவிலான பங்களிப்பினைக் காண முடிகின்றது.

வட பகுதியில் குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் போருக்குப் பின்னர் வங்கிகளின் எண்ணிக்கை அங்கு சடுதியான அதிகரிப்பைக் கொண்டுள்ளது. வங்கியியல் சேவைகள் யாழ்.மாவட்டத்தினைப் பொறுத்த வரையில் மிகவும் திருப்திகரமானதாகவே உள்ளன.

ஆனால்,சொத்து அபிவிருத்தி ரீதியில் நோக்கினால் அத்துறையில் குறிப்பிடத்தக்களவிலான வளர்ச்சியையே காண முடிகின்றது.

இதேவேளை சுற்றுலாத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையில் வடக்கில் மாற்றங்கள் இருந்தாலும் இன்னமும் அவை வளர்ச்சியடைய வேண்டிய நிலையில் காணப்படுகிறது.

வட பகுதியின் பூரணமான அபிவிருத்திக்குரிய ஆக்கபூர்வமான தோற்றப்பாடுகள் காணப்பட்டாலும் சவால்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. வடபகுதியின் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடு காணப்படுகின்றது. இராணுவத்தினர் சிவில் நிர்வாக கடமைகளில் ஈடுபடுவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இராணுவத்தினரைச் சமூக அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுத்த முடியாது. காரணம் அவர்களுக்கு பொதுமக்களுடன் தொடர்புகளைப் பேணுவதற்கோ அல்லது சமூக அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கோ உரிய பயிற்சி வழங்கப்படவில்லை. மாறாக ஆயுதப் பயிற்சி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் வடக்கில் நடைபெறும் அபிவிருத்திப் பணிகள் முன்னேற்றகரமானதாக இருந்தாலும் அதனைத் துரிதப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. வட மாகாணத்தைப் பொறுத்த வரையில் அது அபிவிருத்திப் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. அப்பகுதியின் அபிவிருத்திக்கு அரசாங்கம் மட்டும்தான் செயற்பட வேண்டிய தேவை இல்லை. தனியார் துறையும் அரசுடன் இணைந்து குறிப்பிடத்தக்களவிலான பங்களிப்பினை வழங்க வேண்டும். குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் மக்களின் பங்களிப்பு முக்கியமானது.

யாழ்.மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் கல்வியறிவு வீதம் மற்றும் மனித வளங்கள் மிகவும் திருப்திகரமானதாக உள்ளது. ஆனால், புலமையாளர்களும் கல்வியியலாளர்களும் தமது அறிவு முதிர்ச்சியால் தெற்கிற்கு இடம்பெயர்கின்றனர். அல்லது வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிகின்றனர். இவ்விடயம் மிகவும் முக்கியமான பிரச்சினையாகும். இவ்வாறான நிலைமை மாற்றமடைய வேண்டும்.

வடபகுதியில் மற்றுமொரு பிரச்சினையாக காணிப் பிரச்சினை உருவெடுத்துள்ளது. காணிப் பிரச்சினை மிகவும் சிக்கல்கள் நிறைந்த பிரச்சினையாகும். இதனைத் தீர்த்துக் கொள்வதற்கு வடக்கில் காணி வங்கி உருவாக்கப்பட வேண்டும்.

அப்பொழுதுதான் காணிப் பிரச்சினைகள் சுமுகமாகத் தீர்க்க முடியும் என்பதுடன் காணிகள் குறித்த தரவினையும் பேணிப் பாதுகாக்க முடியும் எனத் தெரிவித்தார்.

http://www.thinakkural.com/news/all-news/jaffna/9971-2012-01-26-00-39-37.html

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

யாழில் பெரியளவில் கடற்றொழில் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும்: ஆர்.இரவீந்திரன்

யாழ்ப்பாணத்தில் பெரிய அளவிலான கடற்றொழில் தொழிற்சாலை அமைக்கப்படுவதன் மூலமே யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ். மாவட்ட நீரியல்வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ஆர்.இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். வடபிராந்திய நீரியல்வளத் திணைக்கள அலுவலகத்தில் ஊடகவியலாளர்களுடன் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற ஜஸ் கட்டிகளின் விற்பனை விலை கூடுதலாகக் காணப்படுவது தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் சிறிய அளவில் ஜஸ் கட்டிகள் உற்பத்தி செய்யப்படுகின்ற காரணத்தினால் விலைகள் அதிகரித்து காணப்படுகின்றன. கொழும்பு, நீர்கொழும்பு பகுதிகளில் 50 கிலோ ஐஸ் கட்டி 130 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஆனால் யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற 25 கிலோ ஐஸ் கட்டியானது 150 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. குறைந்தளவான உற்பத்தியால் உற்பத்தி செலவு அதிகரித்து இருப்பதே இதற்குரிய காரணம் ஆகும். பெரிய அளவிலான ஐஸ் கட்டி உற்பத்தியை மேற்கொள்வதன் மூலமே மலிவான விலையில் விற்க முடியும் என்றார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/36128-2012-02-17-04-23-46.html

  • 1 month later...
  • தொடங்கியவர்

நட்டப்படும் விவசாயம்...

யாழ்ப்பாணத்தில் மரக்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமது உற்பத்திகளுக்கு நிறந்தர விலையொன்றை வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரிடம் அறிவித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

V01(17).jpg

V03(5).jpg

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

இலங்கையில் பனடோல் உற்பத்தி தொழிற்சாலை திறந்து வைப்பு

கிளாசோஸ்மித்கிளைன் (ஜிஎஸ்கே) நிறுவனத்தின் மூலம் 217 மில்லியன் ரூபா முதலீட்டில் இலங்கையில் முதலாவது பனடோல் வில்லைகள் உற்பத்தி தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதி நவீன வசதிகள் கொண்டமைந்த இந்த தொழிற்சாலையை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தனர். இரத்மலானை பகுதியில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையின் மூலம் பனடோல் வில்லைகள் உற்பத்தி செய்யப்படவுள்ளதுடன், இதர வில்லைகளை உற்பத்தி செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த தொழிற்சாலையானது இதுவரையில் இலங்கையின் மருந்தாக்கல் துறையில் ஆகக்கூடிய முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள திட்டங்களில் ஒன்றாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தொழிற்சாலையானது, ஜிஎஸ்கே நிறுவனத்தின் சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைவாக, அதியுயர் தொழில்நுட்ப வசதிகள் கொண்டமைந்துள்ளதுடன், விசேடமாக பயிற்றுவிக்கப்பட்ட ஊழியர்களைக் கொண்டியங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்த தொழிற்சாலையின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பனடோல் வில்லைகளின் தரம், அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பனடோல் வில்லைகளின் தரத்துக்கு நிகரானதாக அமைந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளாசோஸ்மித்கிளைன் (ஜிஎஸ்கே) பற்றி :

கிளாசோஸ்மித்கிளைன் (ஜிஎஸ்கே) நிறுவனம், உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற மருந்தாக்கல் துறை மற்றும் சுகாதார பராமரிப்பு துறை சார்ந்த நிறுவனமாகும். சுமார் 117 நாடுகளில் தனது செயற்பாடுகளை இந்நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது.

இலங்கையில் ஜிஎஸ்கே நிறுவனம், 60 ஆண்டுகளுக்கு மேலாக தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்ற வர்த்தக நாமங்களான பனடோல் (பரசிடமோல் வர்க்கம்), ஹோர்லிக்ஸ், வீவா, ஹலிபொரேன்ஜ் மற்றும் ஈனோ, அயடெக்ஸ், சென்சோடைன் போன்றனவற்றுடன் நோய்த்தடுப்பு வக்சீன் வகைகளும் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் உள்ளடங்குகின்றன.

http://www.tamilmirror.lk/வணிகம்/39875-2012-04-24-13-48-36.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ நிதியமைச்சர் மற்றும் உலக பொருளாதார நிபுணரின் ஆக்க பூர்வமான திரி.. நிபுணர் சொல்வதை கேட்டு அதன் படி நடங்கப்பா அப்பதான் விளங்கமுடியும்..!

  • 2 months later...
  • தொடங்கியவர்

[size=2]

[size=4]யாழ்.மாவட்டத்தில் தற்போது மாதாந்தம் சராசரியாக 48 லட்சத்து 81 ஆயிரத்து 800 லீற்றர் டீசலும், 16 லட்சத்து 18 ஆயிரத்து 100 லீற்றர் பெற்றோலும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவித்தன.[/size][/size]

[size=2]

[size=4]இதேவேளை மண்ணெண்ணெயின் பாவனை தற்போது யாழ்ப்பாணத்தில் குறைந்து வருவதாகவும், மாதாந்தம் சராசரியாக 10 லட்சத்து 58 ஆயிரத்து 200 லீற்றர் மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறின.[/size][/size]

[size=2]

[size=4]யாழ்.மாவட்டத்தில் தற்போது பெற்றோல், டீசல் ஆகியவற்றின் நுகர்வு வெகுவாக அதிகரித்துச் செல்கிறது. யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துள்ள வாகனப் பாவனையே எரிபொருள் நுகர்வு அதிகரிப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.[/size][/size]

[size=2]

[size=4]யாழ்ப்பாணத்தில் தற்போது மோட்டார் சைக்கிள்களைக் கொள்வனவு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் கார் மற்றும் சொகுசு வாகனங்களின் கொள்வனவும் அதிகரித்துள்ளது. அத்துடன் வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக எரிபொருள்களின் நுகர்வும் இங்கு அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.[/size][/size]

[size=2]

[size=4]2010 ஆம் ஆண்டு மாதாந்தம் அண்ணளவாக 10 லட்சம் லீற்றர் பெற்றோலும், 40 லட்சம் லீற்றர் டீசலும், 12 லட்சம் லீற்றர் மண்ணெண்ணெயும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2011 ஆம் ஆண்டு 13 லட்சம் லீற்றர் பெற்றோலும், 46 லட்சம் லீற்றர் டீசலும், 11 லட்சம் லீற்றர் மண்ணெண்ணெயும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.[/size][/size]

[size=2]

[size=4]எனினும் பெற்றோல், டீசல் ஆகியவை இந்த ஆண்டுத் தொடக்கத்தில் அதிகரித்துள்ளன. [/size][/size][size=2]

[size=4]பெற்றோல் சுமார் 3 லட்சம் லீற்றர்களாலும், டீசல் 2 லட்சம் லீற்றர்களாலும் அதிகரித்துள்ளன. ஆயினும் மண்ணெண்ணெய் விற்பனை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 50 ஆயிரம் லீற்றர்களால் குறைந்துள்ளது.[/size][/size]

[size=2]

[size=4]கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையான 6 மாத காலப்பகுதியில் யாழ். மாவட்டத்தில் 97 லட்சத்து 8 ஆயிரத்து 600 லீற்றர் பெற்றோலும், 2கோடி 92 லட்சத்து 90 ஆயிரத்து 800 லீற்றர் டீசலும், 63 லட்சத்து 49 ஆயிரத்து 200 லீற்றர் மண்ணெண்ணெயும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.[/size][/size]

[size=2]

http://onlineuthayan.com/News_More.php?id=409961249923516306[/size]

  • தொடங்கியவர்

[size=5]ரூபா 600 மில்லியன் செலவில் களஞ்சியசாலை வசதிகளை நிர்மாணிக்கவுள்ள எக்ஸ்போலங்கா[/size]

[size=4]விரைவாக அதிகரித்து வரும் எக்ஸ்போலங்கா குழுமத்தின் வாடிக்கையாளர் தளத்திற்கு மேலும் பெறுமதிசேர் உபகரண வழங்கல் சேவைகளை வழங்கும் பொருட்டு, மிகவும் முன்னேற்றகரமான வசதிகளைக் கொண்டதும் முன்மாதிரி மற்றும் பசுமைத் தன்மை ஆகிய சிறப்பம்சங்களை உடையதுமான களஞ்சியசாலை ஒன்றை நிர்மாணிக்கும் தனது திட்டம் குறித்து அக் குழுமம் அறிவித்துள்ளது. [/size]

[size=4]இலங்கை முதலீட்டு சபையின் அங்கீகாரம் பெற்ற செயற்றிட்டமான இந்த களஞ்சியசாலை வசதியானது Logistics Parks Pvt Ltd என அழைக்கப்படுவதுடன், 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஊருகொடவத்தை, அவிசாவளை வீதியில் உபாய ரீதியாக அமைக்கப்படவுள்ள இந்தக் களஞ்சியசாலைப் பகுதி சுமார் 100,000 சதுர அடி பரப்பளவை உள்ளடக்கியதாக, ரூபா 600 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்படும்.

இதேவேளை, மேற்படி களஞ்சியப் பகுதிக்கு நிர்வாக மற்றும் முகாமைத்துவ சேவைகளை வழங்கும் நோக்கில் அதனோடு இணைந்ததாக அருகில் 20,000 சதுர அடி பரப்பளவில் மிகவும் முன்னேற்றகரமான வசதிகளைக் கொண்ட அலுவலக கட்டிடத் தொகுதி ஒன்றையும்; எக்ஸ்போலங்கா நிறுவனம் நிர்மாணிக்கவுள்ளது.

எக்ஸ்போலங்கா ஃபிரைட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜகத் பத்திரண கூறுகையில், “கம்பனிகள் சார்பான பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு ‘ஆரம்பம் முதல் இறுதி வரையான’ அனைத்து வகை உபகரண சேவை வழங்கல் தீர்வுகளையும் வழங்க வழிவகுக்கக் கூடியதொரு களஞ்சியசாலை வசதியை நிர்மாணிப்பதும் அதனை செயற்படுத்துவதும், அதேநேரம் உபகரண சேவை வழங்கல் துறையில் நிறுவனம் கொண்டுள்ள சந்தையின் முதன்மை செயற்பாட்டாளர் மற்றும் புத்தாக்குனர் என்ற அந்தஸ்தினை தொடர்ந்தும் பேணுவதுமே இந்த வெயற்றிட்டத்தை நாம் முன்னெடுப்பதற்கான அடிப்படை நோக்கமாகும்” என்று தெரிவித்தார்.

“உத்தேசிக்கப்பட்டுள்ள களஞ்சியசாலை வசதியானது, நாம் இப்போது மேற்கொண்டு வருகின்ற வர்த்தக செயற்பாடுகளை முழுமையானதாக திகழச் செய்வதுடன், எமது வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறப்பான முறையில் சேவைகளை வழங்குவதற்கும் வழிவகுக்கும். ‘ஆரம்பம் முதல் இறுதி வரையான’ அனைத்து வகை உபகரண வழங்கல் சேவைகளையும் அளிக்கும் நிறுவனமாக எக்ஸ்போலங்காவை நிலைபெறச் செய்தல் என்ற எமது கூட்டாண்மை இலக்கினையும் இது முன்கொண்டு செல்லும்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் விடுவிக்கப்பட்டதையடுத்து, இலங்கை பல்வேறு கைத்தொழில் துறைகளிலும் பிரமாண்டமான வளர்ச்சியைப் பெறும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. வர்த்தகத்தின் அதிகமான துறைகளில் அபிவிருத்தி விடயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது. அரசாங்கமானது தனது கொள்கை ரீதியிலான திட்டங்களை தெளிவாக வெளியிட்டுள்ளது. அதன்பிரகாரம், நாட்டிலுள்ள துறைமுகங்;களை அபிவிருத்தி செய்வதற்கான உறுதிமிக்க திட்டத்தை அரசாங்கம் முன்வைத்திருப்பதுடன், கொழும்புத் துறைமுகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் முக்கியமான அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி போன்ற விடயங்களையும் இனங்கண்டுள்ளமை புலனாகின்றது.

எக்ஸ்போலங்கா குழுமத்தின் புதிய களஞ்சியசாலை வசதி, இலங்கையின் உபகரண சேவை வழங்கல் துறையில் மிக முக்கிய பங்கினை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குழுமத்தின் உபகரண வழங்கல் துறையானது தனது வர்த்தக நடவடிக்கைகளை மிதமான போக்குடன் வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்கு இது உதவுவதுடன், அதன்மூலம் உபகரண வழங்கல் துறைசார் சந்தையின் முதன்மை நிறுவனமாக எக்ஸ்போலங்கா குழுமத்தை உறுதியாக நிலை நிறுத்துவதற்கும் வழிகோலும்.

இலங்கையிலும் வெளிநாடுகளிலுமாக, பல்வேறு கண்டங்களிலுள்ள 15 நாடுகளின் 45 இற்கும் மேற்பட்ட நகரங்களில் வர்த்தக ரீதியிலான பிரசன்னத்தை கொண்டுள்ள எக்ஸ்போலங்கா குழுமத்தின் சரக்கு அனுப்புதல்; பிரிவு, குழுமத்தின் ஒட்டுமொத்த செயற்பாடுகளிற்கும் முக்கியமான பங்களிப்பினை வழங்குகின்றது. 1982ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட எக்ஸ்போலங்கா ஃபிரைட் நிறுவனம் ஆனது, முன்னணி சரக்கு அனுப்புதல் மற்றும் விநியோக மார்க்க முகாமைத்துவ தீர்வுகள் வழங்குனராக முன்னேறியுள்ளது. ஆடை உற்பத்தித் துறையின் உபகரண வழங்கல் தொடர்பிலான சேவை வழங்குவதில் நிறுவனம் கொண்டுள்ள ஈடுபாடானது, முன்னணி நவநாகரிக உபகரண வழங்கல் கம்பனி என்ற அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளது.

எக்ஸ்போலங்கா ஃபிரைட் நிறுவனம் தற்போது வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்ற இலங்கை, பங்களாதேஷ், இந்திய சந்தைகளில் முன்னணியில் திகழ்கின்றது. நவநாகரிக (பெஷன்) துறைசார் சந்தையில் முன்னணி செயற்பாட்டாளராக திகழும் இந்நிறுவனம், பல்வேறு அடைவிடங்களுக்கு சேவைகளை விஸ்தரித்துள்ள அதேநேரம் வர்த்தகப் பங்காளர்கள், விநியோகஸ்தர்கள் போன்ற தரப்பினரிடமிருந்து எண்ணற்ற விருதுகளையும் பெற்றுக் கொண்டுள்ளது. இதன்காரணமாக, சட்ட மற்றும் ஏனைய அடிப்படைகளில் பல்வேறு வர்த்தகப் பங்காளர்களினால் முன்வைக்கப்பட்ட பல இணக்கப்பாட்டு தேவைப்பாடுகளை நிறுவனம் நிறைவேற்றியுள்ளது.

எக்ஸ்போலங்கா ஃபிரைட் நிறுவனம் பல்வகைப்பட்ட பிரிவுகளிலான வர்த்தக நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக இருக்கின்றமையானது, இத்துறையில் மிகச் சிறப்பாக இடைத்தொடர்புபடுத்தப்பட்ட சரக்கு அனுப்புதல் சேவை வழங்குனராக அந்நிறுவனம் வளர்ச்சி காண்பதற்கு வழிவகுத்துள்ளது. இரு தசாப்தங்களுக்கும் அதிகமான காலம் வர்த்தகப் பங்காளர்களுடன் கொண்டுள்ள உறுதிமிக்க உறவு மற்றும் அனுபவமிக்க, அர்ப்பணிப்புள்ள ஊழியர்களின் சேவை போன்ற விடயங்களே நிறுவனம் இத் துறையில் வெற்றி பெற்றமைக்கு பங்களிப்பு நல்கிய முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன. இதற்கும் மேலதிகமாக முகாமைத்துவ அணியினரால் வழங்கப்பட்ட உறுதியான தலைமைத்துவமும், தொழில்நுட்பம்சார் நிபுணத்துவத்தில் நிறுவனம் கொண்டுள்ள தொடர்ச்சியான ஈடுபாட்டினை வெளிப்படுத்தும் வகையிலமைந்த முன்னேற்றகரமான உட்கட்டமைப்பு வசதியும் இதற்கு கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளன. [/size]

  • 2 months later...
  • தொடங்கியவர்

[size=4]b1(1074).jpg

(நவரத்தினம்)

வவுனியாவில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக போதுமான நீரின்மையால் பயிர்ச்செய்கைகளுக்கு விசிறல் முறை மூலம் நீர் விடுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

விசிறல் முறை மூலம் குறைந்தளவு நீரில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளக் கூடியதாகவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.[/size]

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/50452-2012-10-14-08-49-41.html

  • 1 month later...
  • தொடங்கியவர்

[size=5]உலக வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் யாழ் விஜயம்[/size]

[size=4]நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள உலக வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் ஸ்ரீ முல்யாணி இந்திரவதிக்கு யாழ்ப்பாணத்தில் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்த உலக வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் ஸ்ரீ முல்யாணி இந்திரவதி தலைமையிலான குழுவினர் யாழ் மாவட்டத்தில் உலக வங்கியின் அனுசரணையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுவரும் மீள் எழுச்சி திட்ட கிராமங்களுக்கு விஜயம் செய்தார்.

இதன்போது கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்டபட்ட சிறுப்பிட்டி ஜனசத்தி கிராமத்தில் வைத்து உலக வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் ஸ்ரீ முல்யாணி இந்திரவதிக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

அத்துடன் உல வங்கியின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களை பார்வையிட்டதுடன் ஜனசத்தி மீள் எழுச்சி திட்ட கிராமத்தின் அபிவிருத்தி மக்களின் வாழ்வாதார முன்னேற்றம் தொடர்பான கண்காட்சியையும் பார்வையிட்டார்.

இதன்போது பொருளாதரா அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் யாழ் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோரும் வருகை தந்தனர்.[/size]

[size=4]W02(11).jpg

W03(8).jpg[/size]

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/77--image/52898-2012-11-17-13-40-15.html

  • தொடங்கியவர்

[size=2]

[size=4]பன்னாட்டு நிறுவனங்களின் சவாலை எதிர்கொள்ள சில மாற்றங்களை நாம் செய்யவேண்டியது அவசியமாகிறது.[/size][/size]

  • [size=4]விற்கும் பொருள் சாதாரணமாக இருந்தாலும் கடைகள் நல்ல உள் அலங்காரத்தோடு இருக்க வேண்டியது அவசியம். இதனால் இத்தொழிலில் இறங்க விரும்புவோர் தங்கள் முதலீட்டை அதிகரிக்க வேண்டும்.[/size]
  • [size=4]ஒரு கடையை நிறுவுவதற்கு முன்னால் அந்த இடத்தைச் சுற்றி வாழும் பொது மக்களை நன்கு அறிந்துகொள்ள வேண்டும்.[/size]
  • [size=4]பொருள்களின் அளவை அதிகப்படுத்தும் திறமையும் வசதியும் இருக்க வேண்டும்.[/size]
  • [size=4]பணப்புழக்கத்துக்குத் தேவையான பின்புலம் இருக்க வேண்டும்.[/size]
  • [size=4]கொள்முதல் செய்த பொருள்கள் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டால், நவீன முறையில் மறுசுழற்சி செய்ய ஆக்கப்பூர்வமான திட்டங்கள் இருக்க வேண்டும்.[/size]

[size=2]

[size=4]ஐந்தாவது அம்சம் எல்லாப் பொருள்களுக்கும் பொருந்தாது எனினும், ஒரு சில உணவுப் பொருள்களுக்கு நிச்சயமாகப் பொருந்தும். உதாரணத்துக்கு பழங்களை கண்ணாடி அலமாரிகளில் அலங்காரமாக வைத்து விற்க நினைக்கும், குறைந்த முதலீட்டில் தொழில் செய்ய முன் வரும் தொழிலதிபர்கள், விற்பனைக்கு வைத்த பழங்கள் விற்கவில்லையென்றால், அருகிலேயே பழச்சாறு செய்வதற்கான இயந்திரங்களை நிறுவி, விற்பனையைச் சீர்செய்யலாம்.[/size][/size]

[size=2]

[size=4]இன்றைய சூழலில் பன்னாட்டு நிறுவனங்கள் நூதனமான முறையில் இந்தியச் சந்தையில் நுழைந்து தன்னம்பிக்கையுள்ள பல தொழிலதிபர்களுக்கு பெரும் சவால் விடுக்கின்றன. இவர்களோடு போராட நாம் தயாராக இருக்கவேண்டும்.[/size][/size]

[size=2]

[size=4]கொடுக்கும் பொருள் அல்லது சேவை எதுவாக இருந்தாலும் உங்களுக்கென ஒரு தனி பாணியை உருவாக்கிக்கொள்வது அவசியம். பன்னாட்டு நிறுவனங்கள் லாபத்தை மட்டும் இலக்காக வைத்து முன்னேறும் தன்மை கொண்டவை.சிறுதொழில் மேற்கொள்ள நினைப்பவர்கள் லாபத்தை மட்டுமே கணக்கில் கொள்ளாமல், சுற்றியுள்ள சமுதாயச் சூழலுக்கு தீர்வு காணும் விதமாகவும் தொழிலை நகர்த்திச் சென்றால் மக்களிடையே இன்னமும் கூடுதலாக நெருங்க முடியும்.[/size][/size]

[size=2]

[size=4]சுயதொழிலில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. தனி நபராக இயங்குவது ஒரு வகை. நிறுவனமாக நடத்த விரும்புவது இன்னொரு வகை. பெரும் நிறுவனங்கள் குறுந்தொழில்களை விழுங்கி வரும் தற்காலச் சூழலில், தனி நபர்களாக நிறுவனங்களை ஏற்படுத்தி நடத்திச் செல்வது கடுமையான சவாலாகவே இருக்கும். போராட்ட குணமுடையவர்களுக்கு மட்டுமே இது சாத்தியப்படும்.[/size][/size]

[size=2]

[size=4]இன்று இந்தியாவில் பணம் படைத்தவர்கள் மேலும் மேலும் வளங்கள் பெற்று வாழ்க்கை நடத்துகின்றனர். இல்லாதவர்கள் மேலும் மேலும் இல்லாமையை நோக்கி இறங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் தொழிலை சமுதாய நோக்கோடு நடத்திச் செல்ல முன்வருவது மட்டுமே நீங்கள் இந்தச் சமூகத்துக்குச் செய்யும் நன்மையாகும். இன்று உலகளவில் நிறுவனங்களின் சமுதாய பொறுப்பு (Corporate Social Responsibility) என்பதைப் பற்றிய வாதங்கள் முழு மூச்சாக நடந்து கொண்டிருக்கின்றன.[/size][/size]

[size=2]

[size=4]பன்னாட்டு நிறுவனங்களுடன் தொடர்புடைய ஒரு சில நிறுவனங்கள், தங்கள் லாபத்தின் குறிப்பிட்ட சதவிகிதத்தை சமூகப் பணிகளுக்காகச் செலவிடுகின்றன. இது இன்னும் இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வளரவில்லை. ஆனால் இனி வருங்காலத்தில் இது கட்டாயமாக்கப்படலாம். வருங்காலத்தில் தொழிலதிபர்களாக மாறும் எண்ணம் உடையவர்கள் சமூகப் பணிக்கென தங்கள் வருவாயின் ஒரு பகுதியை முதலிலிருந்தே ஒதுக்கத் தொடங்குவது அவசியம்.[/size][/size]

[size=2]

[size=4]சமீபத்தில் மருத்துவத் துறையில் போலி மருந்துகள் விற்பனையால் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டிய பலர் கைது செய்யப்பட்டனர். அப்பொழுது போலி மருந்து உற்பத்தியில் பல குறு மற்றும் சிறு தொழிலதிபர்கள் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தனிநபர்களின் பணப் பேராசை தொழிலின் தன்மையை, அதன் நோக்கத்தை அதலபாதாளத்துக்குக் கொண்டு சென்றது. ஒருபோதும் இவ்வாறு சமூக அவலங்களுக்குக் காரணமாகக்கூடாது. லாபம் நம் கண்களை மறைக்கக்கூடாது.[/size][/size]

[size=2]

[size=4]அடிப்படை சுகாதாரம், கல்வி, உணவு ஆகிய அடிப்படைத் தேவைகளை ஒவ்வொரு மனிதனும் சமூகத்தில் இருந்து பெற வேண்டியது அவசியம். இதற்கு மாறாக, விரக்தியையும் ஏமாற்றத்தையும் வறுமையையும் நம்மைச் சுற்றி ஏற்படுத்திக்கொண்டே போனால் நம்மால் அமைதியாக வாழ முடியாது. இன்று உயிர்வாழ தேவையான அத்தியாவசிய பொருள்கள் எட்டாத உயரத்திலும், கேளிக்கை களியாட்டங்களுக்கு தேவையான உபகரணங்கள் மலிவாகவும் விற்கப்படுகின்றன.[/size][/size]

[size=2]

[size=4]சுயதொழிலில் ஈடுபடும் பெண்கள் எதிர்கொள்ளும் சில முக்கியமான பிரச்னைகளை எடுத்துக்கொள்வோம்.[/size][/size]

[size=2]

[size=4]பெண்களுக்கு இயல்பாகவே பல திறமைகள் இருந்தும் அச்சம் அவர்களை முடக்கிவிடுகிறது. உள்ளுணர்வில், பெண்கள் மிக அதிகமாக எதிர்காலம் குறித்து சிந்திக்கிறார்கள். பொதுவாக பெண்கள் உணர்ச்சி வசப்படுபவர்கள் என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அந்தக் குணத்தை நாம் பலமாக மாற்ற முயற்சித்து வெற்றி பெற வேண்டுமேயன்றி அதை நம் பலவீனமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.[/size][/size]

[size=2]

[size=4]குடும்பத்தைக் கவனிப்பது என்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் ஒவ்வொரு பெண்ணும், தனக்குரிய அறிவைப் பயன்படுத்தி, தன் திறமைகள் வெளிப்படுத்துவதும் சமூகத்துக்குத் தேவையானதே. உங்கள் அறிவு மற்றும் திறமையைப் பற்றிய சுயமதிப்பீட்டை குறைத்துக் கொள்ளாமல், மனமுதிர்ச்சியோடு பணியாற்ற பழகிக் கொள்ளவேண்டும்.[/size][/size]

[size=2]

[size=4]பொதுவாக வங்கிகளும் நிதி நிறுவனங்களும் நடுத்தர வர்க்கப் பெண்கள் தொழில் செய்ய அணுகும்போது கடன் கொடுக்க எளிதாக முன்வருவதில்லை. அதே சமயம், மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உதவிகள் கிடைப்பது அத்தனை சிரமமில்லை. அவர்கள் பெயரில் அசையாச் சொத்துகள் இருக்கும் நிலையில் கடன் பெறுவது சுலபமே. மேல்தட்டு வர்க்கத்துக்கு உதவி செய்ய வங்கிகள் மறுப்பதில்லை. அடித்தட்டு பெண்களுக்கோ மைக்ரோ கிரெடிட், சுயஉதவிக் குழுக்கள் தொடங்கி கடன் வசதி செய்து கொடுக்க பலர் இருக்கிறார்கள்.[/size][/size]

[size=2]

[size=4]நடுத்தர வர்க்கத்துப் பெண்களுக்கு பொருளாதாரச் சுதந்தரமும் கிடையாது, முதலீடு செய்வதற்குப் பணமும் இருக்காது. மணமாகாத பெண்களாக இருந்தால், இன்னும் சிரமம். கேட்பது குறைந்தபட்ச கடன்தான் என்றபோதும் வங்கிகள் உதவுவதில்லை. அவர்கள் பிரச்னை, பணத்தை யாரிடம் இருந்து வசூலிப்பது, பிறந்த வீட்டிலா, புகுந்த வீட்டிலா? ஆக, திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் ஒரு இலக்காக நிர்ணயிக்கப்படுகிறது. திருமணம் ஆன பெண்களுக்கோ, வீட்டுப் பொறுப்புகளுக்குதான் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென்பது எழுதப்படாத சட்டமாக உள்ளது. இன்றும் சமூகத்தில் ஆண்களை மட்டுமே பொருளீட்டும் நபர்களாகப் பார்க்கிறார்கள். எதிர்பாராத விதமாக தந்தை அல்லது கணவருக்கு மரணம் சம்பவிக்கும்போது பெண்கள் கண்ணைக்கட்டி காட்டில் விட்டதைப் போலவே உணர்கிறார்கள்.[/size][/size]

[size=2]

[size=4]என்னாலும் பொருளீட்டமுடியும், சுயதொழில் முயற்சியில் வெற்றிபெற முடியும் என்று நிரூபிக்க பெண்கள் சிரமப்படவேண்டியிருக்கிறது. உண்மையில் பெண்களால் எளிதாகப் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளமுடியும். சூழலுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக்கொள்ள அவர்களால் முடியும்.[/size][/size]

[size=2]

[size=4]சுயதொழிலில் வெற்றிகரமாக ஈடுபட்டு வரும் பெண்களிடம் பேசும்போது, அவர்களிடையே சில பொதுவான குணாதிசயங்கள் இருந்ததை உணரமுடிந்தது.[/size][/size]

[size=2]

[size=4]அவை: [/size][/size][size=2]

[size=4]1. தொழிலைப்பற்றிய தெளிவான நிலைப்பாடு, [/size][/size][size=2]

[size=4]2. எதையும் புதிதாகக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் [/size][/size][size=2]

[size=4]3. சூழலுக்கேற்பத் தன்னை பொருத்திக் கொள்ளும் திறன். [/size][/size][size=2]

[size=4]4. விடாமுயற்சி,[/size][/size][size=2]

[size=4]5. தன்னம்பிக்கை.[/size][/size]

http://www.tamilpaper.net/?p=7135

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

[size=5]சுன்னாகம் உப மின் நிலைய நிர்மாணப் பணிகள்[/size]

[size=4]ஆசிய ஆபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் 3554 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வரும் சுன்னாகம் உப மின் நிலைய நிர்மாணப் பணிகள் துரித கதியில் நடைபெற்றறு வருகின்றது.

நாடு பூராகவும் லக்சபானா மின்சாரத்தை வழங்கும் நோக்கில் கிளிநொச்சியிலும் சுன்னாகத்திலும் உப மின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதன் பிரகாரம் கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட உப மின் நிலையம் தற்போது செயற்பட்டு வருகின்றது.

கிளிநொச்சியில் இருந்து யாழ் குடாநாட்டு மின்சாரத்தை வழங்கும் நோக்கில் சுன்னாகம் மின்சார நிலையத்தில் இந்த உப மின்நிலையம் நிர்மானிக்கப்ட்டு வருகின்றது.

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 3,554 மில்லின் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டு வரும் இந்த உப மின் நிலையம் 2013ஆம் ஆண்டு செயற்படத்தொடங்கும் என்று மின்சார சபை தெரிவித்துள்ளது.[/size]

J01(79).jpg

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/77--image/53745-2012-11-29-10-38-39.html

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

மீன்பிடி செயற்பாட்டு மையக் கட்டிடம் திறப்பு



iom1(1).jpg



யாழ். கீரிமலை செந்தாங்குளம் பகுதி மீனவ குடும்பங்களுக்கு 87,000 அமெரிக்க டொலர் நிதியில் படகுகள் மற்றும் மீன்பிடி செயற்பாட்டு மையக் கட்டிடம் ஆகியன இன்று திங்கட்கிழமை கையளிக்கப்பட்டன.

 

ஜ.ஓ.எம் நிறுவனத்தின் அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்ட மீன்பிடி செயற்பாட்டு மையக் கட்டிடத்தினை அவுஸ்திரேலியா எய்டின் அபிவிருத்தி திட்ட இணைப்பாளர் எட்வேர்ட்  அர்ச்பல்ட் மற்றும் ஜ.ஓ.எம் நிறுவனத்தின் பிரதம அதிகாரி ரிசார்ட் டான்சியர் ஆகியோர் திறந்துவைத்தனர்.


செந்தாங்குளம் பகுதியைச் சேர்ந்த 117 குடும்பங்களின் வாழ்வாதாரத்தினையும் மேம்படுத்தும் நோக்கத்துடனும் மீன்பிடி செயற்பாட்டு மையக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளன.

 

இந்த செயற்பாட்டு மையம் தினசரி மீன் விற்பனைக்கும், மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைப்பதுடன், இதன் ஒரு பகுதியில் மீன்பிடி படகுகள் மற்றும் இயந்திரங்கள், வலைகள் திருத்துவதற்குமாக அமைக்கப்பட்டுள்ளது.


அத்துடன், பொது நோக்கு மண்டபம், நூல் நிலையம், சுகாதார நிலையம் மற்றும் முன்பள்ளி நிலையம் என்பனவும் அமைக்கப்பட்டுள்ளன.



http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/77--image/54502-2012-12-10-15-36-22.html

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

விவசாயத் தொழிற்துறை - பேராசிரியர் இரா.சிவச்சந்திரன்

 

 

விவசாயத் தொழிற்துறை எனும்போது அது ஒரு பக்கத்தில் விவசாய உற்பத்திக்குத் தேவையான (உள்ளீடுகள், வாகனப் போக்குவரத்து சேவை, களஞ்சியம் போன்றன) கைத்தொழில்களையும் மறுபக்கத்தில் விவசாய உற்பத்தியை மூலப்பொருளாகக் கொண்ட கைத்தொழில்களையும் குறிக்கும். இங்கு விவசாய உற்பத்தியை மூலப்பொருளாகக் கொண்ட கைத்தொழில் பற்றியே நோக்கப்படுகிறது.

 

எமது, கிழக்கு மாகாணத்தின் பொருளாதாரம் நீண்ட கால பாரம்பரியம் மிக்க விவசாயத்தையே அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது. ஆயினும் ஒரு விவசாயக் தொழிற்துறை நோக்கிய விரிவாக்கம் இங்கு குறிப்பிடும்படியாக அபிவிருத்தியுறவில்லை. அதாவது, விவசாய வளமானது அதிக வருமானம் தரத்தக்க உற்பத்தியை மூல வளமாகக் கொண்ட விவசாய கைத்தொழில் துறைநோக்கி இன்றுவரை சரியாகத் திசை திருப்பப்படவில்லை என்பதே இதன் பொருளாகும்.

 

இலங்கையில் நூற்றாண்டிற்கு மேற்பட்ட வளர்ச்சியைக் கண்ட பெருந்தோட்ட விவசாயத்துறை கூட பண்ட உற்பத்திக் கட்டத்திலிருந்து பதனிடல் கட்டத்திற்குக்கூட இங்கு முறையாக அபிவிருத்தி பெறவில்லை என்பது தெரிந்ததே.

 

எமது பிரதேசத்தில் அதிகம் பரந்துள்ள விவசாயக் கைத்தொழில் நெல்லரைக்கும் ஆலைத் தொழிலாகும். பாரம்பாரிய வகை ஆலை, ஒரளவு நவீன வகை ஆலை என இவை கிராமம் தொட்டு நகரம் வரை பரந்துள்ளன. மொத்த நெல் ஆலைகளில் 80 வீதமானவை பாரம்பாரிய ஆலைகளே. நெல்லை அரிசியாக மாற்றும் ஒரு சிறு பதனிடல் முயற்சியை மேற்கொள்ளும் இப்பாரம்பாரிய ஆலைகளே அதிக குறைபாடுகளைக் கொண்டுள்ளன.


 

அவையாவன:

அரைக்கப்படும்போது அரிசி அதிகளவுக்கு உடைக்கப்படுகின்றது, அரிசியில் அசுத்தங்கள் காணப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளன, தவிடு சரியாக நீக்கப்படுவதில்லை. புழுங்கல் அரிசியை மட்டுமே இவ்வகை ஆலைககளில் அரைக்க முடிகின்றது. எனவே பாரம்பாரிய ஆலைகளை நவீனவாக ஆலைகளை மாற்றுதல் வேண்டும்.


அரிசியை எவ்வாறு அதிக லாபம் தரும் கைத்தொழிலாக மாற்றலாம் என்பதற்கு ‘நெசில்ஸ்’ உற்பத்திகளாக வரும் நெஸ்டம், பாலின் ஆகிய குழந்தை உணவுப் பொருட்களே தகுந்த எடுத்துக் காட்டுகளாகும். மேற்படி உணவுப் பொருட்களில் 400 கிராம் பொதியில் இரு கைப்பிடியளவான அரிசியோ, கோதுமையோதான் மூலப்பொருளாக உள்ளது.

 

அத்துடன் சில ஊட்டச்சத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனாலும் அதனைப் பெறுவதற்கு மிக அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது. இவ் அதிக விலையை அப்பொருள் பெறுவதற்கு அது கைத்தொழில் மயப்படுத்தப்பட்டு சில செயல்முறைக்கு உட்படுக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுவகே காரணமாக அமைகின்றது. எனவே விவசாய உற்பத்திகளைக் கைத்தொழில் மயப்படுத்தும் போது நாம் அதிக வருமானம் பெற முடியும்.


தெங்குத் தொழில் ஓப்பீட்டளவில் கைத்தொழில் மயமாக்கப்பட்டுள்ளதெனலாம். தேங்காய்த் துருவல், தேங்காய் எண்ணெய், சவர்க்காரம், மாஜரின், வினாகிரி போன்ற உற்பத்திகளும் தும்புத் தொழில் போன்ற தொழில் மயமாக்கப்பட்ட உற்பத்திகளும் தேசிய மட்டத்திலே ஒரளவு அபிவிருத்தியை எய்தியுள்ளன. ஆனால் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் இவை குறிப்பிடும்படியான அபிவிருத்தியை இன்னும் எட்டவில்லை. தெங்குத் தொழில் அபிவிருத்திக்கான நிறைய வாய்ப்புகள் இங்குள்ளன. தெங்குத் தொழில் அபிவிருத்தியானது கிராம மட்டங்களிலே இடம் பெறுவதால் அதிக பயனை விளைவிக்கத்தக்கவை. முக்கியமாக கிராம மட்டத்தில் பலருக்கு வேலை வாய்ப்புகளை அளிக்க முடியும்.

 

தெங்கினைத் தொழில் மயப்படுத்துதோடு அதனை நவீன முறைக் கைத்தொழில் உற்பத்திகளாகவோ அல்லது குடிசைக் கைத்தொழில் உற்பத்திகளாகவோ மாற்றுதல் அவசியம். இப்பிரதேசத்தில் உற்பத்தி செய்யத்தக்க இன்னோர் முக்கிய விவசாய அடிப்படையிலான தொழிற்துறை சீனி உற்பத்தியாகும். கரும்பு, சில கிழங்கு வகைகள், பனை ஆகிய வளங்களிலிருந்து சீனி வளம் செய்யப்படலாம்.


வறண்ட வலயத்தில் கரும்புச் செய்கையினை நல்ல முறையில் மேற்கொள்ளலாம். பாசன வசதிகள் அமைக்கப்பெற்றால் வருடம் முழுவதும் கரும்பு பயிரிடப்படலாம். அத்துடன் இப்பிரதேசத்தில் சீனி உற்பத்திக்கான பொருத்தமான கிழங்கு வகைகள் எவையென ஆராய்ந்தறிந்து அவற்றினைப் பயிரிட்டு சீனி உற்பத்தியை அதிகரிக்க முடியும். மேலும் இப்பிரதேசத்தின் முக்கிய பாரம்பரிய வளமான பனைவளத்தை சீனி உற்பத்திக்குப் பயன்படுத்துவோமாயின் அதிக வருமனமும் வேலை வாய்ப்பும் ஏற்படுமெனக் கருதுகின்றனர். பனஞ் சீனி உற்பத்தியானது அதிக உற்பத்திச் செலவை வேண்டுவதுடன் முக்கியமாக எரிபொருள் செலவே அதிகமாக உள்ளது.

 

சூரிய சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம் இச்செலவைக் குறைக்க முடியுமாயின் உற்பத்திச் செலவைக் குறைத்து பனை வளத்திலிருந்து இலாபகரமான முறையில் சீனியை உற்பத்தி செய்தல் சாத்தியமே. சீனி உற்பத்தியுடன் இணையாக மதுபான உற்பத்தியையும் அதிகரிக்கலாம். இவை ஏற்றுமதி செய்யத்தக்க வகையில் தரம் வாய்ந்தனவாக அமைதல் வேண்டும். பனை வள அபிவிருத்திச் சபை, சமூக நலன் விரும்பிகள் சிலரும் பனை வள உற்பத்திகளை அபிவிருத்தி செய்வதற்கு அண்மைக் காலங்களில் அதிக முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி கண்டு வருகின்றனார். பனை வளத்திலிருந்து பல வகையான அழகுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. உல்லாச ப்பயணத் தொழில் வளரும் போது இவ்வாறான உற்பத்திகள் அதிக வருமானத்தை தரக் கூடியது.


எமது பிரதேசத்தில் அதிகளவு அபிவிருத்தி வாய்ப்பைக் கொண்ட இன்னோர் தொழிற்துறை விலங்கு வேளாண்மையாகும். வடக்கு பிரதேசங்களில் நல்லமுறையில் திட்டமிட்டு இவை மேற்கொள்ளப்படலாம். புல்வளத்து அதனை விலங்குகளுக்கு கொடுத்து பாலாக, இறைச்சியாக பெறுவதில் அதிக வருமானம் உண்டு. தினைவகைகளைக் கோழிகளுக்குக் கொடுத்து முட்டையாக இறைச்சியாக நுகர்வதில் அதிக பயன் உண்டு. புல்லும் தினைவகைகளுமே மேற்படி உற்பத்திகளின் விவசாய மூலவளங்களாகும். ஆடு, எருமை, பன்றி, முயல், இறைச்சிக்கான மாடு போன்றனவும் நல்ல முறையிலே எமது பிரதேசங்களில் விரிவாக்கம் செய்யப்படலாம்.

 

கிராமம் ஒன்றில் மந்தை வளர்ப்பில் தனது வீட்டுத் தேவைக்கான உயிர் வாயுவை உற்பத்தி செய்யலாம். பயிர்களுக்கு உரம் பெறலாம். பால், இறைச்சி பெறலாம். இப்படி ஒன்றுடன் ஒன்று இணைவாக அபிவிருத்தியுறத்தக்க வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட கிராமப் பண்ணைத் திட்ட விருத்தியின் மூலம் அதிக பயன் பெறமுடியும். தனி நபர் ஒருவரின் ஒருங்கிணைப்புப் பண்ணை அபிவிருத்தியானது பலருக்கு வழிகாட்டவல்லது. விலங்கு வேளாண்மை எமது பிரதேசத்தில் இன்று வரை மிகவும் குறைந்த கவனிப்பையே பெற்றுள்ளது. இதனை ஒவ்வொரு கிராம மட்டத்திலும் அபிவிருத்தி செய்ய உழைத்தல் வேண்டும்.


வீட்டுக்கு ஒரு மாடு, சிறு கோழிப் பண்ணை, ஆடு என்பன வளர்க்க ஊக்கம் அளிக்கப்படுதல் வேண்டும். எமது கிராமங்களிலுள்ள வேலிகளை மதில்களாக மாற்றுவதை விடுத்து இலைகுழை தரக்கூடிய மரங்களை வேலிகளில் நாட்டி அதன் மூலம் விலங்கு வேளாண்மை அதிகரிக்கச் செய்தல் வேண்டும். ஒவ்வொரு கிராமங்களிலும் சுயநிறைவுப் பொருளாதரா வளமுள்ள கிராமக் குடும்ப அலகுகளை ஏற்படுத்துவதற்கு இவை பெரிதும் உதவும். பால் உற்பத்தியை இன்னும் நவீன தொழிற்துறை உற்பத்தியாக மாற்ற வேண்டுமாயின் அதனை புட்டிப்பால், பால்மா, பட்டர், சீஸ், ஐஸ்கிறீம், யோக்ஹட் போன்றனவாக மாற்றி உற்பத்தி செய்யலாம். இவை அதிக வருமானத்தை அளிக்க வல்ல உற்பத்திகளாகும்.

 

புல் வளர்ப்பில் இருந்து ஆரம்பமாகும் இத்தொழிற்றுறையின் விரிவாக்கமானது சந்தையின் விரிவுக்கேற்ப அதிக வருமானம் தரும் உற்பத்திகளாக வளர்ச்சி பெறத் தக்கவையாகும். யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியில் அமைந்துள்ள பாற்பண்ணை தற்போது நவீன முறைப்படுத்தப்பட்டு உற்பத்தியை முன்னெடுத்து வருவது போற்றத்தக்க முயற்சியாகும். வடகீழ் மாகாணத்திலே 6.1 வீத நிலப்பரப்பைக் கொண்டதும் அப்பிரதேச மொத்தக் குடித்தொகையில் 30 வீதத்தை உள்ளடக்கியதுமான யாழ்ப்பாணக் குடா நாட்டுப்பகுதி தோட்டச் செய்கை நன்கு வளர்ச்சியடைந்துள்ள பகுதியாக அமைந்துள்ளது.


இப்பகுதியில் இலங்கையில் வேறு எப்பாகத்திலும் இல்லாதவாறு செறிந்த முறைப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. இங்குள்ளோர் நவீன விவசாயிகள் என கூறத்தக்கவர்கள். யாழ்ப்பாணக்குடா நாட்டு விவசாயிகள் போல நாட்டின் வேறு எங்கும் மிக விரைவாக நவீன அம்சங்களைப் பின்பற்றும் விவசாயிகளைக் காண்பது அரிது. பாரம்பரிய முறையை உடனடியாகவிட்டு நவீன முறையைப் பின்பற்றக்கூடிய மனப்பாங்கு இங்குள்ள பெரும்பாலான விவாயிகளிடம் காணப்படுகின்றது. இதனால் நவீனத்துவ முறைகள் இங்கு புகுத்துதல் எளிதாகும்.

 

யாழ்ப்பாணக்குடா நாட்டிலே உள்ள தோட்டங்களில் புகையிலை, மிளகாய், பழங்கள், தினைவகைள் என்பன பெருமளவில் விளைவிக்கப்படுகின்றன. இலங்கையின் உப உணவு உற்பத்தியில் கணிசமான பங்கினை யாழ். குடாநாட்டு விவசாயிகளே உற்பத்தி செய்கின்றனார். எடுத்துக்காட்டாக இலங்கையில் வெங்காயச் செய்கைக்கு உட்பட்ட பரப்பளவில் 38 வீதமும் மிளகாய்ச் செய்கைப் பரப்பளவில் 15 வீதமும் யாழ். குடாநாட்டிற்குள் இரு தசாப்தங்களுக்கு முன்னர் இருந்தது.


எனவே இவ் உற்பத்திகளை விவசாய அடிப்படையிலான கைத்தொழில் உற்பத்திகளாக விரிவாக்கம் செய்வது பற்றி நன்கு சிந்தித்து திட்டமிடுதல் இம்மண்ணை நேசிக்கும் அனைவரினதும் கடமையாகும். எடுத்துக்காட்டாக புகையிலை மூலவளத்தைக் கொண்டு சுருட்டுக் கைத்தொழில் விரிவாக்கத்துடன் மாத்திரம் நின்று விடாது அதனை நவீன முறையிலே சிகரட் உற்பத்தியாக மாற்ற முடியும். இதற்கான நவீன இயந்திரங்களைத் தருவித்து சிகரட் புகையிலை உற்பத்தியையும் ஊக்குவித்து விவசாயத் தொழிற்றுறை விரிவாக்கம் செய்யப்படலாம்.

 

இப்பிரதேச விவசாய உற்பத்தியில் குறிப்பாக யாழ். குடா நாட்டு உற்பத்தியில் உணவு பதனிடல் தொழிற்றுறை நல்ல பயனை நல்குமெனலாம். இவற்றுள் முக்கியமாக பழங்கள் பதனிடல், தகரத்திலடைதல், காய்கறி பதனிடல் என்பவற்றின் விரிவாக்கம் பற்றி அதிகம் சிந்திக்கலாம். பருவ காலங்களிலேயே சில பழங்களும், காய்கறிகளும் அதிகம் விளைகின்றன. அக்காலத்தில் இவற்றின் உற்பத்திகள் நிரம்பல் அதிகமாக உள்ளன. அவற்றின் கேள்வி குறைந்து பழங்கள், காய்கறிகள் பெருமளவு பழுதடையும் நிலையும் தோன்றுகின்றது. பழங்களையும் காய்கறிகளையும் பாதுகாப்பாக வைப்பதற்கும் நீண்ட நாட்களுக்கு இன்னோர் வழியில் காப்புச் செய்து வைத்து பயன்படுத்துவதற்கும் சிறப்பான சில தொழில் நுட்ப உத்திகள் பயன்படுத்தலாம்.


 

அவற்றுள் சில பின்வருமாறு

1. பாதுகாப்பாக நீண்ட காலம் வைத்திருக்கக் கூடிய பாரிய களஞ்சியங்களை உருவாக்குதல்.
(மெழுகு படுத்தல் போன்ற நுட்பங்கள் மூலம் பாதுகாப்பளித்தல்)


2. உறையச் செய்வது அல்லது இரசாயனப் பாதுகாப்பு செய்தல்.
(பழங்களை பழச்சாறு, பழக்கூழ் வடிவில் பல்வேறு வகைப் பழம் பானங்களாக உருமாற்றிப் பாதுகாக்கலாம்)

 

3. ஊறவைக்கும் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்துதல் (ஊறுகாய்)


4. உலர்த்துவதன் மூலம் பாதுகாத்தல் (வற்றல் போடுதல்)

 

 

மேற்படி பாதுகாப்பு முறைத் தொழில் நுட்பங்கள் பல்வேறு நாடுகளில் நன்கு வளார்ச்சி பெற்றுள்ளன. அவற்றினைப பின்பற்றி எமது பிரதேசத்திற்கு பொருத்தமான தொழில் நுட்ப முறைகளைப் பின்பற்றி உணவு பதனிடல் தொழிற்றுறையை விரிவாக்குதல் வேண்டும். எமது பிரதேசத்தில் பேணிப் பாதுகாத்து சந்தைப்படுத்தக்கூடிய பழங்களாக மாம்பழம், பலாப்பழம், தக்காளி, பப்பாசி, எலுமிச்சை, தோடை, விளாம்பழம், வாழைப்பழம், அன்னாசி, பனம்பழம் என்பவற்றைக் குறிப்பிடலாம். இவற்றை எவ்வழிகளில் பாதுகாத்தல் இலாபகரமானதென்பதற்கு ஆய்வுகள் அவசியம். ஒவவொரு பழவகையின் பாதுகாப்புப் பற்றியும் தனித்தனி ஆய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும்.


பாதுகாத்துப் பயன்படுத்துவது இலாபம் தரத்தக்கதுதான் என்பதை நிச்சயித்த பின்னரே இம் முயற்சிகள் மேற்கொள்ளபபட வேண்டும். பழச்சாற்றினை அடிப்படையாகக் கொண்ட விவசாயத் தொழற்றுறை உற்பத்திகளில் பானங்கள், தகரத்தில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள், நெக்டார் போன்றன உடனடியாக பருகத்தக்கவையாகும். பழக்கூழினை அடிப்படையாக் கொண்டவற்றில் வெட்டப்பட்ட பழங்களை கொண்ட உற்பத்திகளில் தகரத்தில் அடைக்கப்பட்ட பழவகைகள், ஊறுகாய் வகைகள் என்பனவும் அடங்கும்.

 

எமது பிரதேசத்திலுள்ள பல கிராங்களிலே சில பருவங்களின் போது பழங்கள், காய்கறிகள் பெருமளவு உற்பத்தியாகின்றன. தேவைக்கு அதிகமான இப் பருவகால உற்பத்திகளில் பெரும்பங்கு வீணடிக்கப்படுகின்றன. பருவகாலமற்ற காலங்களில் இவை அருமையாகவுள்ளதால் அதிக விலையாக உள்ளன. எனவே மேற்படி உற்பத்திகளின் நிரம்பலை ஒழுங்குபடுத்துவதற்கு பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்துவது இன்றியமையாததாகும். இதற்குப் பொருத்தமான, மலிவான பாதுபாப்பு தொழில்நுட்ப முறைகளை விருத்தி செய்தல் அவசியம். இதற்கான பல ஆய்வுகளும் செய்திட்டங்களும் விரைவில் மேற்கொள்ளப்படுதல் நற்பலனை விளைவிக்குமெனலாம்.


பொதுவாக எமது பிரதேச விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் அதே நேரத்தில் அவ்உற்பத்திகளை அதிக வருமானம் தரத்தக்கவையாக நவீனத்துவம் கொண்டவையாக மாற்றுதற்கு விவசாயத் தொழிற்றுறை விரிவாக்கம் பற்றி நாம் அதிகம் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். ஒரு நாடோ ஒரு பிரதேசமோ ஒரு கிராமமோ அபிவிருத்தியுறுவதற்கு மேற்படி அபிவிருத்திக்குரிய வழிமுறை சுருக்கமான தந்திரோபாயமாகும். ஒரு விவசாய உற்பத்தியை சில செயல்முறைக்குட்படுத்தி வேறொரு உற்பத்தியாக அல்லது பலவாக மாற்றுதல் அவ்உற்பத்திகளை இன்னும் சில செயல் முறைக்குட்படுத்தி இன்னும் பலவாக மாற்றுதல் போன்ற தொழில்நுட்ப நடவடிக்கைகளே விவசாயத் தொழிற்றுறை விரிவாக்கத்தின் வளர்ச்சி படிகள் ஆகும்.

 

இதன் விளைவாக அதிக வருமானம் அல்லது இலாபம் கிடைப்பதோடு வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும். எனவே விவசாயப் பொருளாதார அடிப்படையிலான நாடுகள் விருத்தியுற மேற்படி அபிவிருத்தித் திறமுறையின்பால் அதிக அக்கறையும் ஆர்வமும் காட்டவேண்டும்.

 

http://www.yarlmann.lk/viewsingle.php?id=1377

  • தொடங்கியவர்

சிறு வணிகம் ஒன்றில் பணப் பிரச்சினையா? முகாமை செய்வது எப்படி?

 

பல பில்லியன்களுடன் புரளும் பில்கேட்ஸ் ஆனால் என்ன?, பக்கத்து தெருவில் வெற்றிலை விக்கும் பாட்டி ஆனால் என்ன? கையில் கிடைக்கும் பணத்தினை சரியாக முகாமை செய்யத் தவறும் போது "நஷ்ரம் - கடன் - அவமானம் - தற்கொலை!" என வணிக வாழ்கை மாறிப் போய்விடுகின்றது.

 

பெரும் ஏற்ற - இறக்கங்களை காட்டி வரும் இன்றைய பொருளாதார சூழலில் நிதியினை சரியாக முகாமை செய்யத் தவறும் நிறுவனங்கள் நிலை குலைந்து திசை மறந்து கால வெள்ளத்தில் காணமலே போய் விடுகின்றன. ஒரு ஆய்வின் படி, புதிதாக தொடங்கும் தொழில் முயற்சிகளில் 63 சதவீதமானவை ஆறு வருடங்களிற்கு மேல் நின்று நிலைப்பதில்லை என்பதுடன், பெரும்பாலான சிறு வணிக முயற்சிகள் தொடங்கி ஆறே மாதங்களிற்குள் மூடு விழா கொண்டாடி விடுவதாக தெரிய வந்துள்ளது. இவற்றுக்கு எல்லாம் அடிப்படையாக உள்ள ஒரே ஒரு காரணம்........? சரியாக முகாமை செய்யப்படாத காசுக் கொடுக்கல் வாங்கல்களே!

 

இதனால், சிறு வணிக முயற்சியாளர்களிடம் உள்ள பெரிய கேள்வி...? காசுக் கொடுக்கல் வாங்கல்களை எப்படி முகாமை செய்வது? இதனை பாமரத்தனமான வார்த்தையில் சொன்னால் காசை கையில் பிடிப்பது எப்படி? இதற்கு நாம் பின்வரும் மூன்று விடயங்களில் கண்டிப்பாக கவணம் செலுத்தியாக வேண்டும்.

 

அ).வாடிக்கையாளர்களிடம் இருந்து விரைவாக கடனை வசூழிப்பது எப்படி?
ஆ).கட்டணங்கள் மற்றும் கொடுப்பனவுகளை எப்போது செலுத்த வேண்டும்?
இ).வங்கி கணக்கை பராமரிப்பது எப்படி?

 

 

 

அ).விரைவாக கடன்களை வசூழித்தல்
 

கடனுக்கு வியாபாரம் செய்வதாலேயே பல தொழில்கள் மாண்டு போகின்றன! எனினும், கடன் கொடுக்காமல் வியாபாரம் செய்ய முடியுமா? முடியவே முடியாது! ஆகவே என்னதான் செய்யவது? இதற்கு பின்வரும் சில வழிகளை கையாண்டு கடன் ஆபத்துக்களை தவிர்க்கலாம்.

 

1.கடன் கொடுப்பது சிறிய தொகை ஆயினும் கடனாளியின் பெயர், முகவரி, தொடர்பு இலக்கம் போன்றவற்ரை பிரத்தியேக குறிப்பேடு ஒன்றில் பதிவு செய்து வாராந்தம் நோட்டமிட வேண்டும்.

 

2.கடன் கொடுக்க முன்னதாக கடனாளியின் நிதி நிலமையை நன்றாக மதிப்பிட வேண்டும்.

 

3.கடனாளியிடம் இருந்து குறைந்தது மூன்று கடன் உத்தரவாதிகளின் பெயர், விபரங்களை பெற்று அவர்களிற்கும் அறிவிக்க வேண்டும்.

 

4.கடன் கொடுக்கும் விலைப் பட்டியலில் கடன் மீளளிப்பு செய்ய வேண்டிய காலமும், தவறும் பட்ஷத்தில் விதிக்கப்படும் தண்டப் பணத்தின் அளவினையும் குறிப்பிட வேண்டும்.

 

5.கடன் மீளளிப்பிற்கான இறுதித் திகதி நெருங்கியுள்ளமையை கடிதம் அல்லது தொலைபேசி அல்லது நேரில் கடனாளிக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.

 

6.கடன் விரைவாக கிடைக்க வேண்டும் என்பதற்காக அதிகப்படியான விலைக் கழிவுகளை அறிவித்தல் கூடாது. இது, 1 - 2 சதவீதத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதே சாலச் சிறந்தது.

 

7.மீள முடியாத கடன்கள் தொடர்பில் சட்ட ஆலோசகரின் உதவியை நாடலாம்.

 

பலர் இவற்றை செய்யாமலேயே தான்பட்ட கடனையும் அடைக்க முடியாது தன்னையும், தன் தொழிலையும் மாய்த்துக் கொள்கின்றனர்.

 

 

 

ஆ).கட்டணங்கள் மற்றும் கொடுப்பனவுகளை செலுத்துதல்
மின்சாரம், தொலைபேசி, வாடகை, வட்டி, காப்புறுதி மற்றும் கடன் தவணை போன்ற கட்டணங்கள் மற்றும் கொடுப்பனவுகளை ஆரம்பத்திலேயே தீர்த்து விடுவது நல்லது என சிலர் நினைக்கின்றார்கள். ஆறுதலாக தீர்ப்பதுதான் நல்லது எனப் பலர் கருதுகின்றார்கள். ஆனால் இவை இரண்டுமே பிழையான முகாமைதான்!

 

சரியான நிதி முகாமை என்னவெனில், கட்டணங்கள் மற்றும் கொடுப்பனவுகளில் குறிக்கப்பட்டுள்ள சாத்தியமான இறுதித் திகதி என்னவோ அந்த நாளில் தீர்த்துக் கட்டுவதுதான். ஒரு ரூபாயேனும் முந்திக் கட்டுவதால் அதனைக் கொண்டு முதலிட்டு அல்லது வாங்கிய கடனை மீளளித்து பெறக் கூடிய இலாபத்தினை இழக்கின்றோம். அல்லது பிந்திக் கட்டுவதால், குறித்த காலப் பகுதியில் உழைக்கும் வருமானத்திற்கும் செலவுக்கும் இடையே சமனிலை காணாது கடன்களிற்காய் அலைகின்றோம் இல்லையா?

 

 

 

இ).வங்கிக் கணக்கை பராமரித்தல்
 

பலர் பல வங்கிகளில் கணக்கு வைத்திருப்பதனை ஒரு கௌரவமாகவே கருதுகின்றனர். போதாக் குறைக்கு வங்கிச் சேவை சந்தைப்படுத்துனர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி அங்கொன்றும் இங்கொன்றுமாக கணக்குகளை ஆரம்பிக்கின்றனர். கடைசியில் கடன் தாருங்கள் என்று போனால் கையை விரித்து விடுவார்கள் வங்கியாளர்கள். காரணம், ஒரு கணக்கில் காசு சுழன்று கொண்டு இருந்தால்தானே நாமும் பணக்காரர் என்பதனை வங்கி அறிய முடியும். அங்கொன்றும் இங்கொன்றுமென சில சில்லறைகள் சுழன்று கொண்டு இருந்தால்... பிச்சைக்காரன் என்றுதான் கருதுவார்கள்!

 

இதேபோல, பலர் நடைமுறை கணக்கில் தேவைக்கும் அதிகமான ஒரு தொகையினை வங்கிச் சேவைக் கட்டணங்களிற்கென ஒதுக்குகின்றார்கள். இந்த மேலதிக பணத்தினை கொண்டு நாம் பட்ட கடன்களை அடைத்து, வட்டிச் செலவைக் குறைக்கலாம் அல்லது சிறந்த முதலீட்டு திட்டம் ஒன்றில் போட்டு பயனீட்டலாம். இவை எல்லாம் எல்லோருக்கும் தெரிந்திருந்தும் கூட, மேலதிகமாக பணத்தை கணக்கில் போட்டு வைப்பதற்கு காரணம் என்ன? வங்கிச் சேவைக் கட்டணமாக மாதாந்தம் எவ்வளவு செலவாகிறது, நடைமுறை வட்டி வீதங்கள் எப்படி போகின்றன என்பவை பற்றிய ஓர் அறியாமைதான். ஆனால், இவற்றை இலவசமாக அறிவிக்க வங்கிகள் தயாராகவே இருக்கின்றன. ஆனாலும், அவை ஒரு நிபந்தனையும் போடுகின்றன. அது என்ன தெரியுமா? கேளுங்கள் தரப்படும்!, தட்டுங்கள் திறக்கப்படும்!!

 

இவை ஒரு புறமிருக்க, வங்கி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் வங்கி வைப்பு, மீதிகளை பலர் பரிசோதிப்பதில்லை. காரணம், வங்கிகள் நிதிக் கொடுக்கல் வாங்கல்களில் ஒரு போதும் ஒரு சதம் அளவிலும் கூட பிழை விடுவதில்லை என்பது பலரது மனதிலும் ஆழமாகப் பதிந்துபோய் உள்ளது. ஆனால், யதார்தம் என்ன தெரியுமா?, வங்கிகள் தெரிந்தும், தெரியாமலும்  பல சந்தர்பங்களில் கணக்குப் பிழை விடத்தான் செய்கின்றன. எனவே, மாதாந்தம் ஒரு வங்கி கூற்று அறிக்கை ஒன்றை தரும் படி வங்கிக்கு விண்ணப்பிப்பதுடன், அவற்றை எமது கணக்குப் பதிவுகளுடன் நன்றாகப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். குறிப்பாக, எந்த சேவைக்காக வங்கி அதிக கட்டணங்களை அறவிடுகிறது என தெரிந்து அவற்றை இயன்றளவு குறைந்த மட்டத்தில் வைத்திருக்க முயற்சிக்க வேண்டும்.

 

இவ்வண்ணமும், இவற்றுக்கு மேலாகவும் உங்களின் தனிப்பட்ட அறிவு, ஆற்றல், அனுபவம் என்பவற்றுக்கினங்க கையில் கிடைக்கும் பணத்தினை சரியாக முகாமை செய்து வணிக வாழ்கையிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

 

 

என்.சிவரூபன்

 

http://www.jaffnaeconomy.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%3F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%3F

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.