Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது தாயகத்தின் பொருளாதார நிலமை

Featured Replies

  • தொடங்கியவர்

யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை ஆரம்பம்

 

யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2013 எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. நான்காவது தடவையாக நடைபெறும் இந்த கண்காட்சி எதிர்வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதுல் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

 

யாழ்ப்பாணத்தை ஒரு அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, இலங்கை வர்த்தக சங்கங்களின் சம்மேளனம், யாழ் வர்த்தக சம்மேளனம், யாழ் மாநகர சபை இலங்கை மகாநாடுகள் பணியகம் மற்றும் யாழ் இந்திய துணை உயர் ஸ்தானிகராலயம் ஆகியன இணைந்து இந்த கண்காட்சியினை ஏற்பாடு செய்துள்ளது.

 

இந்த கண்காட்சியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பல கலந்துகொள்ளவுள்ளதுடன் தொழில் பயிற்சி நெறிகளையும் வழங்கவுள்ளது.

 

இந்த கண்காட்சி மூலம் முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்கள், சேவை வழங்குனர்கள், வர்த்தக துறையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை எற்படும் யாழ்ப்பாண வர்த்தக கைத்தொழில் சம்மேளன தலைவர் கே. பூரணச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ். சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2013 தொடர்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

trade2.jpg

 

http://tamil.dailymirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/57049-2013-01-16-13-39-46.html

  • Replies 55
  • Views 13.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை மூடப்படும் அபாயம்

 

O01(7).jpg

 

 



தேசிய சிறுகைத்தொழில் கூட்டுத்தாபனத்தின் உரிமையைக் கொண்டிருக்கும் ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையின் கொண்டிருக்கும் செயற்பாடுகளை நிறுத்திவிட முல்லைத்தீவு மாவட்ட சிக்கனக் கடன் கூட்டுத்தாபன சங்க சமாசம் முடிவெடுத்துள்ளது.

 

தேசிய சிறுகைத்தொழில் கூட்டுத்தாபனத்தின் உரிமையைக் கொண்டிருக்கும் ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையின் இடத்திற்கான குத்தகையை உரிமையைப் பெற்றுத்தருமாறு கோரி, முல்லைத்தீவு மாவட்ட சிக்கனக் கடன் கூட்டுத்தாபனம் சங்க சமாசத்தினால் பாரம்பரிய சிறிய நடுத்தர கைத்தொழில் அமைச்சு, மற்றும் கைத்தொழில் வர்த்தக அமைச்சிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது.


மேற்படி ஓட்டுத் தொழிற்சாலையின் இயந்திர உபகரணங்கள் தற்போது இயங்காத நிலையில், கைகளினால் செங்கற்கள் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. இதனால் கூட்டுறவுச் சமாசத்தினால் இலாபகரமாக தொழிற்சாலையை இயக்க முடியவில்லை.

இந்தத் தொழிற்சாலையில் இயந்திர ரீதியில் மீண்டும் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஜஎல்ஓ என்னும் நிறுவனம் 250 மில்லியன் ரூபா நிதியினை முதலீடுவதற்கு முன்வந்துள்ளது.


அதற்காக அந்நிறுவனம் நிலத்திற்கான குத்தகை உரிமையினை முல்லைத்தீவு மாவட்ட சிக்கனக் கடன் கூட்டுத்தாபன சங்க சமாசத்தின் கீழ் 33 வருடங்களுக்கோ 10 வருடங்களுக்கோ பெற்றுத்தருமாறு கோரியிருந்தது.

 

நீண்டகாலமாகக் கோரப்பட்ட இந்த வேண்டுகோள் பற்றி அமைச்சுக்கள் எதிர்வரும் 31ஆம் திகதிவரை நடவடிக்கை எதுவும் எடுக்காவிட்டால் அத்தொழிற்சாலையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயற்பாடுகளையும் நிறுத்திவிட சமாசம் முடிவெடுத்துள்ளது.


கடந்த காலங்களில் இயங்கிய இத்தொழிச்சாலை 100 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/78--image/57345-2013-01-21-05-41-51.html



O02(4).jpg

 

O03(3).jpg

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

யாழில் கேள்விச் சந்தையின் பெரும் பகுதியை கொண்டுள்ள நண்டு, இறால், கணவாய்

 

J01(93).jpg



யாழ்ப்பாணத்தினைச் சூழ அதிகமாக கடல்நீர் ஏரிகள் காணப்படுவதினால் அப்பகுதிகளில் அதிகளவில் கணவாய், இறால், நண்டு ஆகியன இக்காலப்பகுதியில் பெருமளவில் உற்பத்தியாகின்றன.

இவ்வாறு பிடிக்கப்படும் யாழ்ப்பாணத்து கடல்நீரில் காணப்படும் மீன் இனங்கள் உள்ளூர் நுகர்வினைத் தவிர வெளிமாவட்ட மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளாக யாழ்ப்பாணம் வருபவர்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.

 

 

தற்போதய சந்தை நிலவரப்படி கணவாய் கிலோ ரூபா 400 தொடக்கம் ரூபா 550 வரையும், நண்டு கிலோ 200 தொடக்கம் 350 வரையும், பெருநண்டு கிலோ 500 ரூபாவுக்கும், சிறிய இறால் ரூபா 300 தொடக்கம் ரூபா 400 வரையும், பெரிய சிவப்பு இறால் ரூபா 500 தொடக்கம் 600 ரூபா வரையும், பெரிய கறுப்பு இறால் ரூபா 800 தொடக்கம் 1000 ரூபா வரையும், கணவாய் 400 இலிருந்து 550 வரையும் விற்பனையாகின்றது.


யாழ்ப்பாண மீன் சந்தைகளின் தனிமதிப்பே உடன் மீனினங்கள் கிடைக்கின்றமையாகும். இதற்காகவே பெருமளவில் வாடிக்கையாளர்கள் பெருமளவில் சந்தைகளை நாடி வருகின்றனர். எனினும் தற்போதய காலமாற்றத்தினால் யாழ்ப்பாணச் சந்தைகளில் ஜஸ் மீன்களும் விற்பனைக்கு வந்துள்ளன.

 

ஐஸ் மீன்களின் சுவையை விரும்பாத யாழ்ப்பாண உள்ளூர் நுகர்வோர் தற்போது, நண்டு இறால், கணவாய்களினை நாடுகின்றனர் என்று யாழ்ப்பாணம் கொட்டடி மீன் சந்தையின் விற்பனையாளர்கள் சொல்கின்றனர்.

 

J02(70).jpg

 

J03(39).jpg



http://tamil.dailymirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/57921-2013-01-29-08-41-36.html

  • தொடங்கியவர்

பாதுகாப்பான முதலீட்டு விழிப்புணர்வு வட பகுதி மக்களிடம் அதிகம்: திலீபன்

 

Thileepan.jpg



- யாழ். பங்கு பரிவர்த்தனை நிலைய பொறுப்பதிகாரி மு.திலீபன்



மக்களின் முதலீட்டு தெரிவில் முதன்மையாக திகழ்தல் என்பதை நீண்ட கால நோக்கமாகவும், பங்குகள் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களை சட்ட ரீதியாக உறுதிப்படுத்தும் அமைப்பாக, 1985ஆம் ஆண்டு இலங்கை கம்பனிகள் சட்டத்துக்கு அமைய தாபிக்கப்பட்ட கொழும்பு பங்குபரிவர்த்தனை நிலையத்தின் யாழ்ப்பாணக் கிளை 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

 

இந்த கிளையின் பொறுப்பதிகாரியாக செயலாற்றி வரும் மு.திலீபன் - பங்குப்பரிவர்த்தனையின் யாழ்ப்பாணக் கிளையின் செயற்பாடுகள் மற்றும் வடக்கு, கிழக்கு பிராந்தியத்தை சேர்ந்த மக்கள், பங்கு கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் செலுத்தும் ஆர்வம் மற்றும் அது தொடர்பில் அவர்கள் மத்தியில் காணப்படும் விழிப்புணர்வு குறித்து தமிழ்மிரர் வணிக பகுதிக்கு வழங்கிய நேர்காணலில்,

சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் உத்தியோகபூர்வமாக தமது வர்த்தக செயற்பாடுகளை ஆரம்பித்த கொழும்பு பங்குபரிவர்த்தனையின் யாழ்ப்பாணக் கிளையில், ஆரம்பத்தில் 2 பங்குத்தரகர்கள் இணைந்திருந்தனர். 2010ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மேலும் 4 பங்குத்தரகர்கள் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர். தற்போது பங்குப்பரிவர்த்தனை நிலையத்தின் யாழ். கிளையில் 4 முகவர்களும், வெளிவாரியாக 4 முகவர்களும் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


ஆரம்ப காலத்தில் தமிழ் மொழி மூலம் பங்கு கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான ஆலோசனைகளை முதலீட்டாளர்களுக்கு தமிழ் மொழி மூலம் வழங்கும் ஆலோசகர்கள் மிகவும் குறைவாகவே காணப்பட்டனர். இது மிகவும் சவாலான நிலையாக அமைந்திருந்தது. ஆயினும் தற்போது இந்த நிலை மாறி R.I.A தகுதி பெற்ற அல்லது தற்கால சான்றிதழ் கொண்ட ஆலோசகர்கள் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

எமது கிளைக்காரியாலயம் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் 5ஆவது கிளையாக அமைந்துள்ளது. எமது செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலப்பகுதியினுள் சுமார் 3000 மத்திய வைப்புத்திட்ட கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


பங்குபரிவர்த்தனை நிலையம் ஆரம்பிக்கப்பட்ட காலத்துக்கும், தற்போதைய நிலைக்கும் இடையில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் காணப்படுகிறது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் மக்களுக்கு விழிப்புணர்வை பெற்றுக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் மிகவும் அரிதாக காணப்பட்டன. அத்துடன், பங்குப்பரிவர்த்தனை நிலையம் எமக்கு உகந்த பகுதி அல்ல எனும் தவறான அபிப்பிராயமும் காணப்பட்டது. ஆயினும், தினசரி ஊடகங்களின் மூலம் அவர்கள் பெற்றுக் கொண்ட விபரங்களின் மூலமாக தெளிவை பெற்றுள்ளனர். உதாரணமாக, ஒவ்வொரு தடவையும் புதிய பொது பங்கு வழங்கல் ஒன்று குறித்த அறிவித்தல் வரும் பொழுதும் பெருமளவானோர் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

 

மேலும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பிராந்திய ரீதியில், நகர மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றமை, மக்களுக்கு பரீட்சியமான நிறுவனங்களின் பங்குகள் பட்டியல்படுத்தப்பட்டதும் அவர்களின் ஆர்வம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் பங்குப்பரிவர்த்தனை நிலையத்தின் வெளியீடுகளான இணையத்தளம், பிரசுரங்கள் போன்றன மூன்று மொழிகளிலும் அமைந்துள்ளமையானது பொது மக்களுக்கு இலகுவான விதத்தில் விபரங்களை பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளமை மற்றும் பொது இடங்களில் இலவசமாக எமது வெளியீடுகளை கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றன மக்கள் மத்தியில் பங்குப்பரிவர்த்தனை செயற்பாடுகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க ஏதுவான காரணிகளாக அமைந்துள்ளன.


2012ஆம் ஆண்டில் கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நிலையத்தின் யாழ்ப்பாணக் கிளையின் மூலம் பல்வேறு விதமாக விழிப்புணர்வு திட்டங்கள் வடக்கு, கிழக்கு பிராந்தியங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. வருடாந்தம் மொத்தமாக 45 நிகழ்ச்சி திட்டங்கள் பங்குப்பரிவர்த்தனை மற்றும் பிணைகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் மூலம் இணைந்து முன்னெடுக்கப்படுகின்றன.

 

இதில் விசேடமாக 4 பகுதி செயலமர்வுகள் நிகழ்கால முதலீட்டாளர்களுக்கும், எதிர்காலத்தில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வமாக உள்ளவர்களுக்கும் பெரிதும் பயனளிப்பதாக அமைந்துள்ளன. இந்த செயலமர்வுகளில் ஆகக்குறைந்தது 35 பேர் வரை பங்குபற்றுவர். இவர்களுக்கு முறையான செயன்முறை விளக்கங்கள் வழங்கப்படுவதுடன், அவர்களால் தாங்கிக் கொள்ளக்கூடிய ஆகக்குறைந்த தொகையை முதலீடு செய்து, அதன் மூலம் செயன்முறை அனுபவத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய வசதியையும் நாம் ஏற்படுத்திக் கொடுக்கிறோம்.


இதன் மூலம், இவர்கள் தாம் சுயமாக செயற்பட்டு, பங்குப்பரிவர்த்தனை தொடர்பான அறிவை பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது.

 

அத்துடன், இந்த 4 பகுதி செயலமர்வுகளில் யாழ்ப்பாணத்திலிருந்து பங்கேற்றும் 90 வீதமானோரும் வவுனியாவிலிருந்து பங்கேற்றும் 80 வீதமானோரும் மத்திய வைப்புத்திட்டத்தில் கணக்கொன்றை ஆரம்பிப்பதன் மூலம் பங்கு கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகிறது.


2013ஆம் ஆண்டை பொறுத்தமட்டில் எமது கிளையை மேலும் வசதிகள் படைத்த புதிய இடத்துக்கு இடம்மாற்றுவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்ட வண்ணமுள்ளோம். பெருமளவில் எதிர்வரும் பெப்ரவரி அல்லது மார்ச் மாதமளவில் புதிய இடத்துக்கு இடம்மாறுவதற்கான சூழ்நிலை காணப்படுகிறது. இந்த புதிய காரியாலயத்தில் 11 முகவர்கள் மற்றும் பார்வையாளர்கள் கூடம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

வடக்கு, கிழக்கு பிராந்தியங்களை சேர்ந்த பொதுமக்களை பொறுத்தமட்டில் பாரம்பரிய பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களில் அதிகளவு ஈடுபாடு காணப்படுகிறது. நவீன நிதி திட்டங்களில் அவர்களின் ஈடுபாடு குறைவானதாகவே அமைந்துள்ளது. இவர்கள் பெரும்பாலும் நிலையான வைப்புக் கணக்குகளில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். பின்னர் தங்கத்தில் முதலிடுகின்றனர். பின்னர் மூன்றாம் அல்லது நான்காம் நிலையில் தான் பங்குப்பரிவர்த்தனையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றனர்.


இவர்கள் மத்தியில் பங்கு பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக தெளிவுபடுத்தல்களை வழங்கும் வகையில் ஊடகங்களின் செயற்பாடுகள் மிகவும் அர்ப்பணிப்பாக காணப்படுகிறது. ஆயினும், சில சந்தர்ப்பங்களில் நேரடியாக மொழிபெயர்ப்புகளை மேற்கொண்டு மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தாமல், சந்தை நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட நபரொருவருடன் தொடர்பை ஏற்படுத்தி தெளிவுபடுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிடுவது சிறந்ததாக அமைந்திருக்கும். மேலும், தொடர்ச்சியாக மக்களை அறிவுறுத்தும் வகையில் அறிக்கைகளை ஊடகங்கள் வெளியிட முன்வர வேண்டும்.

 

2013ஆம் ஆண்டில் பொது மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு செயற்திட்டங்களை முன்னெடுக்க நாம் திட்டமிட்டுள்ளோம். இதில், க.பொ.த உயர்தரம் பயிலும் மாணவர்களுக்கென விசேடமாக அமைந்த செயலமர்வுகள் ஜனவரி மாதம் முதல் பாடசாலை மட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளன.


2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கம்பனிகளுக்குரிய அனுகூலங்கள் குறித்த விபரங்களுக்கு ஏற்ற விதத்தில் எமது செயலமர்வு திட்டங்கள் அமையவுள்ளன. அத்துடன் முதலீட்டாளர் தின நிகழ்வுகள் 2013ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் யாழ்ப்பாணத்திலும், இரண்டாம் காலாண்டில் வவுனியாவிலும், மூன்றாம் காலாண்டில் கிளிநொச்சியிலும், நான்காம் காலாண்டில் நெல்லியடியிலும் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

அத்துடன் கடந்த ஆண்டு செயலமர்வுகளில் பங்குபற்றியவர்களுக்கென இரண்டாம் கட்ட செயலமர்வுகளையும் தொடர்ச்சி நடவடிக்கையாக 2013இல் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். மேலும் பொதுமக்களுக்கு 4 பகுதி செயலமர்வுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்கவுள்ளோம்.


அத்துடன் நிலையான வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய கடன் பத்திரங்கள் வழங்கல்கள் குறித்த அறிவையும் வழங்க நாம் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

 

கொழும்பு பங்குச்சந்தையின் கிளைகள் யாழ்ப்பாணக் கிளைக்கு மேலதிகமாக கண்டி, நீர்கொழும்பு, மாத்தறை மற்றும் குருநாகலை ஆகிய

பகுதிகளில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.dailymirror.lk/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/2012-12-31-13-44-26/58208-2013-02-03-06-26-02.html

  • தொடங்கியவர்

புதிய முறையில் பயிர்ச்செய்கை
மன்னார், உயிலங்குளம் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் மரக்கறிக் கன்றுகள் புதிய முறையில் நாட்டப்பட்டுள்ளன.
 
கத்தரி, தக்காளி, பச்சை மிளகாய், கறி மிளகாய், பயித்தை,பாவக்காய் உள்ளிட்ட  பல வகையான மரக்கறிக் கன்றுகள் உரப்பைகளில் இட்டு நாட்டப்பட்டுள்ளன.

இவ்வாறு நாட்டப்படுவது இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதுடன்,  அதிகளவான விளைச்சலையும் தருமென அங்குள்ள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

 

b2(973).jpg



b4(221).jpg



http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/78--image/58640-2013-02-10-11-16-36.html

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

சாவகச்சேரி பொது சந்தையின் மூலம் சாவகச்சேரி நகர சபைக்கு தினசரி வருமானமாக 20,000 ரூபா 



சாவகச்சேரி பொதுச்சந்தையில் வியாபார நடவடிக்கைகளுக்காகவும், பொருட்களை கொள்வனவு செய்யும் வகையில் உள்வரும் அனைத்து தரப்பினர்களிடமிருந்தும் நாளொன்றுக்கு சராசரியாக 20,000 ரூபா வருமானமாக அறவிடப்படுவதாக சாவகச்சேரி பொதுச்சந்தையின் மேற்பார்வையாளர் சி.கணேசமூர்த்தி - தமிழ்மிரரின் உழைப்பாளிகள் பகுதிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

 

 

இவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ”சாவகச்சேரி சந்தை யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூன்று பிரதான சந்தைகளில் ஒன்றாக விளங்குகிறது. இதர பிரதான சந்தைகளாக யாழ்ப்பாண பொதுச்சந்தை, மற்றும் திருநெல்வேலி பொதுச்சந்தை போன்றன அமைந்துள்ளன. ஏனைய இரு பிரதான சந்தைகளில் விற்பனையாகும் பொருட்களின் விலைகள் (விசேடமாக மரக்கறிகளின்) சாவகச்சேரி சந்தையுடன் ஒப்பிடுகையில் அதிகமானதாகவே காணப்படுகின்றது. ஏனெனில், சாவகச்சேரி பகுதியை பொறுத்தமட்டில் ஏனைய பகுதிகளை விட உற்பத்தி நடவடிக்கைகள் அதிகமாக காணப்படுகின்றது”.


”சாவகச்சேரி சந்தையில் எந்த வியாபாரியும் தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இதற்காக அவர்கள் முதலாவதாக எமது நகரசபையை சேர்ந்த அதிகாரிகளுடன் பதிவு செய்து கொள்ள வேண்டும். 5x5 சதுர அடி விற்பனைப் பகுதி ஒன்றுக்கு தினசரி கட்டணமாக 25ரூபா அறவிடப்படுகிறது. மேலும் ஒவ்வொரு உற்பத்தி பொருளையும் விற்பனைக்காக சந்தையினுள் கொண்டு வரும் போது மொத்தப் பெறுமதியில் 4 வீதத்தை வரிப்பணமாக செலுத்த வேண்டும்”.

 

”அதுபோலவே சாவகச்சேரி சந்தை வளாகத்தில் வாகனங்கள் தரிப்பிட கட்டணமும் அறவிடப்படுகிறது. சந்தையினுள் உட்பிரவேசிக்கும் வாகனங்களுக்கு கட்டணம் சற்று அதிகமாக அமைந்துள்ளது. வளாகத்தில், சந்தையின் வெளிப்புறமாக வாகனங்கள் தரிப்பதற்கு நியமக்கட்டணங்கள் அறவிடப்படுகிறது”.


”சாவகச்சேரி சந்தையை பொறுத்தமட்டில் வாரத்தின் ஏழுநாட்களும் வியாபார நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. ஆயினும் சனிக்கிழமை பெரிய சந்தை எனும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. அதாவது சனிக்கிழமைகளில் வியாபாரம் அதிகளவில் இடம்பெறும் தினமாகும். இவ்வாறான நாட்களில், நகரசபைக்கான வருமானமும் 25000 ரூபா எனு்ம அளவுக்கு அதிகரிக்கும்”.

 

இவ்வாறு திரட்டப்படும் பணங்களுக்கு பற்றுச்சீட்டு வழங்கப்படுகிறது. அத்துடன் இந்தப்பணம் யாவும் நகரசபையின் மூலம் சந்தை அபிவிருத்தி பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. சாதாரணமாக நாளொன்றுக்கு 20இற்கும் மேற்பட்ட மரக்கறி வியாபாரிகள் தமது வர்த்தக நடவடிக்கைகளை இங்கு முன்னெடுக்கின்றனர். இதை தவிர புடவை கடைகள், மளிகை கடைகள், மீன்சந்தை, பழங்கள் வியாபாரம் மற்றும் அணிகலன்கள் வியாபாரம் போன்ற பல்வேறு தரப்பட்ட நடவடிக்கைகள் இங்கு இடம்பெறுகின்றன” என்றார்.


இப்பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்திருந்த எமக்கு, இச்சந்தை வளாகத்தில் நீர் வசதிகள், மலசல கூட வசதிகள் போன்றன ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. ஆயினும், இன்னமும் முழுமையான நிர்மாணப்பணிகள் இடம்பெறமால் தற்காலிகமான முறையில் அமைந்த கூடாரங்களிலேயே ஆடை வியாபாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றமையையும் காண முடிந்தது.

 

இது குறித்து சந்தை மேற்பார்வையாளரிடம் வினவிய போது, ”யுத்த நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், வர்த்தக நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. தம்புள்ளையிலிருந்தும் பொருட்கள் இங்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. எனவே நாளாந்தம் தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அனைவருக்கும் இடவசதிகளை வழங்கக்கூடிய வகையில் எமது கட்டிடங்கள் இல்லை. நகர சபையின் மூலம் தற்காலிகமாக ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப கூடாரங்கள் அமைத்து அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன” என்றார்.


நாளாந்தம் சராசரியாக 20000 ரூபாவை இப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து வருமானமாக பெறும் சாவகச்சேரி நகர சபை, வடபகுதியில் அமைந்துள்ள பிரதான சந்தைகளில் ஒன்றான சாவகச்சேரி பொது சந்தையின் கட்டிட வசதிகளை மேம்படுத்துமாயின், வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வோருக்கு பெரிதும் நன்மை பயப்பதாக அமைந்திருக்கும். 



IMAG0233.jpg



http://tamil.dailymirror.lk/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/2012-12-31-13-44-26/59772----------20000-.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.