Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த ராஜபக்சவினது இராசதந்திரத்திற்கு அடுத்த பலிக்கடா கருணாநிதி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்த ராஜபக்சவினது இராசதந்திரத்திற்கு அடுத்த பலிக்கடா கருணாநிதி

[ வெள்ளிக்கிழமை, 28 சனவரி 2011, 00:16 GMT ] [ தி.வண்ணமதி ]

அரச தகவல்களின் படி கருணாநிதிக்கும் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் தொலைபேசி வழி உரையாடல்களும் இடம்பெற்றிருக்கிறன. தமிழ்நாட்டு முதல்வர் கருணாநிதிக்கும் சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான இந்த உறவினை கலைஞரின் மகள் கனிமொழி ஊடாகவே தொண்டமான் சாத்தியமாக்கியிருக்கிறார்.

இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில ஊடகமான டெயிலிமிரரில் அதன் பத்தி எழுத்தாளர் Upul Joseph Fernando குறிப்பிட்டுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

தமிழ்நாட்டிலுள்ள பாடசாலைகளில் சிறிலங்காவினது அதிபர் ராஜபக்சவினது உருவப்படம் பொறிக்கப்பட்ட நாட்காட்டி விநியோகிக்கப்பட்டதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சி ஒன்றின் ஆதரவாளர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாக கடந்தவாரம் இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

போர் இடம்பெற்ற காலப்பகுதியிலும் அதற்குப் பின்னரும் மகிந்த ராஜபக்ச என்ற பெயரைக் கேட்டாலே அனைவரும் கோபத்தினை வெளிப்படுத்தும் ஒரு தன்மையே தமிழ்நாட்டில் காணப்பட்டது.

ஆனால் இன்று அதிபர் ராஜபக்சவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட நாட்காட்டிகளைப் பாடசாலைகளில் விநியோகிக்கும் அளவிற்கு நிலைமை மாறியிருக்கிறது.

மேலும், இதுபோல நாட்காட்டி விநியோகிக்கப்பட்டதை எதிர்த்து வீதிக்கிறங்கிப் போராட்டம் நடாத்தியவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதும் தெளிவான செய்தியினைச் கூறி நிற்கிறது.

போர் தீவிரம் பெற்றிருந்த காலப்பகுதியில் மகிந்த அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை தலைமையேற்று நடாத்தியவர் வேறு யாருமல்ல, தமிழ்நாட்டு முதல்வர் கருணாநிதிதான்.

ஆனால் இன்று மகிந்த ராஜபக்சவிற்கும் தமிழ்நாட்டு முதல்வர் கருணாநிதிக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் நெருங்கிய உறவு பலருக்கு அதிசயமாகியிருக்கிறது.

இவர்களுக்கிடையில் இந்த உறவு ஏற்படுவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசினது தலைவர் எஸ். தொண்டமான்தான் காரணகர்த்தாவாக இருந்திருக்கிறார்.

அண்மைய காலங்களில் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு பயணம் செய்த தொண்டமான் கருணாநிதியினைச் சந்தித்து அதிபர் ராஜபக்சவின் தகவல்களைப் பரிமாறியிருக்கிறார். இப்படித்தான் இவர்களுக்கிடையிலான உறவு ஆரம்பமானது.

குறிப்பிட்ட சில அரச தகவல்களின் படி கருணாநிதிக்கும் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் தொலைபேசி வழி உரையாடல்களும் இடம்பெற்றிருக்கிறன. தமிழ்நாட்டு முதல்வர் கருணாநிதிக்கும் சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான இந்த உறவினை கலைஞரின் மகள் கனிமொழி ஊடாகவே தொண்டமான் சாத்தியமாக்கியிருக்கிறார்.

கனிமொழிக்கும் தொண்டமானுக்கும் இடையில் நெருங்கிய நட்பு இருப்பதாகத் தெரிகிறது. கடந்த ஆண்டு தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று சிறிலங்காவிற்கான சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டிருந்தது.

இந்தக் குழுவில் அங்கம் வகித்திருந்த கனிமொழியும் சிறிலங்காவினது வடக்குப் பகுதிக்கு வந்திருந்தார். இதனைத் தொடர்ந்துதான் கனிமொழிக்கும் தொண்டமானுக்கும் நட்பு ஆரம்பித்திருக்கிறது.

இதற்கு முன்னர் கருணாநிதியும் அவரது மகள் கனிமொழியும் சிறிலங்கா மகிந்த ராஜபக்சவிற்கு எதிராகவே செயற்பட்டுவந்தார்கள்.

போர் முடிவுக்கட்டத்தினை நெருங்கியிருந்த வேளையில் மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான கருத்துக்களை இவர்கள் இருவரும் வெளிப்படையாகவே வெளியிட்டு வந்தார்கள்.

இதன்போது விடுதலைப் புலிகள் அமைப்பினையும் அதன் தலைவர் பிரபாகரனையும் ஆதரித்து மாநிலம் தழுவிய போராட்டங்களையும் கருணாநிதி ஒழுங்கு செய்திருந்தார்.

எல்லாவற்றையும் விட விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது அவரது நினைவாக கருணாநிதி கவிதை ஒன்றை

எழுதியிருந்தார். போர் முடிவுக்கு வந்த பின்னரும்கூட சிறிலங்கா அரசாங்கம் அகதிகளை மோசமாக நடாத்துகிறது எனக் கூறி கருணாநிதியும் மகள் கனிமொழியும் பல்வேறு அறிக்கைகளை விடுத்திருந்தார்கள்.

போர் முடிவுக்கு வந்த சில மாதங்களின் பின்னர் கருணாநிதி விநோதமானதொரு அறிக்கையினை விடுத்திருந்தார்.

சிறிலங்காவினது வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அரசியல் தீர்வு முன்வைக்கப்படவேண்டுமெனில் அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுக்களை மேற்கொள்வது அவசியமானது என கருணாநிதி அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து பணிசெய்யாமல் தீர்வு எதனையும் கொண்டுவரமுடியாது என்றார் அவர்.

கருணாநிதியின் இந்தத் திடீர் மாற்றம் பலதரப்பட்ட மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் கனிமொழி ஊடாக மகிந்தவிற்கும் கருணாநிதிக்கும் இடையில் தொண்டாமானின் கடுமையான உழைப்பின் பயனாக கொண்டுவரப்பட்ட 'உடன்பாடு' பற்றி அறிந்தவர்கள் கருணாநிதியின் இந்த அறிக்கை தொடர்பில் அதிர்ச்சியடையவில்லை.

இந்த உடன்பாட்டின் பின்னர்தான் சிறிலங்காவினது வடக்குக் கிழக்கில் அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த தமிழ் மக்களின் நிலை தொடர்பாக நேரடியாக அறிந்து கொள்வதற்காக தமிழ்நாட்டு சட்டசபை உறுப்பினர்கள் குழுவொன்று சிறிலங்காவிற்குப் பயணம் செய்தது.

இந்தக் குழுவில் கனிமொழியும் அங்கம் வகித்தார். தமிழ்நாட்டு சட்டசபை உறுப்பினர்களின் சிறிலங்காவிற்கான பயணத்தின் இறுதிக் கட்டத்தினை அடைந்தபோது கருணாநிதி மகிந்தவின் நண்பனாக மாறினார்.

போர் இடம்பெற்ற காலப்பகுதியில் தமிழ்நாட்டில் இறுதியாக இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் கருணாநிதி மகிந்த எதிர்ப்பு நிலைப்பாட்டினையே எடுத்திருந்தார். அந்தத் தேர்தலில் கருணாநிதி பெருவெற்றியினைத் தனதாக்குவதற்கு அவர் மகிந்த எதிர்ப்பு நிலைப்பாட்டினை எடுத்ததும் ஒரு காரணம்.

ஆனால் தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தமிழர்களது விடயத்தினைக் கையிலெடுக்கும் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி தனது வாக்குவங்கியினைப் பலப்படுத்திவிடக்கூடும் என்ற அச்சம் கருணாநிதிக்குத் தற்போது எழுத்திருக்கிறது.

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டிலுள்ள பாடசாலைகளில் அதிபர் மகிந்த ராஜபக்சவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட நாட்காட்டிகள் விநியோகிக்கப்படுவதற்கு கருணாநிதி அனுமதித்திருக்கிறார் போலும்.

தனது அரசியல் சாணக்கியத்தைப் பயன்படுத்தியே மகிந்த ராஜபக்ச கருணாநிதியினை வென்றிருக்கிறார். அதே சாணக்கியத்தினையே அதிபர் ராஜபக்ச ஐ.நாவினது செயலாளர் நாயகம் பன் கீ மூனுக்கும் பிரயோகித்திருந்தார். மகிந்தவினது இராசதந்திர முனைப்புக்களின் விளைவாகவே பன் கீ மூம் தான் அமைத்த வல்லுநர்கள் குழுவினைச் சிறிலங்காவிற்கு அனுப்பமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார் எனச் சிலர் கூறுகிறார்கள்.

மகிந்தவின் சாணக்கியத்திற்குப் பலிக்கடாவான அடுத்த நபர் கருணாநிதியா அல்லது இல்லையா என்பது தமிழ்நாட்டில் இடம்பெறவுள்ள மாநிலத் தேர்தல்களின் பின்னர்தான் தெரியவரும்.

http://www.puthinappalakai.org/view.php?20110128103035

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.