Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா பூந்தோட்டம் நலன்புரிமுகாமில் தங்கியுள்ள மக்களை வெளியேறுமாறு பணிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா பூந்தோட்டம் நலன்புரிமுகாமில் தங்கியுள்ள மக்களை வெளியேறுமாறு பணிப்பு _

வீரகேசரி நாளேடு 2/12/2011 9:49:30 AM

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திலுள்ள மக்களை எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் அங்கிருந்து வெளியேறுமாறு வவுனியா மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளதாக அங்கு தங்கியுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரி.எம்.எஸ்.சார்ள்ஸ் மற்றும் மாவட்ட திட்டப் பணிப்பாளர் வா.கிருபாசுதன் ஆகியோர் கையொப்பமிட்டு, மாவட்ட புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புச் செயலகம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஊடாக கடந்த முதலாம் திகதி அறிவித்தல் ஒன்று நலன்புரி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி முதல் இந்த நலன்புரி முகாமில் இருந்து வரும் இவர்கள், வவுனியாவிலேயே தமக்குக் காணிகளை வழங்கி வீடு கட்ட உதவி செய்யுமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 300 குடும்பங்கள் 97 ஆம் மற்றும் 99 ஆம் ஆண்டுக் காலப்பகுதி முதல் நடைபெற்ற யுத்த நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்து இந்த முகாமில் தங்கியுள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே நிவாரண உதவிகள் யாவும் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் உதவிகள் எதுவும் இல்லாத நிலையில், உழைத்துப் பெறும் சிறிதளவு வருமானத்தில் தான் தாம் வாழ்க்கையை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கின்றனர். மழை காலமென்பதால் தொழில்வாய்ப்புக்களும் குறைந்து பிள்ளைகள் போதிய உணவு மருத்துவ வசதியின்றி கஷ்டப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

வன்னிப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த அனைவரும் தமது சொந்த இடங்களில் மீள்குடியமரவேண்டும் என்று அரசாங்கத்தின் கொள்கைக்கமையவே இவர்களை முகாமிலிருந்து வெளியேறுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலகம் தெரிவிக்கின்றது.

எனினும், தமக்கு அங்கு சொந்தக் காணிகள் எதுவும் இல்லை என்றும், இப்போது அங்கு மீள்குடியேறச் சென்றால் தமக்கான வசதிகள் உரிய முறையில் செய்துதரப்படுமா என்றும் முகாமில் வசிக்கும் மக்கள் அச்சம் வெளியிடுகின்றனர். _

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூந்தோட்டம் மற்றும் சிதம்பரபுரம் முகாம் மக்களை சொந்த இடங்களுக்கு செல்லுமாறு அறிவிப்பு

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-22 07:21:30| யாழ்ப்பாணம்]

யுத்தம் காரணமாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து 17 ஆண்டுகளுக்கு முன்னர் இடம் பெயர்ந்து வவுனியா பூந்தோட்டம் மற்றும் சிதம்பரபுரம் அகதி முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறி சொந்த இடங் களிற்குச் செல்லுமாறு வவுனியா மாவ ட்ட அரசாங்க அதிபர் உத்தரவிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

பூந்தோட்டம் அகதி முகாமில் 252 குடும்பங்களை சேர்ந்த 830 பேர் வசித்து வருகின்றனர்.சிதம்பரபுரம் முகாமில் 275 குடும்பங்களை சேர்ந்த 921 பேர் வாழ்ந்து வருகின்றனர்.17 வருடமாக வவு னியாவில் வசித்து வந்த இந்த மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப் பட்டுள்ளதால் அந்த மக்கள் பெரும் சிர மங்களை எதிர் நோக்கி வருகின்றனர். பாடசாலையில் பயிலும் அதிகள வான மாணவர்கள் முகாமில் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் அவசர மாக எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் காரணமாக பிள்ளைகளின் கல்வியும் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது குறித்து அர சாங்க அதிபர் பீ.எம்.சார்ள்ஸ் தெரிவித் துள்ளதாவது, மீள்குடியேற்ற அமைச்சுடன் இணை ந்து முகாம்களில் உள்ள இந்த மக்களை அவர் களின் சொந்த இடங்களில் குடி யமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்த லுக்கு முன்னர் இந்த மக்களை அவர் களின் சொந்த இடங்களில் குடியேற்ற வேண்டும் என ஜனாதிபதி செயலணிக் குழு உத்தரவிட்டுள்ளது.

sankamam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.