Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனிதவுரிமைகள் ஆணைக்குழு அமர்வில் மஹிந்த சமரசிங்க உரை!

Featured Replies

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 16வது அமர்வில் சிறிலங்காவின் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று (28.02.11) உரையாற்றியுள்ளார்.

ஜெனீவாவில் இன்று ஆரம்பமான ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வு மார்ச் மாதம் 25ஆம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெறுகின்றது.

இந் நிலையில், இலங்கையின் தற்போதைய மனிதவுரிமை நிலைமைகள், வடக்குக் கிழக்கு மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் தென்னிலங்கையின் அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அவர் இவ்வமர்வில் உரையாற்றியுள்ளார்.

186 நாடுகள் கலந்து கொண்டுள்ள இந்த அமர்வில் அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹில்லரி கிளிண்டனும் கலந்துக் கொண்டிருப்பமதக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறிலங்காவின் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சந்திப்பில் வடக்கு, கிழக்கு பகுதிகளின் தற்போதைய நிலைமை மற்றும் நாட்டில் காணப்படும் மனித உரிமை தொடர்பாகவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிறிலங்கா அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டு வருகின்ற மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கான தேசிய செயற்பாட்டு வேலைத்திட்டம் தொடர்பில் இரு தரப்பினரும் இச் சந்திப்பில் விரிவாக கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வமர்வில் கலந்து கொள்வதற்காக சிறிலங்காவின் அமைச்சர் மஹிந்த சமரசிங்க முக்கிய படையதிகாரிகளுடன் ஜெனீவாவுக்கு விஜயம் செய்திருந்த நிலையில், சிறிலங்காவின் வெளிவிவகாரச் செயலாளர் றொமேஸ் ஜயசிங்க மற்றும் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோர் நியூயோர்க்கில் இருந்து ஜெனீவா சென்றிருந்தனர்.

இந்த அமர்வின் போது எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிய வருகின்றது. ஆயினும், இவ்வறிக்கை இந்த அமர்வின் போது விவாதிக்கப்படுமா என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட மூவரங்கிய நிபுணர் குழுவின் போர்க்குற்றங்கள் தொடர்பிலான அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படுவதற்கு முன்பாக சிறிலங்கா அரசாங்கம் தனக்கு சாதகமாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வடிப்படையில், பான் கீ மூனுக்கும் கொழும்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் நிகமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

இச் சந்திப்பில் போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா மற்றும் பான் கீ மூனின் தலைமை அதிகாரியான விஜய் நம்பியாரும் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கையின் மனிதவுரிமை விவகாரங்கள் மற்றும் வழங்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் முக்கியமான விவகாரங்களில் உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சிறிலங்காவின் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸினால் பான் கீ மூனுக்கு எடுத்துக் கூறப்படடிருந்ததாக செய்திகள் தெரிவித்திருந்தன.

அதேவேளை, உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு தனது பரிந்துரைகளை முன்வைக்கும் போது அதனை பான் கீ மூன் ஏற்றுக் கொண்டு பாராட்டும் வகையில் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சும், அதன் உயர்மட்ட இராஜதந்திரிகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={3AE54EBD-5EBE-4520-8738-3356C2E705AD}

  • தொடங்கியவர்

Human Rights Minister Mahinda Samarasinghe told the United Nations Human Rights Council in Geneva today that the government of Sri Lanka was the best judge of the manner in which the emergency regulations should be managed while promising that this process would be concluded in an ‘appropriate and timely manner.’

“We believe that it is our authorities which would be best placed in making this judgment. We assure the Council that the rollback process of the ERs will be concluded in an appropriate and timely manner,” he said addressing the 16th sessions of the HRC.

He stated that the international network of the LTTE was still active and cautioned against “being lulled into a sense of complacency.”

The Minister detailed the number of instances when elements of the LTTE were apprehended or attempted to engage in terrorist activities around the globe.

On Friday during his meeting with the United Nations High Commissioner for Human Rights Navaneethan Pillai he had briefed her on the facilities being provided to IDP's, the rehabilitation work with ex-combatants and the infrastructure development projects in the north.

http://dailymirror.lk/top-story/10065-emergency-for-govt-to-decide-.html

  • தொடங்கியவர்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைச் சபையில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைச் சபையின் பதினாறாவது கூட்டத்தொடரில் சில ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்களை சுமத்தக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டத்தொடர் இன்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஆரம்பமாகவுள்ளது. மார்ச் மாதம் 25 ஆந் திகதி வரை அமர்வுகள் தொடரவுள்ளன.

இலங்கையின் சார்பில் முன்னாள் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான பிரதிநிதிகள் குழு கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளது.

மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளையை அமைச்சர் சமரசிங்க கடந்த சனிக்கிழமை சந்தித்தார். இலங்கையின் நிலைமை குறித்து அந்தவேளை, ஆணையாளருக்கு விளக்கியதாக இலங்கை அமைச்சர் கூறினார்.

இன்றைய தினம் நடைபெறவுள்ள ஆரம்ப அமர்வுகளில் இலங்கையின் நிலைமைகள் குறித்து தாம் தெளிவுபடுத்தவுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேலும் தெரிவித்தார்.

2009ம் ஆண்டில், இலங்கையில் இடம்பெற்ற போரின் முடிவின் பின்னர், இடம்பெற்ற சிறப்பு அமர்வில், இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு மேற்கு நாடுகள் மேற்கொண்ட முயற்சியை, இலங்கை அரசு நேச நாடுகளின் துணையுடன் தோற்கடித்து, போரை நடத்திய முறைக்குத் தன்னைப் பாராட்டும் வகையிலான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=6710

  • தொடங்கியவர்

Sri Lanka risks forced war crimes probe: US

Sri Lanka could be hauled before a war crimes tribunal over the killing of "many thousands of civilians" in the final months of its separatist war with Tamil rebels, a top US official said. In the toughest warning since the end of fighting in May 2009, US Assistant Secretary of State for South and Central Asian Affairs, Robert Blake, said Sri Lanka risked a forced international investigation.

His remarks came as the UN Human Rights Council was meeting in Geneva, where Sri Lanka has previously managed to avoid condemnation, thanks to the backing of several nations, including strong allies China and Russia.

Blake, a former ambassador to Sri Lanka, said it was "preferable" for Sri Lanka to have its own investigation in line with internationally accepted human rights standards, rather than face an external inquiry. "It's important to say that if Sri Lanka is not willing to meet international standards regarding these matters, there would be pressure to appoint an international commission to look into these things," said Blake.

http://www.indianexpress.com/news/sri-lanka-risks-forced-war-crimes-probe-us/756356/

  • தொடங்கியவர்

சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை எதிர்கொள்ள நேரிடும்! சிறிலங்காவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!!

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்தப்படக் கூடும் என அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்க அமைச்சர் ரொபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 16வது அமர்வு நேற்று (28.02.11) ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில்'ஸ்கை நியூஸ்' தொலைக்காட்சிக்கு நேற்று வழங்கிய செவ்வி ஒன்றின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளத்தக்க, சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்ளத் தவறினால் சர்வதேச விசாரணைகளை எதிர்கொள்ள நேரிடும் என அவர் இச் செவ்வியில் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

இவ் விவகாரம் குறித்து சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச மரபுகளுக்கு ஏற்ற வகையில் விசாரணைகளை மேற்கொள்ளத் தவறினால், இவ் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச ஆணைக்குழு ஒன்றை நியமிப்பதற்கான அழுத்தங்கள் அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்னாசியப் பிராந்தியத்துடனான நெருக்கத்தை வலுப்படுத்திக் கொள்வதற்கான முக்கிய விவகாரங்களாக நல்லிணக்கம், பொறுப்புக் கூறுதல் மற்றும் மனிதவுரிமைகள் விவகாரங்கள் தொடர்பிலான சாதகமான சமிஞ்சைகளை அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, லிபியாவுடன் சிறிலங்காவை தான் ஒப்பிடவில்லை எனவும் அவர் இச் செவ்வியில் கூறியுள்ளார்.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் சிறிலங்கா படைத்தரப்பால் சுமார் 7,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை கணிப்பீடுகள் தெரிவித்திருந்தது. ஆனால், இப் போரில் சுமார் 40,000 பேர் வரை கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் தூதுவர் கோர்டன் வைஸ் தெரிவித்திருந்தார்.

அதேவேளை, இப் போரில் சுமார் 80,000 பேர் வரை சிறிலங்கா படைத்தரப்பால் கொல்லப்பட்டதாக களத்தில் இறுதிவரை நின்றவர்களின் தகவல்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

அத்துடன், இப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச மனிதவரிமை அமைப்புக்களும், பிரித்தானியா உட்பட மேற்கத்தைய நாடுகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.

இப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சி, சர்வதேச மன்னிப்புச் சபை, மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு ஆகியன ஆதாரங்களையும் வெளியிட்டிருந்தன.

இந் நிலையில், சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை நிராகரித்த சிறிலங்கா அரசாங்கம், உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவை கடந்த வருடம் மே மாதம் 15ஆம் திகதி நியமித்திருந்தது.

இந்த ஆணைக்குழுவின் நியமனமானது வெறும் கண்துடைப்பு நாடகம் என சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களால் சுட்டிக்காட்டப்பட்டிருந்த நிலையில், சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தின் முன்பாக நிறுத்தப்படக் கூடிய வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க உதவி இராஜாங்க அமைச்சர் ரொபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளமை முக்கியத்துவம் பெறுகின்றது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={605B5184-80A2-419E-B73D-0D73535F3FB6}

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 200,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

காரணமாக இருந்த வட இந்திய, சிங்கள பயங்கரவாதிகள் ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து வெளியேற்றப்படல் வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.