Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையை மிரட்டுகிறது அமெரிக்கா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை மிரட்டுகிறது அமெரிக்கா!

Posted by admin On March 2nd, 2011 at 12:10 pm /

இறுதிப்போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து ஒழுங்கான விசாரணைகளை கொழும்பு மேற்கொள்ளவில்லை எனில் போர்க்குற்ற விசாரணைத் தீர்ப்பாயத்தின் முன்பாக இலங்கை இழுத்து வரப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

சுயாதீன சர்வதேச விசாரணை ஒன்றுக்கு இலங்கை முகங்கொடுக்க வேண்டிய ஆபத்திருக்கின்றது என்று தெரிவித்துள்ளார் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்கச் செயலர் ரெபேர்ட் ஓ பிளேக்.

சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் சபையின் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்காவின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ஐ.நா. கூட்டத் தொடரில் இலங்கை மீது மீண்டும் போர்க் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும் என்ற அச்சம் நிலவுகின்றது. ஏற்கனவே ஒருதடவை கொண்டு வரப்பட்ட இத்தகைய குற்றச் சாட்டுக்களை ரஷ்யா, சீனா ஆகிய நட்பு நாடுகளின் துணையுடன் இலங்கை சமாளித்துக் கொண்டது.ஆனால், போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான நியமங்களைத் திருப்திப்படுத்தக் கூடிய வகையில் இலங்கை அரசு தானே விசாரணைகளை நடத்துவதே சர்வதேச விசாரணை ஒன்றை எதிர்கொள்ளவதை விட உகந்ததாக இருக்கும் என்று பிளேக் தெரிவித்தார்.

“இந்த விடயங்கள் தொடர்பில் சர்வதேச நியமங்களைப் பின்பற்ற இலங்கை அரசு தவறினால் இவைபற்றிக் கவனத்தில் எடுக்க சர்வதேச விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்குமாறு அழுத்தங்கள் அதிகரிக்கும்” என்றார் பிளேக்.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்தபேட்டியில் அவர் இதனைக் கூறினார். நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், மனித உரிமைகள் என்பன இலங்கையுடனான அமெரிக்க உறவைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களின் கோரிக்கைகளை அடுத்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கொடுத்த அழுத்தங்கள் காரணமாக அதிபர் பராக் ஒபாமா அரசு, இலங்கை விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன் வெளிப்பாடே பிளேக்கின் அண்மைய கருத்துக்கள் என்றும் அவை சுட்டிக் காட்டுகின்றன. இறுதிப் போரின் போது 7 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று ஐ.நா. மதிப்பிட்டுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை 30 ஆயிரத்ததைத் தாண்டும் என்று மனித உரிமைகள் குழுக்கள் புள்ளி விவரம் வெளிவிடுகின்றன. ஆனால் இறுதிப் போரின் போது போர்க் குற்றங்கள் நிகழ்ந்தன என்பதை ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ அடியோடு மறுக்கின்றார்.

ஆனால், 2001 ஆம் ஆண்டு நோர்வே நாட்டின் அனுசரணையுடன் செய்து கொள்ளப்பட்ட அமைதி உடன்படிக்கை ஏன்? தோல்வி அடைந்தது என்பதைக் கண்டறிய கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார்.

ஆனால், இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் குறித்து அனைத்துலக மனித உரிமைகள் குழுக்கள் திருப்தி தெரிவிக்கவில்லை.

இது சுயாதீனமற்ற தொரு குழு என்று தெரிவித்த அவை ஆணைக்குழு முன்பாக சாட்சியமளிக்க விடுக்கப்பட்ட அழைப்பையும் நிராகரித்தன.

saritham.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.