Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூழைமேடு கொலை வழக்கில் டக்ளசுக்கு முன்பிணை வழங்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்று தீர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சூழைமேடு கொலை வழக்கில் டக்ளசுக்கு முன்பிணை வழங்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்று தீர்ப்பு

தமிழகத்தில் சூழைமேடு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு, தற்போது சிறீலங்காவில் அமைச்சராக உள்ள டக்ளஸ் தேவானந்தா முன் பிணை கோரி சென்னை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனு இன்று உயர் நீதி மன்றத்தினால் நிராகரிக்கப்பட்டு விட்டது.

தற்போது சிறீலங்காவின் பாரம்பரிய சிறுகைத்தொழில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா 1986 ஆம் ஆண்டு சென்னையில் தஞ்சம் புகுந்து தங்கியிருந்தபோது சூளைமேட்டைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரைக் கொலை செய்தார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

பின்னர் தேவானந்தா இலங்கைக்குத் தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளி என்று 1994ம் ஆண்டு சென்னை நீதிமன்றம் அறிவித்தது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சிறீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் ஜோடியாக டெல்லிக்கு வந்திருந்தார் டக்ளஸ். பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்து கை குலுக்கி வரவேற்கப்பட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

குற்றவாளியை பிரதமர் மன்மோகன்சிங் இப்படியா வரவேற்பது என்று கண்டனங்கள் எழுந்தன. டக்ளஸை கைது செய்யவும் கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில், தனது பெயரை தேடப்படுவோர் பட்டியலிலிருந்து நீக்கக் கோரியும், முன்பிணை வழங்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் டக்ளஸ். இந்த இரு கோரிக்கைகளையும் இன்று உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

இந்த மனுவை நிராரித்து வெளியடப்பட்ட அறிக்கையின் படி தேடப்படும் குற்றவாளியாகிய டக்ளஸ் சம்பந்தப்பட்ட நீதிமன்றில் நேரில் ஆஜராகி முன்பிணை கோரினால் அதுபற்றி பரிசீலிக்கலாம். அது வரை அவரது பெயரை தேடப்படும் குற்றவாளி பட்டியலில் இருந்து நீக்கமுடியாது என உயர் நீதிமன்றம் கருதுகிறது.

http://onlineuthayan.com/News_More.php?id=869

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய நீதி மன்றம் இந்திய தாயின் ... மன்றம்.. அவன் ஆட்டோ டிரைவரை கொன்றார் என்பதெல்லாம் இங்கிட்டு எடுபடாது... இங்கிட்டு ஊரை கொள்ளை அடித்தவன் எல்லாம் டாட்டா சுமொவில் சுத்தும் போது...

டிஸ்கி:

ஈழ தோழர்கள் இனியாவது இந்த கிந்தியம பொந்தியம் என்பதைவிடுத்து ... ஆப்பதனை அசைத்த குரங்கை போல என பட்டினத்தார் பாடல் வரிகளுக்கு ஏறப் செயல் பட வேணும்.. எவனுக்கும் இங்கிட்டு என்ன இனம் மொழி என தெள்ளிலேஎது! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

Thursday, March 3rd, 2011 | Posted by thaynilam

டக்ளஸிற்கு முன்பிணை வழங்க இந்திய நீதிமன்றம் மறுப்பு

இந்திய நீதிமன்றில் தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையையும் தேடப்படும் குற்றவாளி என்ற உத்தரவையும் ரத்து செய்யக் கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்திருந்த மனு இன்று நீதிபதி நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அமைச்சர் தனக்கு பிணை வழங்க வேண்டும் என்றும் மனுவில் கூறி இருந்தார்.

அப்போது அமைச்சர் டக்ளஸிற்கு பிணை வழங்கக் கூடாதென அரசு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக இந்திய ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அமைச்சர் டக்ளஸிற்கு பிணை வழங்க முடியாதென நீதிபதி உத்தரவிட்டுள்ளர். அமைச்சர் டக்ளஸ் உயர் நீதிதன்றில் சரணடைந்து தன் மீதான உத்தரவுகளை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் நீதிபதி கூறினார்.

சென்னை சூளைமேட்டில் கடந்த 1986ம் ஆண்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் திருநாவுக்கரசர் என்பவர் கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை 4வது மேலதிக பிரிவு நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.

இதற்கிடையே கொலை வழக்கு விசாரணைக்கு அமைச்சர் டக்ளஸ் சமூகமளிக்காததால் அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதோடு அவர் தேடப்படும் குற்ற வாளியாகவும் அறிவிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு அவர் டெல்லிக்கு அரசு விருந்தினராக வந்தபோது அவரை கைது செய்யக்கோரி பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இதனையடுத்து அமைச்சர் டக்ளஸ் தனக்கு எதிரான கைது உத்தரவையும், தேடப்படும் குற்றவாளி என்ற உத்தரவையும் ரத்து செய்யக் கோரி மனு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Short URL: http://thaynilam.com/tamil/?p=3413

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.