Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளி.மகாவித்தியாலய விளையாட்டுப் போட்டிக்கு சிறீதரனுக்கு அழைப்பில்லை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளி.மகாவித்தியாலய விளையாட்டுப் போட்டிக்கு சிறீதரனுக்கு அழைப்பில்லை! (செய்திப் பார்வை)

கிளிநொச்சி மகாவித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிக்கு பாடசாலையின் முன்னாள் அதிபரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் அழைக்கப்படாமல் ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அழைக்கப்பட்டமை பாடசாலை மட்டத்தில் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரியவருகிறது.கடந்த வாரம் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளின் இடை நிலைப்பிரிவிற்கான போட்டியின் முதன்மை விருந்தினராக ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அழைக்கப்பட்டு நிகழ்வு நடைபெற்றிருக்கின்றது.

கிளிநொச்சி மகாவித்தியாலத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வரையில் அதிபராகப் பணியாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு சாதாரண அழைப்பிதழ் கூட அனுப்பிவைக்கப்படவில்லை என்று தெரியவந்திருக்கின்றது.

இதனை அடுத்து ஆசியர்கள் சிலர் நேரடியாகவே பாடசாலையின் முன்னாள் உப அதிபரும் தற்போதைய அதிபருமான திரு. பங்கையற்செல்வன் அவர்களிடம் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். இதற்குப் பதிலளித்த பங்கையற்செல்வன் ‘கல்வித் திணைக்களத்தின் கீழ் உள்ள விடுதிக்கட்டிடத்தினை மகாவித்தியாலத்திற்குப் பெற்றுத்தருவதற்கான ஒப்புதலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கியுள்ளதாகவும் இதற்கமையவே சந்திரகுமார் அழைக்கப்பட்டு, சிறீதரன் நிராகரிக்கப்பட்டார் என்று காரணம் சொல்லியிருக்கின்றார்.

ஆனாலும் இதன் பின்னணி குறித்த விரிவான தகவல்கள் எமது தளத்திற்குக் கிடைக்கப் பெற்றுள்ளன..

தமிழீழ விடுதலைப்புலிகள் வலுவாக இருந்த காலத்தில் தேசியத்தினை நேசிப்பவர்களாகவும், விடுதலைப் போராட்ட தீவிர ஆதரவாளர்களாகவும் காட்டிக்கொண்ட சிலரது நிகழ்ச்சி நிரலுக்குள் பாடசாலையின் அதிபர் பங்கையற்செல்வன் தற்போது செயற்பட்டு வருவதாக தெரியவருகின்றது.

வன்னிப் போர் தீவிரம் பெற்றிருந்த 2009 ஏப்ரல் மாதம் விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்துக்களை வன்னியிலேயே விதைத்துவந்த ஒரு குழுவினர் கடல் மார்க்கமாக இராணுவக் கட்டுப்பாட்டினை சென்றடைந்தனர்.

அந்தக் குழுவில் பயணித்தவர்களுக்கான நிதிப் பங்களிப்பினை கிளிநொச்சி மகாவித்தியாலத்தின் தற்போதைய அதிபர் பங்கையற்செல்வனே வழங்கியிருந்தார். குறித்த குழுவில் அரசியல் ஆய்வாளர் ஒருவர், விடுதலைப்புலிகளின் ஊடகம் ஒன்றின் பிரதம ஆசியரும், விடுதலைப்புலிகளின் கலை, இலக்கிய, சஞ்சிகை ஒன்றின் முன்னாள் ஆசியருமான கவிஞர் ஒருவரும், கிளிநொச்சி அழகியல் கலாமன்ற இயக்குநரான விஜயசேகரன் உட்பட்டவர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இவர்கள் யாழ்.கடற்பரப்பில் வைத்து இலங்கைக் கடற்படையினரிடம் தஞ்சம் அடைந்து யாழ்.தென்மராட்சி பாடசாலை ஒன்றில் அகதிகளாக தங்கவைக்கப்பட்டிருந்தனர். அங்கு அகதிகளைச் சந்திப்பதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்றிருந்தவேளை ஆய்வாளரும், ஊடகக் கவிஞரும் சந்தித்து பல மணி நேரம் கலந்துரையாடியிருக்கின்றனர். அச்சந்திப்பின் பின்னர் அனைவரும் முகாமில் இருந்து வெளியேறியிருந்தனர்.

அவர்களில் அரசியல் ஆய்வாளர் நேரடியான பங்களிப்பைத் தவிர்த்துக் கொள்ள ஏனையவர்கள் ஈபிடிபியின் தீவிர செயற்பாட்டாளர்களாக மாற்றம் அடைந்தனர். குறிப்பாக குறித்த ஊடகக் கவிஞர் தமது மைத்துனரான சந்திரகுமாருக்கான ஆதரவுத் தளத்தினை விரிவுபடுத்தும் அதேவேளை வன்னியில் ஊடகப்பணி செய்தவர்களை ஈபிடிபி ஊடகங்களில் இணைத்து முழுமையாக தேசியத்திற்கு எதிரானவர்களாக மாற்றுவதிலும் கணிசமான வெற்றி அடைந்தார்.

இதேவேளை அவர்களின் குழுவில் முக்கிய இடம்பெற்றிருந்த அழகியல் கலாமன்ற நிர்வாகியான விஜயசேகரன் ஈபிடிபியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளராகப் பகிரங்கமாகச் செயற்பட ஆரம்பித்தார். தமிழீழ விடுதலைப்புலிகள் வலுவாக இருந்த போது கல்விக்கழகத்துடனான உறவினை வலுவாக வைத்துக் கொண்டு பாடசாலை செல்லாமலேயே ஆசிரியக் கொடுப்பனவினைப் பெற்றுவந்தார்.

அதே நிலைப்பாட்டினையே போருக்குப் பின்னரும் அவர் கைக் கொண்டு வருகின்றார். ஆனால் விடுதலைப்புலிகளுக்குப் பதிலாக ஈபிடிபியைப் பயன்படுத்துகிறார். இந்த விடயம் தொடர்பில் இவருடன் முரண்பட்டதை அடுத்தே கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் த.குருகுலராஜாவிற்கு உடனடியான இடமாற்றத்திற்கான அறிவிப்பினை வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறீ விடுத்திந்தமை வெளித்தெரியாத உண்மையாகும்.

இவர்களுடன் தமிழீழ விளையாட்டுத் துறையில் முக்கியஸ்தராகக் கடமையாற்றி தமிழீழ வலைப்பந்தாட்ட அணி புலம்பெயர் நாடுகளுக்குச் சென்று வெற்றிபெற்றுத் திரும்பியதும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களைச் சந்தித்த போது அந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த திரு அன்ரன் அன்பழகன் என்பவர் தற்போது முருகேசு சந்திரகுமாரின் பிரத்தியேக செயலாளராகப் பணியாற்றுகின்றார்.

இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கிளிநொச்சியை ஈபிடிபியின் கோட்டையாக மாற்றும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர். இவ்வாறு இவர்கள் செயற்படுவதன் வெளிப்பாடே கிளிநொச்சி மகாவித்தியாலய விளையாட்டுப் போட்டிக்கு சந்திரகுமார் அழைக்கப்பட்டதும், சிறீதரனுக்கு அழைப்பிதழ் மறுக்கப்பட்டதுமாகும்.

இதேபோல் அக்கராயன் மகாவித்தியாலயத்திற்கும் ஈபிடிபியின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், சந்திரகுமாரும் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகள் பலம்பெற்றிருந்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர் என்று காட்டிக்கொண்ட பாடசாலை அதிபர் தற்போது தமது உண்மையான உருவத்தினைக் காட்டியிருக்கின்றாரோ? என்றே எண்ணத் தோன்றியிருக்கின்றது என்றார் பாடசாலையின் மூத்த ஆசிரியை ஒருவர்.

அரசியல் என்பதற்கும் அப்பால் ஒரு பாடசாலை அதிபர் ஓய்வு பெற்றாலோ, இடமாற்றத்திற்கு உட்பட்டாலோ பாடசாலையின் முக்கிய நிகழ்வுகளுக்கு அவரை அழைப்பதே உண்மையான பண்பாகும்.

http://www.saritham.com/?p=12820

நன்றி - சரிதம் இணையம்

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் பலம்பெற்றிருந்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளர் என்று காட்டிக்கொண்ட பாடசாலை அதிபர் தற்போது தமது உண்மையான உருவத்தினைக் காட்டியிருக்கின்றாரோ? என்றே எண்ணத் தோன்றியிருக்கின்றது என்றார் பாடசாலையின் மூத்த ஆசிரியை ஒருவர்.

அரசியல் என்பதற்கும் அப்பால் ஒரு பாடசாலை அதிபர் ஓய்வு பெற்றாலோ, இடமாற்றத்திற்கு உட்பட்டாலோ பாடசாலையின் முக்கிய நிகழ்வுகளுக்கு அவரை அழைப்பதே உண்மையான பண்பாகும்.

வெள்ளைவான் கடத்தல் காரர், மண்ணை களவாக வெட்டி விற்பவர்கள் இவர்கள்.இவர்களிடம் பண்பை எப்படி எதிர்பார்க்க முடியும்?.தமிழராயினும் அரசியல் பழிவாங்குபவர் டக்கிளஸ்.தன்னை மீறுபவர்களை போட்டுத்தள்ளுபவர் டக்கிளஸ்.டக்கிளசிடம் எதனை தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.