Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் ஊடகங்களுக்கான டளஸ் அழகப்பெருமவின் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஊடகங்களுக்கான டளஸ் அழகப்பெருமவின் எச்சரிக்கை

அரச மற்றும் சிஙகள ஊடகங்களுக்கு பொருந்தாது - GTNற்காக சுனந்ததேசப்பிரிய:-

தமிழ் ஊடகங்களுக்கான டளஸ் அழகப்பெருமவின் எச்சரிக்கை அரச மற்றும் சிஙகள ஊடகங்களுக்கு பொருந்தாது - ற்காக சுனந்ததேசப்பிரிய:-

அமைச்சர் டளஸ் அழகப்பெரும அண்மையில் தமிழ் ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்தார் அல்லது எதிர்வு கூறல் ஒன்றை கூறியிருந்தார். மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச தலைவர்களுடனானக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்திருந்தார். நாட்டின் நல்லிணக்க செயற்பாடுகளில் தடைகளை ஏற்படுத்த வேண்டாம் என அவர் கூறியிருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அத்தோடு இனங்களுக்கிடையில் ஐக்கிய இன்மையை ஏற்படுத்த முயற்சிக்கும் அரசியல்வாதிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் எனவும் நாட்டை ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ளும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும் அவர் தமிழ் ஊடகங்களில் கேட்டுக்கொண்டதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவரது உரையில் சிங்கள ஊடகங்களிடம் இவ்வாறான கோரிக்கையை விடுத்ததாக அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கவில்லை. அதுமாத்திரமல்ல அரசாங்கத்தின் நிர்வாகத்தில் இருக்கும் அரச ஊடகங்களின் நடுநிலைத் தன்மை, நடுநிலையான செய்திகளை வெளியிடுமாறும் அவர் எந்தக் கோரிக்கையையும் முன்வைக்கவில்லை.

கடந்தகாலம் முழுவதும் தமிழ் சிவில் தலைவர்கள் சம்பந்தமாக சில சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் வைராக்கியமான ரீதியில் பொய்யான செய்திகளை வெளியிட்டு வந்தன. அண்மையிலும் இவ்வாறான ஒரு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. தம்புள்ள கந்தலம விடுதியில் விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்ட பூசகர் ஒருவர் உட்பட ஐந்து பேர் அடங்கிய குழுவினர் விடுதலைப் புலிகளின் பாடல்களுடன் கைதுசெய்யப்பட்டதாக அந்தச் செய்தியில் தெரவிக்கப்பட்டிருந்தது. இந்தக் குழுவினர் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கெதிராக பொய்யான தகவல்களை வழங்கும் குழுவென காவல்துறையின் உயர்மட்டத் தரப்புத் தகவல்கள் தெரிவித்திருந்தன. அத்தோடு அவர்களிடமிருந்த இறுவெட்டுக்கள் மற்றும் கணனித் தகவல்கள் அடங்கிய பென்ரைவ் என்பவற்றை பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் கையளித்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.

எனினும், பின்னர் நீதிமன்றத்தில் அவர்கள் தொண்டர் அமைப்பின் மீளாய்வுக் கூட்டத்திற்காக அந்த விடுதிக்கு வந்திருந்ததாக தெரியவந்திருந்தது. எனினும், அதனை ஊடகங்கள் வெளியிடவில்லை. இவ்வாறான பல உதாரணங்கள் இருக்கின்றன. அடுத்த சந்தர்ப்பத்தில் தமிழ் ஊடகங்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கைகள் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் தொடர்பிலும் மேற்கொள்வதற்கு அமைச்சர் அழகப் பெருமவிற்கு ஞானம் பிறக்க வேண்டுமெனப் பிரார்த்திக்கிறோம்.

அரசாங்க ஊடகங்களின் வெட்கமற்ற செய்தி வெளியீடுகள் குறித்து கூறவேண்டும். குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, மாடு ஒன்றைக் கொள்வனவு செய்ய வேண்டுமானால் மாத்திரமே லேக்கௌவுஸ் பத்திரிகைகளைப் பார்க்க வேண்டுமெனக் கூறியிருந்தார். அமைச்சர் டளஸ் அழகப்பெருமவும் இவ்வாறான நிலைப்பாட்டைத் தான் கொண்டிருக்கக் கூடும். அரசாங்கத்தை விமர்சிப்பதை தேசத் துரோகம் எனக் கருதும் இந்த அரச நிர்வாகத்திற்கு உட்பட்ட ஊடகங்கள் எத்தனைப் பேரைக் கண்டித்திருக்கும். இதற்கு பதிலை அண்மையில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளர் ஒருவர் வழங்கியிருந்தார்.

யுத்தமும் துரோகிகளும்

பீ.பீ.சி சிங்கள சேவைக்கு கொழும்பிலுள்ள பி.பி.சி செய்தியாளரான சார்ள்ஸ் எவலன்ட் வழங்கிய செய்தியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினரான இலங்கையின் சிரேஷ்ட இராஜதந்திரி, இவ்வாறு கூறியுள்ளார். வெளிநாடுகளின் விமர்சனங்களுக்கு ஆக்ரோசமான பதிலை வழங்காது யுத்தத்தின் இறுதிக் கட்டம் சம்பந்தமாக பொறுப்புக் கூற வேண்டிய விடயங்கள் குறித்து இலங்கை கவனத்தில் கொள்ள வேண்டுமென சுட்டிக்காட்டியிருந்தார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினரும், முன்னாள் ஐ.நா.விற்கான இலங்கையின் தூதுவருமான பாலியகார, கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் இவ்வாறு கூறியிருந்தார். மோதலின் போது சிக்கியிருந்தவர்கள் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தினாலோ, இராணுவ நடவடிக்கையினாலோ சம்பந்தப்பட்டிருந்தால் அதற்கான அடிப்படை காரணங்களை அறிந்து அவர்களின் துயரங்கள் தொடர்பாக அரசாங்கம் சாதகமான நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவது மிகவும் முக்கியமானது என பலியக்கார கூறியிருந்தார்.

இது இலங்கைக்கு துரோகமானதோ, காட்டிக்கொடுப்பகவோ எடுத்துக் கொள்ளலாம் அனுபவம் மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கான சவாலாக கருதும் சமூக நடவடிக்கையாக மாற்ற வேண்டும் எனவும் பலியக்கார கூறியுள்ளார். எனினும், செய்தியாளரான சார்ள்ஸ் எவில்டன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் நடுநிலையான கருத்தாளர்களை தேசத்துரோகிகள் என அடையாளப்படுத்துவதாகக் கூறியுள்ளார்.

நாட்டின் இறையாண்மை என்பது சட்டத்தின் நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதாகும். அவ்வாறு இல்லையெனில் குற்றச் செயல்களுக்கு தண்டனை கிடைக்காமல் போவதுடன் குற்றவாளிகளுக்கு தண்டனைகள் கிடைக்காமல் போகும் எனவும் பலியக்கார இதன்போது குறிப்பிட்டுள்ளார். இதனையே எம்போன்றவர்கள் பல காலமாக கூறிவருகிறோம். இப்படியான கருத்துக்களை வெளியிட்டதால் எம்மைப் போன்ற பலர் தற்போதைய அரசாங்கத்திலுள்ள சில தலைவர்களினால் தேசத்துரோகிகள் என முத்திரைக் குத்தப்பட்டோம்.

எவ்வாறாயினும், யுத்தத்தின் இறுதியில் எந்தத் தரப்பாவது மனித உரிமைகளை மீறியிருக்குமாயின் அதனை ஆராய்ந்து சட்டத்தின் நிர்வாகத்திற்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறுவது நியாயமான கோரிக்கை என்பது பலியக்காரவின் கருத்துமூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதுமாத்திரமல்லாமல் இந்தப் பிரச்சினையை இலங்கை மாத்திரமே எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அல்ல. அண்மையில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி எதிர்நோக்கிய நெருக்கடி மூலம் இது தெரிவாகியுள்ளது.

உலகில் மிகப் பெரிய இராணுவப் பலம் மற்றும் பொருளாதாரம் பலம் கொண்ட நாடு அமெரிக்கா. அந்த நாடு இன்னும் உலக பொலிஸ் காரன் என்ற நிலைப்பாட்டில் செயற்பட்டு வருகிறது. அந்த நாட்டின் சகல அதிகாரங்களையும் கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி தான் கைதுசெய்யப்படுவோம் என்ற அச்சம் காரணமாக சுவிஸர்லாந்திற்கான பயணத்தை இடைநிறுத்திக் கொண்டார். அவர் அதிகாரத்தில் இருந்தபோது கடுமையான பொலிஸ் தலைவர் போல் நடந்துகொண்டார்.

கடந்த பெப்ரவரி 12ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெறவிருந்த யூத நலன்புரி அமைப்பொன்றுக்கான நிதி சேகரிக்கும் இராப் போசன விருந்துபசாரத்தில் புஷ் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். ஜெனீவாவில் தான் கைதுசெய்யப்படுவோம் என்ற காரணத்தினால் அவர் அந்தப் பயணத்தை இரத்துசெய்தார்.

சித்ரவதை செய்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைதுசெய்யப்படலாம் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே அவர் தனது பயணத்தை இரத்துச் செய்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. கடந்த நவம்பரில் வெளியிடப்பட்ட தனது அறிக்கையில் புஷ், அல் கைதா சந்தேக நபர்களை சித்ரவதை உட்படுத்தியதாக தெரியவந்தது. கைதிகளை சித்ரவதைக்கு உட்படுத்துவது ஐக்கிய நாடுகளின் இணக்கப்பாடுகளின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். குவந்தனாமோ சிறையில் இவ்வாறு சித்ரவதைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்ட இருவர் புஷ்ஷிற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர். பயங்கரவாதிகள் என கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்ட இருவரில் ஒருவரான சல் அல் அஜி என்பவர் அல் ஜசீரா தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் ஆவார்.

ஜேர்மனியை தலைமையமாகக் கொண்டு செயற்படும் மனித உரிமைகள், அரசியல் மறுசீரமைப்பு தொடர்பான கேந்திர நிலையம் மனித உரிமைகளுக்கான சர்வதேச மத்திய நிலையம், அமெரிக்காவின் அரசியலமைப்பு உரிமைகள் தொடர்பான கேந்திர நிலையம் ஆகிய மூன்று அமைப்புகள் ஜோர்ஜ் புஷ்ஷிற்கு எதிரான 2500 பக்கங்களைக் கொண்ட அறிக்கையைத் தயாரித்திருந்தனர்.

இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு உலகம் முழுவதிலுமுள்ள 60 மனித உரிமைகள் அமைப்புக்கள் மாத்திரமல்லாது சித்ரவதைகளுக்கெதிரான ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் விசேடப் பிரதிநிதியும் கையெழுத்திட்டிருந்தார். சர்வதேச மன்னிப்புச் சபை சுவிஸர்லாந்திலுள்ள சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு சித்ரவதை செய்தமை தொடர்பாக ஜோர்ஜ் புஷ்ஷிற்கு எதிராக நீண்ட, விரிவான குற்றச்சாட்டுப் பத்திரத்தை அனுப்பியிருந்தது. அவரது ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்காக வெளிநாடு செல்லும் எந்தச் சந்தர்ப்பத்திலும் அவருக்கெதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும் என சர்வதேச மனித உரிமை சமூகம் தெரிவித்திருந்தது. புஷ்ஷின் ஜெனீவா விஜயம் ரத்துச் செய்யப்பட்டதை அடுத்தே அவை இதனைத் தெரிவித்திருந்தன. உலகில் இப்படியான பலம்படைத்த நாடாக இருந்தாலும் அந்த நாட்டின் தலைவருக்கெதிராக மனித உரிமை மீறல்கள் குறித்து குற்றச்சாட்டுக்களை சுமத்த முடிந்தமையானது சர்வதேச மனித உரிமை சமுகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

- சுனந்த தேசப்பிரிய

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/58674/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.