Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தாலேயே அப்பாவித் தமிழ் மக்களைக் குற்றப் புலனாய்வுப் பொலிஸார் கைது செய்தனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தாலேயே அப்பாவித் தமிழ் மக்களைக் குற்றப் புலனாய்வுப் பொலிஸார் கைது செய்தனர்

[Tuesday, 2011-03-15 13:03:08]

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தாலேயே அப்பாவித் தமிழ் மக்களைப் குற்றப்புலனாய்வு பொலிஸார் கைது செய்துள்ளனர். 10 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் எப்படி தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிருக்க முடியும். எனவும் சட்டத்தரணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆண்கள், பெண்கள், சிறார்கள் உட்பட 52 பேரை கொழும்பு பிரதம நீதவான் ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் இன்று ஆஜர்படுத்தினர்.அப்போது சந்தேக நபர்கள் சார்பில் வாதாடிய சட்டத்தரணிகளே இவ்வாறு தெரிவித்தனர்.

கொழும்பிலும் நீர்கொழும்பிலுமுள்ள விடுதிகளிலிருந்து இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் இவர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றதாக கிடைத்த தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றதாகவும் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பிருக்கிறதா அல்லது சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றார்களா என அறிவதற்காக விசாரித்து வருவதாகவும் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சந்தேக நபர்ககள் பல்வேறு தேவைகளுக்காக கொழும்பிற்கு வந்ததாக சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் வி.எஸ். நிரஞ்சன், மொஹமட் நஸார், ஏ.சி.எம். இஸ்மாயில் ஆகியோர் நீதிமன்றில் கூறினார்.

ஒவ்வொரு பிரஜையும் எங்கும் வசிக்கலாம் என கூறப்பட்ட போதிலும் அப்பாவி மக்களை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பனாலும் தமிழர்கள் என்பதனாலும் குற்றப்புலனாய்வு பொலிஸார் கைதுசெய்துள்ளதாகவும் சந்தேக நபர்களின் வழக்குரைஞர்கள் கூறினார்.

இதனையடுத்து சிறார்கள் நால்வரை விடுதலை செய்யுமாறு பணித்த நீதிவான், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 48 தமிழர்களை மார்ச் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

seithy.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.