Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர் பிரச்சனை மட்டுந்தான் தான் எனக்கு அரசியல் - சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Thursday, 17 March 2011 13:31

ஈழத்தமிழர் பிரச்சனை மட்டுந்தான் தான் எனக்கு அரசியல் - சீமான்

ஈழத்தமிழர் பிரச்சினை தான் எனக்கென்று ஒரு அரசியல் இல்லையென்பதை எனக்கு உணர்த்தியது எனவும் தமிழர் தேசிய இன விடுதலையைத் தவிர எமது இனத்திற்கு வேறு ஒரு அரசியல் இருக்க முடியாது எனவும் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் அவர்கள் இந்திய வார இதழொன்று வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைக்கெதிராக ஈழத்தின் இறுதிப் போரின் போது செயற்பட்ட தி.மு.க – காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க.வின் இரட்டை இலைக்கு வாக்குக் கேட்பதில் தவறில்லை என்று திரு.சீமான் அவர்கள் தெரிவித்திருந்தாலும் இப்போதைய நிலவரப்படி அ.தி.மு.க அணி பிளவுபட்டுப் போயுள்ளது. 41 இடங்கள் ஒதுக்கப்பட்ட விஜயகாந்தின் அணி கூட அக் கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளதாகவே சென்னைச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதுபோலவே இந்தப் பேட்டியும் ஜெயலலதாவை ஏன் சீமான் ஆதரிக்கிற முற்படுகிறார் என்பதைப் புடம்போட்டுக் காட்டியது.

தி சண்டே இந்தியன் என்ற இதழிற்கு அவர் வழங்கிய பேட்டியில், “ஈழப் பிரச்சினை மாத்திரம் தான் உங்களது அரசியலாக இருக்கிறதே எனக் கேட்கப்பட்ட போது,

ஈழத்தமிழர் பிரச்னைதான் எனக்கென்று ஓர் அரசியல் இல்லை என்பதை வலுவாக உணர்த்தியது. தமிழர் தேசிய இன விடுதலையைவிடஇ அந்த இனத்திற்கு ஒரு அரசியல் இருக்கமுடியாது. அந்த அரசியலைச் செய்ய இங்கே யாரும் இல்லை. கண் முன்னே என் இனம் மரணிக்கும்போதுஇ என்னால் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்று நினைக்கும்போது என்னிடம் வலிமையில்லை. அந்த வலிமை எங்கே இருக்கிறது? அரசியல் அதிகாரத்தில் இருக்கிறது. அந்த அரசியல் அதிகாரத்தைப் பெற்றவர்களிடம் இனவுணர்வு இல்லை. இனவுணர்வு இருக்கிறவனிடம் அரசியல் அதிகாரம் இல்லை. எனக்கான அரசியல் வலிமையை உருவாக்குவதுதான் இதற்கான சரியான வழி எனத் தெரிவித்துள்ளதோடு,

“தமிழ்த் தேசியம்” கடைசியில் அ.தி.மு.க.விடம் சார்ந்து போய் இருக்கிறதா என்ற கேள்விற்குப் பதலளித்த சீமான் அவர்கள், தமிழத் தேசியம் என்பது திராவிடக் கட்சிகளைச் சார்ந்து இருக்கமுடியாது. எங்களுக்கு அரசியல் வலிமை இல்லாததால், நாதியற்று நிற்கிறோம். என்னை வைத்துக்கொண்டு என் நிலைப்பாட்டிலேயே பார்ப்போமே. நான் ஒரு நாதியற்றவன். நான் ஓர் அனாதை. நான் ஓர் ஆதரவற்ற பிள்ளை. எந்த இடத்திலும் போய் நிற்கமுடியவில்லை. எனக்கென்று உதவ உலகில் யாரும் இல்லை. உலகம் தழுவி நேசித்தேன் எல்லோரும் என் உறவுகள் என்று நினைத்தேன். சர்வதேசியம் பேசினேன். இந்திய தேசியம் பேசினேன். திராவிடம் பேசித் திரிந்தேன்.

கடைசியாக சாகும்போது எனக்கென்று யாரும் வரவில்லை என்கிறபோது நான் தனித்துவிடப்பட்டேன். நான் தமிழன் என்று விட்டுவிட்டீர்கள். ஆமாம்இ நான் தமிழன் என்பதை உணர்ந்து கொண்டேன். கருணாநிதிக்கு மாற்றாக ஜெயலலிதா இல்லை. ஜெயலலிதாவுக்கு மாற்று கருணாநிதியும் இல்லை. இந்தச் சூழலில்இ என் இனம் மொத்தத்தையும் காங்கிரஸ் அழித்துவிட்டது. பாகிஸ்தானையும் சீனாவையும் பக்கத்தில் பகையாக வைத்திருக்கிறோம் காலடியில் இருக்கிற இலங்கையையும் பகையாக மாற்றவேண்டுமா என்று அது நினைக்கிறது. அது நியாயமாக செய்திருக்கவேண்டியது. தமிழீழக் குடியரசை தனியாக பிரித்துவிடுதலே.

அப்படிச் செய்திருந்தால், எப்போதுமே அது இந்தியாவை தந்தையர் நாடாகக் கருதி, நட்பு நாடாக பாதுகாப்பு அரணாக இருந்திருக்கும். அதைச் செய்யாத பெரும் வரலாற்றுப் பிழையை இந்தியா செய்துவிட்டது. இச்சூழலில் எங்கள் வலிமையை உணர்த்துவதற்கு இந்தத் தேர்தல் களத்தைப் பயன்படுத்துகிறோம். எங்கள் கட்சியின் கொள்கை முடிவு... ஒற்றைக் கட்சி ஆட்சிமுறை இந்த தேசம் முழுமைக்கும் இருக்கக்கூடாது. ஒரே கட்சி நாட்டை ஆளக்கூடாது. எந்த மொழிவழி தேசிய இனத்துக்கும் தேசிய கட்சியின் தலையீடு இருக்கக்கூடாது என்று நினைக்கிறோம். காங்கிரஸோ பாஜகவோ எனக்கு வேண்டாம் என்று தெரிவித்துள்ளதோடு,

நீங்கள் நேரடியாக அ.தி.மு.க.வை ஆதரிக்கிறீர்களா? என்று கேட்கப்பட்ட போது,

அதிமுகவை ஆதரிப்பது என்றால் அக்கட்சி நிற்கும் எல்லாத் தொகுதிகளிலும் போய் பிரச்சாரம் செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லை. காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் மட்டுமே பிரசாரம் செய்யப்போகிறோம். அது அதிமுக ஆதரவு என்பதாகாது. காங்கிரஸை எதிர்க்கும் ஒரு வலுவான கட்சிக்கு வாக்கு கேட்க வேண்டும். அது அதிமுகவாக இருக்கிறது. எதிரியின் தோல்வியை உறுதிப்படுத்த அக்கட்சியை ஆதரித்து வாக்குக் கேட்கவேண்டிய நிலையில் இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார். இந் நிலையிலேயே புரியாத புதிராக ம.தி.மு.க மற்றும் சீமான் ஆகியோரின் ஆதரவை அ.தி.மு.க விலத்திக் கொண்டுள்ளது.

sankathi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.