Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப்பின் வெற்றி – ஒடுக்கு முறைக்கு எதிரான போர்க்குரல் : சபா நாவலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப்பின் வெற்றி – ஒடுக்கு முறைக்கு எதிரான போர்க்குரல் : சபா நாவலன்

இலங்கையில் தமிழ்ப் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற வட கிழக்கில் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுபடி அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றிகண்டுள்ளது. போரின் கோராத்தால் அவல நிலைக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் கூட்டத்தின் சார்பிலிருந்து தேசியக் கூட்டமைப்பின் வெற்றி மறுபடி மறுபடி ஒரே செய்தியைத் தான் கூறிக்கொண்டிருக்கிறது.

புலம் பெயர் நாடுகளில் வாழுகின்ற மக்களின் உணர்வுகளிருந்து அன்னியப்பட்ட சந்தர்ப்ப வாதிகள், முன்னை நாள் புலி ஆதரவாளர்கள், இலங்கை அரசின் தமிழர் தரப்பு நீட்சிகள் என்ற அனைவருமே ‘பாதிக்கப்பட்ட மக்கள் அரசியலை எதிர்பார்க்கவில்லை உதவியைத் தான் எதிர்பார்க்கிறார்கள்’ உணர்ச்சியறைந்து பிரச்சாரம் மேற்கொள்ளும் சிக்கலான சூழலில் மிகவும் குறித்த்துக்காட்டத்தக்க செய்தியை தமிழ்ப் பேசும் மக்கள் கூறியிருக்கிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்க்கப்பட்ட ஒவ்வொரு வாக்கும், பெருந்தேசிய ஒடுக்குமுறை தான் இன்றைய எரியும் பிரச்சனை என மக்கள் கூறியிருக்கின்றது. கூட்டமைப்பின் வெற்றி என்பது பெருந்தேசிய ஒடுகுமுறைக்கு எதிரான ஆழப்பதிந்த குறியீடு! கே.பியின் “மனிதாபிமானம்” வழியாக புலம்பெயர் நாடுகளிலும் வழிந்தோடும் நீலிக் கண்ணீர் அரசியல் வியாபாரிகளின் நாடகம் என தமிழ்ப் பேசும் மக்கள் உணர வைத்திருக்கிறார்கள்.

சிறிய உதவி, பெரிய திட்டம் என்றெல்லாம் பணம் கோரி வாசற்கத்வுகளைத் தட்டும் ஒவ்வொரு கீபோர்ட் புலியெதிர்ப்பு அரசியல் சந்தர்ப்பவாதியும், இலங்கை – இந்திய அரசுகளின் அடிவருயும் இனிமேல் அவர்களின் அரசியல் நாடகத்தை தமது அவலத்தில் அரங்கேற்ற வேண்டாம் என மக்கள் கூறியிருக்கிறார்கள்.

தேசிய இன முரண்பாடு தான் இலங்கையின் பிரதான முரண்பாடு என்பதையும், தேசிய இனனங்களின் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கான தேவை 80 களை விடவும் இன்று அதிகமாகக் காணப்படுகிறது என்பதில் மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது உறுதியான அரசியல் வழிமுறைகளற்ற, சோரம் போகும் அரசியல் வாதிகளைக் கொண்ட, இந்திய இலங்கை அரச ஆதரவிற்காக ஏங்கும், உள்முர்ண்பாடுகளோடு ஒட்டுப் போடப்பட்டிருக்கும் கட்சி என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமிருக்க முடியாது.

இவ்வாறான சிக்கல்கள் எல்லாம் வன்முறைகள், மிரட்டல்களுக்கு மத்தியில் வாக்களிக்கச் சென்ற மக்களுக்குத் தெரியாத இரகசியங்களல்ல. இவை அனைத்துக்கும் மத்தியில் தேசிய இன ஒடுக்கு முறைக்கு எதிரான குறைந்தபட்சச் சுலோகங்களை முன்வைத்தவர்கள் என்ற ஒரே அடிப்படை தான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்குகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இச் சுலோகங்கள் கூட வாக்கு வேட்டைக்காக தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டவை என்பது கூட மக்களுக்குத் தெரிந்திருந்தும் மாற்று வழிகளின்றி வழங்கப்பட்ட ஆதரவு தான் இது.

டக்ளஸ் தேவானந்தாவின் அரச பணபலம், அபிவிருத்தி அரசியல், கருணாவின் அமைச்சர் பதவி, கருணா-பிள்ளையானின் பிரதேசவாதம், இவை அனைத்தையும் கடந்து ஒடுக்கப்பட்ட தேசிய இனம் ஒன்றின் போர்க் குரல் மறுபடி ஒலித்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆக, தமது நலன்கள் மீது பற்றும் அக்கறையும் கொண்டவர்களாக் வெளிப்படுத்த முயலும் ஒவ்வொருவருக்கும் தமது பிரதான தேவை இலங்கை அரச பாசிசத்திற்கு எதிரான போராட்டமே என மக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

தேர்தல் முடிவுகள் சமூக பிரக்ஞை உடைய ஒவ்வொரு மனிதனுக்கும் .விடுக்கும் கோரிக்கைகள் அவதானத்திற்குரியவை

1. இலங்கையின் இன்றைய பிரதான முரண்பாடு தேசிய இன முரண்பாடு.

2. இலங்கையின் இன்றைய பிரதான தேவை மகிந்த பாசிசத்தின் தேசிய இன அடக்கு முறைக்கு எதிரான போராட்டம்.

3. ஒடுக்குமுறைகு எதிரானவர்களே ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் நட்பு சக்திகள்.

4. அபிவிருத்தியையும் மனிதாபிமான உதவியையும் சுட்டிக்காட்டி ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தை நிராகரிப்பவர்கள் மக்களின் நட்புசக்திகளல்ல.

இதே வேளை மகிந்த அரச பாசிசத்தின் இனவாத அரசியல் சிங்களப் பகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. சிங்கள மக்கள் தம் மீதான ஒடுக்கு முறையை உணர்ந்து கொள்வதற்குத் தடையாக தேசிய இன அடக்குமுறை பிரயோகிக்கப்படுகிறது. ஆக, குறுகிய எல்லைக்கு உட்ப்பட்ட தமிழ்த் தேசிய இனவாதத்தை நிராகரிக்கும் முற்போக்குத் தேசியவாத அரசியல் முன்வைக்கப்படும் போது மட்டுமே சிங்கள மக்கள் தம்மீதான ஒடுக்குமுறையை உணர்ந்துகொள்வர். இலங்கை அரச பாசிசத்தின் அனைத்து மக்கள் மீதான ஒடுக்கு முறைக்கும் போர்க்குரலெழுப்பும் பரந்துபட்ட உயரிய அரசியல் சிந்தனையை வளர்த்தெடுக்க எம் அனைவருக்கும் அரிய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய இன ஒடுக்கு முறைக்கு எதிரான மக்களின் உணர்வுகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பலவீனமான பாராளுமன்ற வாக்குக் கட்சியின் வெற்றி, மகிந்த ராஜபக்ச அரசின் மறுபக்க வெற்றி என்ற மூன்று முரண்பட்ட குறிக் கோடுகள் மற்றொன்றையும் தெளிவாகக் கூறுகிறது. உறுதியான நீண்டகால அரசியல் நோக்கைக் கொண்ட தத்துவார்த்த அடித்தளமும் அதனை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தலைமையும் இன்றைய பிரதான தேவை என்பதே அது.

தமிழ்த் தேசியக் கூட்டமைபு என்ற சந்தர்ப்பவாத அரசியல் கட்சி தமிழ்ப் பேசும் மக்களின் அரசியல் உணர்வுகளுக்கு எந்த வகையிலும் தலைமை வழங்கத் தகுதியற்றது. முற்போகுத் தேசிய வாதத்தைப் பிரதிநிதிதுவம் செய்கின்ற உழக்கும் மக்களின் அரசியல் தலைமக்கான வழிமுறைகள் அவசரமாக ஆராயப்பட வேண்டும்.

இதற்கான முன் நிபந்தனைகளில் பிரதானமானது இலங்கையில் குறைந்தபட்ச ஜனநாயகத்திற்கான தேவை. அதற்கான அழுத்தங்களை உலகின் போராடும் மக்கள் பிரிவுகளோடு இணைந்து இலங்கைக்கு வெளியில் வாழுகின்ற ஒவ்வொருவரும் வழங்க நிறையவே வாய்புகளுண்டு. இந்த ஜனநாயக இடைவெளி மட்டும்தான் மக்களை அணிதிரட்டுவதற்கான இடைவெளியை வழங்கும். புதிய நம்பிக்கையோடு முன்னெழும் உலக மாற்றங்கள் இலங்கையிலும் எதிரொலிகும். ஒடுக்கப்பட்ட தேசிய இனமான தமிழ்ப் பேசும் தேசிய இனங்கள் தமது விடுதலைக்கான போராட்டத்தை வெற்றியை நோக்கி முன்னெடுக்கும்.

http://inioru.com/?p=20340

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் அதைதான் எதிர்பார்க்கிறார்கள்.................

ஆனால் த.தே.கூவின் ஒவ்வொரு பேச்சுவாhத்தையும் வெற்றிகரமாக முடிகிறதே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.