Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி முன்னாள் போராளி ஒருவர் தற்கொலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி முன்னாள் போராளி ஒருவர் தற்கொலை!

Posted by admin On March 21st, 2011 at 5:22 pm

தனது இறப்பு மூலமாவது ஏனைய போராளிகளுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி வவுனியா பம்பைமடு தடுப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளி ஒருவர் தற்கொலை செய்திருக்கின்றார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

வன்னியின் இறுதிப் போரின் போது சரணடைந்திருந்த கிளிநொச்சி முழங்காவிலைச் சேர்ந்த நியூட்டன் என்ற போராளி வவுனியா பம்மை மடு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

குடும்பத்தில் பெண் பிள்ளைகள் உள்ளமையாலும் குடும்பத்தினைப் பார்ப்பதற்கு எவரும் இல்லை என்ற காரணத்தினாலும் தன்னையும் தன்னைப் போன்ற போராளிகளையும் விடுதலை செய்யுமாறும் தடுப்பு முகாமிற்கு பொறுப்பான அதிகாரிகளிடம் அவர் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

இரண்டு ஆண்டுகளாகியும் எந்தவித பதிலும் வழங்கப்படாமையை அடுத்து இன்று அதிகாலை 5மணியளவில் பம்பைமடு தடுப்பு முகாமில் உள்ள கிணற்றில் அவர் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார்.

தான் உயிரிழக்கப் போவதாகவும் தனது மரணம் மூலமாவது ஏனைய போராளிகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தனது நண்பர்களிடம் தெரிவித்ததாக தெரியவந்திருக்கின்றது.

குறித்த முன்னாள் போராளி அதிகாலை உயிரிழந்த போதிலும் இன்று முற்பகல் 11மணியளவிலேயே அவரது சடலம் கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து சரிதம் இணையத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

சடலத்தைப் பார்வையிடுவதற்கு ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவின் இணைப்பாளர் சிவநாதன் கிசோர் உட்பட்டவர்கள் தடுப்பு முகாமிற்குச் சென்றிருந்ததாக தெரியவருகின்றது.

இதேவேளை பம்பைமடு தடுப்பு முகாமில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த மற்றொரு முன்னாள் போராளி ஒருவர் இன்று தப்பிச் சென்றிருப்பதாக பம்பைமடு தடுப்பு முகாம் இராணுவத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

saritham.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரி புனர்வாழ்வு நிலையத்தில் இளைஞன் கிணற்றில் பாய்ந்து தற்கொலை

21 மார்ச் 2011

"சகோதரிகள் இருவருடைய கணவன்மார்கள் மாரடைப்பு மற்றும் நோய் காரணமாக இறந்துள்ளதனாலும், இரண்டு வருடங்களுக்கு மேலாக தடுப்பில் விடுதலையின்றி இருந்ததாலும் அவர் மனமுடைந்து காணப்பட்டார்"

வவுனியா நெளுக்குளம் தொழில்நுட்பக் கல்லூரி புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த இளைஞன் ஒருவர் கிணற்றில் பாய்ந்து மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழங்காவிலைச் சேர்ந்த ஆசிர்வாதம் நியூஸ்டன் என்ற 27 வயதுடைய இளைஞனே கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவர் கிளிநொச்சி பல்லவராயன்கட்டு கரியாலை நாகபடுவானைச் சேர்ந்தவர் என்பதும், குடும்பத்தில் 7 பிள்கைளில் 6 ஆவது பிள்ளை என்பதும் குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகளினால் பலவந்தமாக அமைப்பில் சேர்க்கப்பட்டு சுகயீனம் காரணமாக ஒரு மாதத்தின் பின்னர் விடுதலையாகி வந்து வீட்டில் இருந்த இறந்தவர் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்தபோது ஓமந்தையில் ஒருநாள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தாலும் இராணுவத்தினரிடம் சரணடைய வேண்டும் என்ற அறிவித்தலையடுத்து, இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று வந்தவேளையிலேயே இறந்தவர் இவ்வாறு கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.

திங்கட்கிழமை இன்று காலை 5.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் நடைபெற்ற இடத்திற்குச் சென்று பார்வையிட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் இறந்தவரின் சடலத்தை வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி மருத்துவ பரிசோதனை நடத்துமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டதையடுத்து. வவுனியா சட்ட வைத்திய அதிகாரியினால் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இறந்தவருடன் புனர்வாழ்வு பெற்று வந்த பிள்ளையார் இலங்கேஸ்வரன் (49) என்பவர் மரணவிசாரணையின்போது சாட்சியமளிக்கையில் அதிகாலை 5.30 மணியளவில் வழக்கம்போல எழுந்து குழாய்க்கிணற்றில் முகம் கழுவிக்கொண்டிருந்த தனக்கும் ஏனையோருக்கும் கிணற்றுக்குள் யாரோ விழுந்த சத்தம் கேட்டு ஓடிச் சென்று பார்த்த போது மூடியிருந்த கிணறு திறந்திருந்தாகவும், இருட்டு காரணமாக ஒன்றும் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். பின்னர் உள்ளே சென்று டோச் லைட்டை எடுத்து வந்து அடித்துப் பார்த்தபோது, தங்களுடன் இருந்த நியுஸ்டன் என்பவர் கிணற்றினுள் விழுந்து கிடப்பது போன்று சந்தேகம் ஏற்பட்டதாகவும், பின்னர் நியூஸ்டனைத் தேடிப்பார்த்தபோது அவரைக் காணவில்லை என்றும் பின்னர் நன்றாகப் பொழுது விடிந்தபின்பே அவரே கிணற்றில் பாய்ந்து இறந்துள்ளார் என்பது தெரியவந்ததாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனது சகோதரிகள் இருவருடைய கணவன்மார்கள் மாரடைப்பு மற்றும் நோய் காரணமாக இறந்துள்ளதனாலும், இரண்டு வருடங்களுக்கு மேலாக தடுப்பில் விடுதலையின்றி இருந்ததாலும் அவர் மனமுடைந்து காணப்பட்டார் என்றும் சாட்சி தெரிவித்துள்ளார்.

பாவனையில்லாமல், பாதகாப்புக்காக மூடப்பட்டிருந்த அந்தக் கிணறு 38 அடி ஆழமுடையது என்றும், அதற்குள் ஐந்து அடி நீர் மாத்திரமே இருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இறந்தவரின் தாயாராகிய ஆசிர்வாதம் மரியமார்கிரட் மரணவிசாரணையின்போது சாட்சியமளிக்கையில் அடுத்த வீட்டில் உள்ள பெண் தனது மகனைப் பார்ப்பதற்காக நெளுக்குளம் முகாமுக்கு வந்திருந்தபோது, என்னுடைய மகன் கிணற்றில் விழுந்து இறந்துள்ளதாக அறிந்து எனக்குத் தகவல் தெரிவித்தார். அதனையடுத்து நான் வவுனியாவுக்கு வந்தபோது மகனுடைய சடலத்தை வவுனியா வைத்தியசாலையில் பார்த்தேன் என தெரிவித்துள்ளார்.

மருத்துவ பரிசோதனை செய்த வவுனியா சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் ஐ.எம்.டபிள்யு ஆராச்சி தனது மருத்துவ அறிக்கையில் சுவாசப்பையினுள் தண்ணீர் சென்றதனால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளது என்றும் அதிக உயரத்தில் இருந்து விழுந்ததனால், உடலின் உட்காயங்கள் எற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளின் முடிவில் நீரில் மூழ்கியதனால் ஏற்பட்ட மரணம் என தீர்ப்பளித்த மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் உடலை தாயாரிடம் கைளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

gtn

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனமுடைந்த முன்னாள் போராளி தற்கொலை! (திருத்தத்துடன் மேலதிக இணைப்பு)

Posted by admin On March 21st, 2011 at 5:22 pm / No Comments

வவுனியா நெளுக்குளம் தொழில் நுட்பக் கல்லூரியில் இயங்கி வருகின்ற முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களின் புனர்வாழ்வு முகாமில் குடும்ப நிலைமைகள் மற்றும் தமது விடுதலையில் நம்பிக்கையின்மை காரணமாக மனமுடைந்திருந்த இளைஞன் ஒருவர் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்தச் சம்பவம் திங்களன்று காலை 5 மணியளவில் நடைபெற்றுள்ளது.

இறந்தவரின் மரண விசாரணைகளை வவுனியா திடீர் மரணவிசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் இன்று மாலை தனது வீட்டு அலுவலகத்தில் வைத்து நடத்தியுள்ளார்.

இறந்தவர் கிளிநொச்சி மாவட்;டம் பல்லவராயன்கட்டு கரியாலை நாகபடுவான் என்ற இடத்தைச் சேர்ந்த ஆசிர்வாதம் நியூஸ்டன் (27) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் பற்றி பொலிசார் திடீர் மரண விசாரணை அதிகாரியின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து. சம்பவ இடத்திற்குச் சென்ற சிவநாதன் கிஷோர் சடலத்தை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கான வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார். அத்துடன் சம்பவத்தை நேரில் கண்டவர் அல்லது சம்பவம் பற்றி அறிந்தவர்களை சாட்சிகளாக விசாரணைக்கு அழைத்து வருமாறும் பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து சம்பவ தினத்தன்று மாலை சிவநாதன் கிஷோரின் இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் மரண விசாரணைகள் நடைபெற்றன.

இறந்தவரை நன்கு அறிந்தவரும் அவருடன் பழகியவருமாகிய 49 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையாகிய பிள்ளையார் இலங்கேஸ்வரன் என்பவர் சாட்சியமளிக்க முன்வந்து சாட்சியமளித்தார்.

அதிகாலை 5 மணியளவில் வழக்கம்போல எழுந்து குழாய்க் கிணற்றடியில் முகம் கழுவிக் கொண்டிருந்தேன். என்னுடன் வேறு பலரும் இருந்தனர். அப்போது, கிணற்றில் ஏதோ விழுந்த சத்தம் கேட்டது. உடனே நாங்கள் என்னவென்று கிணற்றடிக்குச் சென்று பார்த்தோம். இருட்டில் ஒன்றும் சரியாகத் தெரியவில்லை. பின்னர் டோச் லைட் ஒன்றை எமது விடுதியில் இருந்து எடுத்து வந்து அடித்து பார்த்தபோது, மூடப்பட்டிருந்த கிணறு திறந்து கிடந்தது. யாரோ கிணற்றின் உள்ளே விழுந்து கிடந்தது தெரிந்தது.

எங்களுடன் இருந்த நியூட்டனின் உடல் மாதிரி தெரிந்ததும், அவர் எங்கே என தேடிப்பார்த்தோம். அவர் ஆளைக் காணவில்லை. பொழுது விடிந்ததும் தான் கிணற்றில் நியுட்டன் விழுந்து இறந்திருந்தது தெரியவந்தது. நியூட்டனின் இரண்டு சகோதரிகளின் கணவன்மார் அடுத்தடுத்து நோய் காரணமாக உயிரிழந்திருந்தனர்.

இதனால் அவர் மிகவும் கவலையடைந்திருந்தார். இரண்டு வருடங்கள் முடிந்த போதிலும் தமக்கு விடுதலை கிடைக்கவில்லையே தனது சகோதரிகளுக்கும் குடும்பத்தினருக்கும் உதவ முடியாமல் இருக்கின்றதே என மனமுடைந்திருந்தார். இதனால்தான் அவர் கிணற்றில் பாய்ந்து தனது உயிரைப் போக்கிக் கொண்டிருக்க வேண்டும்” என்று விசாரணையில் சாட்சியமளித்த இலங்கேஸ்வரன் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் பற்றி அயல் வீட்டில் உள்ள ஒரு பெண்ணின் மூலமாகக் கேட்டறிந்த நியூஸ்டனின் தாயாராகிய ஆசிர்வாதம் மரியமார்கிரட் (60) வவுனியா வைத்தியசாலைக்கு வந்து சட்ட வைத்திய அதிகாரியிடம் இறந்தவர் தனது மகன் என அடையாளம் காட்டியுள்ளார். அதன் பின்னர் மரண விசாரணை அதிகாரியின் முன்னிலையில் சாட்சியமளித்தார்.

“எனது அயல் வீட்டில் உள்ள கமலாவின் மகனும் நெளுக்குளம் முகாமில்தான் இருக்கின்றார். கமலா தனது மகனைப் பார்ப்பதற்காக நெளுக்குளத்திற்கு வந்திருந்தபோது, எனது மகன் நியூட்டன் கிணற்றில் வீழ்ந்து இறந்ததை அறிந்து எனக்குத் தகவல்; தெரிவித்தார். அதைக் கேட்டதும், நானும் எனது மகளுமாக வவுனியாவுக்கு வந்தோம். வைத்தியசாலையில் எனது மகனின் சடலம் வைக்கப்பட்டிருந்தது. அதனை டாக்டரிடம் அடையாளம் காட்டினேன்” என்றார்.

சடலத்தை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் டபள்யு. ஆராச்சி, நீரில் மூழ்கியதனால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் உயரத்தில் இருந்து விழுந்ததனால் உடலில் உட்காயங்கள் ஏற்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

விசாரணையின் முடிவில் நீரில் மூழ்கியதனால் ஏற்பட்ட மரணம் என தீர்ப்பளித்த திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் சடலத்தை தாயாரிடம் ஒப்படைக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

இரண்டு வருடங்களாக புனர்வாழ்வு என்ற பெயரி;ல் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களான, புனர்வழ்வுப் பயிற்சி பெற்று வரும் இளைஞர்கள் மத்தியில் இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தையடுத்து. புனர்வாழ்வு முகாம்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது,

சரிதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.