Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவநீதம்பிள்ளைக்கு அழைப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

துரோகி நவநீதம்பிள்ளைக்கு அழைப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது! GTNற்காக சுனந்த தேசப்பிரிய

22 மார்ச் 2011

ராஜபக்ஷ அரசாங்கத்தினர், கடந்தகாலம் முழுவதும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மீது இரவு, பகல் என கடுமையாக விமர்சித்து, வந்தனர், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை ஒழிக்கப்பட வேண்டிய துரோகி என கருதினர். இந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஜெனிவாவுக்கான இலங்கையின் தூதுவர் சேனுகா செனவிரத்ன, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு உத்தியோபூர்வ விஜயத்தை மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர், அதாவது கடந்த 2010 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் திகதி பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகருமான துமிந்த சில்வா, மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கூறுவதை ஏற்றுக்கொள்ள இலங்கை அவரின் காலனித்துவ நாடு அல்ல என தெரிவித்திருந்தார். இலங்கை அவர் கூறுவதை ஏற்றுக்கொள்ளாது. அரசியல்வாதிகள் இப்படியான குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் சுமத்தி வந்தனர். அப்போது வேறு எவராவது, மனித உரிமை ஆணையாளரை இலங்கைக்கு உத்தியோபூர்வமாக அழைக்க வேண்டும் எனக் கூறியிருந்தால், அவர்கள் கொலைக் கூட செய்யப்பட்டிருக்கலாம்.

எனினும் ஒரு வருடத்திற்குள் உண்மையான மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம், கடுமையாக விமர்ச்சித்த, நவநீதம் பிள்ளையை இலங்கை வந்து, தகவல்களை கேட்டிருந்து கொள்ளுமாறும், தமது நாட்டுக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளது. அது மாத்திரமல்ல, எந்த நாடாவது மனித உரிமை மீறல்களை விசாரிக்க சர்வதேச விசாரணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் எனக் கூறினாலும், அதனை மேற்குலக சதித்திட்டம் என அரசாங்கம் தற்போது முத்திரை குத்துவதில்லை. தேசிய மனித உரிமை கட்டமைப்பு பலனளிக்கவில்லை என்றால் மாத்திரமே, பொறுப்புக் கூறவேண்டிய சர்வதேச நடவடிக்கை குறித்து ஆராய வேண்டும் என இலங்கை அரசாங்கம் கடந்த 14 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவைக் கூட்டத்தொடரில் தெரிவித்தது. அப்படியென்றால் தேசிய ரீதியிலான மனித உரிமைகள் தொடர்பான கட்டமைப்பு பலனளிக்காத ஒன்று, சர்வதேச மனித உரிமை விசாரணை அவசியம் என இலங்கை அரசாங்கம் மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளது.

ஜெனிவாவில் இலங்கை தூதுவரின் உரையை கேட்டவர்களுக்கு, மனித உரிமை மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டமை குறித்து விசாரணை நடத்தும் போது, இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணக்கத்தோடு செயற்படுகிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கும். இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு ஐக்கிய நாடுகள் செயலாளர் பான்-கீ-மூனின் ஒத்துழைப்பு இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழுவை நியாயப்படுத்துவதற்காக அவர் இதனை தெரிவித்திருந்தார்.

எனினும் ஒரு வருடத்திற்கு முன்னர், இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் அமைப்பை மாத்திரமல்ல, அந்த அமைப்புடன் இணைந்து செயற்படும் இலங்கை பிரஜைகளை கூட பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களாக கருதி நடத்தியது. ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் கலந்துக்கொண்ட இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளர்களை, பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின் போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, விமர்சிக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. ராஜபக்ஷ அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவருடன் சம்பந்தப்பட்ட பத்திரிகை ஒன்று இந்த மனித உரிமை செயற்பாட்டாளர்களை புலிகளின் ஆதரவாளர்கள் என முத்திரை குத்தியது.

இந்த நிலையில், தற்போது, ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் அதன் தலைவர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் நடைமுறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு சிறந்த உதாரணம் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை இலங்கை வருமாறு விடுத்துள்ள அழைப்பாகும். மனித உரிமை அமைச்சர் மகிந்த சமரசிங்க மற்றும் தூதுவர் சேனுகா செனவிரத்ன ஆகியோர் பேரவைக் கூட்டத்தில் ஆற்றிய உரைகள், எதிர்ப்பதை விட இணங்கி செல்வது சிறந்தது என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்தது. விரைவில் மனித உரிமை செயற்பாடு தொடர்பான திட்டத்தை முன்வைப்பதாக அவர்கள் ஆணைக்குழுவிடம் உறுதியளித்தனர்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த, ஐக்கிய நாடுகள் செயலாளர் பான்-கீ-மூன் நியமித்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளியிடப்படும் காலம் நெருங்கி வருவது, அரசாங்கத்தின் இந்த மாற்றத்திற்கான காரணமாக இருக்கலாம். நிபுணர்கள் குழுவின் அறிக்கையை முற்றாக நிராகரிப்பது, இலங்கை அரசாங்கத்திற்கு இலகுவான காரியமாக இருக்காது என மனித உரிமை வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நிபுணர்கள் குழுவின் அறிக்கை இந்த மாதம் வெளியிடப்படலாம். யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இலங்கை அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகள் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறிச் செயற்பட்டமைக்கான, ஏற்றுக்கொள்ள கூடிய சாட்சியங்கள் இருப்பதால், அது குறித்து ஆராய சுயாதீனமான விசாரணை அவசியம் என நிபுணர்கள் குழு பரிந்துரைக்கலாம் என அறிய முடிகிறது.

அவ்வாறு பரிந்துரைக்கப்பட்டால், இலங்கை அரசாங்கம் எப்படியான நடவடிக்கையை கையாளும்?. எவ்வாறாயினும், இந்த அறிக்கை மற்றும் பரிந்துரை தொடர்பில் இலங்கை அரசாங்கம், எடுக்கும் நிலைப்பாடானது சர்வதேச ரீதியில் இலங்கைக்கு மிகவும் தீர்மானகரமானதாக அமையும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.