Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவில் வறுமையும் சுகாதாரமும்

Featured Replies

"சமூக நீதியானது மக்களை அதிக அளவில் கொன்று குவிப்பதே' என்ற பிரகடனத்துடன் உலக சுகாதார நிறுவனம் செயல்படுகிறது. தனது ஆராய்ச்சி குழுவினுடைய அறிக்கை வழியாக நியாயம் மற்றும் சுகாதார பிரச்சினைகளை அனைவரும் அறியும் வண்ணம் தெரியப்படுத்தி வருகிறது. இந்தியாவின் நிலையை ஆராயும் பொழுது உலக சுகாதார நிறுவனத்தின் குறிப்புகளையும், அறிக்கைகளையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்புவியிலே உள்ள அநீதியான, அதிக அநியாயம் நிறைந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதன் அளவினை கணக்கில் கொண்டு பார்க்கும் பொழுது, இப்புவியில் நடக்கும் எத்தனையோ மனித துன்பங்களுக்கும், கொடூரங்களுக்கும் காரணம் நாம் என்பது உறுதியாகிறது. சுகாதார பணியில் ஈடுபடும் எங்களுக்கு தண்டேகார்கள், டெண்டுல்கர்கள் மற்றும் அர்ஜூன் சென்குப்தாக்களையும் கடந்து தகவல்களைப் பெற வாய்ப்பு உள்ளது. (இந்தியாவில் வறுமை நிலையை மதிப்பீடு செய்த பொருளாதார வல்லுநர்கள்). இந்தியாவில் ஐந்து வயதிற்கும் குறைவான குழந்தைகளில் 47 சதவிகித குழந்தைகள் உண்ண உணவின்றி ஊட்டச்சத்து குறைவால் தவிக்கிறார்கள் என்பதை பார்த்து பழக்கப்பட்டுவிட்டது. கடந்து ஆறு வருடங்களில் உலகளவில் ஊட்டச்சத்துக் குறைவால் அதிக அளவிலான குழந்தைகள் இறந்திருக்கிறார்கள். ஊட்டச் சத்துக்குறைவால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை, இரண்டாம் உலகப் போரில் இறந்த மனிதர்களை விட அதிகம் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் 26 சத விகிதம் பிறப்பு எடை விகிதத்தைவிட மிகக்குறைவான எடையோடு பிறக்கின்றன. இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த 26 சதவிகிதம் ஒட்டு மொத்த மக்கள்தொகையிலும் சரிவாரியாக இல்லை. மாறாக இந்த பாதிப்பு ஒரு சில பகுதிகளில் மட்டும் சமூக நீதியின்மையாலும், அநியாயத்தினாலும் நிகழ்கிறது. குழந்தைப் பருவ ஊட்டச்சத்துக் குறைவு என்பது மனிதனையே உருக்கும் ஒரு கொடூரம். இதில் வயது வந்தோர்க்கான ஊட்டச்சத்துக்குறைவு சற்று புரிந்து கொள்வதற்கு எளிது. அதாவது உண்பதற்காக போதுமான அளவு உணவு கிடைக்காததை அது குறிக்கிறது. தேசிய ஊட்டச்சத்து கண்காணிப்புக் குழுவின் தகவல்படி இந்தியாவில் உள்ள 37 சதவிகித வயது வந்த ஆண்களும் 39 சதவிகித வயது வந்த பெண்களும் உடல் பொருண்மை அட்டவணையில் 18.5-க்கும் குறைவான அளவே கொண்டுள்ளதாக கூறுகிறது. இது கொடுமையான ஊட்டச் சத்தின்மையை காட்டுகிறது. இன்னும் இருக்கின்ற தகவல்களை பிரித்து ஆய்வு செய்து பார்த்தால், இந்த மோசமான வறுமையில் வாடுபவர்கள் 50சதவிகிதம் பழங்குடி மக்களும், 60 சதவிகிதத்துக்கும் மேலாக தாழ்த்தப் பட்ட மக்களும் ஆவர்.

ஒரிஸாவில் வயதுவந்த மக்கள்தொகையில் 40 சதவிகிதம் பேர் 18.5 உடல் நிறை குறியீட்டு எண் (BMI) கீழே உள்ளனர். வளர்ச்சியடைந்த மாநில மாக கருதப்படும் மஹாராஷ்டிராவின் மக்கள் தொகையில் 33 சதவிகிதம் பேர் 18.5 உடல் நிறை குறியீட்டு எண் (BMI)கீழே உள்ளனர். இப்போது, இவற்றை உலக சுகாதார நிறுவனம் பிரித்துப் பார்த்து என்ன கூறுகின்றார்கள் என்றால், தனது மக்கள்தொகையில் 40 சதவிகித்துக்கும் அதிகமாக 18.5 க்கும் குறைந்த உடல் நிறை குறி யீட்டு எண் (BMI) கொண்டோர் இருப்பின் அந்த சமூகம் பெரும் பஞ்சத்தினை எதிர்கொள்ளும் இக்கட்டான நிலையில் இருப்பதாக கருதப்படும் என தெரிவித்தது. ஆகவே, ஒவ்வொர் வருடமும் கொடிய வறுமையின் நிலையில் வாழும் மக்கள் இந்திய நாட்டில் இருந்து கொண்டு உள்ளனர். மூத்த பொருளாதார அறிஞர்களில் ஒருவரான உட்சா பட்னாய்க் அவர்களின் கருத்துப்படி, "1993 முதல் 2004 வரை உணவு தானிய நுகர்வானது தனி நபர் விகிதப்படி 178 கிலோ கிராமிலிலிருந்து 156 கிலோ கிராமிற்கு குறைந்துள்ளது. அதாவது 22 கி.கி குறைந்துள்ளது. பணம் படைத்த பணக் காரர்கள் தங்களின் நுகர்வினை அதிகப் படுத்த, ஏழைகளின் நுகர்வு மிகவும் குறைந்துள்ளது. ஆக, நாம் இப்போது மிக மோசமான வறுமையில் வாழ்கிறோம். நாளுக்கு நாள் இன்னும் மிகவும் மோசமான நிலைக்குஇதுசென்று கொண்டிருக்கிறது.

இந்திய அரசானது இயற்கை வளங்களையெல்லாம் சுரண்டிக்கொண்டு ஜமீன்தாரரைப்போல ஆதிக்கம் செய்கிறது. அந்த ஆதிக்கத்திற்கு ஏழை மக்களே இலக்காகின்றனர். சிறந்த வரலாற்று அறிஞர் டேவிட் ஹார்வே அவர்களின் வார்த்தையில் கூறவேண்டுமானால், ""நிலங்களை வியாபாரமாக்குதல், தனியார் மயமாக்குதல்; உழைக்கும் மக்களை கட்டாய வெளியேற்றம் செய்தல்; வெவ்வேறு வகையான (பொது, அரசு சார்) சொத்துகளை குறிப்பிட்ட தனியார் சொத்து களாக மாற்றுதல்; பொதுமக்களின் உரிமைகளை ரத்து செய்தல்; உழைக்கும் மக்களின் சக்திகளை வியாபாரமாக்குதல்; பூர்வீக மக்களின் உற்பத்தி மற்றும் உணவு முறைகளை நிராகரித்தல்; இயற்கை வளங்களை சொந்த மாக்கி கொள்ளுதல்'' போன்ற அனைத்தையும் இந்திய அரசு செய்துவருகிறது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நீதியைப் பற்றி மிகவும் வெளிப்படையாக கூறி உள்ளது. 60 வருடங்களுக்கு முன்னதாக உத்தரவிடப்பட்ட அரசின் அடிப்படைக் கொள்கைப்படி பார்த்தால், அரசின் அனைத்து செயல்பாடுகளும் அநீதியை அகற்றி நீதியை நிலைநிறுத்தும் வகையில் அமைந்திருக்க வேண்டும். ஆனால் இந்திய அரசானது இராணுவம் சாராத அதிகாரிகள் மற்றும் பல மத்தியப் படைகளை பரவலாக வைத்துக் கொண்டு அநீதியான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. மக்கள்தொகையின் பெரும் பிரிவினர் தொடர்ச்சியான வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் இதுவரையாவது ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் நிலம், நீர், வனம் போன்ற வளங்களை கொஞ்ச மாவது பெற முடிந்தது. ஆனால் இப்போது அதுவும் பெறமுடியாமல் போய்க்கொண்டுள்ளது. தற்போது பழங்குடி மக்கள் மிகவும் அதிகமான வகையில் இடமாற்றம் செய்யப்பட்டு தங்களின் சொந்த பூமியிலிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு வருகின்றனர். தங்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து கொண்டிருக்கிறார்கள். மனிதப் படுகொலை என்ற மிக்க கொடிய பயங்கரத்தை தடுக்கும் வகையிலான ஐக்கிய நாடுகள் ஒப்பந்தம் கூறுவதுபடி பார்த்தால், "நேரடியாக கொலையினை புரிவதோடு, ஒரு சில சமூக மக்களை வாழவிடாமல் அவர்களுக்கு உடல் அளவிலும், மன அளவிலும் பெரும் துன்பத்தை ஏற்படுத்தும்அனைத்து செயல்களுமே மனிதப் படுகொலையின் கீழ்தான் வரும்' என கூறுகிறது.

மனிதப் படுகொலையைப் பற்றி பேசும் போது அறிஞர் சாம்ஸ்கி, தனது சமீபத்திய கட்டுரையில் பழங்காலத்து கிரேக்க வரலாற்று அறிஞர் தூசிடைட்ஸ் அவர்களின் மேற்கோளை காட்டுகிறார். ""உலகம் செல்லும் போக்கிலே சரியான நியாயமான நிலையானது அதிகாரத்தில் இருக்கும் நபர்களின் மத்தியில் எழும் கேள்வியில் மட்டும்தான் உள்ளது. செல்வந்தர்கள் தாங்கள் செய்ய இயன்றதை செய்கின்ற னர். ஆனால் ஏதும் இல்லாத ஏழைகளோ கட்டாயமான துன்பத்திற்கு ஆளாகிவிடு கின்றனர் என்கிறார். சர்வதேச அளவில் இது முக்கிய அடிப் படை கொள்கையாக உள்ளது.ஒரு சிலர் இதனை தேசிய கொள்கையாகவும் பேசுகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, கடந்த 60 வருடங்களாக தனது அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ள நியாயத்திற் கான கட்டளையை எதிர்த்து வெற்றிகரமாக செயல்பட்டுள்ள இந்திய அரசினைப்பற்றி நினைக்கும் போது, எந்த அளவிற்கு குழுவின் அறிக்கைக்கு (அவ்வப்போது அரசால் நியமிக்கப் படும் குழுவும் அதன் அறிக்கையும்) பதிலிலிருக்கும் என சந்தேகத்தோடு எண்ணத் தோன்றுகின்றது. அறிக்கையில் உள்ள பொதுவான அறிவுரைகள் பின்வருமாறு இருக்கும்:

தலைமுறைக்கு இடையிலான இடைவெளியை குறைத்தல், வாழ்க்கை நிலையை உயர்த்துதல், பணம், சக்தி மற்றும் வளங்களை அநியாயமாய் பகிர்ந்தளிக்கும் முறையை மாற்றுதல், பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வு காணுதல் போன்றவை இந்த அரசின் மக்கள் நல குறிக்கோள்கள் என சொல்லப்படுகிறது. இந்திய அரசு இவற்றை ஏற்று செயல்படுமா என்பது பெரிய கேள்விக்குறியே. இவ்வாறு சந்தேகங்களை கொண்டிருப்பது நான் மட்டுமல்ல. குழு உருவாகிக் கொண்ட காலத்தில் அதனைப் பற்றி 2006-ஆம் ஆண்டிலே சுகாதார அறிவியலுக் கான சர்வதேச பத்திரிகையில் டாக்டர்.டி.பனர்ஜி அவர்கள் எழுதியது கீழ்வருமாறு அமைந்துள்ளது:

"சுகாதாரத்தின் சமூக காரணிகளினைப் பற்றிய குழுவானது சுகாதாரத்தை மேம்படுத்தவும், சுகாதார ஏற்றத்தாழ்வுகளை அகற்றவும் உலக சுகாதார நிறுவனத்தால் எடுக்கப்பட்ட ஓர் அரிய முயற்சியாகும். இக்குழுவானது, இதன் அடிப் படையில் அதிக அளவு வேலை ஏதும் நடந்ததாக குறிப்பிடவில்லை. முன்னாள் எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியைத் தழுவியதற்கான காரணங்களை கண்டறிய முயலவும் இல்லை. இம்முறை இது வெற்றியைத் தழுவும் என்று ஒரு நம்பிக்கையையும், உத்திரவாதத்தையும் அளிக்கவுமில்லை. இந்த குழுவானது முந்தைய உலக சுகாதார நிறுவனத்தின் மற்றும் சுகாதாரத்திற் கான குழுவினை அதிகம் பாராட்ட முயற்சிக்கிறது. ஆனால் அந்தக் குழு எதிர்பார்த்த அளவு திருப்தியான தாக்கத்தை ஏற்படுத்த நிலையில் இத்தகைய பாராட்டு சரியானதா என்ற சந்தேகமும் எழுகின்றது. இவ்வகையான நிகழ்வுகளுக்கு உலக சுகாதார நிறுவனம்தான் முக்கியப் பொறுப்பு. இந்நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட பெரிய தோல்விகளுக்கு நிதி வழங்கியவர்கள்தான் காரணமே தவிர உலகில் உள்ள அப்பாவி ஏழை மக்கள் அல்ல.

உலகில் உள்ள அதிக எண்ணிக்கையான மக்களிடம் பொறுப்புடன் இல்லாத பாங்கு. உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து பிரச்சினைகளை எழுப்புகிறது. இதற்கு உடனடி தீர்வு மிகவும் அவசியம். உலக சுகாதார நிறுவனம் தனது சட்ட நூலிலில் உள்ள கோட்பாடு களின் அடிப்படையில் சுகாதாரத்தின் உண்மையான விளக்கத்தை உணர்ந்து, முன் செயல்பட்டதுபோல மீண்டும் துடிப்போடு செயல்பட முற்பட வேண்டும். தங்களின் மதவாத சிந்தனைகளால், சுய நலன்களுக்காய் இந்த உலக சுகாதார நிறுவனத்தை பயன்படுத்தும் கொடியவர்களின் கைகளிலிலிருந்து அப்பாவி மக்களை மீட்டு அவர்களின் உரிமைகளைப் பெற்றுத்தரும் ஓர் அரசியல் போராட்டமாக இது அமைந்திட வேண்டும்.' என கூறியுள்ளார்.

இந்தியாவின் பெரிய மனித உரிமை அமைப்பான ""பி.யு.சி.எல்.- இல் (People's Union for civil Liberties) நீண்ட நாள் உறுப்பினராக இருந்து வருகிறேன். இந்த அமைப்பின் உணவுக் கான உரிமை குறித்த பிரச்சாரம் பற்றியும் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் உணவு வழங்கப்பட வேண்டும் என்ற அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் பெருமைப்படுகிறேன். இந்த பிரச்சாரமானது 10 வருடங்களுக்கு முன்னதாக ""PUCL'' அமைப்பால் உச்ச நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பொதுநல வழக்கு மூலம் உருவானது. இவ்வழக்கு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் தருணத்தில், உச்சநீதிமன்றத் தால் தெரிவிக்கப்பட்ட உத்திரவாதத்தின் அடிப்படையில் கொஞ்சம் கொஞ்சமாய் உருப்பெற்றதுதான் இன்று நாம் காணும் பொது விநியோக முறை. உணவுக்கான உரிமை பிரச்சாரம் மிகவும் கவனமாக செயல்படுகிறது, மேலும் பொது விநியோக முறையில் முன்னேற்றம் தேவை என்பதையும் அறிந்து செயல்படுகிறது.

2010-ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் ரூர்கேலாவில் நடைபெற்ற உணவுக்கான உரிமை மாநாடு ஒரு சில கோரிக்கைகளை முன் வைத்தது. பொது விநியோக முறையை பரவலாக்குவதும், ரேஷன் கடைகளை அதிக எண்ணிக்கையில் பல இடங்களில் ஏற்படுத்துவதும் இக்கோரிக்கைகளில் அடங்கும். சமீபத்தில் சோனியா காந்தியின் தலைமையில், சிறந்த பொருளாதார அறிஞர் ஜான் டிரேஸ் மற்றும் இத்திட்டத்தின் கமிஷனராக நியமிக்கப்பட்ட ஹார்ஷ் மேன்டரும் கலந்து கொண்ட தேசிய ஆலோசனை சபையில், இப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

எங்களின் எதிர்பார்ப்பிற்கு ஏமாற்றமாய், தேசிய ஆலோசனை சபை தேவையான வளங்கள் இல்லை என்று கூறி உணவிற்கான உரிமை பிரச்சாரத்தின் பரிந்துரைகளை ஏற்க மறுத்துள்ளது. இப்பிரச்சாரம் தற்போது இப்பரிந்துரைகளை கேட்டு நீண்ட நாள் போராட்டத்தில் இறங்கி யுள்ளது. ஆகவே, உணவுக்கான உரிமை குறித்த பரிந்துரைகளை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

உங்கள் முன் நான் வைக்கும் முக்கிய உதாரணம் காசநோய் மற்றும் ஊட்டச் சத்தின்மையைப் பற்றியே. 33 சதவிகித வயது வந்தோர் மக்கள்தொகை 18.5-க்கும் குறைவான உடல் பொருண்மை கொண்ட ஒரு நாட்டில், உலகின் ஆறில் ஒரு பங்கு மக்கள்தொகையை கொண்ட நாட்டில், உலகின் மூன்றில் ஒரு பங்கு காசநோய் கொடுமையை அனுபவத்துக் கொண்டிருக்கும் நாட்டில், காசநோய் மற்றும் ஊட்டச்சத்தின்மையை ஒப்பிட்டு இரண்டுக்கும் உள்ள தொடர்பினை ஆராய்ந்து பார்ப்பது முக்கியமான ஒன்றாகும்.

உலகிலேயே நோயுற்றோர் மற்றும் அதிக இறப்பு விகிதத்தை கொண்டிருக்கும் நாடாக நமது நாடு திகழ்கிறது. கிட்டத்தட்ட 8.5 மில்லியன் இந்தியர்கள் காசநோயால் துன்புறுகின்றனர். ஒவ்வொர் வருடமும் 87,000 நோயாளிகள் காசநோயை எதிர்த்து போராடிக் கொண்டு உள்ளனர். 3,70,000 நபர்கள் ஒவ்வொரு வருடமும் காசநோயால் இறக்கின்றனர்.

இவ்வளவு இருந்தும், சமீபத்தில் எடுக்கப்பட்ட உலக சுகாதார நிறுவனம் சார்பான காசநோய் மற்றும் உடல் நிறை பற்றிய ஆய்வில் இந்தியாவைப் பற்றி ஒன்றும் உள்ளடக்கப் படவில்லை. அதே போல காக்ரெய்ன் திட்டமிட்ட ஆய்வும் (Cochrane Systematic review) எந்த ஒரு இந்திய நிகழ்வையும் உள்ளடக்கவில்லை.

ஜான் ஸ்வஸ்த்யா சயோக் என்ற மக்கள் சுகாதார உதவிக்குழுவில் (People's Helth support Group) உள்ள எனது நண்பர்களால் சமீபத்தில் ஒரு முக்கிய ஆய்வு நடத்தப்பட்டது.. இக்குழு மத்திய இந்தியாவில் உள்ள 53 காடுகள் நிறைந்த கிராமங்களில் சுகாதாரப் பணியினை மேற் கொள்கிறது. அவர்கள் தங்களின் ஆய்வில் இதுவரை வெளியிடப்படாத 975 டி.பி. காசநோய் பாதிக்கப்பட்டவர்களின் ஊட்டச்சத்து நிலையைப்பற்றி தகவல் தந்துள்ளனர். இந்தியாவில் இதுவரையில் செய்யப்பட்ட ஆய்வுகளில் இது மிகப்பெரிய ஆய்வு என கருதுகிறேன். அவர்களின் தகவல்படி, மத்திய இந்தியாவின் கிராமப்புறங் களில் டி.பி. காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிகளவு ஊட்டச்சத்துக் குறைவால் அவதிப்படுகின்றனர். சாதாரண எடையை விட முற்றிலும் குறைவான எடையோடு வறுமையில் துன்புறுகின்றனர் ஒரு சில பழங்குடியின மற்றும் பெண்கள் குழுக்கள், உயிருக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் அளவிற்கு உணவின்றி தவிக்கின்ற னர். போதிய உணவின்றி வயதிற்கேற்ற வளர்ச்சி இல்லாமல் நோயாளிகளில் பலர் சாட்சிகளாக உள்ளனர். அந்த அறிக்கை கீழ்வருமாறு முடிகின்றது: "இந்த அறிக்கையானது, போதிய உணவற்றதன்மை மற்றும் காசநோயின் கொடூரத்தை எடுத்துரைக்கும் விளக்கமே. இதன் விளைவுகள் அதிகமான நோய்கள் ஒரு பக்கம், மற்றொரு பக்கம் அதிக அளவு வீணாகும் உணவு. இவை இரண்டும் இறப்பு விகிதத்தை தனியாகவும், சேர்ந்தும் அதிகப்படுத்தும். அறிவியல்ரீதியாக, நியாயமான மனிதநேய அடிப்படையில் ஏழை காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்வது மிக, மிக முக்கியமான தேவையாயும் காலத்தின் கட்டாயமும் ஆகும், என கூறுகிறது.

ஆயினும், 1962-இல் உருவாக்கப்பட்ட தேசிய காசநோய் திட்டத்தின் முக்கிய அமைப்பு இந்த முக்கியத் தேவையை திட்டமிட்டு மறுத்திருந்தது. தற்போதைய திட்டத்திலும் அதே நிலை தொடர்கிறது. அதுதான் தற்போதைய பிரச்சினை. ஆக நீதியையும், சமத்துவத்தையும் பெறுவதற்காக ஆட்சிபுரிவோரிடம் தொடர்பு கொண்டு ஒன்றிணைந்து நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியைத் தழுவும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஏனெனில், ஆட்சி புரிவோரின் நெறிமுறைகள் அனைத்து நீதி, சமத்துவத்தை கடந்து திடமான, கடின இதயம் கொண்டோர் களால் அமைக்கப்பட்டவையே. இங்கு நீதிக்கும், சமத்துவத்திற்கும் இடமில்லை.

ஆதலால், சுகாதாரத்திற்கான சமூக காரணி களைப் பற்றிய குழுவின் அறிக்கை பயனற்றது என முடிக்கின்றோமா?

இக்கேள்விக்கான பதில் மக்களின் போராட்டங்களின் மத்தியில்தான் பெற முடியும் என்பது எனது கருத்து. ஆட்சிமுறையில் நாம் ஏதேனும் ஒரு மாற்றத்தை கொண்டுவர முடியு மெனில் அது ஒரு சாதாரண ஒன்றாகவே அமையும். நமது முயற்சிகள் அனைத்தும் உண்மையான சுகாதார காரணிகளைப் பற்றிய விழிப்புணர்வை பரப்புவதிலேயே அமைந்திருக்க வேண்டும். இந்த மாற்றத்தை உருவாக்க முயற்சித்தோமானால், ஒரு உண்மையான மாற்றத்திற்கான வழி முறையை விரைவில் காண்போம் என்பது உறுதி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.