Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைதான, சரணடைந்த புலி உறுப்பினர்கள் எங்கே?: மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கைதான, சரணடைந்த புலி உறுப்பினர்கள் எங்கே?: மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேள்வி

இலங்கையில் இடம்பெற்ற படையினர் மற்றும் புலிகளுக்கிடையிலான இறுதிக்கட்ட யுத்தத்தின்போது படையினரால் கைதுசெயப்பட்ட மற்றும் சரணடைந்த புலி உறுப்பினர்கள் தொடர்பாக இலங்கை அரசு பதில் கூறவேண்டும் என்று நியூயோர்க் நகரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பின் ஆசிய பிராந்தியத்துக்கான பணிப்பாளர் பிரட் அடம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

இலங்கையில் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது புலி உறுப்பினர்கள் பலர் கைதுசெயப்பட்டனர். பலர் சரணடைந்தனர். பலர் காணாமற் போயுள்ளனர்.2009ஆம் ஆண்டு மே மாதம் கைதுசெயப்பட்ட சுமார் 20புலி உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது. இது தொடர்பாக இலங்கை அரசு எதுவித பதிலும் கூறவில்லை. யுத்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஐ.நா.சபையின் விசாரணைக்குழு நாம் குறிப்பிட்டுள்ள இந்த விடயம் தொடர்பாகவும் விசாரணை நடத்தவேண்டும்.

யுத்த வலயத்தில் சிக்கிய ஒரு கத்தோலிக்க மதகுருவும் படையினரிடம் சரணடைந்த சில புலி உறுப் பினர்களும் படையினரால் பஸ்ஸில் ஏற்றப்பட்டனர் என்று சட்சி ஒருவர் தெரிவித்தார். ஆனால் இவர்கள் காணாமற் போயுள்ளனர்.

இவ்வாறு பஸ்ஸில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டவர்களுள் புலிகளின் அரசியல் தலைவரும் முன்னாள் சமாதானப் பேச்சாளருமான யோகரட்ணம் யோகியும் அடங்குகின்றார்.காணாமற்போனமை தொடர்பாக இலங்கை அரசுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் அரசு பதிலளிக்க வேண்டும். காணாமற்போன தங்களது உறவினர்கள் உயிருடன் இருக்கின்றனரா இல்லையா என்று அறியும் உரிமை குடும்ப உறுப்பினர்களுக்கு உண்டு. என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிராகரிக்கிறது இலங்கை

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது கைதுöசய்யப்பட்ட மற்றும் சரணடைந்த புலி உறுப்பினர்கள் தொடர்பாக இலங்கை அரசு பதில் கூறவில்லை என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியவை வருமாறு:

படையினரால் கைதுöசய்யப்பட்ட புலி உறுப்பினர்கள் தொடர்பாகப் பொறுப்புடன் பதிலளித்தோம். அவர்களின் உறவினர்களுக்கும் அறிவிக்கப்பட்டது. உறவினர்கள் அவர்களைப் பார்ப்பதற்கு வசதி செய்து கொடுக்கப்பட்டது. ஆகவே, மனித உரிமைகள் கண்காணிப்பகம் முன்வைக்கும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை.மனித உரிமைகள் கண்காணிப்பகம் இப்போது முன்வைக்கும் குற்றச்சாட்டு பழைய கதையாகும். கைது செய்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விவரங்களை நாம் வெளியிட்டுள்ளோம்.தடுப்புக்காவலில் உள்ளவர்களை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பார்வையிட்டு வருகின்றனர். அதற்கான வசதியை நாம் உரிய முறையில் öசய்து கொடுத்துள்ளோம். இந்த விடயம் தொடர்பாக எம்மீது எவரும் குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியாது.ஆகவே, மனித உரிமைகள் கண்காணிப்பகம் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவையாகும். நாம் இந்த விடயம் தொடர்பாக எமது பொறுப்பை சரியாகச் செய்து வருகின்றோம். என்றார்.

09 ஏப்ரல் 2011, சனி 7:55 மு.ப

uthayan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.