Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேகாத வெய்யிலில் காட்சிப் பொருளான நாட்டார் கலைகள்

Featured Replies

சாவுகள் மலிந்து கிடந்த ஒரு தேசத்தில் இன்று கொண்டாட்டங்கள் மலிந்து கிடக்கின்றன.நொந்த மனதுக்கு மருந்து தடவும் சிகிச்சை முறையாக இந்தக் கொண்டாட்டங்களைக் கருதவேண்டும் என்ற வாதங்களும் உண்டு.

சாவுகள் மலிந்து கிடந்த ஒரு தேசத்தில் இன்று கொண்டாட்டங்கள் மலிந்து கிடக்கின்றன.நொந்த மனதுக்கு மருந்து தடவும் சிகிச்சை முறையாக இந்தக் கொண்டாட்டங்களைக் கருதவேண்டும் என்ற வாதங்களும் உண்டு.

துயிரில் இருந்து மீண்டெழுந்து புதிய வாழ்வை நோக்கிப் பயணிக்க வேண்டும் அல்லது தொலைந்த வாழ்வைத் தேடிக்கொள்ள வேண்டும் என்ற முன்னோக்குதத்துவம் ஏற்புடைய ஒன்றே. ஆனால், எமக்காக எமது பெயரால் நடப்பவற்றை எல்லாம் நன்மையானவை என்று பேசாது ஏமாளிகளாக இருந்து விடமுடியாது.

உள்ளூர் கொண்டாட்டங்கள், தேசியக் கொண்டாட்டங்கள் என்று எமது துயர் துடைக்க நடந்த கொண்டாட்டங்களோடு தற்போது சர்வதேசக் கொண்டாட்டங்களும் எமக்காக நடக்க ஆரம்பித்திருக்கின்றன. இவை எல்லாவற்றையும், நாம் இந்த உலகம் ஓடிக்கொண்டிருக்கும் காசு சம்பாதித்தல் என்ற இயங்கு நிலை அச்சாணியை விலக்கிவிட்டுப் பார்க்க முடியாது. பிராந்திய நலன்கள், உலக நாடுகளின் தேவை, நலன் சார்ந்த செயற்பாடுகளையும் ஒவ்வொரு விடயத்திலும் நாம் கவனித்தாக வேண்டும்.

"இந்த உலகில் இலவச உணவு என்ற ஒன்று இல்லை (There is no free lunch in the world)'' என்பது ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் புகழ்பெற்ற சொற்றொடர். புதிய உலக ஒழுங்கைக் குறிக்கும் அழகான தத்துவம் அது. இலவசம் என்ற ஒன்று கிடையாது; எல்லாவற்றுக்கும் பின்னணியில் நோக்கம் உண்டு.தற்போது யாழ்ப்பாணத்தில் சர்வதேச நாட்டார் இசை விழா நடைபெறுகின்றது. இதனை சேவாலங்கா நிவனம் ஒழுங்கு செய்து நடத்துகின்றது. இதற்கான நிதியை நோர்வே அரசு நேரடியாக வழங்கியுள்ளது.இதனோடு அமெரிக்க உதவி நிறுவனம் (யு.எஸ்.எயிட்) நிதி வழங்கியிருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு கோடிகளுக்கு மேற்பட்ட நிதி இதற்காகச் செலவிடப்படுகின்றது என்று அறிய முடிகிறது.இந்த விழாவுக்கான ஆரம்பப் பணிகள் ஆறு மாதங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டிருந்தன. மிகுந்த ஊடககரிசனையைப் பெற்றுக் கொண்டு ஊர்களில் நடத்தப்பட்டு பின் யாழ். மாநகர சபை மைதானத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

ஒதுக்கப்பட்ட நிதியில் எவ்வளவு தொகை யாழ்ப்பாணத்தில் அல்லது வடக்குக் கிழக்கில் நாட்டார் இசை வளர்ச்சிக்கு அல்லது ஏழ்மையில் உழலும் நாட்டார் கலைஞர்களுக்குப் பயன்படுத்தப்பட்டன என்ற ஆய்வு மிக முக்கியமானது.

நிச்சயமாக இந்தத் தொகை ஒதுக்கப்பட்ட தொகையில் பத்து வீதத்துக்கும் குறைவாகவே இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த விழாவின் நோக்கம் என்ன என்பது தெளிவாகவும் உன்னிப்பாகவும் நோக்கப்பட வேண்டும்.

நோர்வே மற்றும் அமெரிக்கா நாடுகள் பங்களிப்பு இதில் கூர்ந்து நோக்கப்பட வேண்டும். இந்த இரு நாடுகளும் இணைத் தலைமைகளாக இருந்து ஏற்கனவே ஒரு தடவை தமிழர் பிரச்சினையைக் கையாண்ட அனுபவத்தை நாம் இலகுவில் மறந்துவிட முடியாது. மீண்டும் அவை கைகோர்த்து காலாசார மீட்சி என்ற போர்வையின் கீழ் தமிழ் மண்ணில் கால்பதித்திருப்பதன் பின்னணி அலசப்படுவது அவசியம்.

இலங்கை இனப் பிரச்சினையை தீர்ப்பதாகக் கூறித் தலையீடு செய்த நோர்வே ஈழத் தமிழ் இனத்தைத்துயர் நிறைந்த நிலையில் கைவிட்டு ஒதுங்கியது என்பதை அவ்வளவு விரைவாக மறந்துவிட முடியாது. அது மீண்டும் யாழ். மண்ணில் நேரடியாக களமிறங்கியிருப்பதன் பின்னணியையும் நோக்குதல் அவசியமாகும்.கொழும்புக்கான நோர்வேத் தூதுவரும் நோர்வே தூதரக அலுவலர்களும் முழு நேரமாக இசை விழாவில் பங்கெடுப்பது ஏன் என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின் ஐரோப்பிய நாடுகள் தங்கள் மீள் எழுகைக்கு இவ்வாறான கலை நிகழ்ச்சிகளைப் பயன்படுத்தின என்கிற முன்னுதாரணம் இந்த நிகழ்ச்சியை நியாயப்படுத்தவும் எடுத்தியம்பப்படுகிறது. அதே தந்திரோபாய உத்தியை இங்கும் பயன்படுத்தித் தமிழ் மக்களிடம் மீட்டெடுத்துவிடப் போகிறாரார்களாம்.

தமிழர் அடையாளத்தைச் சிதைத்து எமது பண்பாட்டுவேர் மீதான திட்டமிடப்பட்ட பெரும் அழிவுகளை யாரும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் நாம் கவனம் செலுத்துவதை எவரும் தவறு என்று கூற முடியாது. இந்த சர்வதேச இசை விழா என்பது நோர்வே மற்றும் அமெரிக்க புதியதந்திரோபாயத்தின் தொடக்கப் புள்ளியாக அமைந்திருக்கிறது என்று கூறினால் அதையும் இலகுவில் நிராகரித்துவிட முடியாது. ஏனெனில் இது நிச்சயமாக எமது பிரதேச நலன் சார்ந்ததாக இருக்கப் போவதில்லை.

இந்த இசை விழாவில் எமது கலைஞர்கள் பலர் தம் திறமைகளைக் காட்டியிருந்தார்கள். "நாமும் நமக்கென்றொரு நலியாக் கலையுடையோம்'' என்ற மஹா கவியின் வார்த்தைக்கு வலுச்சேர்த்திருக்கிறார்கள். எமது பிரதேசத்தில் இவ்வாறான ஒரு நிகழ்வு நடக்கிறது. அதை நன்றாக நடத்தி விடவேண்டும் என்று ஒரு இளைஞர் பட்டாளம் இரவு பகலாக உழைத்திருக்கின்றது. அவர்களின் உழைப்பும் எண்ணமும் மதிக்கப்பட வேண்டும். ஆனால் இவற்றுக்கு மேலாகவும் நாம் சிந்திப்பது எமது இருப்புக்கும் நிலைப்புக்கும் அவசியமானது. இந்த சர்வதேச இசை விழாவால் விளைந்த பயன் என்ன? செலவிடப்பட்ட தொகைப் பணத்தில் யாழ்ப்பாணத்தின் நாட்டார் இசை வளர்ச்சிக்காக என்ன நடந்திருக்கின்றன என்பதைச் சிந்திக்க வேண்டியிருக்கிறது.ஐந்து நாடுகளிலிருந்து இசைக் குழுக்கள் வந்திருக்கின்றன. அவற்றுக்கான செலவுத் தொகை மிக அதிகமாக இருந்திருக்குமென்பது யாவரும் அறிந்த ஒன்றே.

இதேபோல் தென்னிலங்கையில் இருந்தும் பல குழுக்கள் வந்திருக்கின்றன. முன்பு இந்த மண்ணில் நடந்த பல கொண்டாட்டங்களுக்கும் அவை இவ்வாறே வந்திருந்தன. அதற்காகப் பெரும் தொகையையும் பெற்றிருக்கின்றன.

ஆனால் போர் முடிந்து இரண்டு ஆண்டுகளை எட்டிவிட்ட நிலையில் இதுவரை யாழ்ப்பாணத்திலிருந்து எந்தவொரு நாட்டார் குழுவாவது வெளிநாடு ஒன்றுக்கோ தென் பகுதிக்கோ இவ்வளவு செலவு செய்து அழைத்துச் செல்லப்பட்டனவா? கௌரவிக்கப்பட்டனவா? என்றால் இல்லை.

வெறும் நிகழ்ச்சியாக நடைபெறும் ஒன்றைப் பார்ப்பதால் மட்டும் நாட்டார் கலையை வளர்த்துவிட முடியாது மாறாக இங்கிருப்பனவும் சர்வதேச தரத்தில் மதிக்கப்பட வேண்டும். இவ்வாறாக வெளிநாடுகளில் நடைபெறுகின்ற விழாக்களில் பங்கு பற்றுதல் அந்ததர நிலையில் எமது கலைகளும் கலைஞர்களும் மதிக்கப்படுவதற்கான குறியீடு. உள்ளூர் என்ற தரநிலை மனப்பாங்கு தவிர்த்து நோக்கப்படுகின்ற தூர நோக்கிருந்தால்தான் இது சாத்தியமாகும்.

நாட்டார் கலைகளை ஒரு வெட்டையில் ஓலைக் கொட்டில் போட்டு கண்காட்சிப் பொருளாக்கியிருப்பதைப் பார்க்கின்றபோது இதுவொரு என்.ஜி.ஓ. திட்டமாக மட்டும் அணுகப்பட்டிருக்கின்றதே அன்றி ஆத்மார்த்தமான உயிருள்ள நாட்டார் கலையைப் புரிந்து கொண்டு நிகழ்த்தப்பட்ட நிகழ்வாக இல்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

கொளுத்தும் வெயிலில் வயது போன கூத்துக்காரர்களை அத்தனை உடைக ளோடும் ஆடவிடுவது என்பது அந்த நாட்டார் கலையின் ஆன்மாவைப் புரிந்து கொள்ளளாததன் விளைவே. காசு மெய்ப் பொருளாகிவிட்ட இந்த உலகில் கலைகளும் நுகர்வுக்குரியவையே என்று யாராவது வாதிடக்கூடம். ஆனால், அந்த நுகர்வுக்கும் ஆன்மாவுக்கும் இடைப்பட்ட வெளிதான் ஆற்றுகைக் கலைகளுக்கும் நாட்டார் கலைகளுக்குமான வித்தியாசம் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

எங்கள் நாட்டார் கலைகள் வேகாத வெய்யிலில் கண்காட்சிப் பொருளாகக் கிடப்பதை சகித்துக் கொள்ள முடியவில்லை. யாரோ தீட்டும் திட்டங்களை நாங்கள் அப்படியே நடைமுறைப்படுத்துவதனால் வரும் வில்லங்கங்கள் இவை.

எமது சில கலை வடிவங்கள் சடங்கோடு தொடர்புடையவை. தாம் வாழும் மண்ணில் வேரூன்றியவை. அவற்றை மண்ணிலிருந்து பிடுங்கி வெட்டையில் கொண்டுவந்து காட்சிப் பொருளாக்கியிருப்பது நாட்டார் கலைகள் மண்ணோடு இருப்பது இவர்களுக்கு பிடிக்கவில்லையோ என்ற சந்தேகத்தையும் கிளப்புகிறது.யாழ்ப்பாணத்தில் நாட்டார் இசைத் துறை வளர்ச்சிக்கான எந்தவொரு அமைப்பும் இதுவரை இல்லை. அவ்வாறான ஒன்றை உருவாக்குதல் பயனுள்ளதாக இருந்திருக்கும். நாட்டார் கலை ஆய்வுக்கான ஆய்வு மையம் ஒன்று மிக அவசியமானதாகும். நாட்டார் கலைக்கான ஆவணக் காப்பகம் ஒன்றின் தேவையும் ஆண்டாண்டு காலமாகப் பேசப்படுகின்றது.ஏன், இவற்றுக்கெல்லாம் மேலாக யாழ்ப்பாணத்தில் நாட்டார் கலைகளை நிகழ்த்துவதற்கான கலையகம் இல்லை. "ஸ்ரூடியோ" ஒன்று சகல வசதிகளோடும் அவசியம். அதுவும் இல்லை. இவ்வாறான நின்று நிலைக்கக் கூடிய பயன்கள் ஏதாவது இந்தச் சர்வதேச இசை விழாவால் கிடைத்திருக்கும் என்றால் இவ்விழா உண்மையில் யாழ்ப்பாணத்தின் நாட்டார் இசைக்கு பயன்விளைவித்த ஒன்றே. தாம் கிள்ளித்தெளித்தவற்றை இந்தக் கோரிக்கைகளுக்கான கணக்காக ஏற்பாட்டாளர்கள் காட்டமாட்டார்கள் என்று நம்புவோம்

நன்றி

உதயன்

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=130

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.